Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.01.2026

Zeal study official school morning prayer activities  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.01.2026




திருக்குறள்:


குறள் 373:


நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்.


விளக்க உரை:


ஒருவன் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றாலும் ஊழுக்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ள தாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும்.


பழமொழி :

Self control is the strongest power.

தன்னடக்கம் தான் மிகப் பெரிய சக்தி.

இரண்டொழுக்க பண்புகள் :




1. கண்காணிக்க எவரும் இல்லாத போதும் கடைபிடிக்கப்படும் நேர்மையே உண்மையான ஒழுக்கம்.


2. எனவே எப்பொழுதும் ஒழுக்கத்தை கடைபிடிப்பேன்.

பொன்மொழி :

சகிப்புத் தன்மையால் தான் மகான்கள் நிம்மதிப் பெறுகின்றனர்.துன்பம் வரும் காலத்தில் அமைதியாக இருக்க பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும்...

-------மார்க் ட்வைன்

பொது அறிவு :

1.பணத்திற்கு ரூப்யா' (Rupya) என்று பெயர் சூட்டியவர் யார்?


ஷெர்ஷா சூரி- Sher Shah Suri
02. இந்தியாவின் தற்போதைய துணை குடியரசுத் தலைவர் யார்?


திரு.ச. பொ. ராதாகிருஷ்ணன்
Thiru.C. P. Radhakrishnan















English words :

overwrought-very worried

inception-beginning of something

தமிழ் இலக்கணம்:
ஒருமை பன்மை குறித்து இன்று பார்ப்போம்
பேருந்து இதை பன்மையாக மாற்றும் போது பேருந்துகள் என்றும் புறா இதை பன்மையாக மாற்றும் போது புறாக்கள் என்றும் எழுதுகிறோம். ஏன் புறா புறாக்களாக வல்லினம் மிகுந்து வருகிறது? ஒரு எழுத்து நெடிலில் முடியும் போது அதை பன்மைக்கு மாற்றும் போது கள் விகுதி முன்னால் வல்லினம் மிகுந்து வரும்.
எ.கா –விழா –விழாக்கள்
பூ –பூக்கள்
கனா –கனாக்கள்
ஆ –ஆக்கள்

ஜனவரி 30
மோகன்தாசு கரம்சந்த் காந்தி அவர்களின் நினைவுநாள்




மோகன்தாசு கரம்சந்த் காந்தி (ஆங்கிலம்: Mohandas Karamchand Gandhi, குசராத்தி அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948) என்பவர் ஒரு இந்திய வழக்குரைஞரும், அன்னிய ஆட்சியை எதிர்த்த தேசியவாதியும், அரசியல் அறனாளரும் ஆவார். இவர் மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார் . சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.

நீதிக்கதை

வெட்டுக்கிளியும் ஆந்தையும்




ஒரு நாள் ஒரு ஆந்தை அங்குள்ள ஒரு மரத்தின் மரப்பொந்தில் தூங்கிக் கொண்டிருந்தது. கீழே புல்தரையில் வெட்டுக்கிளி பாட்டுப்பாடிக் கொண்டிருக்கும் சத்தத்தை பொறுத்துக் கொள்ள முடியாத ஆந்தை வெட்டுக்கிளியிடம் கொஞ்சம் பாடுவதை நிறுத்தும்படி கேட்டது. வெட்டுக்கிளி ஆந்தையைப் பார்த்து நீ ஒரு குருட்டு ஆந்தை. பகலில் வெளியே வராமல் இரவில் எல்லோரும் தூங்கிய பின்புதான் நீ வெளியே வருவாய் நீ என்ன யோக்கியவானா என்று திட்டியது.




ஆந்தை தன்னுடையத் தந்திரத்தினால்தான் வெட்டுக்கிளியை அடக்க வேண்டும் என்று நினைத்து உன் குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது. அது இன்னும் தேவகானம் போல் ஒலிப்பதற்கு என்னிடம் ஒரு அமிர்தம் இருக்கிறது. அதில் இரண்டு துளி நீ சாப்பிட்டால் போதும், உன் குரலும் அமிர்தமாய் மாறிவிடும். மேலே வந்தால் உனக்கு நான் தருகிறேன் என்றது. ஆந்தை பேச்சைக் கேட்டு ஏமாந்த வெட்டுக்கிளி மரத்தில் ஏறி ஆந்தையின் பக்கத்தில் சென்றது. வந்த வெட்டுக்கிளியை ஆந்தை பிடித்து நசுக்கிக் கொன்றது.




நீதி :

பிறருக்கு தொந்தரவு செய்தல் கூடாது.


இன்றைய செய்திகள்
30.01.2026




⭐சென்னையில் ரூ.822.70 கோடி செலவில் பிராட்வே ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம்-முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.


⭐SIR வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு.


⭐மோதலுக்கு அமெரிக்கா-ஈரான் தயாராகி வருகின்றன: மத்திய கிழக்கில் பதற்றம் நீடிப்பு.


🏀 விளையாட்டுச் செய்திகள்


🏀கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.


🏀ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பெகுலாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு ரைபகினா முன்னேற்றம்.


Today's Headlines




⭐Chief Minister laid the foundation stone of the new integrated bus stand at Broadway-Chennai for Rs. 822.70 crore.


⭐ The Supreme Court has granted 10 more days to add names to the SIR voter list.


⭐Tensions continue to rise in the Middle East as the US and Iran prepare for conflict.


SPORTS NEWS


🏀The Australian Open tennis tournament, one of the Grand Slam tournaments, is being held in Melbourne.


🏀 Australian Open tennis: Rybakina advances to the final after defeating Pegula.



Covai women ICT_போதிமரம்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

TNTET 2026: தமிழ் முழுமையான மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) online full test - 1

TNTET 2025 - தமிழ் முழு மாதிரித் தேர்வு - Zeal Study TNTET 2025: தமிழ் மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) இயல் 3: அறிவியல் ஆத்திச்சூடி | எந்திர மனிதன் | ஒளி பிறந்தது | இலக்கணம் 1. புதிய ஆத்திச்சூடி எழுதியவர் யார்? ஔவையார் பாரதியார் கவிமணி நெல்லை சு. முத்து விடை விடை: B. பாரதியார் 2. 'தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர்? விக்ரம் சாராபாய் மயில்சாமி அண்ணாதுரை நெல்லை சு. முத்து சிவன் விடை விடை: C. நெல்லை சு. முத்து 3. 'ஔடதம்' என்பதன் பொருள் யாது? உணவு நீர் காற்று மருந்து விடை விடை: D. மருந்து 4. 'இயன்றவரை' என்ற சொல்லின் பொருள்? ...

Zeal study TNTET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - மாதிரி தேர்வு -1

TNTET 2026 உளவியல் மாதிரித் தேர்வு Zeal study TET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - 1 மீண்டும் தேர்வு எழுதவும்

Zeal study TET / TRB Psychology உளவியல் (அறிவுப்புல வளர்ச்சி) online test

TET 2025 - உளவியல் அலகு 3 ஆன்லைன் தேர்வு - Zeal Study உளவியல் அலகு 3: அறிவுப்புல வளர்ச்சி TET / TRB / TNPSC - முக்கிய வினாக்கள் (15 Questions) 1. கவனித்தலின் முதல் அடிப்படை நிலை எது? புலன் காட்சியறிதல் சிந்தித்தல் கற்பனை செய்தல் விடையைக் காட்டு விடை: புலன் காட்சியறிதல். 2. கவனித்தலை தீர்மானிக்கும் அகக்காரணி எது? நாட்டங்கள் புதுமை அளவு விடையைக் காட்டு விடை: நாட்டங்கள். 3. கவன வீச்சை அளவிடப் பயன்படும் கருவி எது? டச்சிடாஸ்கோப் எர்கோகிராப் ஆடியோமீட்டர் விடையைக் காட்டு விடை: டச்சிடாஸ்கோப் (Tachistoscope). ...

TNTET 2026: தமிழ் - பகுதி 1 முக்கியக் குறிப்புகள் (Study Materials) - இன்பத்தமிழ், தமிழ்க்கும்மி மற்றும் வளர்தமிழ்

  TNTET 2026: தமிழ் - பகுதி 1 முக்கியக் குறிப்புகள் (Study Materials) இந்தக் குறிப்புகள் இன்பத்தமிழ் , தமிழ்க்கும்மி மற்றும் வளர்தமிழ் ஆகிய பாடங்களை எளிதாக மீள்பார்வை (Revision) செய்ய உதவும்.

Zeal study LO Based Lesson plan For -6th Tamil - Term 3 பாதம்

நமது Zeal study  வழக்கம் போல் இந்த பருவத்திற்கான பாடக்குறிப்பை வாரந்தோறும் வழங்கும். அந்த வகையில் இந்த வார பாடக்குறிப்பை இந்த பதிவில் வழங்கியுள்ளோம். இது உங்களுக்கு உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தி உங்கள் கற்பித்தல் பணி பாதிக்காதவாறு உங்களின்

Followers