Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.09.2023

 Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.09.2023




திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


இயல்:துறவறவியல்


அதிகாரம் : தவம்


குறள் :261

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை 

அற்றே தவத்திற் குரு.


விளக்கம்:


தான் பெற்ற துன்பத்தைப் பொறுத்தலும் மற்ற உயிர்களுக்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகியவைகளே தவத்திற்கு வடிவமாகும்.


பழமொழி :

Cowards die many times before their death


வீரனுக்கு ஒரு முறை சாவு; கோழைக்கு தினந்தோறும் சாவு



இரண்டொழுக்க பண்புகள் :


1. புறங் கூறுதல் மாணவனாகிய எனக்கு தகுதி அல்ல எனவே புறங் கூற மாட்டேன்.


 2. பகிர்ந்து கொள்ளும் பழக்கத்தை இப்போது இருந்தே கடைபிடிக்க முயல்வேன்.

பொன்மொழி :


ஏழையின் சிரிப்பில்

இறைவனை காணலாம். அறிஞர் அண்ணா 


பொது அறிவு :


1. தென் இந்தியாவின் மான்செஸ்டர் எனப்படுவது?


விடை: கோயமுத்தூர்


2. சருமத்தின் மீதுள்ள நிறத்தின் காரணம்


விடை: மெலானின்


English words & meanings :


 mag·ne·to·sphere - A region surrounding a planet, star etc. Noun. Our solar system has magnetosphere around it. காந்த மண்டலம். பெயர்ச் சொல். 

ஆரோக்ய வாழ்வு : 


எள்: எள் அல்லது அதன் மூலம் தயாரிக்கப் படும் நல்லெண்ணெயை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரையை சீராக்க உதவுகிறது என்று பல ஆய்வுகள் கூறுகின்றன.


செப்டம்பர் 15


அனைத்துலக சனநாயக நாள் 


அனைத்துலக சனநாயக நாள் செப்டெம்பர் 15 அன்று அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. நவம்பர் 8, 2007 இல் நடந்த ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்சபைக் கூட்டத்தில் இது பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.


சனநாயகத்தினை ஊக்குவிக்கும் முகமாகவும் அபிவிருத்தி செய்யவும், மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரம் போன்றவற்றிற்குரிய கௌரவத்தை கொடுக்கும் முகமாக ஐநா இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இப்பொதுத் தீர்மானத்தை 192 உறுப்பு நாடுகள் அனுமதித்துள்ளன.


நீதிக்கதை


கெட்ட பழக்கங்களை ஆரம்பத்திலே அகற்று




ஒரு பணக்கார தொழிலதிபர் தனது மகனின் கெட்ட பழக்கங்களைக் கண்டு கவலைப்பட்டார். அவர் ஒரு வயதான ஞானியிடம் ஆலோசனை கேட்டார். முதியவர் அந்த மனிதனின் மகனைச் சந்திக்க அவரிடம் அழைத்து வரச் சொன்னார்.அவர்கள் காடுகளுக்குள் நடந்தார்கள், முதியவர் சிறுவனுக்கு ஒரு சிறிய மரக்கன்றைக் காட்டி அதை வெளியே இழுக்கச் சொன்னார். சிறுவன் அதை எளிதாகச் செய்தான், அவர்கள் நடந்தார்கள்.


முதியவர் சிறுவனிடம் ஒரு சிறிய செடியை பிடுங்கச் சொன்னார்.


சிறுவன் அதையும் கொஞ்சம் முயற்சி செய்து செய்தான்.


அவர்கள் நடந்து சென்றபோது, ​​முதியவர் சிறுவனிடம் புதரை வெளியே இழுக்கச் சொன்னார், சிறுவன் அதை செய்தான். அடுத்தது ஒரு சிறிய மரம், அதை வெளியே இழுக்க சிறுவன் மிகவும் போராட வேண்டியிருந்ததுஇறுதியாக, முதியவர் ஒரு பெரிய மரத்தை சிறுவனிடம் காட்டி, அதை வெளியே இழுக்கச் சொன்னார். பலமுறை, வெவ்வேறு வழிகளில் முயற்சித்தும் சிறுவனால் அதை வெளியே எடுக்க முடியவில்லை. முதியவர் சிறுவனைப் பார்த்து புன்னகைத்து “பழக்க வழக்கங்களும் அப்படித்தான்” என்று கூறுனார். கெட்ட பழக்க வழக்கங்களை நாம் ஆரம்பத்திலே அகற்றி விட வேண்டும், அது பெரியதாக வளர்ந்து விட்டால் நம்மால் அகற்றுவது கடினமானது.                நீதி:                    கெட்ட பழக்கங்கள் நம் அமைப்பில் குடியேறியவுடன் அவற்றை அகற்றுவது கடினம். ஆரமத்திலேயே அவற்றை அகற்றுவது நல்லது.


இன்றைய செய்திகள்


15.09.2023


*சிங்கப்பூரின் ஒன்பதாவது அதிபராக பதவி ஏற்றார் தர்மன் சண்முகரத்னம்.


* தமிழகத்தில் முதல் முறையாக மூன்று பெண்கள் அர்ச்சகர் ஆனார்கள். ஸ்ரீரங்க கோவிலில் உதவி அர்ச்சகர்களாக பயிற்சி.


* கடனை அடைத்த முப்பது நாட்களில் சொத்து பத்திரம் தராவிட்டால் நடவடிக்கை. வங்கிகள் நிதி நிறுவனங்களுக்கு ஆர்பிஐ புதிய உத்தரவு.


* தமிழகத்தில் 30 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்.


* சூறாவளியாக சுழன்றுடித்த பென் ஸ்டோக்ஸ் - மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி.


* உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்: ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு.


Today's Headlines


*Dharman Shanmugaratnam took office as the ninth President of Singapore.


 * Three women became priests for the first time in Tamil Nadu.  Trained as Assistant Priests at Sriranga Temple.


 * Action will be taken if the property bond is not provided within thirty days of payment of the loan.  RBI New Directions for Banks and Financial Institutions


 * 30 people in Tamil Nadu have Dengu. Precautionary and preventory measures in full pledge.


 * Ben Stokes spins like a whirlwind - England won the third ODI.


 *  Afghanistan Team Announced for world cup cricket.

 Prepared by


Covai women ICT_போதிமரம்


Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

TNTET 2026: தமிழ் முழுமையான மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) online full test - 1

TNTET 2025 - தமிழ் முழு மாதிரித் தேர்வு - Zeal Study TNTET 2025: தமிழ் மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) இயல் 3: அறிவியல் ஆத்திச்சூடி | எந்திர மனிதன் | ஒளி பிறந்தது | இலக்கணம் 1. புதிய ஆத்திச்சூடி எழுதியவர் யார்? ஔவையார் பாரதியார் கவிமணி நெல்லை சு. முத்து விடை விடை: B. பாரதியார் 2. 'தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர்? விக்ரம் சாராபாய் மயில்சாமி அண்ணாதுரை நெல்லை சு. முத்து சிவன் விடை விடை: C. நெல்லை சு. முத்து 3. 'ஔடதம்' என்பதன் பொருள் யாது? உணவு நீர் காற்று மருந்து விடை விடை: D. மருந்து 4. 'இயன்றவரை' என்ற சொல்லின் பொருள்? ...

Zeal study TNTET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - மாதிரி தேர்வு -1

TNTET 2026 உளவியல் மாதிரித் தேர்வு Zeal study TET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - 1 மீண்டும் தேர்வு எழுதவும்

Zeal study TET / TRB Psychology உளவியல் (அறிவுப்புல வளர்ச்சி) online test

TET 2025 - உளவியல் அலகு 3 ஆன்லைன் தேர்வு - Zeal Study உளவியல் அலகு 3: அறிவுப்புல வளர்ச்சி TET / TRB / TNPSC - முக்கிய வினாக்கள் (15 Questions) 1. கவனித்தலின் முதல் அடிப்படை நிலை எது? புலன் காட்சியறிதல் சிந்தித்தல் கற்பனை செய்தல் விடையைக் காட்டு விடை: புலன் காட்சியறிதல். 2. கவனித்தலை தீர்மானிக்கும் அகக்காரணி எது? நாட்டங்கள் புதுமை அளவு விடையைக் காட்டு விடை: நாட்டங்கள். 3. கவன வீச்சை அளவிடப் பயன்படும் கருவி எது? டச்சிடாஸ்கோப் எர்கோகிராப் ஆடியோமீட்டர் விடையைக் காட்டு விடை: டச்சிடாஸ்கோப் (Tachistoscope). ...

TNTET 2026: தமிழ் - பகுதி 1 முக்கியக் குறிப்புகள் (Study Materials) - இன்பத்தமிழ், தமிழ்க்கும்மி மற்றும் வளர்தமிழ்

  TNTET 2026: தமிழ் - பகுதி 1 முக்கியக் குறிப்புகள் (Study Materials) இந்தக் குறிப்புகள் இன்பத்தமிழ் , தமிழ்க்கும்மி மற்றும் வளர்தமிழ் ஆகிய பாடங்களை எளிதாக மீள்பார்வை (Revision) செய்ய உதவும்.

Zeal study LO Based Lesson plan For -6th Tamil - Term 3 பாதம்

நமது Zeal study  வழக்கம் போல் இந்த பருவத்திற்கான பாடக்குறிப்பை வாரந்தோறும் வழங்கும். அந்த வகையில் இந்த வார பாடக்குறிப்பை இந்த பதிவில் வழங்கியுள்ளோம். இது உங்களுக்கு உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தி உங்கள் கற்பித்தல் பணி பாதிக்காதவாறு உங்களின்

Followers