Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.11.2026

  Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.11.2026






திருக்குறள்:

குறள் 356:

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.

விளக்க உரை:

கற்க வேண்டிய வற்றைக் கற்று இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர் , மீண்டும் இப்பிறப்பிற்கு வராத வழியை அடைவர்.

பழமொழி :
If the intention to achieve is deep in your heart, you can achieve anything with your consistent effort.

சாதிக்கும் எண்ணம் ஆழ்மனதில் தோன்றி விட்டால், உன் விடா முயற்சியால் எதையும் சாதிக்கலாம்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.அறிவே மனிதனின் ஆயுதம் என்பதை நான் அறிவேன்.

2.எனவே மற்றவர்கள் என்ன சொன்னாலும் எனது பகுத்தறிவு கொண்டு முடிவெடுப்பேன்.

பொன்மொழி :

அனுபவம் என்பது சிறந்த ஆசிரியர். நமக்கு பலவற்றை கற்றுக் கொடுக்கிறது - பிளினி.

பொது அறிவு :

01.ரப்பர் தயாரிக்க தேவைப்படும் மூலப் பொருள் எது?

ரப்பர் மரத்தின் பால்-லேடெக்ஸ்
natural latex from rubber trees

02. இந்தியாவில் கருப்பு மிளகு அதிகமாக விளையும் மாநிலம் எது?

கர்நாடகா- Karnataka
English words :

perplexed-confused

mischief-playful behaviour

தமிழ் இலக்கணம்:

'ன' என்ற எழுத்துக்கு றன்னகரம் என்றும் பெயர் உண்டு.இது வரும் சொற்களில், அதையடுத்து வரும் உயிர்மெய் எழுத்து 'ற' வர்க்க எழுத்தாகவே இருக்கும்.
எடுத்துக்காட்டு: கன்று, இன்று, சென்றான், மன்றம், தென்றல்.
நவம்பர் 19

இந்திரா காந்தி அவர்களின் பிறந்தநாள்

இந்திரா காந்தி (இந்திரா பிரியதர்சினி காந்தி) இந்தியாவின் மூன்றாவது பிரதமரும், ஒரே இந்திய பெண் பிரதமரும் ஆவார். அவர், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளும் ஆவார். இவரது இயற்பெயர் இந்திரா பிரியதர்சினி, ஃபெரோஸ் காந்தியுடனான திருமணத்திற்கு பின் இந்திரா பிரியதர்சினி காந்தியாக மாறினார், சுருக்கமாக இந்திரா காந்தியாக மாறினார்.இந்தியாவின் இரண்டாவது பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரியைத் தொடர்ந்து சில நாட்கள் தற்காலிகப் பதவி வகித்த குல்சாரிலால் நந்தாவுக்குப் பின்னர் ஜனவரி 19 1966-இல், பிரதம மந்திரியாகப் பதவியேற்ற இவர் மார்ச் 24 1977 வரை பதவியில் இருந்தார். 1977-இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரும் தோல்வியடைந்த இவர் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். 14 ஜனவரி 1980-இல் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்ட இவர் 1984-இல் கொலை செய்யப்படும் வரை பதவியில் இருந்தார்.

உலகக் கழிவறை நாள்

உலகக் கழிவறை நாள் (World toilet day) ஆண்டு தோறும் நவம்பர் 19 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளிலேயே 2001 ஆம் ஆண்டில் உலகக் கழிவறை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.[1] அன்று முதல் இவ்வமைப்பின் உறுப்பு நாடுகள் இந்நாளை உலகளாவிய முறையில் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றன. அடிப்படைக் கழிவறை வசதிகள் பற்றியும், அது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதுமே.
நீதிக்கதை

அற்பமாக எண்ணாதே

ஒரு காட்டின் ஓரத்தில் ஒரு சிறிய தோட்டம் இருந்தது. அதற்கு அப்பால் அதை மிக ஒட்டி ஒரு வறண்ட நிலப் பகுதியும் இருந்தது. இத்தோட்டத்தில் பல அழகிய மலர்கள் இருந்தன. ரோஜா, சாமந்தி, முல்லை, கனகாம்பரம்  போன்ற பல  மலர்கள் இருந்தன. வறண்ட பகுதியில் கள்ளிச் செடிகள் வளர்ந்திருந்தன. எல்லா செடிகளும் ஒற்றுமையாக இருந்தன. ஒன்றோடு ஒன்று பேசிக் கொண்டன. காட்டு செய்திகளை மலர்கள் சொல்லும். வறண்ட நிலப் பகுதியில் நடக்கும் காரியங்களை கள்ளிச்செடிகள் அவர்களோடு கூட பகிர்ந்து கொள்ளும். ஆனால் இந்த ரோஜா செடிகள் மட்டும் தலைக்கனம் பிடித்தவையாக இருந்தன. அவைகள் இந்த கள்ளிச் செடிகளை பார்த்து “எப்படி முள்ளோடு இருக்கிறது எவ்வளவு குண்டாக இருக்கிறது  ஒரு உருவம் இல்லாமல் இருக்கிறது” என்று சொல்லி கேலி செய்வது உண்டு. அதைக் கேட்டு கள்ளிச்செடிகள்  சோகமாக இருப்பது உண்டு. சில நாட்கள் கழித்து கோடை காலம் வந்தது. காட்டில் சில மாதங்களாக மழை பெய்யவில்லை. ஆகவே கோடைகாலத்தில் குளங்கள் எல்லாம் வறண்டு போய்விட்டன. மிருகங்களும் பறவைகளும் நீர் தேடி வேறு இடம் செல்வதற்கு தயாராகி விட்டன. செடிகள் பாவம் அவைகளால் எங்கும் செல்ல முடியாது எனவே அவைகள் வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் தாங்கள் இறந்து விடுமோ என்று பயந்தன. அந்த வேளையில் கள்ளிச்செடிகள் எல்லாம் நாங்கள் எங்களுடைய நீரை உங்களுக்கு வேரின் வழியாக தருகிறோம் என்று சொல்லி அவைகளை ஆறுதல் படுத்தின. அதன்படியே தாங்கள்  சேமித்து வைத்திருந்த அதிகப்படியான நீரை வேரின் வழியாக இந்த செடிகளுக்கு கொடுத்து உதவின. சிறிது நாட்களிலே மழை பெய்ய தொடங்கி எல்லா செடிகளும் பிழைத்து விட்டன. இப்பொழுது ரோஜா செடிகள் தங்கள் தலைக்கனம் குறைந்து தாங்கள் தேவை இல்லாமல் பேசியதை எண்ணி வருந்தி  கள்ளிச்செடிகளிடம் மன்னிப்பு கேட்டன.

நீதி: பிறரை அற்பமாக எண்ணுவது மிகவும் கொடிய‌ குணம். நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள் எனவே ஒருவரை உருவ கேலி செய்வது மிகவும் தவறு. மற்றவர் மனம் வருந்தும்படி ஒருநாளும் பேசக்கூடாது. நம்முடைய அழகும் திறமையும்  அல்ல நம்முடைய குணங்களே மிகவும் முக்கியமானதாகும்.

இன்றைய செய்திகள்

19.11.2026

32 போலிப் பல்கலைக்கழகங்கள்: இந்தியாவில் இயங்கி வரும் 32 போலிப் பல்கலைக்கழகங்களை பல்கலைக்கழக மானியக் குழு (UGC) அடையாளம் கண்டுள்ளது. கல்லூரிகளில் சேருவதற்கு முன் மாணவர்கள் அந்த நிறுவனங்கள் குறித்த விவரங்களைச் சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


டெல்லி பள்ளிகளில் நேரடி வகுப்புகள்: டெல்லி-என்சிஆர் (Delhi-NCR) பகுதிகளில் காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதால் சிஏகியூஎம் (CAQM) அமைப்பு கட்டுப்பாடுகளை ரத்து செய்துள்ளது. இதனால் பள்ளிகளில் மீண்டும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.


ஒடிசாவில் புதிய ஏகலைவா பள்ளிகள்: ஒடிசா மாநிலத்தில் பழங்குடியின மாணவர்களுக்காக 24 புதிய ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.   

Jagran Josh


நீட் வினாத்தாள் கசிவு வழக்கு: நீட் யுஜி (NEET-UG) 2026 வினாத்தாள் கசிவு வழக்கில் தொடர்புடைய 14 பேர் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   

Jagran Josh


அக்வான் புயல் - பள்ளிகளுக்கு விடுமுறை: அக்வான் புயல் காரணமாக ஒடிசாவின் ஆறு மாவட்டங்களில் நவம்பர் 19 முதல் 21 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


விளையாட்டுச் செய்திகள்

இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட் போட்டி: நியூசிலாந்தின் வெலிங்டன் நகரில் இன்று (நவம்பர் 19) தொடங்கும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.


பி.வி. சிந்து தரவரிசையில் முன்னேற்றம்: உலக பேட்மிண்டன் தரவரிசையில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து மீண்டும் முதல் 5 இடங்களுக்குள் முன்னேறியுள்ளார். ஆடவர் பிரிவில் லக்‌ஷயா சென் முதல் 10 இடங்களை நெருங்கி வருகிறார்.


அர்ஷ்தீப் சிங் முன்னேற்றம்: நியூசிலாந்து தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம், ஐசிசி (ICC) ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளார்.


கால்பந்து சம்மேளனம் புகார்: கால்பந்து போட்டியின் போது பாலஸ்தீன வீரர் இனவெறியைத் தூண்டும் வகையில் சைகை செய்ததாக அகில இந்திய கால்பந்து சம்மேளனம் (AIFF) புகார் அளித்துள்ளது.

Today headlines 
UGC Flags Fake Universities: The University Grants Commission (UGC) has identified 32 fake universities operating in India and urged students to thoroughly verify institutions before seeking admission.   
NDTV Profit

Delhi-NCR Schools Resume Classes: Following the revocation of GRAP Stage-III pollution restrictions by the CAQM, schools across the Delhi-NCR region are set to resume regular physical classes.   
Jagran Josh

Odisha Expands Tribal Education: The Odisha state government has launched 24 Eklavya Model Residential Schools across seven districts and updated the examination pattern for Classes 5 and 8 for the 2026-27 academic session.   
Jagran Josh

NEET-UG 2026 Case Update: A Delhi court has directed the framing of charges against 14 accused individuals involved in the NEET-UG 2026 paper leak case.   
Jagran Josh

School Closures for Cyclone Akvan: Schools in six districts of Odisha will remain closed from November 19 to 21 as a precautionary measure due to the approaching Cyclone Akvan.   
Jagran Josh

Sports News
India vs New Zealand Test Series Begins: India will face New Zealand in the opening Test match of their series starting today, November 19, at the Basin Reserve in Wellington.   
Gujarat Titans

PV Sindhu Returns to Top 5: Indian badminton star P.V. Sindhu has climbed back into the world's top five rankings, while Lakshya Sen is steadily approaching the men's top 10.   
NDTV Profit

Arshdeep Singh Climbs ICC Rankings: Indian fast bowler Arshdeep Singh has made a significant jump in the ICC ODI rankings following his performance in the limited-overs series against New Zealand.   
NDTV Profit

AIFF Files Racism Complaint: The All India Football Federation (AIFF) has filed an official complaint over an alleged racist gesture made by a Palestine player.


Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

நவம்பர்-2026 மாத பள்ளி நாட்காட்டி

 வணக்கம் நமது குழுவின் சார்பாக நவம்பர் மாத பள்ளி நாட்காட்டி வழங்கப்பட்டுள்ளது இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளவும் நன்றி 

Zeal Study Lesson Plan Class : 7 Subject :Maths TM Topic: Algebra 3..3 &3.4 LO Based Lesson Plan With Lo Number And Activities

Zeal study prepare and share lesson plan for the sake of the Tamilnadu teachers to make their work easy.

Zeal Study Lesson Plan Class :8 Subject English Topic: Crossing the river LO Based Lesson Plan With Lo Number And Activities And Also Kalvi Tv Link

Zeal study prepare and share lesson plan for the sake of the Tamilnadu teachers to make their work easy.

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.10.2026

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.10.2026

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.10.2026

  Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.10.2026

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.10.2026

  Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.10.2026

Followers