Zeal study official school morning prayer activities
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.11.2026
திருக்குறள்:குறள் 236:
தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று
விளக்க உரை:
ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும், அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பதே நல்லது.
பழமொழி :
Pain is the teacher of courage.
வலி தான் தைரியத்தின் ஆசிரியன்.
இரண்டொழுக்க பண்புகள் :
1.கல்வி கற்பது பணம் சம்பாதிக்க மட்டும் அல்ல, அறிவை வளர்க்கவும் தான்.
2.எனவே படித்து எனது அறிவை வளர்த்துக் கொள்வேன்.
பொன்மொழி :
உங்கள் எதிரிகளிடமும் நீங்கள் அன்பு காட்டுங்கள் .ஏனென்றால், அவர்கள் உங்களை தவறுகளை சுட்டிக்காட்டி நீங்கள் திருந்துவதற்கு வழி ஏற்படுத்துகிறார்கள். பெஞ்சமின் பிராங்கிளின்
பொது அறிவு :
01.இந்தியாவின் பாரத ரத்னா விருதைப் பெற்ற முதல் பெண்மணி யார்?
இந்திரா காந்தி 1971
Indiragandhi-1971
02. பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை முதன் முதலில் வழங்கிய நாடு எது?
நியுசிலாந்து 1893
New zealand - 1893
English words :
audacious - bold and daring
tranquil-peaceful and calm
தமிழ் இலக்கணம்:
‘ர’& 'ற' கரம்
1.மெய்யெழுத்தை தொடர்ந்து இடையின ர வராது
எ.கா.
நின்ரது
முன்னின்ரு
தவறாக எழுதப் பட்டுள்ளது
2. ஆனால் வல்லின ற மெய்யெழுத்துக்கு பின்னர் வரும்
எ.கா –நின்றது
முன்னின்று
அறிவியல் களஞ்சியம் :
அறிவியல் வரலாற்றில் இதுவரை மரபணு மாற்ற CRISPR-Cas9 தொழில்நுட்பம், பல விலங்குகள், தாவரங்கள் ஏன் பாக்டீரியா மீது கூட பயன்படுத்தப்பட்டுள்ளது. முதல்முறையாக ஜெர்மனியில் உள்ள பெய்ரூட் பல்கலை, சிலந்திகள் மீது பயன்படுத்தி உள்ளது. மரபணு மாற்றப்பட்ட சிலந்தி ஒளிர்கின்ற சிவப்பு நிற வலையைப் பின்னுகிறது. சிலந்திகளின் வலை நுால் பல துறைகளில் பயன்படுகிறது.
நவம்பர் 25
பிடல் காஸ்ட்ரோ அவர்களின் நினைவுநாள்
பிடல் காஸ்ட்ரோ (Fidel Alejandro Castro Ruz, (எசுப்பானியம்: [fiˈðel ˈkastro], ஆகஸ்ட் 13, 1926 - நவம்பர் 25, 2016) கியூபாவை சேர்ந்த பொதுவுடைமைப் புரட்சியாளரும் பொதுவுடைமை அரசியல்வாதியும் ஆவார். கியூபாவில் 1959 இல் புரட்சியை வழிநடத்தி புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவின் அரசை வீழ்த்தி தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்ற காஸ்ட்ரோ ,1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார்.கூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965 இல் பதவியேற்ற இவர் கூபாவை ஒற்றைக் கட்சி சமூகவுடைமைக் குடியரசாக்கினார். 49 ஆண்டுகள் கியூபாவை ஆண்ட காஸ்ட்ரோ பிப்ரவரி 24 2008 அன்று பதவியிலிருந்து விலகினார். உலகத்தில் நீண்ட காலத்துக்கு தலைமைப் பொறுப்பில் இருந்த தலைவர் காஸ்ட்ரோ மட்டுமே. பன்னாட்டளவில், காஸ்ட்ரோ 1979-ல் இருந்து 1983 வரை மற்றும் 2006 முதல் 2008 வரை, அணி சேரா இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருந்துள்ளார்.[2]
அமெரிக்காவில் இருந்து 93 மைல் தொலைவில் இருந்தாலும் கியூபாவை ஒரு சோசலிச நாடாகப் பேணிய பெருமை இவரைச் சாரும். இதைவிட ருசியா-அமெரிக்க பனிப்போர் நடந்த வேளையில் இவர் ருசியாவிற்குச் சாதகமாகப் பல பணிகளைச் செய்தார்.
பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள்
பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள் (International Day for the Elimination of Violence against Women) ஆண்டுதோறும் நவம்பர் 25 ஆம் நாள் அன்று உலகெங்கணும் கொண்டாடப்பட்டு வரும் ஒரு சிறப்பு நாள் ஆகும்.
உலகளாவிய ரீதியில் பெண்கள் இன்று பல விதமான வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளி உலகிற்கு காட்டி அதற்கான நியாயமான தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக சர்வதேச மகளிர் தினம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினம் ஆகியன முன்வைக்கப்படுகின்றன.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1999 டிசம்பர் 17 ஆம் நாள் கூடிய போது ஆண்டு தோறும் நவம்பர் 25 ஆம் நாளை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினமாகப் பிரகடனம் செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றியது. இத்தீர்மானம் ஐக்கிய நாடுகள் அவையின் 54/ 134. இலக்க பிரேரணையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
நீதிக்கதை
கழுதையின் தன்னம்பிக்கை
ஒரு விவசாயி வளர்த்து வந்த வயதான பொதி சுமக்கும் கழுதை ஒன்று தவறி அவன் தோட்டத்தில் உள்ள வறண்ட கிணற்றில் விழுந்துவிடுகிறது. உள்ளே விழுந்த கழுதை அலறிக்கொண்டே இருந்தது. அதை எப்படி கிணற்றிலிருந்து வெளியேற்றி காப்பாற்றுவது என்று அவன் விடிய விடிய யோசித்தும் ஒரு யோசனையும் புலப்படவில்லை.
காப்பாற்ற எடுக்கும் எந்த முயற்சியும் அந்த கழுதையின் விலையை விட அதிகம் செலவு பிடிக்ககூடியதாக இருந்தது. அந்த கிணறு எப்படியும் மூடப்பட வேண்டிய ஒன்று. தவிர அது மிகவும் வயதான கழுதை என்பதால் அதை காப்பாற்றுவது வீண்வேலை என்று முடிவு செய்த அவன், கழுதையுடன் அப்படியே அந்த கிணற்றை மூடிவிடுவது என்று முடிவு செய்தான்.
அக்கம் பக்கத்தினரை உதவிக்கு கூப்பிட அனைவரும் திரண்டனர். சற்று அருகில் இருந்த ஒரு மண் திட்டிலிருந்து மண்ணை மண்வெட்டியில் அள்ளி கொண்டு வந்து அந்த கிணற்றில் அனைவரும் போட ஆரம்பித்தனர். கழுதை நடப்பதை உணர்ந்து தற்போது மரண பயத்தில் அலறியது. ஆனால் அதன் அலறலை எவரும் சட்டை செய்யவில்லை. இவர்கள் தொடர்ந்து மண்ணை அள்ளி அள்ளி கொட்ட கொஞ்சம் நேரம் கழித்து அதன் அலறல் சத்தம் அடங்கிவிட்டது.
ஒரு பத்து நிமிடம் மண்ணை அள்ளி கொட்டியவுடன் கிணற்றுக்குள்ளே விவசாயி எட்டிப் பார்க்க, அவன் பார்த்த காட்சி அவனை வியப்பிலாழ்த்தியது. ஒவ்வொரு முறையும் மண்ணை கொட்டும்போது, கழுதை தனது உடலை ஒரு முறை உதறிவிட்டு, மண்ணை கீழே தள்ளி, அந்த மண்ணின் மீதே நின்று வந்தது.
இப்படியே பல அடிகள் அது மேலே வந்திருந்தது. இவர்கள் மேலும் மேலும் மண்ணை போட போட கழுதை தனது முயற்சியை கைவிடாது, உடலை உதறி உதறி மண்ணை கீழே தள்ளி தள்ளி அதன் மீது ஏறி நின்று வந்தது.
கழுதையின் இடைவிடாத இந்த முயற்சியால் அனைவரும் வியக்கும் வண்ணம் ஒரு வழியாக கிணற்றின் விளிம்பிற்கே வந்துவிட்டது.
விளிம்பை எட்டியவுடன் மகிழ்ச்சியில் கனைத்த கழுதை ஒரே ஓட்டமாக ஓடி தோட்டத்திற்குள் சென்று மறைந்தது.
வாழ்க்கை பல சந்தர்ப்பங்களில் இப்படித் தான் நம்மை படுகுழியில் தள்ளிக் குப்பைகளையும், மண்ணையும் நம் மீது கொட்டி நம்மை சமாதி கட்ட பார்க்கும். ஆனால் நாம் தான் இந்த கழுதை போல தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் கொண்டு, அவற்றை உதறித் தள்ளி மேலே வரவேண்டும்.
நம்மை நோக்கி வீசப்படும் ஒவ்வொரு கல்லையும் சாமர்த்தியமாக பிடித்து படிக்கற்களாக்கிக் கொள்ளவேண்டும், எத்தனை பெரிய குழியில் நீங்கள் விழுந்தாலும். இத்தோடு நம் கதை முடிந்தது என்று கருதாமல் விடாமுயற்சி என்ற ஒன்றைக் கொண்டு நீங்கள் நிச்சயம் மேலே வரலாம்.
இன்றைய செய்திகள்
25.11.2026
ஐஐடி கல்வி நிறுவனங்களில் 6,000 புதிய இடங்கள்: மேத்தா குடும்ப அறக்கட்டளையின் (Mehta Family Foundation) ஆதரவுடன், 2027-ஆம் ஆண்டு முதல் ஐஐடி (IIT) கல்வி நிறுவனங்களில் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டப் படிப்புகளில் 6,000 புதிய இடங்களைச் சேர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 5,000 இடங்கள் ரோபாட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு (Physical AI) துறைக்கும், 1,000 இடங்கள் விண்வெளிப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கும் ஒதுக்கப்படும்.
The Indian Express
+ 1
தமிழ்நாட்டில் 2,000 ஆசிரியர்களுக்கு AI பயிற்சி: அரசுப் பள்ளிகளில் கற்பித்தல் முறையை நவீனமயமாக்க, 2,000 ஆசிரியர்களுக்குச் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் கற்பித்தல் தொழில்நுட்பங்களில் பயிற்சி அளிக்கும் திட்டத்தைத் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை தொடங்கியுள்ளது.
Emergent
டைம் (TIME100 Next) பட்டியலில் இந்தியக் கணிதவியலாளர்: 70 ஆண்டுகள் பழமையான கணிதப் புதிருக்குத் தீர்வு கண்ட இந்தியக் கணிதவியலாளர் நீனா குப்தா, 'TIME100 Next India 2026' பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
Jagran Josh
JEE Main 2027 விண்ணப்ப அறிவிப்பு: JEE Main 2027 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், கடைசித் தேதி வரை காத்திருக்காமல் முன்கூட்டியே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு தேசியத் தேர்வு முகமை (NTA) அறிவுறுத்தியுள்ளது. இத்தேர்வு 13 மொழிகளில் நடத்தப்பட உள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
வைபவ் சூர்யவன்ஷி உலக சாதனை: தோஹாவில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (UAE) எதிரான போட்டியில் இந்தியா 'ஏ' அணிக்காக விளையாடிய 15 வயது இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி, 52 பந்துகளில் இரட்டை சதம் (53 பந்துகளில் 204 ரன்கள்) மற்றும் 28 சிக்ஸர்கள் விளாசி 'லிஸ்ட் ஏ' (List A) கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை படைத்தார். இதன் மூலம் இந்தியா 'ஏ' அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
The Times of India
உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடக்கம்: சுவிட்சர்லாந்தின் கொலோக்னி (Cologny) நகரில், இந்தியாவின் டி. குகேஷ் மற்றும் ஜாவோகிர் சிந்தரோவ் (Javokhir Sindarov) ஆகியோர் மோதும் 14 சுற்றுகள் கொண்ட உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கியுள்ளது.
Jagran Josh
சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி: நவம்பர் 24 முதல் 29 வரை நடைபெறும் சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடர் தொடங்கியுள்ளது.
மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: மலேசியா, தென் கொரியா மற்றும் தாய்லாந்து அணிகளை வீழ்த்தித் தொடர்ந்து மூன்று வெற்றிகளைப் பெற்ற இந்திய மகளிர் ஹாக்கி அணி, போபாலில் நடைபெறும் தனது நான்காவது லீக் ஆட்டத்தில் சீனாவை எதிர்கொண்டது.
இங்கிலாந்து அபார வெற்றி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில், 185 ரன்கள் என்ற இலக்கை எட்டிய இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 5 போட்டிகள் கொண்ட தொடரைச் சமன் செய்தது.
Jagran Josh
Today headlines
IITs to Add 6,000 New Seats in Emerging Tech: Indian Institutes of Technology (IITs) plan to introduce 6,000 new seats across undergraduate, postgraduate, and PhD programmes starting in 2027, with support from the Mehta Family Foundation. Of these, 5,000 seats will be dedicated to Robotics and Physical AI, and 1,000 to Space Engineering and Technology.
The Indian Express
+ 1
Tamil Nadu Launches AI Training for 2,000 Teachers: The Tamil Nadu Education Department has launched a programme to train 2,000 government school teachers in Artificial Intelligence (AI) tools and modern digital teaching methods.
Emergent
Indian Mathematician Honoured on TIME100 Next List: Indian mathematician Neena Gupta has earned a place on the TIME100 Next India 2026 list for solving a 70-year-old mathematics problem.
JEE Main 2027 Application Advisory: The National Testing Agency (NTA) has advised students applying for JEE Main 2027 to complete their forms well before the deadline. The examination will be conducted in 13 languages.
Sports News
Vaibhav Sooryavanshi Smashes World Record: Fifteen-year-old Indian batter Vaibhav Sooryavanshi created history in List A cricket by scoring a 52-ball double century (204 runs off 53 balls) with a record 28 sixes for India A against the UAE in Doha, powering his team to a seven-wicket victory.
The Times of India
World Chess Championship Begins: India's D. Gukesh and Javokhir Sindarov have begun their 14-game classical World Chess Championship match in Cologny, Switzerland.
Jagran Josh
Syed Modi International Badminton Underway: The Syed Modi International badminton tournament has begun and will run from November 24 to 29, featuring top national and international shuttlers.
Jagran Josh
Women's Asian Champions Trophy Hockey: After winning its opening three matches against Malaysia, South Korea, and Thailand, the unbeaten Indian women's hockey team took on China in its fourth league match in Bhopal.
Jagran Josh
England Levels T20I Series Against Australia: England defeated Australia by eight wickets in the second T20 International, chasing a target of 185 runs to level the five-match series.
Jagran Josh

Comments
Post a Comment