Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.11.2023

 Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.11.2023



திருக்குறள் : 


பால் :அறத்துப்பால்


இயல்:துறவறவியல்


அதிகாரம் : வெகுளாமை


குறள்:303


மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய

பிறத்தல் அதனான் வரும்.



விளக்கம்:


யார்மீது சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய விளைவுகளுக்குக் காரணமாகும்.


பழமொழி :

Good and Bad are not due others


நன்றும் தீதும் பிறர் தர வாரா.


இரண்டொழுக்க பண்புகள் :


1) என் உடன் பயிலும் மாணவ,மாணவிகளுடன் எந்த வேறுபாடும் இன்றி அன்போடு பழகுவேன்.


2) பிற மாணவர்கள் வைத்து இருக்கும் பொருள்கள் மீது ஆசை படவோ அவற்றை எடுத்துக்கொள்ளவோ மாட்டேன்.

பொன்மொழி :


முடியாது என்ற வார்த்தை

முட்டாள்களினால் மட்டுமே

பயன்படுத்தப்படும் வார்த்தை..

அந்த வார்த்தையை நீ

பயன்படுத்தாதே.


பொது அறிவு :


1. முதல் உலகப்போர் நடந்த ஆண்டு எது ? 


 1914 ஆம் ஆண்டு . 


 2. உலக சமாதான சின்னம் எது ?


 ஒலிவ் மரத்தின் கிளை.


English words & meanings :


 zany(adj)- uncommon behaviour.சம்பந்தமற்ற , வித்தியாசமான zestful)adj) - having a lot of energy ஆர்வம் , உந்துதல்

ஆரோக்ய வாழ்வு : 


செம்பருத்தி பூ உடல் சூடு காரணமாக பலருக்கு வாய்புண், வயிற்றுப்புண் உண்டாகும். அவர்கள் தினம் 10 பூவின் இதழ்களை மென்று சாப்பிட்டால் புண்கள் ஆறும். ஒரு மாதகாலம் தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும்.


நவம்பர் 22




நீதிக்கதை


 ஒரு நாள் அக்பர் சக்கரவர்த்தி பீர்பாலிடம் ஒரு புதிர் போட்டார்.


“மேலே மூடி கீழே மூடி


நடுவே மெழுகுத் திரி எரிந்து அணைகிறது


இது என்ன?”


என்று பீர்பாலைப் பார்த்துக் கேட்டார். பீர்பாலுக்கு இந்தப் புதிருக்கான விடை தெரியவில்லை. “அரசே, எனக்கு ஒரு நாள் அவகாசம் கொடுங்கள். யோசித்து வந்து சொல்கிறேன்” என்றார் பீர்பால்.


மறுநாள் பீர்பால் ஒரு கிராமத்தின் பக்கமாகச் சென்று  கொண்டிருந்தார். அவருக்குத் தாகம் எடுத்தது. தம் தாகத்தைத் தீர்த்துக் கொள்ளத் தண்ணீர் கேட்பதற்காக, அங்கிருந்த ஒரு வீட்டிற்குள் நுழைந்தார். அங்குச் சிறுமி ஒருத்தி சமைத்துக் கொண்டிருப்பதைக் கண்டார்.


“குழந்தாய், என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்று  அந்தச் சிறுமியைப் பார்த்துக் கேட்டார் பீ்ர்பால்.


“குழந்தையைச் சமைத்துக் கொண்டிருக்கிறேன்; தாயாரை எரிய விட்டுக் கொண்டிருக்கிறேன்” என்று அந்தச் சிறுமி கூறினாள்.


“அப்படியா? உன் தகப்பனார் எங்கே” என்று அந்தச் சிறுமியிடம் கேட்டார் பீர்பால்.


“என் தகப்பனார் மண்ணுடன் மண்ணைச் சேர்ப்பதற்குச் சென்றுள்ளார்” என்றாள் அந்தச் சிறுமி.உன் தாயார் எங்கே?” என்று பீர்பால் கேட்டபொழுது, “ஒவ்வொன்றையும் இரண்டிரண்டாக ஆக்கச் சென்றிருக்கிறாள்” என்றாள்.


இந்த பதில்களைக் கேட்டப் பீர்பால் திகைத்துப் போய் விட்டார். இந்தச் சமயத்தில் அந்தச் சிறுமியினுடைய தாய் தந்தையர் அங்கு வந்தனர். அவர்களிடம் பீர்பால் எல்லா விவரத்தையும் கூறினார்.


இதைக் கேட்டுச் சிரித்த அந்தச் சிறுமியின் தந்தை ‘ அவள் சரியாகத்தான் கூறியிருக்கிறாள்” என்றார்.


“எனக்கு ஒன்றும் புரியவில்லையே?” என்றார் பீர்பால்.


“துவரம் பருப்பை வேகவைத்துக் கொண்டு, அதற்காக அடுப்பை எரிப்பதற்குத் துவரஞ் செடியின் காய்ந்த தண்டுகளை விறகாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறாள். அதனைத்தான் குழந்தையைச் சமைத்துக்கொண்டு தாயாரை எரித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்” என்றார் சிறுமியின் தந்தை.


“நீங்கள் மண்ணுடன் மண்ணைச் சேர்க்கச் சென்றதாகக் கூறினாளே” என்றார் பீர்பால்.


“என்னுடைய உறவினர் ஒருவர் இறந்துவிட்டார். அவரைச் சுடுகாட்டில் தகனம் செய்வதற்காகப் போயிருந்தேன். உயிர் போன பிறகு இந்த உடம்பு மண்ணோடுதானே சேர்ந்து விடுகிறது! அதைத்தான் அப்படிச் சொல்லி இருக்கிறாள்” என்றார்.


“உங்கள் மனைவி ஒவ்வொன்றையும் இரண்டிரண்டாக ஆக்கச் சென்றிருக்கிறாள் என்றாளே” என்றார் பீர்பால்.


“பக்கத்து வீட்டில் உளுந்து உடைத்துக் கொடுக்கச் சொன்னார்கள். அங்குச் சென்று உளுந்து உடைத்துக் கொடுத்துவிட்டு வருகிறாள்” என்றார்  அந்தச் சிறுமியின் தகப்பனார்.


இந்தப் பதில்களைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த பீர்பால் “அக்பர் சக்கரவர்த்தி போட்ட புதிருக்குப் பதில் அளிக்கக் கூடியவர்கள் இவர்களே’ என்று கருதினார். அக்பர் சக்கரவர்த்தி கூறியதை நினைவுபடுத்திக் கொண்டு.


“மேல மூடி கீழே மூடி


 நடுவே மெழுகுத் திரி எரிந்து அணைகிறது.


இது என்ன?என்று கேட்டார் பீர்பால்.


இதைக் கேட்ட அந்தச் சிறுமியின் தந்தை, “ இரண்டு மூடிகள் என்றால் ஒன்று ஆகாயம், மற்றொன்று பூமி. மெழுகுத் திரி என்பது மனிதன். பூமியில் மனிதன் வாழ்ந்து  இறந்து விடுகிறான். இதுதான், இந்தப் புதிருக்கு விடை” என்று கூறினான்.


இதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த பீர்பால் தம்மால் இயன்ற பொருள்களைச் சன்மானமாக அந்தக் குடும்பத்திற்குக் கொடுத்தார்.


மறுநாள் அரச சபைக்குச் சென்ற பீர்பால், அக்பர் சக்கரவர்த்தி போட்ட புதிருக்கான விடையைக் கூறினார்.


அதைக் கேட்ட சபையிலிருந்தவர்கள் அனைவரும் ஆச்சிரியப்பட்டனர்.


பீர்பாலின் அறிவுத் திறனைப் பாராட்டி அக்பர் சக்கரவர்த்தி, பொன்னையும் மணியையும் பரிசாக வழங்கினார். பீர்பால் தாம் அதைப் பெற்றுக் கொள்ளாமல், தமக்கு அந்தப் புதிருக்கு உரிய விளக்கத்தைக் கூறிய குடும்பத்தவரை வரவழைத்தார். “இவர்களே அந்தப் பரிசுக்கு உரியவர்கள்” என்று கூறி, நடந்த நிகழ்ச்சிகளை விளக்கமாகக் கூறினார். அக்பர் சக்கரவர்த்தி வழங்கிய பரிசை அந்தக் குடும்பத்தவர் பெற வழிசெய்தார். பீர்பாலின் நேர்மையை வியந்து பாராட்டிய அக்பர் சக்கரவர்த்தி பீர்பாலுக்குச் சிறப்புப் பரிசு வழங்கினார்.


இன்றைய செய்திகள்


22.11.2023


*போக்குவரத்து மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கு நன்மை செய்யும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு லண்டனில் விருது.


* திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு 2,700 சிறப்பு பேருந்துகள்; அமைச்சர் தகவல்.


* நீர் நிலைகளை ஆக்கிரமித்து உள்ளவர்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட முடியாது மதுரை ஐகோர்ட் அதிரடி.


*ஈரோடு மாவட்ட அரசு பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு.


* பின்னணி பாடகி பி சுசிலாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் முதல்வர் மு க ஸ்டாலின் வழங்கினார்.


* ஐசிசி- இன் புதிய விதிமுறை: முந்தைய ஓவர் முடிந்து 60 வினாடிகளுக்குள் வந்து வீச்சு அணி அடுத்த ஓவரை வீச தயாராக வேண்டும். அப்படி தயாராகாமல் இருப்பது மூன்றாவது முறையாக நிகழும் போது, 5 ரன்கள் பந்து வீச்சு அணிக்கு அபராதம் விதிக்கப்படும்.


Today's Headlines


* Chennai Metro Rail was  Awarded in London for its continuous involvement in activities beneficial to the environment, not only just transportation.


 * 2,700 special buses for Tiruvannamalai Karthikai Deepa festival;  Minister Information.


 * Madurai High Court –cannot order to give Patta to those who are encroaching on water bodies a striking action.


 *Minister Anbil Mahesh Poiyamozhi surprise visit to  Erode district government schools.


 * Playback singer P Susila was awarded an honorary doctorate degree by Chief Minister M K Stalin.


 * ICC's new rule: The batting team must be ready to bowl the next over within 60 seconds of the previous over.  The third occurrence of such unpreparedness will result in a penalty of 5 runs to the bowling team.

 Prepared by


Covai women ICT_போதிமரம்


Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study Whatsapp groups links

CLiCK The below groups name to join the group Zeal study Class wise groups links  kindly join in any one groups in these groups class suitable messages will be shared  Join our Zeal study Official Telegram channel for all latest updates https://t.me/zealstudyofficial Follow our Whatsapp channel  https://whatsapp.com/channel/0029Va9B0NY5q08hCHKk8A19 for classes 1-5 materials Zeal study primary WhatsApp  groups links   Zeal study primary group 6 https://chat.whatsapp.com/JsUkig72NCbEfK0GtsoNg3 Zeal study primary group 1 https://chat.whatsapp.com/I5zmYprrqzh0hQHrRkqO6R Zeal study primary group 2 https://chat.whatsapp.com/Gs5xFU3kgzdIaQ8xExUrp4 Zeal study primary group 3 https://chat.whatsapp.com/KPoGHVgwlmkKCoUcX8J5yY Zeal study primary group 4 https://chat.whatsapp.com/KughukPr6yN4prnKWWNgB3 Zeal study primary group 5 https://chat.whatsapp.com/LYKowdSHZnT7vTM797PmLu For classes 6-8 Zeal study 6-8   WhatsApp  groups links For 6 ,7&8 handling...

Zeal Study Lesson Plan 6,7,8,9,10 Collection 2024-25 Learning Out Comes Based Lesson Plan

Zeal study lesson plan colllection   6,7,8,9.10 Tamil Lesson plan 6,7,8,9.10 English Lesson plan 6,7,8,9.10 Maths Lesson plan   6,7,8,9.10 Science Lesson plan 6,7,8,9.10 Social science Lesson plan Join our Whatsapp groups click here

PDF Answer keys for 9,8,7&6 th std all subjects Bridge course worksheets updated by Zeal study

6th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here  7th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here 8th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here  9th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here 9th Tamil worksheet 1 answer key pdf download click here 9th Tamil worksheet 2 answer key pdf download click here 9th Tamil worksheet 3 answer key pdf download click here 9th Tamil worksheet 4 answer key pdf download click here 9th Tamil worksheet 5 answer key pdf download click here 9th Tamil worksheet 6 answer key pdf download click here 9th Tamil worksheet 7 answer key pdf download click here 9th Tamil worksheet 8 answer key pdf download click here 9 th Tamil worksheet 9 answer key pdf click here 9 th Tamil worksheet 10 answer key pdf click here 9 th Tamil worksheet 11 answer key pdf click here ...

Followers