Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.09.2026

 Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.09.2026




சதீஷ் தவான்


திருக்குறள்:

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:51.தெரிந்து தெளிதல்

குறள் எண்:502

குறள்:

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் சுட்டே தெளிவு. 

பொருள்:

நல்ல குடியிலே பிறந்து, குற்றங்கள் இல்லாதவனாய், பழிச் சொல் வரக்கூடாதென்று அஞ்சும் மனமுள்ளவனிடத்திலேயே நம்பிக்கை வைக்க வேண்டும்..

பழமொழி :
Set a thief to catch a thief.

முள்ளை முள்ளால் எடு.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. காகம் ஒற்றுமையையும், தேனீயும் எறும்புகளும் சுறுசுறுப்பையும் போதிக்கின்றன.

2. இயற்கையை காப்பதோடு மட்டும் அல்லாது அவற்றில் இருந்து பாடமும் கற்றுக் கொள்வேன்.


பொன்மொழி :

ஒரு கருத்தை ஒற்றைக் கண்ணோட்டத்தில் அல்லது ஒரே கோணத்தில் பார்ப்பவர்கள் ,அதில் உள்ள உண்மைகளை ஆராய்வதில்லை. எனவே உங்கள் கருத்து பன்முகம் கொண்டதாக இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் ..

இறையன்பு அவர்கள்

பொது அறிவு :

1. உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படும் நாள் எது ?


செப்டம்பர் 27.

2. 'தென்னாட்டு ஸ்பா' என்று அழைக்கப்படும் சுற்றுலாத் தலம் எது?

குற்றாலம் (தமிழ்நாடு)
English words :

1. Comprehensive– Thorough – விரிவான

2.Inevitable – Unavoidable – தவிர்க்க முடியாத

புவியியலும் சுற்றுசூழலும் :

கழிவுநீர் வடிகால் வசதிகளைப் பராமரித்தல்.
பொது சுகாதாரத்தைப் பாதுகாத்தல்
பூங்காக்கள் மற்றும் பொது இடங்களைப் பராமரித்தல்
பிறப்பு, இறப்பு போன்ற பதிவுகளை மேற்கொள்ளுதல் போன்றவை ஆகும்.

NMMS :

MAT

வெளிநாடு செல்ல விரும்பும் ஒருவரது கடவுச்சீட்டில் குறிக்கப்படும் முத்திரை

(1) ஆதார் அட்டை

(2) விமான பயணச்சீட்டு

(3) விசா

(4) வாக்காளர் அடையாள அட்டை

விடை: (3) விசா

செப்டம்பர் 25

சதீஷ் தவான் அவர்களின் பிறந்த நாள்

சதீஷ் தவான் (பஞ்சாபி: ਸਤੀਸ਼ ਧਵਨ, இந்தி: सतीश धवन) (25 செப்டம்பர் 1920–3 சனவரி 2002) ஓர் இந்திய ராக்கெட் ஆராய்ச்சியாளர் ஆவார். சிறீநகரில் பிறந்த இவர் இந்தியாவிலும் ஐக்கிய அமெரிக்க நாடுகளிலும் கல்வி பயின்றுள்ளார். 1972-இல் இவர் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவராகவும் பதவி வகித்திருக்கிறார். இவரது நினைவாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இசுரோ ஆய்வு மையத்துக்கு இவருடைய பெயர் இடப்பட்டுள்ளது.

நீதிக்கதை

🌿 படிப்புடன் ஓய்வும் தேவை

ஒரு சிறிய ஊரில் விக்னேஷ் என்ற மாணவன் வாழ்ந்து வந்தான். அவன் படிப்பில் மிகவும் ஆர்வம் கொண்டவன். எப்போதும் புத்தகத்தை எடுத்துக்கொண்டு படித்துக் கொண்டே இருப்பான்.

தேர்வு நெருங்கியதால், “நான் அதிக நேரம் படித்தால்தான் அதிக மதிப்பெண் பெற முடியும்” என்று நினைத்து, ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து படித்தான். நண்பர்கள் விளையாட அழைத்தாலும் செல்லவில்லை . உணவு சாப்பிடும் நேரத்திலும் புத்தகத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தான். சில நாட்களில் அவனுக்கு மிகவும் சோர்வாக இருந்தது. படித்த பாடங்கள் சரியாக நினைவில் நிற்கவில்லை . இதை க் கவனித்த அவனுடைய தாய்,

“விக்னேஷ், படிப்பு முக்கியம் தான். ஆனால் உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு கொடுக்க வேண்டும். சிறிது நேரம் ஓய்வெடுத்து, நன்றாகத் தூங்கி, பிறகு படித்தால் படிப்பு நன்றாக மனதில் பதியும்,” என்று அறிவுரை கூறினார்.

அன்று முதல் விக்னேஷ் தனது படிப்பு நேரத்துடன் சிறிய ஓய்வு நேரத்தையும் வைத்துக்கொண்டான். மாலை சிறிது நேரம் விளையாடினான், சரியான நேரத்தில் உணவு சாப்பிட்டான், இரவில் நன்றாகத் தூங்கினான்.

அதன் பிறகு அவன் புத்துணர்ச்சியுடன் படிக்கத் தொடங்கினான். படித்தவை எளிதாக நினைவில் நின்றன. தேர்விலும் நன்றாக எழுதினான்.

அப்போது விக்னேஷ், “ஓய்வு என்பது நேரத்தை வீணாக்குவது அல்ல; அடுத்த முயற்சிக்கான சக்தியைப் பெறுவது!” என்பதைப் புரிந்துகொண்டான்.

நீதி: 🌟 படிப்பு எவ்வளவு முக்கியமோ, அதே போல் உடலுக்கும் மனதுக்கும் போதுமான ஓய்வு கொடுப்பதும் அவசியம்.

இன்றைய செய்திகள்

25.09.2026

🗒️சமூக நீதி விடுதி மாணவர்களின் திறனை மேம்படுத்த சிறப்பு பயிற்சி திட்டம்!
12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை பல்வேறு போட்டித் தேர்வுகளுக்குத் தயார்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

🗒️ஆயுஷ்மான் பாரத்’ திட்டம் மூலம் 60 கோடி பேர் பயன் - பிரதமர் மோடி பெருமிதம்...

🗒️எல்நினோவால் இந்தியாவில் 15,800 பேர் உயிரிழக்க நேரிடும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
வருகிற நாட்களில் வெப்பநிலை இன்னும் அதிகரிக்கும் எனத் தகவல்.

விளையாட்டுச் செய்திகள்

🏀ஆசிய விளையாட்டு:

🏃🏿400  மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்.

🏃🏻‍♀️மகளிர் 10 ஆயிரம் மீட்டர் மாரத்தான்; இந்தியாவுக்கு வெண்கலம்.

Today's Headlines

🗒️ Special training programme to improve the skills of Social Justice Hostel students!
Steps are being taken to prepare more than 12,000 students for various competitive exams.

🗒️ 60 crore people benefited from the Ayushman Bharat scheme – PM Modi says proudly.

🗒️ El Niño may cause the deaths of 15,800 people in India, study says.
The study says that temperatures may rise further in the coming days.

🏅 Sports News

🏀 Asian Games:

🏃🏿 India won a silver medal in the 400-metre relay.

🏃🏻‍♀️ Women’s 10,000-metre race: India won a bronze medal.

Covai women ICT_போதிமரம்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

10th Slow learners materials for all Subjects given by Educational department - பள்ளிக்கல்வித்துறையால் வழங்கப்பட்ட மெல்லக்கற்போர் கையேடுகள்

2025-202 6 Chengalpattu dt  Tamil English Maths TM Maths EM Science TM Science EM Social science TM Social science EM Thoothukudi Districts     10th Tamil minimum level materials given by Thenkasi Educational Department -2025-26 10th English minimum level materials given by Thoothukudi Educational Department -2025-26 Zeal study 10th Science English medium minimum level materials given by Thoothukudi Educational Department -2025-26   Zeal study 10th Science Tamil medium minimum level materials given by Thoothukudi Educational Department -2025-26 Zeal study 10th Social Science English medium  minimum level materials given by Thoothukudi Educational Department -2025-26    Zeal study 10th Social Science Tamil  medium  minimum level materials given by Thoothukudi Educational Department -2025-26     Zeal study 10th Maths   Tamil  medium  minimum level materials given by Thoothukudi Educational Departmen...

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.08.2026

 Zeal study official school morning prayer activities  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.08.2026

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.09.2026

 Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.09.2026

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.09.2026

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.09.2026

Followers