Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.11.2024

 Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.11.2024


PDF LINK 

 Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.11.2024





திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : வாய்மை

குறள் :294

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.

விளக்கம்:

உள்ளம் அறியப் பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் அவன் உயர்ந்தவர் உள்ளத்துள் எல்லாம் குடி இருப்பான்.

பழமொழி :
Beauty is a short-lived reign.

அழகின் ஆட்சி அற்ப காலமே.

இரண்டொழுக்க பண்புகள் :

1)  நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும், மனதுக்கும் துன்பம் தர மாட்டேன்.

2)  துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.
பொன்மொழி :

1) இதயத்தில் பெருந்தன்மை இருந்தால், அது, நற்பண்புகளின் அழகாகப் பிரகாசிக்கும்!.
2) நற்பண்புகளில் அழகு இருந்தால், அது இல்லத்தில் இணக்கமுடன் வாழத் தூண்டும்!.
3) இல்லத்தில் இணக்கமுடன் வாழ்ந்தால், அது தாய்நாட்டில் சட்டத்தை மதிக்கத் தூண்டும்.
4) தாய்நாட்டில் சட்டத்தை மதிப்பவர்களால் தான், உலகம் முழுவதும் சமாதானத்தை உருவாக்க முடியும்.

- சீனப் பழமொழி

பொது அறிவு :

1. என் கடன் பணி செய்து கிடப்பதே – என்று கூறியவர்

விடை: திருநாவுக்கரசர்

2. தமிழ்நாட்டில் முக்கடல்களும் சந்திக்கும் இடம்

விடை: கன்னியாகுமரி

English words & meanings :

termination - the act of ending something இறுதி நிலை,முடிவு . terminology - a system of words குறிப்பிட்ட துறைக்குரிய சொற்கள்

ஆரோக்ய வாழ்வு :

அகத்தி பூ:
அகத்திக்கீரையைப்போல பூவும் மருத்துவ குணம் நிறைந்தது. பூவை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால், கண் எரிச்சல், தலைசுற்றல், சிறுநீர் மஞ்சளாகப்போவது போன்ற பிரச்னைகள் சரியாகும்.

நவம்பர் 09

கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் பிறந்தநாள்
அப்துல் ரகுமான் (S. Abdul Rahman, நவம்பர் 9, 1937 - சூன் 2, 2017), தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞரும், தமிழ்ப்பேராசிரியரும் ஆவார். கவிக்கோ என்று சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறார். 'வானம்பாடி' இயக்கக் கவிஞர்களோடு இணைந்தியங்கியவர்.[ 1960 இக்கு பின் கவிதை உலகுக்கு வந்த இவர் கவியரங்கக் கவிதைகளாலும் சிறப்படைந்துள்ளார். சிலேடை வார்த்தைகளால் கேட்போரைக் கவர்வது இவரது பாணி. வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிந்தவர். அறிவுமதி உள்ளிட்ட இளந்தலைமுறை கவிஞர்களுக்கு ஆசானாக விளங்கினார். ஆலாபனை கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.

கே. ஆர். நாராயணன் அவர்களின் நினைவுநாள்

கே. ஆர். நாராயணன் என்று அறியப்படும் கொச்செரில் ராமன் நாராயணன் (பிறப்பு - கோட்டயத்தில் உள்ள உழவூர் (கேரளா), அக்டோபர் 27, 1920; இறப்பு - புது தில்லி, நவம்பர் 9, 2005) பத்தாவது இந்தியக் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் இப்பொறுப்பை வகித்த ஒரே மலையாளிஆவார். முன்னர் இவர் இந்திய வெளியுறவுத் துறையில் அதிகாரியாக பணியாற்றியவர்.

நீதிக்கதை

ஒரு நாள் எறும்பும் பறவையும் தங்களுக்குள் ஒரு பந்தயம் வைத்துக் கொண்டன. யார் முதலில் சென்று அந்த வான்உயர்ந்த மலையை தொடுவது என்பது தான் இருவரின் பந்தயம்.

பறவை எறும்பை பார்த்து ஏளனமாக சிரித்துவிட்டு மலையை நோக்கி பறந்தது. வெகு சீக்கிரத்திலேயே பறவை மலையின் உச்சியை தொட்டது.

மலை உச்சிக்கு சென்ற பறவை மேலிருந்து கீழே இருக்கும் எறும்பை தேடியது. அப்போது எறும்பு மலை அடிவாரத்தில் இருந்து பாதி தூரத்தை கூட தொடவில்லை.

எறும்பை பார்த்து பறவை கூறியது எனக்கு முதலிலேயே தெரியும் வெற்றி எனக்குதான் என்று.

பறவையிடம் ஒரு சிறு எறும்பு போட்டியிடலாமா? எறும்பை பார்த்து கேலி செய்து பறவை நகைத்தது.

வெகு நாட்கள் கழித்து எறும்பின் விடாமுற்ச்சியால் ஒரு நாள் எறும்பு அந்த மலையின் உச்சியை சென்றடைந்தது. அப்போது அந்த பக்கமாக மலையை கடந்து சென்ற பறவை மலை உச்சியில் இருக்கும் எறும்பை ஆச்சரியமாக பார்த்தது.

அப்போது பறவையை பார்த்து எறும்பு கூறியது, “வெற்றி என்பது எல்லோருக்கும் பொதுவானது. சிலருக்கு வெற்றி சீக்கிரமாகவே கிடைத்துவிடும். சிலருக்கோ தாமதமாகவும் கிடைக்கும். விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தாலே போதும், வெற்றி ஒரு நாள் எல்லோருக்கும் நிச்சயம்”, என்றது எறும்பு

இன்றைய செய்திகள் 09.11.2023

    * தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள 90 அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் சுமார் 60 சதவீதம் நீர்இருப்பு உள்ளது. 38 மாவட்டங்களில் உள்ள மொத்த ஏரிகளில் 891 குளங்கள் முழுவதுமாக நிரம்பியுள்ளன.
*குற்றவாளியைக் கண்டுபிடிக்க, கொதிக்கும் நெய்யில் கையை வைக்கும்படி கொடுமையான தண்டனையை, மராட்டியர்கள் வழங்கிய தகவல், தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டு வாயிலாக தெரிய வந்துள்ளது.
       *தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம் தேர்தல் ஆணையம் உத்தரவு. ஒரு பெண் ஐஏஎஸ் தலைமை தேர்தல் அதிகாரியாக நியமனம் செய்யப்படுவது இதுவே முதல்முறை

114 சிறந்த பள்ளிகளுக்கு கேடயம் வழங்கும் விழா - பள்ளிகளின் பட்டியல் கல்வி மாவட்டம் வாரியாக வெளியீடு.

*·        * பெண்கள் டி20 உலகக்கோப்பை கிரிக்கட் போட்டியில் முதல் அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன.

Today's Headlines 
     *With widespread heavy rains in Tamil Nadu, the 90 dams and reservoirs across the state have about 60 percent water capacity.  Out of total lakes in 38 districts, 891 lakes are full.
      *In order to find the culprit, the cruel punishment of placing one's hand in boiling ghee is revealed by the Tanjore Great Temple inscription.
 *The Election Commission has ordered the appointment of Archana Patnaik as the Chief Electoral Officer of Tamil Nadu. This is the first time that a woman IAS has been appointed as Chief Electoral Officer 

*114 Best Schools Shield Ceremony - List of Schools Released District wise

      * South Africa vs Australia in the first semi-final of the Women's T20 Cricket World Cup today.


Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study Whatsapp groups links

CLiCK The below groups name to join the group Zeal study Class wise groups links  kindly join in any one groups in these groups class suitable messages will be shared  Join our Zeal study Official Telegram channel for all latest updates https://t.me/zealstudyofficial Follow our Whatsapp channel  https://whatsapp.com/channel/0029Va9B0NY5q08hCHKk8A19 for classes 1-5 materials Zeal study primary WhatsApp  groups links   Zeal study primary group 6 https://chat.whatsapp.com/JsUkig72NCbEfK0GtsoNg3 Zeal study primary group 1 https://chat.whatsapp.com/I5zmYprrqzh0hQHrRkqO6R Zeal study primary group 2 https://chat.whatsapp.com/Gs5xFU3kgzdIaQ8xExUrp4 Zeal study primary group 3 https://chat.whatsapp.com/KPoGHVgwlmkKCoUcX8J5yY Zeal study primary group 4 https://chat.whatsapp.com/KughukPr6yN4prnKWWNgB3 Zeal study primary group 5 https://chat.whatsapp.com/LYKowdSHZnT7vTM797PmLu For classes 6-8 Zeal study 6-8   WhatsApp  groups links For 6 ,7&8 handling...

Zeal Study Lesson Plan 6,7,8,9,10 Collection 2024-25 Learning Out Comes Based Lesson Plan

Zeal study lesson plan colllection   6,7,8,9.10 Tamil Lesson plan 6,7,8,9.10 English Lesson plan 6,7,8,9.10 Maths Lesson plan   6,7,8,9.10 Science Lesson plan 6,7,8,9.10 Social science Lesson plan Join our Whatsapp groups click here

PDF Answer keys for 9,8,7&6 th std all subjects Bridge course worksheets updated by Zeal study

6th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here  7th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here 8th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here  9th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here 9th Tamil worksheet 1 answer key pdf download click here 9th Tamil worksheet 2 answer key pdf download click here 9th Tamil worksheet 3 answer key pdf download click here 9th Tamil worksheet 4 answer key pdf download click here 9th Tamil worksheet 5 answer key pdf download click here 9th Tamil worksheet 6 answer key pdf download click here 9th Tamil worksheet 7 answer key pdf download click here 9th Tamil worksheet 8 answer key pdf download click here 9 th Tamil worksheet 9 answer key pdf click here 9 th Tamil worksheet 10 answer key pdf click here 9 th Tamil worksheet 11 answer key pdf click here ...

Followers