Zeal study official school morning prayer activities
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.12.2024
pdf link Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.12.2024
திருக்குறள்:
பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : இன்னாசெய்யாமை
குறள்:315
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை.
விளக்கம்:
அடுத்த உயிர்க்கு வரும் துன்பத்தைத் தமக்கு வந்ததாக எண்ணாவிட்டால், அறிவைப் பெற்றதால் ஆகும் பயன்தான் என்ன?.
பழமொழி :
Well began is half done
நல்ல தொடக்கம் பாதி வெற்றி
இரண்டொழுக்க பண்புகள் :
1. வார்த்தையால் பேசுவதை விட..வாழ்ந்து காட்டுவதே சிறப்பு எனவே சிறப்பான வாழ்க்கை வாழ முயற்சிப்பேன்
2. எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.
பொன்மொழி :
ஐந்துக்கு எழுந்திரு ஒன்பதுக்கு உணவருந்து ஐந்துக்கு சாப்பிடு ஒன்பதுக்கு உறங்கு – பின்லாந்து
பொது அறிவு :
1. இரண்டாம் சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழின் அடிப்படை நூல்?
விடை: தொல்காப்பியம்
2. உடலில் இரத்தம் பாயாத பகுதி எது?
விடை: கருவிழி
English words & meanings :
legacy - a gift of personal property by will பரம்பரைச் சொத்து. lexicographer - a compiler or writer of a dictionaryஅகராதி தயாரிப்பவர்
ஆரோக்ய வாழ்வு :
பாரிஜாத பூக்கள்: நான்கு முதல் ஐந்து பாரிஜாத பூக்கள், இரண்டு முதல் மூன்று பாரிஜாத மரத்தின் இலைகள் மற்றும் 2 முதல் 3 துளசி இலைகளை சேர்த்து, நன்றாக கொதிக்க வைத்து, வடிகட்டி தேநீராக குடிக்கவும் இனிப்பு தேவை என்றால் தேன் சேர்த்து குடிக்கலாம்.
டிசம்பர் 07
கொடி நாள் (இந்தியா)
கொடி நாள் என்பது இந்தியாவின் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தின் ஏழாம் நாளை படை வீரர் கொடி நாளாக இந்திய அரசும் இந்திய மாநில அரசுகளும் கடைப்பிடிக்கின்றன. இக்கொடி நாள் 1949ஆம் ஆண்டு டிசம்பர் ஏழாம் நாள் முதல் இந்தியா முழுமைக்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.
நீதிக்கதை
The Fox & the Lion – சிங்கமும் குட்டி நரியும் :- ஒரு குட்டி நரி ஒன்னு காட்டுக்குள்ள வாழ்ந்துகிட்டு வந்துச்சு.பிறந்ததுல இருந்து அந்த நரி சிங்கத்தை பார்த்ததே இல்ல.அதனால சிங்கத்தை நினச்சு அதுக்கு பயம் எப்பவும் இருந்தது இல்லை.
ஒருநாள் காட்டுப்பகுதியில் தண்ணி குடிக்க போன நரி, சிங்கத்தை நேருல சந்திச்சுச்சு.உடனே அதுக்குள்ள பயம் வந்துடுச்சு ,ஓடி வீட்டுக்கு போய்டுச்சு அந்த நரி.
வீட்டுக்கு வந்த நரி பயந்து போய் வீட்டுக்கு ஓடி வந்தத நினைச்சு வருத்த பட்டுச்சு ,இனிமே அந்த சிங்கத்த பார்த்தா பயப்பட கூடாதுனு முடிவு பண்ணுச்சு.ஆனா மறுநாளும் அந்த சிங்கத்தை பார்த்ததும் பயத்துல வீட்டுக்கு ஓடி வந்துடுச்சு அந்த நரி.
அத பார்த்த தாத்தா நரி ஏன் ஓடி வர்றன்னு கேட்டுச்சு ,அதுக்கு அந்த குட்டி நரி நடந்தத சொல்லுச்சு.அதுக்கு அந்த தாத்தா நரி சொல்லுச்சு பயப்படுகிறது கடவுள் நமக்கு கொடுத்த முன்னெச்சரிக்கை செய்தி .பயம் வந்ததும் அந்த இடத்துல இருக்குற ஆபத்தை முதல்ல உணர்ந்து ஓடி வந்த நீ ரொம்ப கெட்டிக்காரன்.
உனக்கு எப்ப எல்லாம் பயம் வருதோ அப்ப எல்லாம் தெளிவா யோசிச்சு ,அந்த பயத்தை எதிர்கொள்ளணும்னு சொல்லுச்சு, அந்த தாத்தா நரி.அதுக்கு அந்த குட்டி நரி கேட்டுச்சு, அப்ப நாளைக்கு அந்த சிங்கத்தை நேருல பார்த்தா பயப்படாம நிக்கணுமான்னு கேட்டுச்சு.
அதுக்கு அந்த தாத்தா நரி சொல்லுச்சு, அப்படி இல்ல எப்ப எல்லாம் உனக்கு பயம் வருதோ, அந்த சூழ்நிலைய உணரனும் .தேவையில்லாத பயமா இருந்தா அத விட்டுடனும் . அதே நேரத்துல உனக்கு எதாவது ஆபத்து வரும்னு நிலைமை இருந்தா ஓடி வந்துடவேண்டும் என்று தெளிவா சொல்லுச்சு.
இன்றைய செய்திகள்
- தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் டிச.,10 வரை மழை
- அமெரிக்காவை உலுக்கிய நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி
- 'ஹைப்பர் லுாப் டெஸ்ட் டிராக்' சென்னையில் ரயில்வே அமைப்பு
- பெஞ்சல் புயல் பாதிப்பு: தமிழகத்திற்கு ரூ.944 கோடியை விடுவித்தது மத்திய அரசு
- பள்ளி விடுமுறைகளை ஈடுசெய்ய சனிக்கிழமைகளிலும் வகுப்புகள்..! புதுச்சேரியில் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
- 12-ஆம் வகுப்பில் எந்த பாடப்பிரிவில் படித்திருந்தாலும் இளங்கலை படிப்பில் எந்த துறையிலும் சேரலாம் என்று பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.
- சிலியின் முன்னாள் அதிபர் பேச்லெட்க்கு 2024-ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதி பரிசு
- சிரியாவில் பதற்றம்: பயணங்களை தவிர்க்குமாறு குடிமக்கள் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது
Today Headlines
- Rain in Puducherry, Tamil Nadu from today to Dec 10
- Earthquake that shook America, people panic due to tsunami warning
- 'Hyper Loop Test Track' Railway system in Chennai
- Benjal storm damage: Central government has released Rs.944 crore to Tamil Nadu
- Classes on Saturdays to make up for school holidays..! School Education Department Order in Puducherry
- According to the new regulations issued by the University Grants Commission, students who have studied in any subject in class 12 can join any department in the undergraduate course.
- Tension in Syria: Central government advises citizens to avoid travel
- Indira Gandhi Peace Prize for 2024 to Former President of Chile Bachelet
Comments
Post a Comment