Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.07.2023

 Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.07.2023



திருக்குறள் :

பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்:தீவினையச்சம்


குறள் :208


தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை

வீயாது அடிஉறைந் தற்று.


விளக்கம்:


கேடு செய்தவரை கெடுதல் நிழல் போல் விலகாமல் தொடரும்.



பழமொழி :

A pen is mightier than a sword


கத்தி முனையைவிட பேனா முனை வலிமை வாய்ந்தது


இரண்டொழுக்க பண்புகள் :


1. ஊக்கமுடன் உழைத்தால் ஆக்கம் தானாக வரும். எனவே ஊக்கமுடன் எனது வேலைகளை செய்வேன்.


 2. முயன்றால் பட்டாம்பூச்சி. இல்லாவிட்டால் கம்பளிப்பூச்சி. எனவே சோர்ந்து போகாமல் முயற்சி செய்வேன்.


பொன்மொழி :


ஆக்கபூர்வமான சிந்தனை, தடைகளை கடந்து, வலிகளை பொறுத்துக்கொண்டு, புதிய இலக்குகளை அடைவதற்கான மதிப்பு மிக்க கருவியாகும்”- ஆமி மோரின்



பொது அறிவு :


1. 1954 இல் இரண்டு முன்னாள் பிரெஞ்சு காலனிகளின் இணைப்பால் உருவாக்கப்பட்ட இந்திய மாநிலம் எது?


விடை: புதுச்சேரி.


2. கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் இந்திய பெண் யார்?


விடை: சானியா மிர்சா.



English words & meanings :


 phonetics - science of speech sounds ஒலியியல்; quick sand - loose wet stand புதைமணல்

ஆரோக்ய வாழ்வு :


உருளை கிழங்கு : உருளையில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இருதய நோயாளிகளுக்கும், ரத்த கொதிப்பு காரர்களுக்கும் இது மிகவும் நல்லது. உருளையை சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.


நீதிக்கதை


உயிர் இனங்களுக்குள் உதவி


  ஒரு காக்கையானது, தனக்கு ஒரு நட்பு இருந்தால், ஆபத்து வேளையில் உதவியாக இருக்குமே என்று கருதியது.


எலியிடம் சென்று நாம் இருவரும் நட்பாக இருப்போம் என்றது காக்கை


எலி அதை நம்பவில்லை, “என்னைக் கொத்தி தின்பதற்காகவே, என் நட்பை நீ விரும்புகிறாய்” என்று கூறி, புதருகுள் ஓடியது.


காக்கை பலவாறு எடுத்துக் கூறியது. பிறகு எலியும், காக்கையும் நட்புக் கொண்டன.


ஒரு நாள் காக்கை, ‘எலியே! சிறிது தொலைவில் உள்ள நதியில் எனக்கு நட்பான ஆமை ஒன்று உள்ளது, அங்கே சென்றால், இரை நிறையக் கிடைக்கும் பயமின்றி சிலநாட்கள் தங்கலாம் என்று கூறியது.


எலியும் அதற்குச் சம்மதித்தது. இரண்டும் ஆமையிடம் சென்றன.


அவற்றை மகிழ்ச்சியோடு வரவேற்று இரை அளித்தது ஆமை.


அப்போது, ஒரு வேடனுக்குப் பயந்து ஒரு மான் ஓடிவந்தது.


எலி, காக்கை, ஆமை மூன்றும் மானுக்கு அடைக்கலம் தந்து நட்போடு வாழ்ந்தன.


ஒரு நாள், வேடனின் வலையில் மான் அகப்பட்டுக் கொண்டது.


மரத்தின் மீது இருந்த காக்கை, அதைப் பார்த்ததும் உடனே ஆமையையும் எலியையும் கூட்டிக் கொண்டு போய் மானை விடுவித்தது.அந்தசமயம் வேடன் வந்தான். எலியும், மானும், காகமும் வேடனிடம் அகப்படாமல், தப்பி ஓடி விட்டன. ஆனால், ஆமையால் வேகமாக ஓட இயலாததால், வேடன் அதைப் பிடித்து கூடையில் போட்டு விட்டு, உணவு அருந்தச் சென்றான். ஆமை அகப்பட்டுக் கொண்டதை நினைத்து எலி, காகம், மான் மூன்றும் வருந்தின.


மானுக்கு ஒரு யோசனை தேன்றியது. அப்படியே செய்யலாம் என எலியும் காகமும் தீர்மானித்தன.


மான் செத்துப் போனது போல், படுத்துக் கொண்டது, அதன்மீது காக்கை அமர்ந்து தன் கண்ணைக் கொத்துவது போல் பாசாங்கு செய்தது.


மான் செத்துக் கிடப்பதாக வேடன் நினைத்து ஆமையிருந்த கூடையை அப்படியே போட்டு விட்டு, மான் கிடந்த இடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தான்.


இதுவே நல்ல சமயம் என்று நினைத்த ஆமை, அருகில் இருந்த நதிக்குள் குதித்து மறைந்தது.


ஆமை தப்பியதைக் கண்ட மான், விர்ரென்று பாய்ந்து ஓடிவிட்டது.


காக்கை பறந்து மரத்தின்மீது அமர்ந்தது. எலி தூரத்தில் நின்று பார்த்து மகிழ்ந்தது.


ஆமையும், மானும் ஏமாற்றியதை எண்ணி வேடன் வருத்தத்தோடு வீட்டுக்குத் திரும்பினான்.



பிறகு, அந்த ஜீவன்களும் ஒன்றுக்கொன்று உதவியாக இருந்து வாழ்ந்தன.


இன்றைய செய்திகள்


05.07. 2023


*மின்னணு ஏற்றுமதியில் தமிழகத்துக்கு முதலிடம்- முதல்வர்  மு. க. ஸ்டாலின்.


*ரூ.404 கோடியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.


*பாதுகாப்புப் பணிகளின் போது காவலர்கள் யாரும் செல்போனை பயன்படுத்தக் கூடாது என டிஜிபி அறிவுறுத்தல்.


*ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் சாய் ஹிரா உலகளாவிய மாநாட்டு மைய கட்டிடத்தை காணொளி வாயிலாக திறந்து வைத்தார் பிரதமர் மோடி. 


*ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி 2023 ஏற்பாடுகள் தீவிரம்.


*10வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் வருகிற நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


Today's Headlines


Tamil Nadu is the first in electronics exports - Chief Minister M.K.  Stalin.


 *Tamil Nadu Government issued ordinance to expand Chief Minister's breakfast program at Rs.404 crore.


 *DGP instructed that no guard should use cell phone during security operations.


 *Prime Minister Modi inaugurated the Sai Hira Global Conference Center building in Puttaparthi, Andhra Pradesh through video presentation.


 *Asia Champions Cup Hockey 2023 preparations are in full swing.


 *The 10th Pro Kabaddi League is been scheduled to be held in November and December in India.

 Prepared by


Covai women ICT_போதிமரம்


Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

10th Slow learners materials for all Subjects given by Educational department - பள்ளிக்கல்வித்துறையால் வழங்கப்பட்ட மெல்லக்கற்போர் கையேடுகள்

2025-202 6 Chengalpattu dt  Tamil English Maths TM Maths EM Science TM Science EM Social science TM Social science EM Thoothukudi Districts     10th Tamil minimum level materials given by Thenkasi Educational Department -2025-26 10th English minimum level materials given by Thoothukudi Educational Department -2025-26 Zeal study 10th Science English medium minimum level materials given by Thoothukudi Educational Department -2025-26   Zeal study 10th Science Tamil medium minimum level materials given by Thoothukudi Educational Department -2025-26 Zeal study 10th Social Science English medium  minimum level materials given by Thoothukudi Educational Department -2025-26    Zeal study 10th Social Science Tamil  medium  minimum level materials given by Thoothukudi Educational Department -2025-26     Zeal study 10th Maths   Tamil  medium  minimum level materials given by Thoothukudi Educational Departmen...

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.08.2026

 Zeal study official school morning prayer activities  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.08.2026

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.09.2026

 Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.09.2026

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.09.2026

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.09.2026

Followers