Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.11.2026

  Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.11.2026






மௌலானா அபுல் கலாம் ஆசாத் 









திருக்குறள்: 


குறள் 892: 


பெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாராற் 

பேரா இடும்பை தரும். 


விளக்க உரை: 


ஆற்றல் மிகுந்த பெரியாரை விரும்பி மதிக்காமல் நடந்தால், அது அப் பெரியாரால் நீங்காத துன்பத்தைத் தருவதாகும்.


பழமொழி :

sweat is the perfume of success. 


வியர்வை தான் வெற்றியின் வாசனை.


இரண்டொழுக்க பண்புகள் :


1.கோபம் என் அறிவை மறைக்கும்.


2.எனவே எப்போதும் கோபப்படமாட்டேன்.


பொன்மொழி :


நேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தை பார். ஓடுவது முள் அல்ல, உன் வாழ்க்கை - விவேகானந்தர்


பொது அறிவு : 


01.கேரளாவையும் தமிழகத்தையும் இணைக்கும் முக்கிய கணவாய்எது?



  பாலக்காடு கணவாய்

   Palakkat Gap


02. சர்வதேச கல்வி தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?


ஜனவரி 24 - January 24

English words :


articulate-able to express the thought clearly


coastal -located on the land by the edge of the sea


தமிழ் இலக்கணம்: 


 வினைத்தொகையில். வல்லினம் மிகாது.


ஊறு + காய் = ஊறுகாய்

சூடு + சோறு = சுடுசோறு.


நவம்பர் 11


தேசிய கல்வி நாள்


தேசிய கல்வி நாள் (National Education Day) இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 11 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக விளங்கிய மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்தநாளை நினைவுகூரும் விதமாக இத்தினம் கொண்டாடப்படுகிறது. 15 ஆகத்து 1947 முதல் 2 பிப்ரவரி 1958 வரை இவர் கல்வி அமைச்சாராகப் பணியாற்றினார்.



மௌலானா அபுல் கலாம்  ஆசாத் 


மௌலானா அபுல் கலாம் முகியுத்தின் அகமது (11 நவம்பர் 1888 – 22 பெப்ரவரி 1958) (Abul Kalam Muhiyuddin Ahmed) இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த அரசியல் தலைவரும் இந்திய முசுலிம் அறிஞரும் ஆவார். சமய அடிப்படையிலான இந்தியப் பிரிவினையை எதிர்த்து இந்து- முசுலிம் ஒற்றுமையை வலியுறுத்திய முசுலிம் தலைவர்களில் முதன்மையானவர். இந்தியா விடுதலையடைந்த பிறகு அமைந்த முதல் இந்திய அரசில் கல்வி அமைச்சராகப் பணியாற்றியவர். பாக்கித்தான் பிரிவினையையும் அங்கு இராணுவ ஆட்சி ஏற்படப்போவதையும் முன்னரே தெரிவித்த பெருமை உடையவர்.பரவலாக இவர் மௌலானா ஆசாத்என அறியப்படுகிறார்; ஆசாத் (விடுதலை) என்பது இவர் வைத்துக்கொண்ட புனைப்பெயராகும்.

நீதிக்கதை


 விடா முயற்சி



போரில் தோல்வி அடைந்த அரசன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிந்தான். அரசன் மிகவும் வீரத்துடன் போரிட்டாலும் அவனின் படை மிகவும் சிறியதாக இருந்ததினால் அவனால் வெல்ல முடியவில்லை. எதிரியிடம் மாபெரும் படை இருந்ததினால் வெற்றி பெற்றான்.  வெற்றி பெற்ற எதிரி அரசனை கொல்ல திட்டமிட்டான். அதனால் அவன் காட்டிற்கு ஓடிச் சென்று அங்கு இருந்த ஒரு குகையில் ஒளிந்து கொண்டான்.


ஒருநாள் சோம்பலுடன் அரசன் குகையில் படுத்திருந்தான். அந்தக் குகையினுள் ஒரு சிலந்தி வாழ்ந்து வந்தது. அந்த சிறிய சிலந்தியின் செயல் அவன் கவனத்தைக் ஈர்த்தது. குகையின் ஒரு பகுதியினுள்  ஒரு வலையைப் பின்னக் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தது. சுவரின் மீது ஊர்ந்து செல்லும் போது வலையினில் பின்னிய நூல் அறுந்து சிலந்தி கீழே விழுந்து விட்டது.


இவ்வாறு பலமுறை நடந்தது. ஆனாலும், அது தன் முயற்சியைக் கைவிடாமல் மறுபடி மறுபடியும் முயன்றது. கடைசியில் வெற்றிகரமாக வலையைப் பின்னி முடித்தது. அரசன் “இச் சிறு சிலந்தியே பல முறை தோல்வியடைந்தும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. நான் ஏன் விடவேண்டும்? என யோசித்தான்


நானோ அரசன். நான் மறுபடியும் முயற்சி செய்ய வேண்டும்” என்று எண்ணினான் மறுபடியம் தன் எதிரியுடன் போர் புரிய தீர்மானித்தான். அரசன் தான் வசித்த காட்டிற்கு வெளியே சென்று தன் நம்பிக்கையான ஆட்களைச் சந்தித்தான்.


தன் நாட்டில் உள்ள வீரர்களை ஒன்று சேர்த்து பலம் மிகுந்த ஒரு படையை உருவாக்கினான். தன் எதிரிகளுடன் தீவிரமாகப் போர் புரிந்தான். கடைசியில் போரில் வெற்றியும் பெற்றான். அதனால் தன் அரசைத் திரும்பப் பெற்றான். தனக்கு அறிவுரை போதித்த அந்த சிலந்தியை அவன் என்றுமே மறக்கவில்லை.

இன்றைய செய்திகள்

11.11.2026

தேசிய கல்வி தினம்: சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று இந்தியா முழுவதும் 'தேசிய கல்வி தினமாக' கொண்டாடப்படுகிறது.   

பொதுத்தேர்வு அட்டவணை: 2027-ஆம் ஆண்டுக்கான CISCE பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 10-ஆம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 15 முதல் மார்ச் 31 வரையும், 12-ஆம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 9 முதல் ஏப்ரல் 8 வரையும் நடைபெற உள்ளன.   

செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி: மாணவர்களை எதிர்கால தொழில்நுட்பங்களுக்குத் தயார்படுத்தும் வகையில், 5,500 மாணவர்களுக்கு 'ஜெனரேட்டிவ் ஏஐ' (Generative AI) பயிற்சித் திட்டம் பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ளது.   

விளையாட்டுச் செய்திகள்:

கிரிக்கெட்: ஓமனில் நடைபெறும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை தொடரில், இந்திய அணி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக 309 ரன்கள் குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.


டென்னிஸ்: பென் ஷெல்டனை வீழ்த்தி கார்லோஸ் அல்கராஸ் பாரிஸ் மாஸ்டர்ஸ் பட்டத்தை முதன்முறையாக வென்றுள்ளார். மேலும், WTA இறுதிப்போட்டியில் கோகோ கௌஃப் தனது முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார்.


ஃபார்முலா 1: மெர்சிடிஸ் அணி இன்னும் 3 பந்தயங்கள் மீதமுள்ள நிலையிலேயே 2026-ஆம் ஆண்டுக்கான ஃபார்முலா 1 'கன்ஸ்ட்ரக்டர்ஸ்' (Constructors') சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

Today headlines 

National Education Day: Today, India proudly observes National Education Day. This day commemorates the birth anniversary of Maulana Abul Kalam Azad, the first Education Minister of independent India, recognizing his immense contributions to our education system.   


CISCE Board Exam Dates: The CISCE board has officially announced the 2027 board exam schedule. Class 10 exams will be held from February 15 to March 31, while Class 12 exams are scheduled from February 9 to April 8.

AI Training in Schools: In a major step toward modern learning, schools have launched a new Generative AI training program to make 5,500 students future-ready in emerging technologies.

Sports News:

Cricket: In the ongoing Under-19 Asia Cup in Oman, the India Under-19 team put up a massive total of 309/7 against the United Arab Emirates, placing them in a dominant position ahead of the semi-finals.   


Tennis: Carlos Alcaraz defeated Ben Shelton to win the Paris Masters for the first time, while Coco Gauff successfully won her group opener at the WTA Finals.   


Formula 1: The Mercedes team has officially clinched the 2026 F1 Constructors' Title with three races still remaining in the season. Meanwhile, Lando Norris won the rain-hit Sao Paulo Grand Prix.   




Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 12.10.2026

 Zeal study official school morning prayer activities  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 12.10.2026

நவம்பர்-2026 மாத பள்ளி நாட்காட்டி

 வணக்கம் நமது குழுவின் சார்பாக நவம்பர் மாத பள்ளி நாட்காட்டி வழங்கப்பட்டுள்ளது இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளவும் நன்றி 

Zeal Study Lesson Plan Class :8 Subject English Topic: Crossing the river LO Based Lesson Plan With Lo Number And Activities And Also Kalvi Tv Link

Zeal study prepare and share lesson plan for the sake of the Tamilnadu teachers to make their work easy.

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.10.2026

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.10.2026

Zeal Study Lesson Plan Class : 7 Subject :Maths TM Topic: Algebra 3..3 &3.4 LO Based Lesson Plan With Lo Number And Activities

Zeal study prepare and share lesson plan for the sake of the Tamilnadu teachers to make their work easy.

Followers