Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.09.2026

Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.09.2026



மங்கள்யான்


திருக்குறள்:

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:51.தெரிந்து தெளிதல்

குறள் எண்:501

குறள்:

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்.

பொருள்:

அறம், பொருள், இன்பம், தன் உயிருக்கு அச்சம் என்னும் நான்கினது வகையாலும் ஆராய்ந்தே, ஒருவன் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்.

பழமொழி :
Sadness and gladness succeed eash other

வறுமை ஒரு காலம்; வளமை ஒரு காலம்

இரண்டொழுக்க பண்புகள் :.

1. காகம் ஒற்றுமையையும், தேனீயும் எறும்புகளும் சுறுசுறுப்பையும் போதிக்கின்றன.

2. இயற்கையை காப்பதோடு மட்டும் அல்லாது அவற்றில் இருந்து பாடமும் கற்றுக் கொள்வேன்.


பொன்மொழி :

அன்பு செலுத்தி  அன்பைப் பெறு. மரியாதை செலுத்தி மரியாதை பெறு. நிச்சயம் வாழ்வில் உயர்வாய்

Thought for the Day :

Translation Day: “Different languages, shared understanding.”

பொது அறிவு :

1. தேசிய அறிவியல் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

பிப்ரவரி 28.

2. தேசிய அறிவியல் தினம் பிப்ரவரி 28 அன்று கொண்டாடப்படுவதன் நோக்கம் என்ன?

சர் சி வி ராமன் "ராமன் விளைவை" கண்டுபிடித்ததை குறிக்கும் வகையில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது.

English words :

1.Feasible – Achievable – சாத்தியமான

2. Arbitrary – Random – தன்னிச்சையான

புவியியலும் சுற்றுசூழலும் :

பேரூராட்சியின் முக்கியப் பணிகள் குறித்து பார்ப்போம்.

குடிநீர் வழங்குதல், சாலை மற்றும் தெருக்களைப் பராமரித்தல், தெருவிளக்குகள் அமைத்தல் மற்றும் பராமரித்தல், தூய்மை மற்றும் குப்பை மேலாண்மை.

NMMS :

MAT

உஉலகில் சூரிய ஆற்றலை அதிகம் பயன்படுத்தும் நாடுகள்

(1) இந்தியா, சீனா, ஜப்பான் , இத்தாலி

(2) ஜெர்மனி, ஸ்பெயின், கனடா, பிரேசில்

(3) ரஷ்யா, நார்வே, இந்தியா, கிரீன்லாந்து

(4) இந்தியா, அமெரிக்கா, கனடா, இத்தாலி

விடை: (1) இந்தியா, சீனா, ஜப்பான், இத்தாலி

செப்டம்பர் 24

2014 – மங்கள்யான் விண்கலம் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தினால் வெற்றிகரமாக செவ்வாய் சுற்றுவட்டத்தில் செலுத்தப்பட்டது.
நீதிக்கதை

🌱 யார் இகழ்ந்தாலும் பயப்படாதே

ஒரு சிறிய கிராமத்தில் அருண் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவன் அமைதியானவனாகவும், முயற்சி செய்து கற்றுக்கொள்ளும் பழக்கம் கொண்டவனாகவும் இருந்தான்.

ஒருநாள் பள்ளியில் ஆசிரியர் அனைவரிடமும் ஓவியம் வரையச் சொன்னார்.

அருண் மிகவும் ஆர்வமாக ஓர் அழகான இயற்கைக் காட்சியை வரைந்தான். ஆனால் சில மாணவர்கள் அவனைப் பார்த்து,

“உன்னால் நல்ல ஓவியம் வரையவே முடியாது!” என்று கேலி செய்தனர். முதலில் அருணுக்கு வருத்தமாக இருந்தது. ஆனால் அவன் அவர்களின்    வார்த்தைகளைக் கண்டு பயப்படவில்லை .

“நான் இப்போது சிறப்பாகச் செய்யவில்லை என்றாலும், தொடர்ந்து முயற்சி செய்தால் நிச்சயம் முன்னேறுவேன்,” என்று தன்னம்பிக்கையுடன் நினைத்தான்.

அன்றிலிருந்து தினமும் சிறிது நேரம் ஓவியம் வரையப் பயிற்சி செய்தான். சில மாதங்களில் அவனுடைய ஓவியங்கள் மிகவும் அழகாக மாறின.

பள்ளியில் நடை பெற்ற ஓவியப் போட்டியிலும் அவன் பரிசு பெற்றான்.

அப்போது முன்பு அவனை கேலி செய்த மாணவர்கள், “அருண், நீ உண்மையிலேயே நன்றாக வரைந்திருக்கிறாய்!” என்று பாராட்டினர்.

அருண் புன்னகையுடன், “யாராவது நம்மை இகழ்ந்தால் அதை க் கண்டு பயப்படவோ, மனம் தளரவோ கூடாது. நம்முடைய முயற்சியைத் தொடர்ந்து செய்ய வேண்டும்,” என்றான்.

நீதி: 🌟

யார் இகழ்ந்தாலும் பயப்படாமல், தன்னம்பிக்கையுடன் நம் முயற்சியைத் தொடர்ந்து செய்தால் வெற்றி நிச்சயம்.

இன்றைய செய்திகள்

24.09.2026

🗒️செப்டம்பர் 23-ஆம் நாளினை, மாநில அளவில் ஆண்டுதோறும் உடல் உறுப்புகள் தான விழிப்புணர்வு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

🗒️அரசு விடுதி மாணவர்களின் குறைகளை தீர்க்க புதிய கட்டுப்பாட்டு அறையை அமைச்சர் வன்னி அரசு திறந்து வைத்தார்.

🗒️ வேலை நாட்களை குறைக்க வலியுறுத்தி வங்கிகள் 3 நாட்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம் அறிவிப்பு.மேலும் ஐந்து நாட்கள் வங்கிச்சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

🗒️அமெரிக்காவில் தகவல் தொடர்பு கேபிள் பழுதால் 600-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀தமிழக பேட்மிண்டன் வீரர் ஹரிஹரனுக்கு முதல்-அமைச்சர் ஜோசப்  விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Today's Headlines

🗒️ September 23 has been declared as Organ Donation Awareness Day to be observed every year across the state.

🗒️ A new control room has been opened to solve the problems of students staying in government hostels. Minister Vanni Arasu inaugurated it.

🗒️ Banks have announced a three-day nationwide strike demanding a reduction in working days. There is also a risk that banking services may be affected for five more days.

🗒️ More than 600 flights have been cancelled in the US due to a communication cable failure.

🏀 Sports News

🏀 Tamil Nadu badminton player Hariharan has received congratulations from Chief Minister Joseph Vijay.

Covai women ICT_போதிமரம்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

10th Slow learners materials for all Subjects given by Educational department - பள்ளிக்கல்வித்துறையால் வழங்கப்பட்ட மெல்லக்கற்போர் கையேடுகள்

2025-202 6 Chengalpattu dt  Tamil English Maths TM Maths EM Science TM Science EM Social science TM Social science EM Thoothukudi Districts     10th Tamil minimum level materials given by Thenkasi Educational Department -2025-26 10th English minimum level materials given by Thoothukudi Educational Department -2025-26 Zeal study 10th Science English medium minimum level materials given by Thoothukudi Educational Department -2025-26   Zeal study 10th Science Tamil medium minimum level materials given by Thoothukudi Educational Department -2025-26 Zeal study 10th Social Science English medium  minimum level materials given by Thoothukudi Educational Department -2025-26    Zeal study 10th Social Science Tamil  medium  minimum level materials given by Thoothukudi Educational Department -2025-26     Zeal study 10th Maths   Tamil  medium  minimum level materials given by Thoothukudi Educational Departmen...

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.08.2026

 Zeal study official school morning prayer activities  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.08.2026

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.09.2026

 Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.09.2026

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.09.2026

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.09.2026

Followers