Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.02.2026

 Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.02.2026


 







திருக்குறள்:

குறள் 502:
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் கட்டே தெளிவு.                        
விளக்க உரை:

நல்லகுடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழியாச் செயல்களைச் செய்ய அஞ்சுகின்ற நாணம் உடையவனையே நம்பித் தெளிய வேண்டும்.

பழமொழி :
Knowledge is the real wealth.        

அறிவே உண்மையான செல்வம்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. உலகில் உயர்வானது அனைத்து உயிர்களிடமும் நாம் காட்டும் அன்பும் பரிவும் தான்.

2. எனவே அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டுவோம்.

பொன்மொழி :

செல்வத்தை உண்டாக்குவது உழைப்பு. உலகத்தை இயக்குவதும் உழைப்பே - வெப்ஸ்டர்

பொது அறிவு :

01.இந்திய தத்துவம்"" (Indian Philosophy) என்ற புகழ்பெற்ற நூலை எழுதியவர் யார்?

டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன்

Dr. S. Radhakrishnan

02. உலைகள் மற்றும் உருகிய உலோகங்களில் உள்ள  அதிக வெப்பநிலையை அளவிடப்  பயன்படுவது எது?

       பைரோமீட்டர்

Pyrometer

English words :

gaze-look with administration

peek-look secretly

தமிழ் இலக்கணம்:

தோப்பா‌ தோட்டமா?
எந்த எந்த மரம் செடி கொடிகளுக்குப் பின்னால் தோப்பு என்ற சொல் வரும் அல்லது தோட்டம் என்ற சொல் வரும். இன்று காண்போம்.
மிக நீண்ட நாட்கள் இருந்து பயன் தரும் மரம் செடிகள் கூட்டம் தோப்பு என்று அழைக்கப்படும் குறுகிய கால மரம் செடிகள் கூட்டம் தோட்டம் என்று அழைக்கப் படும்
எ. கா : தென்னந் தோப்பு –நீண்ட கால பயன் தரும் மரம்
வாழைத் தோட்டம் குறுகிய கால பயன் தரும் மரம்.
மாந்தோப்பு
பூந்தோட்டம்
சவுக்குத் தோப்பு
மல்லிகைத் தோட்டம்
அறிவியல் களஞ்சியம் :

நாசாவின் ஆர்டெமிஸ் II (Artemis II) நிலவு ராக்கெட் ஏவுதளத்திற்கு வந்துள்ளது. செவ்வாய் கிரகத்தில், பெர்செவரன்ஸ் ரோவர் முதன்முதலில் AI மூலம் திட்டமிடப்பட்ட பயணத்தை (AI-Planned Drive) மேற்கொண்டுள்ளது.

நீதிக்கதை

வாழ்க்கைக்கு வழிகாட்டிய பறவை

ஒரு கிராமத்தில் ராமு என்று ஒருவன் இருந்தான். அவனுக்குப் போதுமான அளவு செல்வம் இருந்தது!  அவன் மிகவும் சோம்பேறி. கிராமத்தில் உள்ளவர்கள் வேலைக்குச் செல்லும்போது இவன் மட்டும் உறங்கிக்கொண்டிருப்பான்.

ஒருநாள் மாலை அவன்   ஒரு சிறிய அழகான பறவையைப் பார்த்து தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றான். அதனுடன் விளையாடிப் பொழுதைக் கழிக்கலாம் என்று நினைத்து பறவைக்குச் சிறிது உணவு அளித்தான். அது உணவு உண்ணும் அழகைக் கண்டு ரசித்தான். சற்று நேரத்தில் இருட்டிவிட்டது! வழக்கம் போல் தூங்கி விட்டான்.

பொழுது விடிந்தது. கண்விழித்துப் பார்த்த அவன் அதிர்ந்து போனான்! அவன் உணவளித்த பறவை சுமார் மூன்றடி உயரம் வளர்ந்திருந்தது!

நான் சிறிய பறவையைத்தானே எடுத்து வந்தேன்! நீ எடுத்து வந்த பறவைதான் நான்! வளர்ந்துவிட்டேன். எனக்குப் பசிக்கிறது, ஏதாவது சாப்பிடக்கொடு என்றது பறவை. அதற்கு சிறிது தானியங்களைப் போட்டான். பறவை அதைத் தின்றுவிட்டு மீண்டும் பசிக்கிறது என்றது.

ராமு தனக்காக இருந்த உணவையும் பறவைக்கு அளித்து விட்டான்.  வீட்டைவிட்டு வெளியே சென்றான். பகல் முழுதும் வெளியில் இருந்து விட்டு இரவு வீடு வந்து பார்த்தான். அந்தப் பறவை மிகப் பெரியதாக வளர்ந்து வீடு முழுவதையும் அடைத்துக் கொண்டிருந்தது! அவனால் வீட்டிற்கு உள்ளே செல்ல முடியவில்லை!

ராமுவுக்கு பயமும் அதிர்ச்சியும் ஏற்பட்டது. வெளியே, குளிரில் படுத்து உறங்கினான். விடிந்தது! ராமு பசியாக இருந்தான். அப்போது அவ்வழியே மூட்டையைச் சுமந்து கொண்டு வந்த ஒரு வண்டியிலிருந்து இறங்கிய பெரியவர் ராமுவைப் பார்த்து, தம்பீ, மூட்டையை சற்று இறக்கித்தா. நான் உனக்குப் பணம் தருகிறேன் என்றார்.

எனக்கு உணவு கிடைக்குமா? வாங்கித் தருகிறேன் என்றார் பெரியவர். பசியோடு இருந்தவனுக்கு அவர் வாங்கித்தந்த உணவு அமிர்தமாக இருந்தது. சாப்பிட்டபின் வீட்டுக்குச் சென்றான்.

பறவை சற்று சிறிதாக மாறியிருந்தது! எப்படி இது என்றான் ராமு. உன் சோம்பல் சற்று குறைந்துவிட்டது அல்லவா? அதனால்தான் என்றது.

மறுநாள் கூலி வேலைக்குச் சென்றான். கிடைத்த கூலியில் வயிறார உண்டான். உணவை பறவைக்கும் வாங்கிக் கொண்டான். அவனுக்கு சந்தோஷமாக இருந்தது! இனி உழைத்து உண்ண வேண்டும் என்று தீர்மானித்து வீட்டுக்குச் சென்றான்.

பறவை முதலில் இருந்தது போலவே மிகவும் சிறியதாக இருந்ததைக் கண்டான்! இது எப்படி? என்று பறவையைக் கேட்டான். உன் சோம்பேறித்தனத்தை மாற்றவே நான் அப்படி செய்தேன். நான் வந்த வேலை முடிந்தது என்றது பறவை.

எனக்கு மிகவும் மகிழ்ச்சி! இந்த உணவைச் சாப்பிடு என்றான் ராமு. என் மீது நீ கொண்ட அன்பிற்கு நன்றி! எனக்கு உணவு வேண்டாம். உன் சோம்பல் நீங்கியதே அதுதான் எனக்கு நிம்மதி! என் உணவை நான் தேடிக்கொள்ளுவேன் என்று கூறிவிட்டு வானை நோக்கிப் பறந்தது.

அது வானில் ஓரு புள்ளியாய் மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்த ராமுவிற்கு அழுகை வந்தது. இது உலகிற்கு ஞானத்தை ஊட்ட நினைக்கும் பறவை போலிருக்கிறது என்று கண்களைத் துடைத்துக்கொண்டார்.

நீதி :

உழைத்து சாப்பிட்டால் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலைக்கும்.

இன்றைய செய்திகள்

10.02.2026

⭐சந்திரயான்-4 லேண்டர் தரை இறங்குவதற்கான இடம் கண்டறியப்பட்டுள்ளது- இஸ்ரோ தகவல்

⭐டிஎன்பிஎஸ்சி சார்பில், ஒத்திவைக்கப்பட்டிருந்த குரூப் 2,2ஏ தேர்வுகள் மார்ச் 15ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

⭐மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழக ரயில் திட்டங்களுக்கு ₹7,611 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀டி20 உலகக் கோப்பை: ஓமனை எளிதாக வீழ்த்தியது ஜிம்பாப்வே.
முதலில் பேட்டிங் செய்த ஓமன் 103 ரன்னில் சுருண்டது.
ஜிம்பாப்வே 13.3 ஓவரில் சேஸிங் செய்தது.

Today's Headlines

⭐ISRO has Informed that the Landing Site for   Chandrayaan-4 Lander   has been found.

⭐TNPSC has announced that the postponed Group 2, 2A exams will be held on March 15th.

⭐Central government has allocated ₹7,611 crore  for Tamilnadu rail projects in the budget.

*SPORTS NEWS*

🏀T20 World Cup: Zimbabwe beat Oman easily. Batting first, Oman were bowled out for 103. Zimbabwe chased down the target in 13.3 overs.

Covai women ICT_போதிமரம்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study LO Based Lesson plan For -7th Tamil - புதுமை விளக்கு

நமது Zeal study  வழக்கம் போல் இந்த பருவத்திற்கான பாடக்குறிப்பை வாரந்தோறும் வழங்கும். அந்த வகையில் இந்த வார பாடக்குறிப்பை இந்த பதிவில் வழங்கியுள்ளோம். இது உங்களுக்கு உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தி உங்கள் கற்பித்தல் பணி பாதிக்காதவாறு உங்களின்

8th Tamil lesson plan மெய்ஞான ஒளி, ஒன்றே குலம் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடக்குறிப்பு

Zeal study shares you all weeks lesson plan for all classes for all classes.In this way we share this week lesson plan also. We always wants to reduce your work load and do your work with very happy and Enjoy. Work with out tension and make your work perfect using our websites and share with your friends too.

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 02.02.26

 Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 02.02.26

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.01.2026

 Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.01.2026

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.02.2026

 Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.02.2026

Followers