Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.11.2026

 Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.11.2026



திருக்குறள்:

குறள் 358:

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்
செம்பொருள் காண்ப தறிவு

விளக்க உரை:

பிறவித்துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.

பழமொழி :
Great achievements require hard work.

பெரிய சாதனைகள் கடின உழைப்பில் தான் உண்டாகும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.அறிவே மனிதனின் ஆயுதம் என்பதை நான் அறிவேன்.

2.எனவே மற்றவர்கள் என்ன சொன்னாலும் எனது பகுத்தறிவு கொண்டு முடிவெடுப்பேன்.

பொன்மொழி :

ஒரு முள் குத்திய அனுபவம் வாழ்க்கை முழுவதற்குமான எச்சரிக்கை. -ஜேம்ஸ் ரஸ்ஸல் லோவல்

பொது அறிவு :

01.இந்திய அரசியலமைப்பின் முகப்புரையை "அடையாள அட்டை" என்று கூறியவர் யார்?

திரு. N.A. பால்கிவாலா
Thiru.N. A.Palkhivala

2.இந்தியாவில் மாணவர் சேர்க்கையின் அடிப்படையில் மிகப்பெரிய பல்கலைக்கழகம் எது?

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம்
Indira Gandhi National Open University (IGNOU)

English words :

incredible-impossible to believe, industrious, hard-working, and productive

தமிழ் இலக்கணம்:

'ந' வரும் இடம் எழுதும் முறை. 'ந' வை தந்நகரம் என்று கூறுவர். காரணம் ந் என்ற ஒற்றெழுத்தை தொடர்ந்து வரக் கூடிய மெய்யெழுத்து த வர்க்கமாக தான் இருக்கும்.
எ.டு. வெந்தயம், பந்து, பந்தயம்.
நவம்பர் 20

திப்பு சுல்தான் அவர்களின் பிறந்தநாள்...

திப்பு சுல்தான் (நவம்பர் 20, 1750, தேவனஹள்ளி – மே 4, 1799, ஸ்ரீரங்கப்பட்டணம்), மைசூரின் புலியென அழைக்கப்பட்டவர். 1782 ஆம் ஆண்டிலிருந்து 1799 ஆம் ஆண்டுவரை மைசூரின் அரசை ஆண்டவர். திப்பு சுல்தான் ஹைதர் அலியின் இரண்டாம் தாரமான ஃவாதிமாவின் மகனாவார். பிரித்தானியப் படைகளுடனான இரண்டாம் ஆங்கில-மைசூர்ப் போரில் ஹைதர் அலி வெற்றி பெறுவதற்கு உறுதுணையாகவிருந்த திப்பு தனது தந்தையின் மரணத்திற்குப் பின்னர் மைசூரின் மன்னரானார். ஆங்கிலேயர்களை இந்தியாவை விட்டு அகற்றுவதற்காகப் பிரான்சின் மாவீரன் நெப்போலியனுடன் பேச்சுவார்த்தைகூட நடத்தினார்.மூன்றாம் மற்றும் நான்காம் ஆங்கில-மைசூர்ப் போர்களில் பிரித்தானிய அரசினாலும் அதன் கூட்டுப் படைகளினாலும் தோற்கடிக்கப்பட்டார். மே 4, 1799 ஆம் ஆண்டு தனது ஆட்சித் தலைநகரமான ஸ்ரீரங்கப்பட்டினத்தில் போரின்போது இறந்தார்.
நீதிக்கதை

கந்தசாமி திருநின்றவூரில் பல ஆண்டுகளாக ஒரு ஜவுளிக்கடை நடத்தி வந்தார். கடைத்தெருவில் அவருடைய ஒரு ஜவுளிக்கடை மட்டுமே இருந்ததால், நகரத்து மக்கள் அவரது கடையிலிருந்தே துணிமணிகள் வாங்கி வந்தனர். கந்தசாமி வியாபாரத்தை சிறப்பாக செய்து ஏராளமாக செல்வம் சேர்த்தார்.

ஒருநாள் அதே கடைத்தெருவில் அவருக்குப் போட்டியாக மாணிக்கம் என்ற வெளியூர் இளைஞன் ஜவுளிக்கடையைத் திறந்தான். இளைஞர்களையும், பெண்களையும் கவரும் படி புதிய வகை துணிகளை அவன் விற்பனை செய்ததால், மக்கள் அங்கு குவிந்தனர். கந்தசாமியின் வியாபாரம் மந்தமாகியது.

மாணிக்கத்தின் மீது பொறாமை கொண்ட கந்தசாமி, அவன் வியாபாரத்தைத் தடுப்பதற்காக, விலை உயர்ந்த நவீன துணிமணிகளை இறக்குமதி செய்தார். கடையையும் பெரிதாக்கி, கண்கவரும் வகையில் அலங்காரம் செய்தார். சினிமா கலைஞர்களை வரவழைத்து தன் கடைக்கு விளம்பரம் செய்தார். இதனால் அவரது சொத்துக்கள் பெருமளவில் கரைந்தன. ஆனாலும் குறைந்த லாபத்தில் அதிக விற்பனை என்ற கொள்கையைக் கொண்டிருந்த மாணிக்கத்தின் கடையில் தான் அதிகமாக வியாபாரம் நடந்தது.

இதைக் கண்டு கொதித்த கந்தசாமி வேறு வழியின்றி மிகக் குறைந்த லாபத்துக்கு துணிகளை விற்க முன்வந்தார். பல லட்ச ரூபாய் செலவுகளோடு விற்பனையை கணக்கிட்டுப் பார்த்தால், கடைசியில் நஷ்டம் தான் மிஞ்சியது. உடனே மாணிக்கத்தின் மீது பொறாமை கண்மூடித்தனமாக அதிகரிக்க, அவர் தன் சிந்திக்கும் திறனை இழந்தார். மாணிக்கத்தின் கடைக்கு தீ வைக்க, ஒரு கூலிப் படையை ஏவினார்.

ஒருநாள் இரவு மாணிக்கத்தின் கடை தீப்பிடித்து எரிந்தது. அங்கிருந்த துணிமணிகள், பணம் என அனைத்தும் சாம்பலான பின்தான் கந்தசாமியின் மனது நிம்மதி அடைந்தது. ஆனால் மாணிக்கம் கொடுத்த புகாரின் பேரில் தீவிர விசாரணை நடத்திய காவல் துறையினர், தீ வைத்த கூலிப் படையினரை கைது செய்து விசாரித்தனர். அவர்கள் கந்தசாமியைக் காட்டிக் கொடுத்ததால், அவர் சிறையிலடைக்கப்பட்டார். கந்தசாமியின் கடை சீல் வைக்கப்பட்டது.

மாணிக்கம் தன் கடையை காப்பீடு செய்திருந்ததால், இழப்புத் தொகை கிடைத்தது, மீண்டும் வியாபாரத்தைத் தொடர்ந்தான். பொறாமையால் அறிவுக்கண் மூடப்பட்டு தீய வழியில் சென்று வெற்றி பெற நினைத்தால், கடைசியில் பெரும் துன்பத்தையே சந்திக்க நேரிடும்.

நீதி :

பொறாமை தன்னிடம் உள்ள சொத்தையும் சேர்த்து அழித்துவிடும்.

இன்றைய செய்திகள்

20.11.2026

தமிழக உயர்கல்வித் துறை மேம்பாடு: சென்னை மாநிலக் கல்லூரி (Presidency College) மற்றும் பல்வேறு மாவட்ட அரசுக் கல்லூரிகளை நவீனமயமாக்க, ரூ.52 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான உயர்கல்வி உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.   

Indiatimes


தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்: மருத்துவக் கல்வி மற்றும் பாடத்திட்ட மேம்பாட்டுத் துறைத் தலைவரான டாக்டர் எஸ்.டி. ராதிகா, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.


தேசிய மருந்தாளுநர் வார விழா 2026: "ஆரோக்கியமான இந்தியா: நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தியை எதிர்த்துப் போராடுதல்" என்ற கருப்பொருளில், தமிழக அரசின் தேசிய மருந்தாளுநர் வார விழா இன்று சென்னை மருத்துவக் கல்லூரியில் நடைபெறுகிறது.


ஒடிசாவில் பள்ளிகளுக்கு விடுமுறை: 'அக்வான்' (Akvan) புயல் ஒடிசா கடற்கரையை நெருங்கி வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பல பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


விளையாட்டுச் செய்திகள்

இந்தியா - நியூசிலாந்து முதல் டெஸ்ட்: வெலிங்டனில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில், நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் எடுத்துள்ளது; ஹென்றி நிக்கோல்ஸ் சதம் அடித்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இப்போட்டியில், ஜவஹல் ஸ்ரீநாத்தை முந்தி இந்தியாவின் டாப் 10 டெஸ்ட் விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஜஸ்பிரித் பும்ரா இடம்பிடித்துள்ளார்.


ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் - சிராக் ஷெட்டி இணை, மலேசிய அணியை 21-19, 21-16 என்ற நேர் செட்களில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.   

Education Times


மகளிர் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி: மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் 2026 மகளிர் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கியுள்ளது; இதில் இந்தியா உட்பட ஆறு அணிகள் பங்கேற்கின்றன. மேலும், இந்திய மகளிர் ஹாக்கி கோல்கீப்பர் சவிதா TIME100 Next: India பட்டியலில் இடம்பிடித்துப் பெருமை சேர்த்துள்ளார்.


ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை 2026: தோஹாவில் இன்று மதியம் 3:30 மணிக்கு நடைபெறும் போட்டியில் இந்தியா 'ஏ' அணி, நேபாள அணியை எதிர்கொள்கிறது.

Today headlines 

Higher Education Upgrade in Tamil Nadu: The Tamil Nadu Chief Minister inaugurated and laid foundation stones for higher education infrastructure projects worth over ₹52 crore to modernize government colleges, including Presidency College in Chennai and several district constituent colleges.   

Indiatimes


New In-Charge VC for TN Dr. MGR Medical University: Dr. S. T. Radhiga, Head of the Department of Medical Education and Curriculum Development, has been appointed as the in-charge Vice-Chancellor of Tamil Nadu Dr. MGR Medical University.   

Indiatimes


National Pharmacy Week Celebrations: The Tamil Nadu state celebrations for National Pharmacy Week 2026 are being held today at Madras Medical College, Chennai, under the theme "Healthy India: Combating Antimicrobial Resistance".   

Pharmabiz.com


Schools Closed in Odisha: Due to the approaching Cyclone Akvan, authorities in Odisha have issued weather warnings and declared holidays for schools in several coastal areas as a precaution.   

Education Times


Sports News

India vs. New Zealand 1st Test: At the Basin Reserve in Wellington, New Zealand ended Day 1 at 243/5, with Henry Nicholls scoring an unbeaten century. Indian pacer Jasprit Bumrah entered India's top 10 Test wicket-takers list, surpassing Javagal Srinath.   

Education Times



Hong Kong Open Badminton: Indian men's doubles pair Satwiksairaj Rankireddy and Chirag Shetty defeated Malaysia's pair 21-19, 21-16 to enter the quarterfinals.   


Women's Asian Hockey Champions Trophy: The 2026 tournament has begun in Bhopal, Madhya Pradesh, where India is competing against six teams. In another proud moment, Indian women's hockey goalkeeper Savita was named in the inaugural TIME100 Next: India list.   


Rising Stars Asia Cup 2026: India A is set to play against Nepal today at 3:30 PM IST in Doha.   




Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

நவம்பர்-2026 மாத பள்ளி நாட்காட்டி

 வணக்கம் நமது குழுவின் சார்பாக நவம்பர் மாத பள்ளி நாட்காட்டி வழங்கப்பட்டுள்ளது இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளவும் நன்றி 

Zeal Study Lesson Plan Class : 7 Subject :Maths TM Topic: Algebra 3..3 &3.4 LO Based Lesson Plan With Lo Number And Activities

Zeal study prepare and share lesson plan for the sake of the Tamilnadu teachers to make their work easy.

Zeal Study Lesson Plan Class :8 Subject English Topic: Crossing the river LO Based Lesson Plan With Lo Number And Activities And Also Kalvi Tv Link

Zeal study prepare and share lesson plan for the sake of the Tamilnadu teachers to make their work easy.

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.10.2026

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.10.2026

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.10.2026

  Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.10.2026

Followers