Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.10.2026

  Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.10.2026






திருக்குறள்:

குறள் 460:

நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉ மில்.

விளக்க உரை:

நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை, தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை.

பழமொழி :
Every fall in life is a step to rise.

வாழ்க்கையில் ஒவ்வொரு வீழ்ச்சியும் எழுவதற்கான படிகளே.

இரண்டொழுக்க பண்புகள் :

1.செல்லும் இடமெல்லாம் அன்பு, ஒழுக்கம், நேர்மை எனும் விதைகளை விதைத்துச் செல்வேன்.

2.அதன் மூலம் இவ்வுலகை நாம் நன்கு வாழக்கூடிய இடமாக மாற்ற முயற்சி செய்வேன்.

பொன்மொழி :

அதிகம் வைத்திருப்பவன் செல்வந்தன் அல்ல; அதிகம் கொடுப்பவனே செல்வந்தன்

     –எரிச் ஃப்ரோம்

பொது அறிவு :

1. 2014 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்பட்டது?


கைலாஷ் சத்யார்த்தி மற்றும்
மலாலா யூசுப்சையி
Kailash Satyarthi and Malala Yousafzai

02.இந்தியாவில் அதிக மழை பெய்யும் மாநிலம் எது?

மேகாலயா -Meghalaya
English words :

vineyard – a piece of land where grapes are grown.திராட்சைத் தோட்டம்

தமிழ் இலக்கணம்:

தெரிநிலை வினை என்பது ஒரு செயலின் தொழிலையும், அது நடந்த காலத்தையும் தெளிவாகக் காட்டும் வினைச்சொல் ஆகும்.

எடுத்துக்காட்டு: "கயல்விழி மாலை தொடுத்தாள்".

செய்பவன்: கயல்விழி
கருவி: நார், பூ, கை
நிலம்: அவள் இருக்கும் இடம்
செயல்: தொடுத்தல்
காலம்: இறந்த காலம்
செய்பொருள்: மாலை

அறிவியல் களஞ்சியம் :

முதல் 8 வாரம் வரை குழந்தைகளின் கண்களில் கண்ணீர் வராது.

மனித இதயம் சராசரியான ஒரு வருடத்திற்கு 35 மில்லியன் முறை துடிக்கிறது.
அக்டோபர் 28

பில் கேட்ஸ் அவர்களின் பிறந்தநாள்

வில்லியம் ஹென்றி கேட்ஸ் (பில் கேட்ஸ்) (English: William Henry Gates or Bill Gates) (பி. அக்டோபர் 28, 1955) மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர். இவர் அதன் தலைமை கணிப்பொறி மென்பொருள் வல்லுனராகவும் (CSA), முதன்மை செயல் அதிகாரியாகவும் (CEO) பணியாற்றியுள்ளார். கோர்பிஸ் நிறுவனத்தினையும் நிறுவியுள்ளார். போர்பஸ் இதழின்படி உலகின் முதல் பணக்காரர் என்று அறியப்படுகிறார். உலகின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகளாக முதல் இடத்தினைப் பெற்று வருகிறார். 1999-ல் இவரின் குடும்பச் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர்களைக் கடந்தது.
நீதிக்கதை

ஒரு ஊர்ல ஒரு வயசான பாட்டி தனியா வசித்து வந்தார்கள். அந்த ஊர்ல கொஞ்ச நாளா திருடங்க நடமாட்டம் அதிகமிருந்தது.

ஒரு நாள் பாட்டி வெளியே போய்விட்டு வந்து பார்த்த போது வீட்டுக் கதவு திறந்திருந்தது. உள்ளே போன பாட்டிக்கு வீட்டுக்குள் ஒரு திருடன் திரைச்சீலைக்குப் பின்னால் மறைந்து இருப்பது தெரிந்து விட்டது.

அவனை எப்படியும் தப்பிக்க விடக் கூடாது புத்திசாலித் தனமாக பிடிக்கணும்னு நினைச்ச பாட்டி உடனே ஒரு தந்திரம் செய்தார்கள்.

அங்கிருந்த விளக்கு தண்டின் முன் நின்று கொண்டு, மாய விளக்கே என் மீது கோபமா? நான் வெளியே போய் வந்ததும் என்ன நடந்தது என்று கேட்பாயே இன்று ஏன் கேட்கவில்லை என்றார்கள். இதைக் கேட்டதும் திருடனுக்கு ஆச்சரியம். பேசும் விளக்கா என்று எட்டிப் பார்த்தான்.

விளக்கு திரைச்சீலையின் அசைவில் லேசாக ஆட பாட்டி, கோபமில்லையா? அப்படியானால் என்ன நடந்தது சொல்கிறேன் கேள். பக்கத்து வீட்டு ஜூலி இன்று கடைத் தெருவுக்குப் போகும் போது ஒரு நாய் அவளைத் துரத்தியது. அவள் சத்தம் போட்டுக் கத்தினாள்.

மீண்டும் விளக்கு காற்றில் அசைய, ஓ எப்படிக் கத்தினாள் என்று கேட்கிறாயா என பாட்டி கேட்டார்கள். திருடனுக்கோ ஒன்றும் புரியவில்லை. நமக்கு மட்டும் ஒண்ணும் கேட்க வில்லை. விளக்கு ஆடுவது தெரியுது. ஆனால் கிழவி பேசுகிறாளே என்று குழம்பினான்.

மாய விளக்கே ஜூலி எப்படிக் கத்தினாள் என்று சொல்கிறேன் என்றபடி பாட்டி ஹெல்ப் ஹெல்ப் என்று உரக்கக் கத்த அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் பாட்டிக்கு ஏதோ ஆபத்து என்று ஓடி வந்தவர்கள் திருடனைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

நீதி :

காலம் அறிந்து  அதற்கேற்ப புத்திசாலித் தனமாக நடந்து கொள்ள வேண்டும்.

இன்றைய செய்திகள்

28.10.2026


🗒️வேகம் குறைந்த அர்னாப் புயல்: நவம்பர் 1-ந் தேதிக்குப் பிறகே தமிழகத்தில் மழை ஆனது  மேலும் வலுவடைந்து அதி தீவிரமடையும் .

🗒️30-ந்தேதி விண்ணில் பாயும் ஜி.எஸ்.எல்.வி. எப்-18 ராக்கெட் எனவே, மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

🗒️கொச்சியில் நவம்பர் 20 முதல் 22 வரை 14-வது முப்படைகள் புகைப்பட கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

#'அர்னாப்' புயல் எச்சரிக்கை காரணமாக ஆந்திரா, ஒடிசா மற்றும் தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு முன்னெச்சரிக்கையாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.   

#JEE Main மற்றும் CUET PG உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட 2026-2027 தேர்வு அட்டவணையை தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்டுள்ளது.   

விளையாட்டுச் செய்திகள்

#நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் சர்மா 35 பந்துகளில் சதம் விளாசி, இந்திய அணிக்கு தொடர் வெற்றியைத் தேடித்தந்துள்ளார்.   

#இங்கிலாந்து கால்பந்து அணியின் கேப்டன் ஹாரி கேன் இந்த ஆண்டிற்கான மதிப்புமிக்க 'பாலன் டி ஓர்' (Ballon d'Or) விருதை வென்றுள்ளார்.   

#2029 ஆம் ஆண்டுக்கான உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டிகளை குஜராத்தின் அகமதாபாத் நகரில் இந்தியா நடத்தவுள்ளது.

காமன்வெல்த் கபடி: அரைஇறுதிக்கு முன்னேறிய இந்திய பெண்கள் அணி.

🏀தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்: தமிழகத்துக்கு மேலும் இரு தங்கம். யுவின் ஆனந்தன் ஒரு நிமிடம் 54.24 வினாடிகளில் இலக்கை எட்டி சாதனை.

Today headlines 

Arnab Cyclone Slows Down: Rain in Tamil Nadu is expected only after November 1. The cyclone is likely to become stronger and develop into a very severe storm.

🗒️ GSLV-F18 Rocket Launch on October 30: Fishermen have been banned from going into the sea.

🗒️ Tri-Services Photo Exhibition in Kochi: The 14th Tri-Services Photo Exhibition will be held in Kochi from November 20 to 22.

#Schools in several districts of Andhra Pradesh, Odisha, and Tamil Nadu are closed today as a precautionary measure due to Cyclone Arnab.   

#The National Testing Agency (NTA) has released the revised 2026-2027 examination calendar for major entrance tests like JEE Main and CUET PG.   

Sports News

 Commonwealth Kabaddi: The Indian women's team has entered the semi-finals.

🏀 National Junior Athletics Championship: Tamil Nadu won two more gold medals.

🏀 Yuvin Anandan Creates a Record: Yuvin Anandan reached the finish line in 1 minute and 54.24 seconds, setting a record.

#Indian batter Abhishek Sharma scored a spectacular 35-ball century against New Zealand, securing a T20I series victory for India.   

#England football captain Harry Kane won the 2026 Ballon d'Or, becoming the first Englishman to win the prestigious award in 25 years.   

#India will officially host the 2029 Weightlifting World Championships in Ahmedabad, Gujarat.   

Comments

Post a Comment

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

நவம்பர்-2026 மாத பள்ளி நாட்காட்டி

 வணக்கம் நமது குழுவின் சார்பாக நவம்பர் மாத பள்ளி நாட்காட்டி வழங்கப்பட்டுள்ளது இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளவும் நன்றி 

Zeal Study Lesson Plan Class :8 Subject English Topic: Crossing the river LO Based Lesson Plan With Lo Number And Activities And Also Kalvi Tv Link

Zeal study prepare and share lesson plan for the sake of the Tamilnadu teachers to make their work easy.

Zeal Study Lesson Plan Class : 7 Subject :Maths TM Topic: Algebra 3..3 &3.4 LO Based Lesson Plan With Lo Number And Activities

Zeal study prepare and share lesson plan for the sake of the Tamilnadu teachers to make their work easy.

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.10.2026

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.10.2026

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.10.2026

  Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.10.2026

Followers