Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.10.2026

 Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.10.2026


 

திருக்குறள்: 


குறள் 311: 


சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா 

செய்யாமை மாசற்றார் கோள் 


விளக்க உரை: 


சிறப்பைத்தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாம்.


பழமொழி :

Life teaches lessons better than books. 


புத்தகங்களை விட வாழ்க்கை தான் சிறந்த பாடங்களை கற்பிக்கிறது.


இரண்டொழுக்க பண்புகள் :


1.செல்லும் இடமெல்லாம் அன்பு, ஒழுக்கம், நேர்மை எனும் விதைகளை விதைத்துச் செல்வேன்.


2.அதன் மூலம் இவ்வுலகை நாம் நன்கு வாழக்கூடிய இடமாக மாற்ற முயற்சி செய்வேன்.


பொன்மொழி :


ஒருவரை தோற்கடிப்பது மிக எளிது .ஆனால் , ஒருவரை வெல்வது மிகக் கடினம் - டாக்டர் ஏ‌.பி.ஜே. அப்துல் கலாம்


பொது அறிவு : 


01.இந்தியாவின் மிகப்பெரிய நதித் தீவு எது?

 


மஜூலி தீவு -அசாம்

Majuli island - Assam


02.இந்தியாவின் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் யார்?


ஜவஹர்லால் நேரு- 16 ஆண்டுகள்

Jawaharlal Nehru - 16 years

English words :


discover-uncover, distinguish-differentiate


தமிழ் இலக்கணம்: 


 குறிப்பு வினைமுற்று என்பது பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகிய ஆறில் ஏதேனும் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு, காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல், செய்பவரை மட்டும் உணர்த்தி முடியும் வினைமுற்று ஆகும்.

எ. கா. பணக்காரன். இதில் காலம் குறிக்கப் படவில்லை. நேற்று பணக்காரனாக இருந்து இருக்கலாம் அல்லது இன்று பணக்காரனாக இருக்கலாம். இவ்வாறு குறிப்பாக காலத்தை உணர்த்துவதால் இது குறிப்பு வினை ஆகும்


அறிவியல் களஞ்சியம் :


 ஒரு சராசரி வாழ்வில் இதயமானது 2.5 பில்லியன் முறை துடித்து 1 மில்லியன் பேரல் இரத்தத்தை இரத்த குழாயில் செலுத்துகிறது.


இதயத்தில் உள்ள இரத்த அழுத்தமானது, இரத்தத்தை 30 அடிவரை பீய்ச்சி அடிக்கும் சக்தி கொண்டது.

அக்டோபர் 29


உலக பக்கவாத நாள் (World Stroke Day) 


ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 29 ஆம் நாளன்று உலக பக்கவாத நாள் (World Stroke Day)  அனுசரிக்கப்படுகிறது. பக்கவாதத்தின் தீவிர தன்மையையும் அதிக விகிதங்களையும் அடிக்கோடிட்டுக் காட்டுவதும் அந்த நிலையின் தடுப்பு மற்றும் சிகிச்சை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் உயிர் பிழைத்தவர்களுக்கு சிறந்த கவனிப்பு மற்றும் ஆதரவை உறுதி செய்வதும் உலக பக்கவாத நாள் அனுசரிக்கப்படுவதன் நோக்கங்களாகும். மனித உடலில் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சினைகளில் முக்கியமானது, ‘பக்கவாதம்.’ ஒரு மனிதனை செயல்பட விடாமல் ஓரிடத்தில் முடக்கிப்போடும் அபாயகரமான நோயில் இதுவும் ஒன்று.மூளையில் உள்ள ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு காரணமாக, மூளை செயல் இழப்பதால் இந்த பக்கவாத நோய் ஏற்படுகிறது. வலது, இடது என்று இரண்டு பாகங்களாக பிரிந்திருப்பது மூளை. வலதுபக்க மூளை இடது பக்க உடலையும், இடதுபக்க மூளை வலது பக்க உடலையும் கட்டுப்படுத்துகின்றன. இதில் ஒரு பக்கம் செயல்படாமல் போனாலும் மற்றவை செயல்படாது.

நீதிக்கதை


 ஒரு காட்டில் பல மிருகங்கள் வசித்து வந்தன. 


அங்கு வசித்து வந்த முயலுக்கு கர்வம் அதிகம். அது தானே இக்காட்டில் வேகமாக ஓடுவேன் என்ற கர்வம் வந்தது. 


மெதுவாக நகரக்கூடிய ஆமையிடம் ஏளனமாக ஒருநாள் முயல் தன்னுடன் ஓட்டப் பந்தயத்திற்கு வருமாறு கேட்டது. 


முதலில் இல்லை எனக்கூறிய ஆமை முயலின் கர்வத்தை அடக்க வேண்டுமென நினைத்து ஆம் என்றது. 


பல மிருகங்களுக்கு இடையில் போட்டி ஆரம்பமானது. ஒரு முடிவிடமும் அறிவிக்கப்பட்டது. முயல் ஆமையை விட பன்மடங்கு வேகத்தில் ஓடியது. 


ஆமையோ மிகவும் மெதுவாகவே சென்றது. முக்கால்வாசி தூரம் ஓடி முடித்த முயல் ஆமை மெதுவாக வருவதைக்கண்டு ஒருமரத்தின் கீழ் நித்திரை செய்தது. ஆமையோ மெது மெதுவாக முயல் தூங்கிய தூரத்தைக்கடந்து முடிவுக்கோட்டை நெருங்கியது. அந்த நேரம் தூக்கம் கலைந்த முயல், ஆமை எல்லையை நெருங்கியதை கண்டு ஓட்டம் பிடித்தது. எனினும் முயலுக்கு முதல் ஆமை வெற்றி இலக்கை அடைந்தது. 

நீதி :

நிதானம் பிரதானம்.

இன்றைய செய்திகள்

29.10.2026

கல்விச் செய்திகள்:

இஸ்ரோவின் புதிய திட்டம்: வரவிருக்கும் 'ககன்யான்' விண்வெளித் திட்டத்தை முன்னிட்டு, பள்ளி மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிப்பதற்காக இஸ்ரோ (ISRO) புதிய தேசிய அளவிலான விழிப்புணர்வுத் திட்டத்தை அறிவித்துள்ளது.


ஸ்மார்ட் அறிவியல் ஆய்வகங்கள்: மாணவர்களின் செய்முறை கற்றலை மேம்படுத்தும் நோக்கில், தமிழக பள்ளிக் கல்வித்துறை மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் புதிய "ஸ்மார்ட் அறிவியல் ஆய்வகங்களை" அறிமுகப்படுத்தியுள்ளது.


தேசிய வாசிப்புச் சவால்: பிராந்திய இலக்கியங்கள் மற்றும் வரலாற்று நூல்களைப் படிக்கும் பழக்கத்தை மாணவர்களிடையே வளர்ப்பதற்காக, மத்திய கல்வி அமைச்சகம் "ரீட் இந்தியா" (Read India) என்ற வாசிப்புச் சவாலைத் தொடங்கியுள்ளது.


விளையாட்டுச் செய்திகள்:


மாநில தடகளப் போட்டிகள்: தமிழ்நாடு மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான தடகளப் போட்டிகள் அடுத்த வாரம் சென்னையில் கோலாகலமாகத் தொடங்க உள்ளன. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர்.


மகளிர் கிரிக்கெட் வெற்றி: சமீபத்தில் நடந்த சர்வதேச டி20 கிரிக்கெட் தொடரில், இந்திய மகளிர் அணி சிறப்பான கூட்டு முயற்சியின் மூலம் அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.


ஒலிம்பிக் பயிற்சி: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, 2028 ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தயாராகும் இளம் வீரர், வீராங்கனைகளுக்கான சிறப்புப் பயிற்சி முகாம்களை இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) தொடங்கியுள்ளது.

Today headlines 
Education News:

ISRO Student Initiative: The Indian Space Research Organisation (ISRO) has announced a new nationwide student outreach program to inspire young minds ahead of the upcoming phases of the Gaganyaan space mission.

Smart Labs in TN: The Tamil Nadu School Education Department has inaugurated a new phase of interactive "Smart Science Labs" in government schools across the state to promote practical learning.

National Reading Challenge: The Ministry of Education has launched a "Read India" challenge for middle and high school students to encourage the reading of regional literature and historical texts.

Sports News:

State Athletics Meet: The Tamil Nadu State-Level Inter-School Athletics Championship is officially scheduled to kick off next week in Chennai, with over 2,000 students participating from various districts.

Women's Cricket Victory: The Indian Women’s Cricket team secured a brilliant victory in their latest international T20 series match, showcasing exceptional teamwork and fielding.

Olympic Preparation: Following a successful run at the recent Asian Games, the Sports Authority of India has begun special high-altitude training camps for junior athletes preparing for the 2028 Olympics.

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study lesson plan 10th Maths lesson plan Algebra EM Quadratic Graphs LO Based Lesson Plan With LO Number And Activities And Also

Zeal study prepare and share lesson plan for the sake of the Tamilnadu teachers to make their work easy.

Zeal Study Lesson Plan Term 2 Class : 6 Subject : Maths Topic: எண்கள் LO Based Lesson Plan With Lo Number And Activities And Also Kalvi Tv Link

Zeal study prepare and share lesson plan for the sake of the Tamilnadu teachers to make their work easy.

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 12.10.2026

 Zeal study official school morning prayer activities  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 12.10.2026

Zeal study morning prayer activities பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 05.10.2026, திங்கட்கிழமை

Zeal study morning prayer activities பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 05.10.2026,

Zeal Study Lesson Plan Term 2 Class : 6 Subject : Science Topic: வெப்பம் LO Based Lesson Plan With Lo Number And Activities And Also Kalvi Tv Link

Zeal study prepare and share lesson plan for the sake of the Tamilnadu teachers to make their work easy.

Followers