Skip to main content

School morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.06.2025

 அனைவருக்கும் இந்த புதிய கல்வியாண்டு மனநிறைவும் மகிழ்வும் தர வாழ்த்துகள்



பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.06.2025





திருக்குறள்:


குறள் 391:

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

விளக்கம்: கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.


பழமொழி :

He who has an art, has everywhere a part.

கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.

இரண்டொழுக்க பண்புகள் :

1.புதிய கல்வியாண்டில் அனைவரிடமும் அன்புடன் நடந்து கொள்வேன்.

2.எனது கடமைகளை சரிவர செய்து அனைவரிடமும் நற்பெயர் எடுப்பேன்.


பொன்மொழி :

எந்த வேலை செய்தாலும் இறைவனை நினைத்து பலன் கருதாமல் செய்யத் துவங்குங்கள். உயர்ந்த பலனைப் பெறுவீர்கள். - விவேகானந்தர்

பொது அறிவு :


01.உலகின் இரண்டாவது மிகப்பெரிய சிகரம் எது?


மவுண்ட் காட்வின் ஆஸ்டின்(8811மீ) Mount Godwin Austin
02. மஞ்சள் ஆறு என்று அழைக்கப்படும் ஆறு எது?


ஹோவாங்கோ ஆறு ( சீனா ) Huang He River



English words & Tips :
surprise - ஆச்சரியம்


wonderful - அற்புதம்



When two singular subjects are connected by or, use a singular verb. The same is true for either/or and neither/nor.John or Joe is coming tonight.
Either coffee or tea is fine.
Neither Kavi nor Nandhini was late.


அறிவியல் களஞ்சியம் :

நிலவின் ஈர்ப்பு விசையால் பூமியில் கடல் அலைகள் தோன்றுகின்றன. அதுபோல, மேச்சோ எனும் ஒரு நட்சத்திரத்தில், அதன் அருகே இருக்கும் சிறிய நட்சத்திரத்தின் ஈர்ப்பு விசையால், நமது சூரியனைப் போல மூன்று மடங்கு உயரம் மிக்க அலைகள் தோன்றுவதை ஹார்வர்ட் பல்கலை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இந்த நட்சத்திரம் நம்முடைய சூரியனை விட 35 மடங்கு அதிக நிறையை உடையது.

ஜூன் 02
கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் நினைவுதினம்


அப்துல் ரகுமான் (S. Abdul Rahman, நவம்பர் 9, 1937 - சூன் 2, 2017), தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞரும், தமிழ்ப்பேராசிரியரும் ஆவார். கவிக்கோ என்று சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறார். 'வானம்பாடி' இயக்கக் கவிஞர்களோடு இணைந்தியங்கியவர். எழுதுபவர்களின் தலைவாயிலில் தம் கவிதை வெளியீடுகளின் வாயிலாகப் புதுக்கவிதைத் துறையில் நிலைநிறுத்திக் கொண்டவர்களுள் அப்துல் ரகுமான் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவர் ஆவார். அவர் பால்வீதி என்ற கவிதைத் தொகுதி மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாக இனங்காட்டிக் கொண்டார். அத்தொகுதி வெளிவந்த போது கவிதையை நேரடியாகத் தராமல் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழி வெளியீட்டு முறையை அமைத்துக் கொண்டார். தமிழில் கவிதைக் குறியீடுகள் குறித்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழில் ஹைக்கூ, கஜல்ஆகிய பிறமொழி இலக்கியங்களை முனைந்ததிலும் பரப்பியதிலும் இவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.

நீதிக்கதை

மாயக்கண்ணாடி



ஒரு சிறுவன், புத்தகக் கடையில் ஒரு அழகான கண்ணாடியைப் பார்த்தான்.அதில் பார்த்ததெல்லாம் அப்படியே தெரிந்தது.தன் முகமும் புன்னகைப்பது போலவே தெரிந்தது.அதை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தான்.



அவன் சந்தோசத்தில் சிரிக்கும் போது கண்ணாடியும் சிரித்தது. அவன் கோபப்பட்டபோது கண்ணாடியும் கோபப்படுவது போலவே தெரிந்தது.அதை வைத்து மகிழ்ச்சியுடன் விளையாடினான்


ஒரு நாள்,அவன் கண்ணாடியை தரையில் வீசினான். அது உடைந்து போனது. அந்த நேரம் தான் அவனுக்கு உண்மை தெரிந்தது. அவன் முகத்தையே கண்ணாடி காட்டியது! அவன் முகம் எப்படி இருக்கிறதோ, அதையே பிரதிபலித்தது என்பதைஅவன் உணர்ந்தான்.


வாழ்க்கையும் இப்படித்தான்! நாம் எப்படி இருப்போமோ, உலகமும் அதுபோலவே பிரதிபலிக்கிறது. நாம் நல்லவர்களாக இருந்தால், உலகமே நல்லது தான்!


அதிகம் எதிர்பார்க்காமல், நம் மனதைச் சுத்தமாக வைத்தால் போதும்.நம்மால் உலகமே மாறும்.இதுவே மாயக்கண்ணாடி அவனுக்கு உணர்த்திய வாழ்க்கையின் பெரிய பாடமாகும்.

அவன் சிரித்தான் — உண்மையுடன்.

இன்றைய செய்திகள்
02.06.2025



⭐ கோடை விடுமுறை முடிந்து அனைத்து வகை பள்ளிகளும் திறப்பு .


⭐புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை மாணவர்கள் பழைய பஸ் பாஸ் மூலம் பயணம் செய்யலாம். -போக்குவரத்து துறை அறிவிப்பு.


⭐சீனாவில் இருந்து இறக்குமதியாகும் எஃகு, அலுமினியத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 50% வரி விதித்தார்.


⭐ பூமியில் இருந்து நெப்டியூனை விட 3 மடங்கு தொலைவில் உள்ள சிறிய கிரகம் கண் டுபிடிக்கப்பட்டுள்ளது. புதிய கிரகத்திற்கு 'பிளானட் நைன்' என பெயர் சூட்டினர் அமெரிக்க விஞ்ஞானிகள்.


விளையாட்டுச் செய்திகள்


⭐ஆசிய தடகளம் சாம்பியன்ஷிப்பில் மகளிருக்கான உயரம் தாண்டுதலில் இந்திய வீராங்கனை பூஜா சிங் 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார்.


⭐ தென்கொரியாவில் நடைபெறும் ஆசிய தடகள போட்டியில், கால் வீக்கத்துடன் ஓடி, 400 மீ தடை தாண்டுதலில் வெண்கலம் வென்றார் தமிழ்நாட்டு வீராங்கனை வித்யா ராம்ராஜ்!



Today's Headlines


✏All types of Tamil nadu state schools reopen after the summer vacation.


✏Students can travel using their old bus passes until a new bus pass is issued. -Transport Department announcement.


✏America'S President Trump imposed a 50% tariff on steel and aluminum imports from China.


✏A small planet three times farther from Earth than Neptune has been discovered. American scientists have named the new planet 'Planet Nine


Sports news


🏀Indian athlete Pooja Singh won the gold medal in the women's high jump at the Asian Athletics Championships, clearing 1.89 meters.


🏀Tamil Nadu athlete Vidya Ramraj won bronze in the 400m hurdles at the Asian Athletics Championships in South Korea, running with a swollen foot!


Created by
Covai women ICT_போதிமரம்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study lesson plan 10th Maths lesson plan Algebra EM Quadratic Graphs LO Based Lesson Plan With LO Number And Activities And Also

Zeal study prepare and share lesson plan for the sake of the Tamilnadu teachers to make their work easy.

Zeal Study Lesson Plan Term 2 Class : 6 Subject : Maths Topic: எண்கள் LO Based Lesson Plan With Lo Number And Activities And Also Kalvi Tv Link

Zeal study prepare and share lesson plan for the sake of the Tamilnadu teachers to make their work easy.

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 12.10.2026

 Zeal study official school morning prayer activities  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 12.10.2026

Zeal Study Lesson Plan Term 2 Class : 6 Subject : Science Topic: வெப்பம் LO Based Lesson Plan With Lo Number And Activities And Also Kalvi Tv Link

Zeal study prepare and share lesson plan for the sake of the Tamilnadu teachers to make their work easy.

Zeal study morning prayer activities பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 05.10.2026, திங்கட்கிழமை

Zeal study morning prayer activities பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 05.10.2026,

Followers