Zeal study official school morning prayer activities
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.10.2024
திருக்குறள்:
"பால்: பொருட்பால்
அதிகாரம் : நட்பு
குறள் எண்: 783
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு.
பொருள் : நூலின் நற்பொருள் படிக்கப் படிக்க மேன்மேலும் இன்பம் தருவதைப் போல, நற்பண்புடையவரின் நட்பு ஒருவருக்கு பழகப் பழக இன்பம் தரும்."
பழமொழி :
ஆயிரம் கல் தொலைவு பயணமும் ஒரே ஒரு எட்டில் தான் துவங்குகிறது .
A journey of a thousand miles begins with a single step.
இரண்டொழுக்க பண்புகள் :
*திடீரென மழை அதிகமாக பெய்யும் நேரத்தில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.
*மழை பெய்யும் நேரத்தில் மரங்களின் அடியிலோ, மின்கம்பங்களின் அருகிலோ நிற்க மாட்டேன்.
பொன்மொழி :
வாய்மைக்கு மிக நெருக்கமான நண்பன் அச்சமின்மையே.---ஜவஹர்லால் நேரு
பொது அறிவு :
1. அமெரிக்கர்கள் பேரார்வத்துடன் ஈடுபட்டதுறை எது?
விடை : பங்கு வணிகச்சந்தை
2. மூலப்பொருட்களின் தேவையை அதிகப் படியாக உருவாக்கியது______
விடை: தொழிற்புரட்சி
English words & meanings :
Hammer. - சுத்தி Handsaw - ஈர்வாள்/ரம்பம்
வேளாண்மையும் வாழ்வும் :
பொது மக்களிடையே இயற்கை விவசாயம் மற்றும் சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வும், அக்கறையும் அதிகரிக்கவே, தொடக்கத்தில் வழங்குதல்களின் அடிப்படையில் தொடங்கிய இந்த இயக்கம், தேவையின் அடிப்படையிலாக மாறியது.
அக்டோபர் 29
உலக பக்கவாத நாள் (World Stroke Day) ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 29 ஆம் நாளன்று அனுசரிக்கப்படுகிறது. பக்கவாதத்தின் தீவிர தன்மையையும் அதிக விகிதங்களையும் அடிக்கோடிட்டுக் காட்டுவதும் அந்த நிலையின் தடுப்பு மற்றும் சிகிச்சை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் உயிர் பிழைத்தவர்களுக்கு சிறந்த கவனிப்பு மற்றும் ஆதரவை உறுதி செய்வதும் உலக பக்கவாத நாள் அனுசரிக்கப்படுவதன் நோக்கங்களாகும். மனித உடலில் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சினைகளில் முக்கியமானது, ‘பக்கவாதம்.’ ஒரு மனிதனை செயல்பட விடாமல் ஓரிடத்தில் முடக்கிப்போடும் அபாயகரமான நோயில் இதுவும் ஒன்று.மூளையில் உள்ள ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு காரணமாக, மூளை செயல் இழப்பதால் இந்த பக்கவாத நோய் ஏற்படுகிறது. வலது, இடது என்று இரண்டு பாகங்களாக பிரிந்திருப்பது மூளை. வலதுபக்க மூளை இடது பக்க உடலையும், இடதுபக்க மூளை வலது பக்க உடலையும் கட்டுப்படுத்துகின்றன. இதில் ஒரு பக்கம் செயல்படாமல் போனாலும் மற்றவை செயல்படாது.
நீதிக்கதை
அன்பு எதையும் சுமக்கும்
துறவி ஒருவர் தனக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு மலை மீது ஏறிக் கொண்டிருந்தார்.அது செங்குத்தான மலை. மலையின் மேலே ஏற ஏற சுமை சற்று அதிகமானதாக தோன்றியதுடன் அவருக்கு மூச்சு வாங்கியது.
சற்று தூரம் முன்னால் சென்றபோது மலைவாழ் சிறுமி ஒருத்தி தனது மூன்று வயதுள்ள தம்பியை முதுகில் சுமந்து கொண்டு உற்சாகமாக பாடல் பாடிக்கொண்டு
மிக சாதாரணமாக மலை உச்சியை நோக்கி ஏறுவதை பார்த்தார்.துறவிக்கோ மிகவும் ஆச்சரியம். அவர் சிறுமியை பார்த்து, "என்னம்மா இவ்வளவு சிறிய பையை தூக்கிக்கொண்டு மலையை ஏற என்னால் முடியவில்லை. உன்னால் எப்படி இவ்வளவு பெரிய பையனை தூக்கிக் கொண்டு ஏற முடிகிறது?என்றார்.
அதற்கு அந்த சிறுமி பதில் சொன்னாள்,"ஐயா நீங்கள் தூக்கிக் கொண்டிருப்பது ஒரு சுமையை. நான் தூக்கிக் கொண்டிருப்பது எனது தம்பியை என்றாள்.துறவிக்கு புரிந்தது அன்பு எதையும் சுமக்கும் என்று.
இன்றைய செய்திகள்
29.10.2024
* தீபாவளி விளையாட்டு போட்டிகளில் யாரையும் புறக்கணிக்கக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு.
* குருப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு: காலியிடங்கள் 9,491 ஆக உயர்வு.
* தீபாவளி வாரம் தொடங்கிய நிலையில் டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசம்: திணறும் மக்கள்.
* தென்கொரியாவில் தனிமை மரணங்கள்' அதிகரித்து வருகின்றன. இதை தடுக்க அந்த நாட்டு அரசு ரூ.2,750 கோடியில் சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது.
* ஜப்பான் ஓபன் டென்னிஸ்; சீன வீராங்கனை சாம்பியன்.
* புரோ கபடி லீக்; குஜராத்தை வீழ்த்தியது உ.பி. யோத்தாஸ்.
Today's Headlines
* No one should be ignored in Diwali sports: HC orders.
* Group-IV Exam Results Released: Vacancies increased to 9,491.
* Air quality in Delhi continues to deteriorate as Diwali week begins: People suffocate.
* 'Loneliness deaths' are on the rise in South Korea To prevent this, the government of that country has announced a special scheme of Rs 2,750 crore.
* Japan Open Tennis; Chinese female beat championship.
* Pro Kabaddi League; UP beat Gujarat Yodas.
Prepared by
Covai women ICT_போதிமரம்
Comments
Post a Comment