திருக்குறள்:
பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : கொல்லாமை
குறள்:321
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்.
விளக்கம்:
அறச்செயல் எது என்றால், பிற உயிர்களைக் கொலை செய்யாது இருப்பதே; கொல்வது அனைத்துப் பாவங்களையும் தரும்.
பழமொழி :
Hunger is the best source
பசி ருசி அறியாது
இரண்டொழுக்க பண்புகள் :1
. 1. நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் , மனதுக்கு துன்பம் தரமாட்டேன்.
2. துன்ப படுவோருக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன் .
பொன்மொழி :
கடினமாக உழைத்தவர்கள்
எல்லாம் முன்னேறி விடவில்லை.
கவனமாகவும் நம்பிக்கையுடனும்
உழைத்தவர்களே வாழ்க்கையில்
முன்னேறி உள்ளனர்._____ அப்துல் கலாம்
பொது அறிவு :
1. உலகின் மிகப்பெரிய பாலைவனம் எது?
விடை: சகாரா
2. சிரிக்க வைக்கக்கூடிய வாயு எது?
விடை: நைட்ரஸ் ஆக்சைடு
English words & meanings :
Draw the line - to set a limit, சில காரியங்களுக்கு எல்லைக் கோடு அமைத்தல்,
carry the can - taking the blame for the things which we didn't do, செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவித்தல்
ஆரோக்ய வாழ்வு :
ஆவாரம் பூ : ஆவாரம் பூ பானம் சிறுநீர் கடுப்பு இருக்கும் போது அதை குறைக்க செய்கிறது. இதனுடைய வேரிலிருந்து தயாரிக்கப்படும் சாறு இயற்கை டையூரிடிக் ஆக செயல்பட்டு சிறுநீரகத்தை பாதுகாக்கிறது. நீரிழிவு நோய் கொண்டிருப்பவர்களுக்கு சிறுநீரகம் சேதமாகாமல் பாதுகாக்கிறது.
டிசம்பர் 16
வால்ட் டிஸ்னி அவர்களின் நினைவுநாள்
வால்ட் டிஸ்னி (/ˈdɪzni/;[3] டிசம்பர் 5 , 1901 - டிசம்பர் 15, 1966) உலகப் புகழ் பெற்ற ஓவியர். மிக முக்கியமான கார்ட்டூன் ஓவியர். மிக்கி மவுஸ், டொனால்ட் டக் , ஸில்லி சிம்பொனிஸ் போன்றவற்றை உருவாக்கியவர். திரைப்பட இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பணிபுரிந்தவர். வால்ட் டிஸ்னி தயாரிப்பு நிறுவத்தின் இணை-நிறுவனரான டிஸ்னி(தன் அண்ணன் ராய்.ஒ.டிஸ்னியுடன் உலகின் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் ஆவார்.
நீதிக்கதை
கர்வம் கொண்டவர் துன்பமே அடைவர்.
காட்டில் ஒரு நாள் பெரிய பூனை ஒன்றும் நரியும் சந்தித்தன. அவை இரண்டும் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தன.
அப்பொழுது நரி பூனையிடம் “நண்பரே! தந்திரத்திற்குப் பேர் போனவன் நான் எவ்விதத் தீங்கிலிருந்தும் தந்திரமாய் தப்புவேன்" என்று இறுமாப்புடன் கூறியது.
அதற்கு பூனை "நண்பரே! தங்களைப் போல் பல தந்திரங்கள் எனக்கு தெரியாது. சில தந்திரங்கள் தான் தெரியும். தங்களைப் போல் சாமர்த்தியம் எனக்குக் கிடையாது” என்று அடக்கத்துடன் பதில் கூறியது.பூனையைக் கண்டு நரி ஏளனமாய் "ஒன்றும் தெரியாத நீ எவ்வாறு ஆபத்திலிருந்து தப்புவாய்" என்று ஏளனம் செய்தது.
அச்சமயம் திடீரென்று அப்பக்கம் சிலவேட்டை நாய்கள் வந்தன. உடனே பூனை ஒரு பெரிய மரத்தின் மேல் ஏறிக்கொண்டது. ஆனால் நரியினால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அங்கிருந்து ஓட ஆரம்பித்தது. ஆனால் வேட்டை நாய்கள் வேகமாய் ஓடித் தாவி நரியைப் பிடித்துக் கொன்றன. பூனையோ தப்பிப் பிழைத்தது. கர்வம் கொண்டவர் துன்பமே அடைவர்.
இன்றைய செய்திகள்
16.12.2023
*74.1% இந்தியர்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைப்பதில்லை அதிர்ச்சி தகவல்.
* 11 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்-தமிழக அரசு உத்தரவு.
*இந்தியாவில் மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா... அஞ்சி நடுங்கும் மக்கள்.
*16, 17 -ஆம் தேதிகளில் டெல்டா, தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
* ஆஸ்திரேலியாவில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில், விமர்சனங்களுக்கு மத்தியில் சாதனைகள் படைத்த டேவிட் வார்னர்.
Today's Headlines
*74.1% of Indians do not have access to healthy food shocking information.
* 11 IPS Transfer of Officers-Tamil Govt Order.
*Corona is picking up speed again in India...People are trembling with fear.
* Chance of heavy rain in Delta and Southern districts on the 16th and 17th.
* David Warner's record-breaking 3-match Test cricket series in Australia, amid criticism.
Prepared by
Covai women ICT_போதிமரம்
Comments
Post a Comment