Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.01.2026

 Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.01.2026










திருக்குறள்:

குறள் 73: அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போ டியைந்த தொடர்பு.
                   
விளக்க உரை:

அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன்என்று கூறுவர்.

பழமொழி :
Hardwork is the root of success.     

கடின உழைப்பே வெற்றியின் வேர்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்.

2.பெரியோர் அறிவுரையை கேட்டு நடப்பேன்.

பொன்மொழி :

புத்தாண்டில் ஒரு நாள் என்பது 365 பக்க புத்தகத்தில் எழுதப்படாத ஒரு பக்கமாகும். அதில் நல்லவற்றை நன்றாக எழுதுங்கள்.- பிராட் பைஸ்லி

பொது அறிவு :

01.இந்தியாவில் முதன்மையான முதலை பூங்கா எங்குள்ளது?

    தமிழ்நாடு -சென்னை

    Tamilnadu - Chennai

02.இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் யார்?

திரு.தாதாபாய் நௌரோஜி

Dadabhai Naoroji

English words :

New horizons - new beginnings புதிய தொடக்கம்

confetti - small pieces of colour papers விழாக்களில் தூவப்படும் சிறிய வண்ணத் தாள்கள்

தமிழ் இலக்கணம்:

பிற மொழி சொற்களைக் கண்டு பிடிப்பது எப்படி?

1. தனிக் குறில் எழுத்தை அடுத்து "ர்" வரும் சொற்கள் எல்லாமே பிறமொழிச் சொற்களே.

எ. கா –1. *_தர்மம்_* செய்ய முயலுங்கள்

தூய தமிழில் - *_அறம்_* செய்ய முயலுங்கள்

2. *_கர்ம_* வீரர் காமராசர்


 
தூய தமிழில்    *_செயல்_* வீரர் காமராசர்

3. இதற்கு என்ன *_அர்த்தம்_* தெரியுமா?


    

தூய தமிழில் - இதற்கு என்ன *_பொருள்_* தெரியுமா?

      தொடரும்

அறிவியல் களஞ்சியம் :

நாசா வல்லுநர்களின் கூற்றுப்படி, நமது பால்வெளி மண்டலத்தில் 100 பில்லியன் முதல் 400 பில்லியன் நட்சத்திரங்கள் வரை எங்கும் இருக்க முடியும்.  2015 ஆம் ஆண்டில் வெளியிப்பட்ட நேச்சர் பத்திரிகை ஆய்வு அறிக்கையின் படி உலகெங்கிலும் உள்ள மரங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது 3.04 டிரில்லியன் மரங்கள் உள்ளன.

நீதிக்கதை

மூன்று தோசைகள்

ஒரு ஊரில் சிறிய கிராமத்தில் ஒரு சிறிய உணவு விடுதி இருந்தது. அங்குள்ள மக்கள் தங்கள் அவசரத்திற்கு அங்கு சென்று உணவு வாங்குவதோ சாப்பிட்டுக் கொள்வதோ பழக்கம். இந்த உணவு விடுதியாளர் தனது உணவு விடுதியை மிகவும் சுத்தமாக வைத்திருந்தார்.  எனவே அந்த வழியாக பெரு நகரத்திற்கு செல்லுபவர்கள்  அங்கு வந்து உணவு உண்டு விட்டு செல்வது பழக்கம். அங்கு ஒரு அருமையான தோசை மாஸ்டர் இருந்தார் அவர் மிகவும் ருசியான தோசை சுடுவதில் மிகவும் வல்லவர். மிகவும் பிரசித்தி பெற்றவர். அவர் எண்ணும் விதமாய்  தோசைகள் விதம் விதமாக செய்வார். அவர் அப்படியாக  செய்வதற்கு ஏற்றார் போல் தோசைகள் தங்களை விட்டுக் கொடுக்கும். ஒரு நாள் தோசைகளை அவர் ஊற்றும் பொழுது இரு தோசைகளுக்கு ஒரு எண்ணம் வந்தது. இவர் சொல்படியே நாம் கேட்க வேண்டுமா? நாம் இஷ்டப்படி சொல்லி அவரை சுடச் சொல்லுவோம் என்று சொல்ல ஆரம்பித்தது.   ஒரு தோசை மட்டும் இல்லை நாம் அப்படி செய்யக்கூடாது மாஸ்டருக்கு தான் தெரியும் நம்மை எப்படி உருவாக்க வேண்டும் என்று எனவே நாம் இப்படியாக செய்யக்கூடாது. அவர் செய்வதற்கு நாம் விட்டுக் கொடுத்து காத்திருக்க வேண்டும் என்று சொல்லியது. ஆனால் மற்ற தோசை மாவுகள் அப்படியாக செய்வதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. மாஸ்டர் முதல்  தோசையை ஊற்றினார். முதல் தோசை அவர் திருப்பி போடும் முன்னாலே அவரைப் பார்த்து கத்த ஆரம்பித்தது. போதும் என்னை சுட்டது எடுத்துக் கொண்டு அங்கு காத்திருப்பவருக்கு கொடுங்கள் என்று சொல்லியது. இவர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார் ஆனால் தோசை கேட்க வழியில்லை எனவே அந்த தோசையை எடுத்துக்கொண்டு அங்கு சென்ற பொழுது அவர் அதைப் பார்த்துவிட்டு என்ன வேகாத தோசை கொண்டு வந்திருக்கிறீர்கள் என்று கூறி கோபத்தில் அதை எடுத்துக் கொண்டு குப்பை கூடையில் போட்டு விட்டார். அதற்குள்ளாக அவர் இரண்டாவது தோசையை ஊற்றி இருந்தார். அதை திருப்பி போடுவதற்கு முன்பாக அதிலே சில காய்கறிகளை சில பொருட்களை போடுவதற்கு அவர் யோசித்தார். அப்பொழுது அந்த இரண்டாவது தோசை “என் மீது எதுவும் போட வேண்டாம் இப்படியே என்னைக் கொண்டு கொடுங்கள் நீங்கள் உங்கள் இஷ்டத்திற்கு செய்யாதீர்கள் என்று சொன்னது”   அவர் இதனிடமும் சொல்லிப் பார்த்தார் “உன்னை நன்கு உருவாக்குவேன்” என்று ஆனால் அது அதை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. எனவே அந்த சாதா தோசையை கொண்டு போய் சாப்பிட வந்தவரிடம்  கொடுத்தார் அவர் அதற்கு சட்னி சாம்பார் வைத்து சாப்பிட்டுவிட்டு பரவாயில்லை என்றார். மூன்றாவது தோசையை  இவர் மெதுவாக ஊற்றி அதை சுற்றி நெய் ஊற்றி குடமிளகாய் வெங்காயம் கேரட் போன்ற சத்துள்ள பொருட்களை அதன் மீது துருவி போட்டு அதன் பின்பு நன்கு இரண்டு பக்கமும் வெந்த பிறகு அதை கொண்டு போய் சாப்பிடுவரிடம் கொடுத்தார் அவர் முகம் மலர்ந்து இதுதான் மிகச் சிறந்த தோசை என்று சொல்லி அவர் கொடுக்க வேண்டிய அளவிற்கு மேலாகவே பணம் கொடுத்து அந்த தோசையை சாப்பிட்டு விட்டு சென்றார் .மாணவர்களே இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது

1. நம் இருப்பிடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்

2. இரண்டாவது நாம் நம்முடைய மதிப்பை கூட்ட வேண்டும் என்றால் வாழ்வில் பொறுமையாக காத்திருக்க வேண்டும்.

இன்றைய செய்திகள்

05.01.2026

⭐தெற்கு ரயில்வே காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. (2025) கடந்த மார்ச் முதல் நவம்பர் வரையில் 2.424 கோடி அலகு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.17.87 கோடி சேமிக்கப்பட்டு உள்ளது.

⭐தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருந்து கடைகளிலும் கியூஆர் குறியீடு (QR) அடங்கிய ஸ்டிக்கரை ஒட்ட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

⭐ இந்தியாவை அனைத்து பக்கங்களிலிருந்தும் சுற்றி வளைக்கும் யுக்தியில் இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், மியான்மர் ஆகிய நாடுகளில் சீனா தனது இராணுவத் தளங்களை நிறுவ திட்டமிட்டு அனு ஆயுதங்களை குவித்து வருகிறது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀டி20 உலகக் கோப்பை: எங்களது போட்டிகளை இந்தியாவுக்கு வெளியே நடத்துங்கள்- ஐசிசிக்கு வங்கதேசம் வேண்டுகோள்
வங்கதேச வீரர்கள் இந்தியாவில் விளையாடக் கூடாது என எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.

Today's Headlines

⭐ Southern Railway is actively involved in wind power generation projects. (2025) From March to November last year, 2.424 crore units of electricity have been generated. This has saved Rs. 17.87 crore.

⭐The Tamilnadu government has ordered that stickers containing QR codes must be pasted in all drug stores in Tamil Nadu.

⭐ China is planning to establish military bases in Sri Lanka, Pakistan, Bangladesh, and Myanmar, and is amassing nuclear weapons, in a strategy to surround India from all sides.

*SPORTS NEWS*

🏀T20 World Cup: Bangladesh appeals to ICC to hold  matches outside India There is growing opposition to Bangladesh players not playing in India.

Covai women ICT_போதிமரம்

Comments

Post a Comment

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study Lesson plan For -6th Tamil - _பாரதம் அன்றைய நாற்றங்கால்

வணக்கம் . முதலில் நமது குழுவின் சார்பாக அனைவருக்கு புது வருட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த கல்வியாண்டில் மேன்மேலும் பல வளர்ச்சிகளையும், சாதனைகளையும் பெற வாழ்த்துக்கள்.

Zeal study Lesson plan For -7th Tamil - கவிதைப்பேழை | விருந்தோம்பல் | பருவம் 3

வணக்கம் . முதலில் நமது குழுவின் சார்பாக அனைவருக்கு புது வருட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த கல்வியாண்டில் மேன்மேலும் பல வளர்ச்சிகளையும், சாதனைகளையும் பெற வாழ்த்துக்கள்.

Followers