Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 12.10.2026
Zeal study official school morning prayer activities
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 12.10.2026
திருக்குறள்
அதிகாரம்:வாய்மை
திருக்குறள்:293
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
விளக்கம்:
மனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும்.
பழமொழி
A willful man will have a way.
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
இரண்டொழுக்க பண்புகள்
1. போக்குவரத்து விதிகளை மீறி நடப்பது மரணம் மற்றும் விபத்துகள் நடைபெற வழிவகுக்கும்.
2. எனவே எப்போதும் சாலை விதிகளை மதித்து நடப்பேன்.
பொன்மொழி
எந்தச் செயலையும் முடியாது என கைவிடும் போது நம் திறனற்றவர்களாக ஒடுக்கப்படுவோம் ...கற்றுக் கொள்பவராக முயற்சி செய்தால் சாதனையாளனாக போற்றப்படுவோம்.
பொது அறிவு
நாளை (13.10.2026) ஐ.நா. சர்வதேச இயற்கை பேரிடர் மேலாண்மை தினம்.
1. இயற்கை பேரிடர்கள் யாவை?
சுனாமி , நிலநடுக்கம், புயல், வரட்சி, வெள்ளப்பெருக்கு, எரிமலை வெடிப்பு, நிலச்சரிவு , பனிச்சரிவு, மின்னல் மற்றும் இடி.
2. தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் யார் ?
தமிழக முதல்வர்.
English words & meanings
Exhale - breathe out. மூச்சு வெளி விடுதல்.
Exothermic reaction - release of heat. வெப்ப உமிழ் வினை.
வேதிவினைகளில் பொருள்களின் பிணைப்புகளில் இருக்கும் ஆற்றலானது வெப்ப ஆற்றலாக மாற்றம் பெறுகிறது இந்த வெப்ப ஆற்றல் அமைப்பில் இருந்து சூழலுக்கு வெளியேற்றப் படுகிறது.
ஆரோக்ய வாழ்வு
வெங்காயத்தாள் கண் நோய் மற்றும் மற்ற கண் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை வழங்குகிறது.
Some important abbreviations for students
no. - number.
tel. - telephone
நீதிக்கதை
குரங்கு அறிஞர்
அறிஞர் ஒருவர் ஆராய்ச்சி நூல் ஒன்று எழுத நினைத்தார். அவர் அமைதியான இடத்திற்கு செல்லலாம் என்று அரக்கர்கள் இருக்கும் இடத்திற்கு, தெரியாமல் சென்றுவிட்டார். அறிஞரை பார்த்த ஒரு அரக்கன் யார் நீ? என்றான்.
நான் ஒரு அறிஞன். அமைதியான இடத்தைத் தேடி வந்தேன்! என்றார். இங்கு வந்ததற்கு தண்டனை கொடுப்பேன் என்று சொல்லி அவரை குரங்காக மாற்றிவிட்டான் அரக்கன்.
அவர் அழுதுகொண்டே, ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்குத் தாவிக் குரங்குகளைப் போல் பழங்களைத் தின்றார். பின்பு அவர் நகரத்திற்கு சென்றார். அங்கு பாக்தாத் பட்டணத்திற்குப் புறப்பட இருந்த ஒரு கப்பலில் அவர் ஏறினார். அதிலிருந்தவர்கள் சத்தம்க்கூட போட்டனர். குரங்கை வெளியே அனுப்புங்கள் என்று கத்தினர்.
கப்பலின் தலைவன் அதுவும் நம்முடன் வரட்டும். யாருக்கும் அது தொந்தரவு தராதவாறு நான் பார்த்துக் கொள்கிறேன்! என்றார்.
அந்தக் குரங்கு கப்பல் தலைவனுக்கு நன்றி உடையவனாய் இருந்தது. பாக்தாத்தில் அரசருக்கு ஆலோசனை கூறுபவர் இறந்துவிட்டதாகவும், இப்பதவியை விரும்புவோர் ஏதேனும் ஒரு செய்தியைத் மிகவும் நன்றாக தகுந்த முறையில் எழுதி அனுப்புபவர்க்கு ஆலோசகராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்னும் செய்தி அறிவிக்கப்பட்டது.
அனைவரும் செய்தி எழுதினர், அந்தக் குரங்கு அறிஞரும் செய்தியை எழுதினார். எல்லாச் செய்திகளையும் அரசர் படித்தார். அந்தக் குரங்கின் செய்தி மிகவும் நன்றாக இருந்ததால், அந்தக் குரங்கை நேர்முகத் தேர்விற்காக அரசர் வரச் சொன்னார். அக்குரங்கு நல்ல கம்பீரமாக உடையணிந்து வந்தது. அரசவையில் அதனிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டன. அது எல்லாக் கேள்விகளுக்கும் அறிவுப்பூர்வமான சரியான விடைகளைக் கூறியது. அரசருக்கு அதை மிகவும் பிடித்து விட்டது. ஆனால், மந்திரிகள் தடுத்தனர்.
ஆனால், அரசர் தீர்மானமாக குரங்கையே தலைமை ஆலோசகராக நியமித்தார். அவருடைய புதல்வி, இளவரசி இந்தக் குரங்கு உண்மையில் குரங்கு இல்லை. ஏதோ அரக்கர்களால் மாற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்தாள். அரக்கர்களின் மந்திர வித்தைகள் போன்றவற்றை அவள் படித்துள்ளாள். அந்த மந்திரத்தால் அறிஞரை பழைய நிலைக்கு மாற்றினாள்.
அவர் இளவரசிக்கு நன்றி கூறினார். பல ஆண்டுகள் அங்குத் தங்கி நன்றி விஸ்வாசத்தோடு அரசருக்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்கினார்.
நீதி :
அறிவுடையோர் எவ்வுருவில் இருந்தாலும் மதிக்கப்படுவர்.
இன்றைய செய்திகள்
12.10.2026
NTA (National Testing Agency) நடத்தும் SWAYAM ஜூலை 2026 தேர்வுகளுக்கான ஆன்லைன் பதிவு தொடங்கியுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் 600-க்கும் மேற்பட்ட ஆன்லைன் படிப்புகளில் சேரலாம்.
சுற்றுச்சூழல் மற்றும் நிலச்சரிவு மேலாண்மை குறித்து விவாதிக்க, இந்தியா தனது முதல் 'உலக நிலச்சரிவு மன்றத்தை' (World Landslide Forum) வரும் நவம்பர் 23 அன்று நடத்த உள்ளது.
மாணவர்களின் நலன் கருதி, தமிழக அரசு தனது புதிய திட்டங்களில் கல்வி, விளையாட்டு மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
8 வயது முதலே சிறந்த விளையாட்டு வீரர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க, 'கனவு ஒலிம்பிக் 2036' (Dream Olympics 2036) என்ற புதிய திட்டத்தை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்.
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த பிரக்ஞானந்தா, குகேஷ், வைஷாலி உள்ளிட்ட தமிழக வீரர்களுக்கு, மாநில அரசு சார்பில் ரொக்கப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கான (IOA) தேர்தல்கள் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Today headlines
The National Testing Agency (NTA) has officially begun the registration process for the SWAYAM July 2026 Exams, offering students access to over 600 online courses.
In a step toward environmental safety, India is set to host its first-ever World Landslide Forum starting November 23.
The Tamil Nadu State Government has strongly focused on youth welfare, education, and artificial intelligence training in its latest educational initiatives.
Sports News
The Honourable Chief Minister of Tamil Nadu has launched the 'Dream Olympics 2036' scheme. This long-term initiative aims to identify grassroots sports talent from as young as 8 years old and provide them with specialized coaching.
Tamil Nadu's Chess Olympiad medallists, including R. Praggnanandhaa, D. Gukesh, and R. Vaishali, were recently felicitated with cash awards by the State Government for bringing pride to the nation.
The Indian Olympic Association (IOA) has announced that its elections will be held on December 5, which PT Usha has called a milestone for good governance in Indian sports.

Comments
Post a Comment