Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 20.11.2024
Zeal study official school morning prayer activities
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 20.11.2024
PDF LINK
திருக்குறள் :
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப் புடைத்து.
பொருள்
நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும்.
பழமொழி :
Justice for the self is not the same to others.
ஊருக்கு ஒரு நியாயம். தனக்கு ஒரு நியாயம்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. படுத்த படுக்கையை மடித்து வைப்பேன்.
2. உணவு உண்ட தட்டை கழுவி வைப்பேன்.
பொன்மொழி :
என்னைப் பற்றி போற்றி பாடுபவர்களை விட, என்னை கடுமையாக விமர்சிப்பவர்களால் தான் நான் அதிகம் நன்மை பெற்றுள்ளேன். - காந்தியடிகள்
பொது அறிவு :
1. கோள்களின் இயக்கத்தை கண்டு பிடித்தவர் யார்?
கோப்ளர்.
2. கணிப்பொறி மொழியைக் கண்டு பிடித்தவர் யார்?
கிரேஸ் கோப்பர்
English words & meanings :
I am stuffed - my stomach is full, என் வயிறு நிறைந்து உள்ளது,
fit as a fiddle - very healthy, நல்ல ஆரோக்கியமாக
ஆரோக்ய வாழ்வு :
இரத்த சோகை உள்ளவர்கள் தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காய் உண்டு வந்தால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். இது இரத்தத்தில் உள்ள நச்சு தன்மை சுத்தப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
கணினி யுகம் :
Alt + 0191 - ¿
Alt + 0176 - ° (degree symbol)
நவம்பர் 20
[11/20, 4:37 AM] +91 90808 66039: சர்வதேச குழந்தைகள் தினம்
👶 சர்வதேச குழந்தைகள் தினம் நவம்பர் 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. குழந்தைகளுக்கு நோய்கள் வராமல் தடுக்கவும், குழந்தைகளின் நலன் மற்றும் உரிமைகளை பாதுகாக்கவும் யுனிசெஃப் முயன்று வருகிறது. குழந்தைகளின் நலனைப் பாதுகாக்க ஐ.நா. சபை 1954ஆம் ஆண்டில் இத்தினத்தை அறிவித்தது.
[11/20, 4:37 AM] +91 90808 66039: ஆப்பிரிக்க தொழில்மயமாக்கல் தினம்
✍ ஆப்பிரிக்கா, இயற்கை வளம் நிறைந்த நாடு. கடுமையாக உழைக்கும் தொழிலாளர்கள் நிறைந்த நாடு. ஆனால் தொழில் வளர்ச்சி ஏற்படாததால் பஞ்சம், பசி, பட்டினி போன்றவை நிரந்தரமானதாக உள்ளது. வறுமை, வேலையில்லா திண்டாட்டம், வன்முறை, உணவுப் பஞ்சம் போன்ற மிகப்பெரிய சவால்கள் உள்ளன. ஆகவே ஆப்பிரிக்காவின் மீது ஐ.நா. தனிக்கவனம் செலுத்தி நவம்பர் 20ஆம் தேதியை ஆப்பிரிக்க தொழில்மயமாக்கல் தினமாக அறிவித்தது.
திப்பு சுல்தான் அவர்களின் பிறந்தநாள்...
திப்பு சுல்தான் (நவம்பர் 20, 1750, தேவனஹள்ளி – மே 4, 1799, ஸ்ரீரங்கப்பட்டணம்), மைசூரின் புலியென அழைக்கப்பட்டவர். 1782 ஆம் ஆண்டிலிருந்து 1799 ஆம் ஆண்டுவரை மைசூரின் அரசை ஆண்டவர். திப்பு சுல்தான் ஹைதர் அலியின் இரண்டாம் தாரமான ஃவாதிமாவின் மகனாவார். பிரித்தானியப் படைகளுடனான இரண்டாம் ஆங்கில-மைசூர்ப் போரில் ஹைதர் அலி வெற்றி பெறுவதற்கு உறுதுணையாகவிருந்த திப்பு தனது தந்தையின் மரணத்திற்குப் பின்னர் மைசூரின் மன்னரானார். ஆங்கிலேயர்களை இந்தியாவை விட்டு அகற்றுவதற்காகப் பிரான்சின் மாவீரன் நெப்போலியனுடன் பேச்சுவார்த்தைகூட நடத்தினார்.[1]மூன்றாம் மற்றும் நான்காம் ஆங்கில-மைசூர்ப் போர்களில் பிரித்தானிய அரசினாலும் அதன் கூட்டுப் படைகளினாலும் தோற்கடிக்கப்பட்டார். மே 4, 1799 ஆம் ஆண்டு தனது ஆட்சித் தலைநகரமான ஸ்ரீரங்கப்பட்டினத்தில் போரின்போது இறந்தார்.
நீதிக்கதை
யார் ஏழை?
ஒரு பணக்கார அப்பா, அவர் குழந்தைகளை கிராமத்தை சுற்றி காட்ட அழைத்துச் சென்றார். இரண்டு நாள் ஒரு குடிசையில் ஏழை விவசாயிகள் கூட இருந்தாங்க. திரும்ப வரும் போது, அப்பா கேட்டார்,
ஏழை எப்படி இருக்காங்கன்னு பார்த்தியா?… இப்ப என்ன சொல்றே? மகன் சொன்னான் ஆமா..அப்பா..என் கிட்ட ஒரு நாய் குட்டி தான் இருக்கு. ஆனால் அவங்க கிட்ட நாலு இருக்கு.
நம்ம வீட்ல ஸ்விம்மிங் பூல், கார்டன்ல நடுவிலே இருக்கு. ஆனால் அவங்க வீட்டு பக்கத்துல அழகான ஆறு ஓடுது. நாம கலர் கலரா லைட் போட்டு, படங்கள் மாட்டி நம்ம வீட்டு அழகு படுத்தறோம். ஆனா அவங்க வீட்டுல் ரெயின்போ அழகு படுத்துது... நம்ம சுவரோட நம்ம வீட்டு எல்லை முடிஞ்சுடுது. ஆனால் அவங்களுக்கு கண்ணுக்கு எட்டுன் தூரம் வரை அவங்க எல்லை.
நாம காசு குடுத்து அரிசி வாங்குறோம். ஆனா இவங்க நம்ம கிட்ட அதை விக்கறாங்க. நம்மை பாதுக்காக்குறதுக்கு நம்மை சுற்றி சுவர் மட்டும் தான் இருக்கு... ஆனால் இவங்க பாதுகாப்புக்கு நண்பர்கள் இருக்காங்க.. அப்பா!..நாம எவ்வளவு ஏழைனு புரிய வைத்ததற்கு நன்றி அப்பானு சொன்னான். அவங்க அப்பா வாயடைச்சே போயிட்டார். அவருக்கும் இப்ப நிறைய விஷயங்கள் புரிஞ்சது.
இன்றைய செய்திகள்
Hi
ReplyDelete