Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.09.2026

Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.09.2026




உலக கடிதம் எழுதும் தினம்

திருக்குறள்:

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:49.காலம் அறிதல்

குறள் எண்:485

குறள்:

காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.

பொருள்:

உலகை வெற்றி கொள்ளக் கருதுகின்றவர்கள், அதற்கு ஏற்ற காலத்தை எதிர்பார்த்து, அதுவரையும் மனந்தளராமல் காத்திருப்பார்கள்.

பழமொழி :

இரண்டொழுக்க பண்புகள் :.

1. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.

2. எனவே அறிவைப் பாதிக்கும் வகையில் ஆத்திரப் படமாட்டேன்.

பொன்மொழி :

“நேரத்தை வீணாக்காத இளைஞன், திறமையை வீணாக்காத எதிர்காலத்தை உருவாக்குகிறான்.”

Thought for the Day :

“A talented youth becomes powerful when talent is guided by practice.”

பொது அறிவு :

1. தென்னிந்தியாவின் தாஜ்மஹால் என்றழைக்கப்படுவது எது?

திருமலை நாயக்கர் மஹால்.

2. தென்னிந்தியாவின் கங்கை என்றழைக்கப்படுவது எது?

காவிரி.

English words :

1. Tenacious – Holds firmly to a purpose, தளராத உறுதியுடையவர்.


2. Empathetic – Understands others' feelings, பிறர் உணர்வுகளை புரிந்துகொள்பவர்

புவியியலும் சுற்றுசூழலும் :

தெற்கில் மன்னார் வளைகுடா மற்றும் பால்க் நீரிணை உள்ளன.
தமிழ்நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் இந்தியாவின் தீவிர தென்முனையான கன்னியாகுமரி அமைந்துள்ளது.

NMMS :

SAT

தவறான இணையைத் தேர்ந்தெடு.

(1) ஜலகண்டேஸ்வரர் கோவில் - வேலூர்

(2) ஆதிநாதர் கோவில் - தஞ்சாவூர்

(3) வரதராஜ பெருமாள் கோவில் - காஞ்சிபுரம்

(4)இராமநாதசுவாமி கோவில் - இராமேஸ்வரம்

விடை: (2) ஆதிநாதர் கோவில் - தஞ்சாவூர்

செப்டம்பர் 01

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1-ம் தேதி உலக கடிதம் எழுதும் தினம் (World Letter Writing Day) அனுசரிக்கப்படுகிறது.
மறைந்துவரும் கலை: இணையம் மற்றும் செல்பேசி காலத்தில், கைகளால் கடிதம் எழுதி அனுப்பும் பழக்கம் குறைந்து வருகிறது. அதைக் காக்க இந்த நாள் உதவுகிறது.
உணர்வுபூர்வமான தொடர்பு: கடிதங்கள் மூலம் வெளிப்படும் பாசமும் நினைவுகளும் என்றென்றும் நிலைத்திருக்கும்.
வரலாற்றுப் பகிர்வு: நம் முன்னோர்கள் மற்றும் இலக்கியவாதிகளின் கடிதத் தொடர்புகளை நினைவுகூரும் நாளாக இது அமைகிறது.
நீதிக்கதை

“ஆசையின் விலை ”

ஒரு சிறிய கிராமத்தில் அருண் என்ற சிறுவன் தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு புதிய பொருட்கள் வாங்குவதில் மிகவும் ஆசை . நண்பர்கள் வைத்திருக்கும் பொருட்களை ப் பார்த்தாலே , அதைப் போலவே தனக்கும் வேண்டும் என்று பெற்றோரிடம் அடம்பிடிப்பான்.

ஒருநாள் அவனுடை ய நண்பன் புதிய வண்ணமயமான பள்ளிப் பையை கொண்டுவந்தான்.

“அம்மா, எனக்கும் இதே மாதிரி பை வேண்டும். இப்போதே வாங்கித் தர வேண்டும்!” என்று அருண் அடம்பிடித்தான்.

அம்மா, “அருண், உன்னுடைய பை இன்னும் நன்றாகத்தானே இருக்கிறது. இப்போது வாங்க முடியாது,” என்று அன்பாகக் கூறினார்.

ஆனால் அருண் கேட்காமல் தொடர்ந்து தொந்தரவு செ ய்தான். அவனுடைய பெற்றோர் மிகவும் வருத்தமடைந்தனர். சில நாட்களுக்குப் பிறகு, அருணின் அப்பா வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது மிகவும் கவலையாக இருந்தார். அப்பாவிடம் காரணம் கேட்டபோது, வேலை குறைந்ததால் இந்த மாதம் குடும்பச் செலவுகளை சமாளிப்பது சிரமமாக இருப்பதாகத் தெரிவித்தார்.அப்போது அருணுக்கு தான் செய்தது புரிந்தது.

“அப்பா, அம்மா, என்னை மன்னித்துவிடுங்கள். நம்முடைய குடும்பச் சூழ்நிலையைப் புரிந்துக்கொள்ளாமல் நான் தேவையில்லாத பொருட்களுக்காக உங்களைத் தொந்தரவு செய்துவிட்டேன். இனிமேல் தேவையான பொருட்களை மட்டுமே கேட்பேன்,” என்றான்.

அன்று முதல் அருண் தன்னிடம் இருப்பதை மதிக்கத் தொடங்கினான்.பெற்றோரிடம் அடம்பிடிப்பதையும் விட்டுவிட்டான். அவனுடைய மாற்றத்தைக் கண்டு பெற்றோரும் மகிழ்ந்தனர்.

🌸 நீதி:

நமக்குத் தேவையானவற்றை மட்டும் பெற்றோரிடம் கேட்கவேண்டும்.

தேவையில்லாத பொருட்களுக்காக அடம்பிடித்து அவர்களைத் தொந்தரவு செய்யக்கூடாது. இருப்பதைக்கொண்டு மகிழ்ந்து, பெற்றோரின் உழைப்பையும் மதிக்க வேண்டும்.

இன்றைய செய்திகள்

01.09.2026

🗒️கோயம்புத்தூரில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மூலம் ரூ.400 கோடி மதிப்பீட்டில் “கோயம்புத்தூர் டிஜிட்டல் நிதி மையம்” முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

🗒️தமிழக மக்கள் தொகை கணக்கெடுப்பு  2027-ன் முதற்கட்ட பணிகள் நிறைவு
இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2027 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நாடு முழுவதும் நடைபெறும்.

🗒️பிரபஞ்ச ரகசியங்களை அறிய உதவும் சக்திவாய்ந்த தொலைநோக்கியை விண்ணில் ஏவியது நாசா.

*விளையாட்டுச் செய்திகள்*

🏀இந்தியா, பிரேசில் அணிகளுக்கு இடையிலான நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி அக்டோபர் 3-ம் தேதி நடைபெறவுள்ளது.

Today's Headlines

🗒️ Tamil Nadu Chief Minister Joseph Vijay has announced a “Coimbatore Digital Finance Centre” in Coimbatore. It will be developed by the Tamil Nadu Industrial Development Corporation at a cost of ₹400 crore.

🗒️ The first phase of the 2027 Census in Tamil Nadu has been completed. The second phase of the Census will be conducted across India in January and February 2027.

🗒️ NASA has launched a powerful telescope into space to help scientists discover the secrets of the universe.

🏀 Sports News

🗒️ A friendly football match between India and Brazil will be held on October 3.

Covai women ICT_போதிமரம்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study (Lo based )-கற்றல் விளைவு அடிப்படையிலான பாடக்குறிப்பு 6th Tamil -கல்வியை போற்று

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -10.08.2026

 Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -10.08.2026

Followers