Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.11.2026

  Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.11.2026



 திருக்குறள் : 


பால் :அறத்துப்பால்


இயல்:துறவறவியல்


அதிகாரம் : வாய்மை


குறள் :298


புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை

வாய்மையால் காணப் படும்


விளக்கம்:


புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால் ஏற்படும், அதுபோல அகத்தே தூய்மையாக விளங்குதல் வாய்மையால் உண்டாகும்.


பழமொழி :

Faith is the force of life


நம்பிக்கையே வாழ்க்கையின் உந்து சக்தி.


இரண்டொழுக்க பண்புகள் :


1) பேப்பர், உணவு அடைக்கப் பட்டு வந்த கவர்கள் மற்றும் குப்பைகளை குப்பை தொட்டியில் தான் போடுவேன் பள்ளி வளாகத்தில் மற்றும் தெருவில் போட மாட்டேன்.


2) ஒரு நாளைக்கு சில நிமிடங்கள் ஆவது பத்திரிகை மற்றும் புத்தகங்கள் வாசிப்பேன்.

பொன்மொழி :


உண்மையான நம்பிக்கை மட்டும் ஒருவனுக்கு இருக்குமாயின், அந்த நம்பிக்கை மலைகளைக்கூட அசைத்து விடும். ஜவஹர்லால் நேரு 


பொது அறிவு :


1. ஈராக் நாட்டின் தலைநகரம்?


விடை:பாக்தாக்


2. தமிழ்நாட்டின் இரசூல் கம்சதோவ் என்று பாராட்ட பெறுவர் யார்?

விடை:  பாரதிதாசன்


English words & meanings :


 whisker -a projectiing hair or britsle from the face or snout of many mammals.(விஸ்கர்ஸ்). withdraw-remove or take away (something) from a particular place or position திரும்பப் பெறுங்கள்.


ஆரோக்ய வாழ்வு : 


தாமரைப் பூ : கண் எரிச்சல், கண்களில் நீர் வடிதல் போன்ற கண் நோய்களுக்கு, தாமரைப்பூவின் இதழ்கள் பயன்படுகின்றன....


நவம்பர் 16


உலக சகிப்புத் தன்மை நாள்


உலக சகிப்புத் தன்மை நாள் (International Day for Tolerance) என்பது மக்களிடையே சகிப்புணர்வின்மையின் பயங்கரமான விளைவுகளையும் சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சையின் தேவையை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுவதற்காகவும் உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் நவம்பர் 16 அன்று கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாகும். இந்நிகழ்வு பற்றிய அறிவித்தல் 1995 ஆம் ஆண்டு யுனெஸ்கோவினால் வெளியிடப்பட்டது.


நீதிக்கதை


 தைரியம் என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர்




ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தார். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம். வழக்கம் போல் அன்றும் சாளரத்தைத் திறந்த அரசருக்கு ஏமாற்றம்! சூரிய உதயத்துக்குப் பதில் அவர் கண்களில் ஒரு பிச்சைக்காரன் தான் தோன் றினான். போயும் போயும் இவன் முகத்தில் தான் விழிப்பதா என்று கடும் வெறுப்புடன் திரும்பினார் அரசர். திரும்பிய வேகத்தில் சுவற்றில் அவரது தலை அடிபட்டு இரத்தம் கொட்டி யது. வலியோ பொறுக்க முடியவில்லை. அத்துடன் கோபம் வேறு பொங்கியது. பிச்சைக்காரனை இழுத்து வருமாறு கட்டளையிட்டார். காவலர்கள் அவனை இழுத்துக் கொண்டு வந்து மன்னர் முன்னே நிறுத்தினர். அரச சபை கூடியது. தனது காயத்துக்கு காரணமாக இருந்த அந்த பிச் சைக்காரனை தூக்கிலிடுமாறு தண்டனையும் கொடுத்தார். பிச்சைக்காரன் கலங்கவில்லை; கலகலவெனச் சிரிக்கத் தொடங்கினான். சபையில் இருந்தவர்கள் திகைப்புடன் விழித்தனர். அரசனுக்கோ, கோபம் கட்டுக்கடங்காமல் போய் விட்டது. பைத்திய க்காரனே! எதற்குச் சிரிக்கிறாய் என் று ஆத்திரத்துடன் கேட்டார். அரசே! என் முகத்தில் விழித்ததால் உங்கள் தலையில் சிறு காயம் மட்டு ம் தான் ஏற்பட்டது. ஆனால், உங்கள் முகத்தில் நான் விழித்ததால், என் தலையே போகப் போகிறது. அதை நினைத்தேன் சிரித்தேன் என்றான். மன்னன் தலை தானாகவே கவிழ்ந்து விட்டது. தவறை உணர்ந்தவன் தண்டனையை ரத்து செய்து பிச்சைக் காரனை விடுவித்தான்.

நீதி : தைரியம் என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர். அது இல்லையென்றால்,சமயத்தில் உயிரைக் கூட காப்பாற்றிக் கொள்ள


முடியாமல் போய் விடும்.


இன்றைய செய்திகள்


16.11.2026

கிராமப்புற மாணவர்களுக்கு வானியல் பற்றிய அறிவைக் கொண்டு சேர்க்கும் வகையில், பெங்களூரைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் புதிய விண்வெளி ஆய்வு மையத்தை (Space Observatory) அமைத்துள்ளார்.   

Jagran Josh


இந்தியாவில் தங்கள் பல்கலைக்கழக வளாகங்களை அமைக்கவும், கல்வி நகரங்களை (Townships) உருவாக்கவும் சிங்கப்பூர் பல்கலைக்கழகங்களுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.   

Jagran Josh


ஐ.ஐ.டி (IIT) பட்டதாரிகள் நால்வர் இணைந்து உருவாக்கியுள்ள புதிய சுவரில் மாட்டும் உடற்பயிற்சி சாதனம் (Wall-mounted gym) உலகளவில் வரவேற்பைப் பெறும் என பாராட்டப்பட்டுள்ளது.   

Jagran Josh


சாத் பூஜை (Chhath Puja) பண்டிகையை முன்னிட்டு டெல்லி, பீகார் ஆகிய மாநிலங்களில் நவம்பர் 16 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.   

The Economic Times


விளையாட்டுச் செய்திகள்:


கிரிக்கெட்: நியூசிலாந்தில் நடைபெற்ற 5-வது ஒருநாள் போட்டியில், நியூசிலாந்தை 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 7 ஆண்டுகளில் அங்கு தனது முதல் ஒருநாள் வெற்றியை இந்தியா பதிவு செய்துள்ளது.   

The Indian Express


கால்பந்து: யுஇஎஃப்ஏ (UEFA) நேஷன்ஸ் லீக் தொடரில் நடைபெற்ற கால்பந்துப் போட்டியில் போர்ச்சுகல் அணியை 4-1 என்ற கோல் கணக்கில் டென்மார்க் அணி வீழ்த்தியது.


விளையாட்டு ஊக்கம்: பெங்களூரில் நடைபெற்ற அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு இடையேயான விளையாட்டு விழாவில் 84 வயது முதியவர் ஒருவர் டேபிள் டென்னிஸ் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறி, விளையாட்டுக்கு வயது தடையில்லை என்பதை நிரூபித்துள்ளார்.

Today headlines 

A Bengaluru engineer has built a space observatory to bring the wonders of astronomy closer to rural students.   

Jagran Josh


India has invited universities from Singapore to set up their campuses and help build educational townships across the country.   

Jagran Josh


Four IIT graduates have designed an innovative wall-mounted gym, which has received high praise and is seen as having immense global potential.   

Jagran Josh


Schools in Delhi, Bihar, and parts of Uttar Pradesh will remain closed on November 16 for Chhath Puja, while regular classes will continue in states like Rajasthan, Maharashtra, and Odisha.   

The Economic Times


Sports News:


Cricket: India clinched its first ODI victory in New Zealand in seven years by defeating the hosts by 22 runs in the fifth ODI match at Mount Maunganui.   

The Indian Express


Football: Denmark secured a 4-1 victory over Portugal in their recent UEFA Nations League match.


Local Sports Inspiration: Proving that enthusiasm for fitness knows no age, an 84-year-old table tennis player reached the semifinals during a massive inter-apartment sports festival in Bengaluru.   

Indiatimes




Comments

  1. Tq we useful to student for pre preparation mrng activities

    ReplyDelete

Post a Comment

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

நவம்பர்-2026 மாத பள்ளி நாட்காட்டி

 வணக்கம் நமது குழுவின் சார்பாக நவம்பர் மாத பள்ளி நாட்காட்டி வழங்கப்பட்டுள்ளது இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளவும் நன்றி 

Zeal Study Lesson Plan Class : 7 Subject :Maths TM Topic: Algebra 3..3 &3.4 LO Based Lesson Plan With Lo Number And Activities

Zeal study prepare and share lesson plan for the sake of the Tamilnadu teachers to make their work easy.

Zeal Study Lesson Plan Class :8 Subject English Topic: Crossing the river LO Based Lesson Plan With Lo Number And Activities And Also Kalvi Tv Link

Zeal study prepare and share lesson plan for the sake of the Tamilnadu teachers to make their work easy.

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.10.2026

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.10.2026

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.10.2026

  Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.10.2026

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.10.2026

  Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.10.2026

Followers