Zeal study official school morning prayer activities
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.11.2026
திருக்குறள்:
குறள் 437:
செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்.
விளக்க உரை:
செய்யத்தக்க நன்மைகளைச் செய்யாமல் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவனுடைய செல்வம், உய்யுந் தன்மை இல்லாமல் அழியும்.
பழமொழி :
keep trying until failure kneels before you.
முயன்று கொண்டே இரு, தோல்வி உன்னிடம் மண்டியிடும் வரை.
இரண்டொழுக்க பண்புகள் :
1.கோபம் என் அறிவை மறைக்கும்.
2.எனவே எப்போதும் கோபப்படமாட்டேன்.
பொன்மொழி :
எல்லா விஷயங்களையும் நன்மையானதாகவே பார்க்க மனதை பழக்குங்கள்- புத்தர்
பொது அறிவு :
01.தமிழ்நாட்டில் செஞ்சிக் கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது?
விழுப்புரம் - Villuppuram
2.காவிரியின் மிக நீளமான கிளை நதி எது?
அமராவதி ஆறு- Amaravathi River
English words :
terrible-extremely bad
jostle -to push
தமிழ் இலக்கணம்:
அத்தனை, இத்தனை, எத்தனை என்னும் சொற்களுக்குப் பின் வல்லினம் மிகாது.
அத்தனை + படங்கள் = அத்தனை படங்கள்
இத்தனை + பறவைகள் = இத்தனை பறவைகள்.
எத்தனை + காக்கைகள் = எத்தனை காக்கைகள்.
அறிவியல் களஞ்சியம் :
பட்டுப் புழுக்கள் மல்பெரி இலையிலிருந்து வரும் "சிஸ்ஜேஸ்மோன்'' எனப்படும் வாசனைப் பொருளை மோப்பம் பிடித்து வருகின்றன. அவை பிற உணவுப் பண்டங்களை சட்டை செய்யாதிருப்பதன் காரணம் இந்த வாசனைப் பொருள் அவற்றில் இல்லாததே. ஜெனட்டிக் தொழில் நூட்பம் மூலம் சிஸ் ஜேஸ்மோன் வாசனைப் பொருளை வேறு செடிகளுக்குப் பொருத்தி அவற்றையும் பட்டுப்புழுக்களுக்கு உகந்த ஆகாரமாக மாற்றலாம்.
நீதிக்கதை
மாற்றம்
ஒரு நாள் ஆபிசில் வேலை செய்யும் பணியாட்கள் நோட்டீஸ் போர்டில் ஏதோ எழுதி இருக்கிறதே என்று பார்க்க சென்றனர். அதில் உங்கள் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்த நபர் நேற்று காலமானார். அடுத்த கட்டிடத்தில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும் என்று எழுதி இருந்தது.
நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்த நபர் யாராக இருக்கும் என்று அவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது. அனைவரும் அடுத்த கட்டிடத்திற்கு சென்றனர். சவப்பெட்டி வைத்திருக்கும் இடத்தை நோக்கி ஒருவர் பின் ஒருவராக செல்ல ஆரம்பித்தனர். சவப்பெட்டியை நெருங்க நெருங்க, நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்தவன் யாராக இருக்கும். நல்ல வேளை அவன் இறந்துவிட்டான் என்று நினைத்தபடியே முன்னோக்கி சென்றனர்.
சவப்பெட்டியினுள் எட்டி பார்த்தவர்களுக்கு தூக்கி வாரிப் போட்டது. அதில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி மட்டுமே இருந்தது. சவப்பெட்டியினுள் யார் எல்லாம் பார்க்கிறார்களோ அவர்கள் முகமே அதில் தெரிந்தது. கண்ணாடி அருகில் ஒரு வாசகம் எழுதி இருந்தது.
உங்கள் வளர்ச்சிக்கு நீங்கள் மட்டுமே காரணம். நீங்கள் வளர வேண்டும் என்றால் அது உங்கள் கையில் மட்டுமே உள்ளது. உங்கள் வளர்ச்சியை உங்களை தவிர வேறு யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று எழுதியிருந்தது. உங்கள் வாழ்கையை உங்கள் முதலாளியால் மாற்ற முடியாது. உங்கள் நண்பர்களால் மாற்ற முடியாது.
நீதி :
நீங்கள் நினைத்தால் மட்டுமே உங்கள் வாழ்வை மாற்ற முடியும்
இன்றைய செய்திகள்
10.11.2026
டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் (Delhi-NCR) காற்று மாசு அபாயகரமான அளவை எட்டியுள்ளதால், 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் நேரடி வகுப்புகள் (Hybrid mode) என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் எதிர்காலத் திறன்களை மேம்படுத்தும் வகையில், 5,500 மாணவர்களுக்கு புதிய 'ஜெனரேட்டிவ் ஏஐ' (Generative AI) செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
கிரிக்கெட்: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று ஹாமில்டனில் உள்ள செடன் பார்க் (Seddon Park) மைதானத்தில் நடைபெறவுள்ளது.
டென்னிஸ்: பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் கார்லோஸ் அல்கராஸ் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். தேசிய அளவிலான ஃபெனெஸ்டா ஓபன் டென்னிஸ் போட்டிகளில் வைதேகி சௌதாரி மற்றும் மான் கேஷர்வானி ஆகியோர் ஒற்றையர் பிரிவில் தேசிய சாம்பியன் பட்டங்களை வென்றனர்.
கார் பந்தயம் (Formula 1): சாவோ பாலோ கிராண்ட் பிரிக்ஸ் (Sao Paulo GP) கார்பந்தயப் போட்டியில் லாண்டோ நோரிஸ் வெற்றி பெற்றார். மேலும், மெர்சிடிஸ் அணி 2026-ஆம் ஆண்டிற்கான கன்ஸ்ட்ரக்டர்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
Today headlines
Many schools across several states are observing a holiday today, November 10, on the occasion of Balipadyami (Balipratipada) and extended Diwali or Chhath Puja vacations.
Due to worsening air pollution, schools in the Delhi-NCR region have shifted primary classes up to Class 5 to a hybrid mode, allowing students to attend either online or offline.
In a major step toward future-ready education, a new school initiative has officially launched Generative AI training for 5,500 students.
Sports News
Cricket: India will face New Zealand in the 3rd One Day International (ODI) match today at Seddon Park in Hamilton.
Tennis: Carlos Alcaraz defeated Ben Shelton to win the Paris Masters for the first time. At the national level, Vaidehee Chaudhari and Maan Kesharwani clinched the singles titles at the Fenesta Open National Tennis Championships.
Formula 1: Lando Norris won the rain-interrupted Sao Paulo Grand Prix, while the Mercedes team clinched the 2026 F1 Constructors' Title with three races to spare.

Comments
Post a Comment