Zeal study official school morning prayer activities
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.11.2026
திருக்குறள்:
குறள் 996:
பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்
மண்புக்கு மாய்வது மன்.
உரை:
பண்பு உடையவரிடத்தில் பொருந்தியிருப்பதால் உலகம் உள்ளதாய் இயங்குகின்றது, அஃது இல்லையானால் மண்ணில் புகுந்து அழிந்து போகும்.
பழமொழி :
Great oaks from little acorns grow.
சிறிய தொடக்கம் பெரிய வளர்ச்சியாக மாறும்.
இரண்டொழுக்க பண்புகள் :
1.அறிவே மனிதனின் ஆயுதம் என்பதை நான் அறிவேன்.
2.எனவே மற்றவர்கள் என்ன சொன்னாலும் எனது பகுத்தறிவு கொண்டு முடிவெடுப்பேன்.
பொன்மொழி :
கேள்விப்பட்டதை எல்லாம் நம்பி விடாதீர்கள் . அதில் இருக்கும் உண்மையை அறிய முற்படுங்கள் - கௌதம புத்தர்
பொது அறிவு :
01.உலகின் மிக உயரமான கிரிக்கெட் மைதானம் எது?
சைல் கிரிக்கெட் மைதானம்
இமாச்சலப் பிரதேசம்
Chail Cricket Ground
Himachal Pradesh.
02. மனித கணினி என்று அழைக்கப்படுபவர் யார்?
இந்திய கணித மேதை
சகுந்தலா தேவி
Shakuntala Devi, An Indian mathematician
English words :
delicious –having a very pleasant taste or smell.
இன்சுவைமிக்க அல்லது நறுமணம் மிக்க.
தமிழ் இலக்கணம்:
மொத்தம் 18 மெய்யெழுத்துக்கள் அவற்றில்
ய்,ர்,ழ் என்ற மூன்று மெய்யெழுத்துக்கள் அருகில் மட்டும் மற்றொரு மெய் எழுத்து வரும். மற்ற 15 எழுத்துக்கள் அருகில் மற்றொரு மெய்யெழுத்து வராது
எ.டு – ய் –தேங்காய்ப்பால்
ர் – நேர்க்கோடு
ழ் – தாழ்ப்பாள்
அறிவியல் களஞ்சியம் :
தன்னைவிட உருவில் பெரிய தவளைகளையும், பல்லி இனங்களையும் உணவாகக் கொள்ளும் திறனுடையது 'ரீகல் ஜம்ப்பிங் ஸ்பைடர்' (regal jumping spider- Araneae: salticidae) என்னும் சிலந்தி. இவற்றின் கண்கள் நான்கு ஒரே வரிசையிலும், மற்றவை வரிசைக்கு இரண்டாக மேலும் இரு வரிசையிலும் என, கண்கள் மூன்று வரிசையில் அமையும் தனிப்பட்ட அமைப்பைக் கொண்ட சிறப்புடையது. இந்த அமைப்பு அதன் பார்வையைக் கூர்மையாக்குகிறது. தனது உணவான உயிரியின் மீது பாய்ந்து, அவற்றின் உடலில் நஞ்சைச் செலுத்தி கொன்றபிறகு அவற்றின் உடலைத் துண்டுகளாகி உண்டுவிடும். ஜர்னல் ஆஃப் அராக்நாலாஜி (Journal of Arachnology) இதழில் முதன்முறையாக முதுகெலும்புள்ள விலங்குகளை உண்ணும் சிலந்தி ஒன்றுள்ளது என்று ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
நவம்பர் 17
லாலா லஜபதி ராய் அவர்களின் நினைவுநாள்
லாலா லஜபதி ராய் ஒரு எழுத்தாளரும் அரசியல் தலைவரும் ஆவார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் இவரது பங்குக்காக இவர் பெரிதும் மதிக்கப்படுகிறார். இவரை மக்கள் பஞ்சாப் சிங்கம் எனவும் அழைப்பதுண்டு. லால்-பால்-பால் என்று அழைக்கப்படும் மூன்று முக்கியத் தலைவர்களுள் இவரும் ஒருவராவார். மற்ற இருவர் பால கங்காதர திலகர் மற்றும் பிபின் சந்திர பால் ஆவர். 'லாலா லஜபத் ராய்' பஞ்சாப் தேசிய வங்கி மற்றும் "லட்சுமி காப்புறுதி கம்பெனி" ஆகியவற்றை நிறுவியவரும் ஆவார்
நீதிக்கதை
ரூபாய் நோட்டு
ஒரு கிராமத்தில் ஒரு பள்ளி இருந்தது. அந்த பள்ளியில் குமார் எனும் சிறுவன் படித்து வந்தான். ஒருநாள் குமார் சோகமாக இருப்பதை கண்ட ஆசிரியர் அவனிடம் காரணம் கேட்டார். அதற்கு பதிலளித்த குமார் தான் ஒரு தவறு செய்துவிட்டதாகவும், அந்த தவறை காரணமாக காட்டி அவனுடைய நண்பர்கள் அவனை வெறுத்து ஒதுக்குவதாகவும் கூறினான்.
செய்த தவறை உணர்ந்த குமார் தன் நண்பர்களை எண்ணி ஏங்குவதை அறிந்துகொண்ட ஆசிரியர் குமாருக்கு உதவி செய்ய நினைத்தார். அடுத்த நாள் வகுப்பிற்கு சென்ற ஆசிரியர், ஒரு 50 ரூபாய் நோட்டை கையில் வைத்து இது யாருக்கு வேண்டும் என்று மாணவர்களிடம் கேட்டார். துள்ளி எழுந்த மாணவர்கள் அனைவரும் கைகளை உயர்த்தினர்.
மாணவர்களின் செய்கையை பார்த்த ஆசிரியர், அந்த நோட்டை கைகளால் கசக்கி இப்போது அந்த ரூபாய் நோட்டு யாருக்கு வேண்டும் என கேட்டார். அப்போதும் மாணவர்கள் கைகளை தூக்கியவாறே நின்றுகொண்டிருந்தனர்.
இம்முறை ரூபாய் நோட்டினை கீழே போட்டு விட்டு ஆசிரியர் மாணவர்களிடம் அதே கேள்வியை கேட்டார். மாணவர்களிடம் எந்த ஒரு மாற்றமும் இல்லை. வகுப்பிலிருந்த அனைவருக்கும் அந்த 50 ரூபாய் வேண்டும் என்பது போல் கையை இறக்காமல் நின்றனர்.
கையில் ரூபாய் நோட்டை எடுத்த ஆசிரியர், இந்த 50 ரூபாய் நோட்டு அழுக்காக இருந்தாலும், சரி கசங்கி இருந்தாலும் சரி அதன் மதிப்பு குறைவதில்லை. அதே போல் சில நேரங்களில் நாம் தெரியாமல் செய்யும் தவறுகள் நம் மதிப்பை குறைத்துவிடாது. ஒரு மனிதன் தவறு செய்வது இயல்பு, அவன் தான் செய்த தவறை உணர்ந்துவிட்டாலே அவன் மன்னிக்கப்பட வேண்டும்.
அந்த வகையில் இந்த வகுப்பில் படிக்கும் குமார் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஒரு தவறை செய்துவிட்டான். அந்த தவறு ரூபாய் நோட்டின்மேல் பட்டிருக்கும் அழுக்கை போன்றது. அதனால் குமாரின் மதிப்பு எப்போதும் குறையாது. எனவே, தெரியாமல் செய்த தவறுக்காக குமாரை ஒதுக்காமல் அவனுடன் சேர்ந்து பழகுங்கள் என ஆசிரியர் கூறினார். ஆசிரியர் கூறிய கதையில் இருந்த உண்மையை உணர்ந்த சக மாணவர்கள் குமாரிடம் மன்னிப்பு கேட்டு அவனை தங்களுடன் சேர்த்து கொண்டனர்.
இன்றைய செய்திகள்
17.11.2026
இலவச டேப்லெட் திட்டம்: மாணவர்களின் திறன் மேம்பாடு மற்றும் இணையவழிக் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், உத்தரப் பிரதேச அரசு 25 லட்சம் இலவச டேப்லெட்டுகளை (Tablets) வழங்கும் புதிய கட்டத்தை தொடங்கியுள்ளது.
NDTV Profit
அமெரிக்காவில் இந்திய மாணவர்கள்: அமெரிக்காவில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களில் இந்தியர்கள் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளனர்; சமீபத்திய அறிக்கையின்படி 2025-26 கல்வியாண்டில் சுமார் 3.39 லட்சம் இந்திய மாணவர்கள் அங்கு கல்வி பயின்றுள்ளனர்.
NDTV Profit
பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு: கர்நாடக மாநில அரசு 1,800 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் பைதான் (Python) கணினி மொழிக்கான புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
சுற்றுச்சூழல் முன்னெடுப்பு: மேற்கு வங்க அரசுடன் இணைந்து, ஐஐடி கரக்பூர் (IIT Kharagpur) திடக்கழிவு மேலாண்மை குறித்த சிறப்புப் பயிலரங்கை நடத்த உள்ளது.
வேலைவாய்ப்பு மேம்பாடு: ஆச்சார்யா நாகார்ஜுனா பல்கலைக்கழகத்தில் இன்று இளைஞர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்துவது மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்துவது குறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
விளையாட்டுச் செய்திகள்
கால்பந்து (SAFF): வங்கதேசத்தின் தாகாவில் இன்று நடைபெறும் தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு (SAFF) சாம்பியன்ஷிப் 2026 இறுதிப் போட்டியில், இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது; இதில் வென்று 10-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல இந்தியா முனைப்பு காட்டுகிறது.
பேட்மிண்டன்: ஜப்பானில் நடைபெற்ற குமாமோட்டோ மாஸ்டர்ஸ் (Kumamoto Masters) பேட்மிண்டன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில், ஜப்பான் வீரரை வீழ்த்தி இந்தியாவின் லக்ஷ்யா சென் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
கிரிக்கெட்: நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்றுள்ளது. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்து மண்ணில் இந்தியா ஒருநாள் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.
கிரிக்கெட் தொடர்கள்: 2029-ஆம் ஆண்டுக்கான ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் 2031-ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளை இந்தியா நடத்தவுள்ளது. மேலும், ஐசிசி தலைவராக ஜெய் ஷா இரண்டாவது முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கால்பந்து (U17): மலேசியாவின் கோலாலம்பூரில் இன்று நடைபெறும் 17 வயதுக்குட்பட்டோருக்கான (U17) கால்பந்து போட்டியில் இந்திய அணி பாலஸ்தீனத்தை எதிர்கொள்கிறது.
Today headlines
Tablet Distribution Scheme: The Uttar Pradesh government has begun the distribution of 25 lakh free tablets to students under a new youth empowerment scheme to aid online learning and skill development.
NDTV Profit
Indian Students in the US: According to the latest Open Doors Report, around 3.39 lakh Indian students studied in the US during the 2025-26 academic year, keeping India as the largest source of international students in the United States.
NDTV Profit
AI Curriculum in Schools: The Karnataka state government has introduced a new Artificial Intelligence (AI) and Python curriculum across 1,800 government high schools.
Sustainability Initiative: IIT Kharagpur is set to host a sustainable waste management workshop in collaboration with the West Bengal government.
Jagran Josh
Youth Employability: Acharya Nagarjuna University (ANU) in Andhra Pradesh is organizing a major stakeholders' meeting today to discuss enhancing youth employability and strengthening industry-academia partnerships.
The Hindu
Sports News
Football (SAFF Championship): The Indian men's football team will face arch-rivals Pakistan in the final of the SAFF Championship 2026 today in Dhaka, Bangladesh. The "Blue Tigers" are aiming for a record-extending 10th title.
Olympics.com
Badminton: Indian shuttler Lakshya Sen has clinched the Kumamoto Masters Japan title by defeating Japan's Koki Watanabe in the men's singles final.
Cricket: India has secured a historic ODI series victory against New Zealand. This marks India's first ODI series win in New Zealand in seven years.
NDTV Profit
Cricket Hosting Rights: India has been selected to host the 2029 ICC Champions Trophy and will co-host the 2031 ODI World Cup. Additionally, Jay Shah has been elected unopposed for a second term as the ICC Chairman.
Best Colleges
Football (U17): The India U-17 men's football team is gearing up to face Palestine today in a crucial match in Kuala Lumpur, Malaysia.
AIFF

🙏🏻
ReplyDelete