Skip to main content

Zeal study official School morning prayer activities -பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.06.2023

Zeal study official  School morning prayer activities - பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.06.2023   



திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: பயனில சொல்லாமை
குறள் : 199

பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்.

விளக்கம்:
மயக்கம் சிறிதுமில்லாத மாசற்ற அறிவுடையவர் மறந்தும்கூடப் பயனற்ற சொற்களைச் சொல்ல மாட்டார்.


பழமொழி :

A good face needs no paints

அழகிய முகத்திற்கு அரிதாரம் தேவையில்லை

இரண்டொழுக்க பண்புகள் :

1. அனைவரிடமும் அன்பாக இருப்பேன்.

 2. அனைவரையும் மதித்து நடப்பேன்.

பொன்மொழி :

நேரம் என்பது ஒரு சிறந்த எழுத்தாளர். அது எப்போதும் சரியான முடிவை எழுதுகிறது. --சார்லி சாப்ளின்

பொது அறிவு :

1. பூமியின் இயற்கை செயற்கைக்கோளின் பெயர் என்ன?

விடை: சந்திரன்

2. சிவப்பு கிரகம் என்று அழைக்கப்படும் கிரகம் எது?

விடை: செவ்வாய்

English words & meanings :

Beaming-shining brightly, ஒளிரும். courteous - pleasant,மரியாதையான

ஆரோக்ய வாழ்வு :

யோகா வாரம் : நாள் முழுவதும் சுறு சுறுப்பாக இருக்க முடியும். மூச்சு பயிற்சி மூலம் ஆயுள் நீடிக்கும்.நோய்கள் வராமலும் நோய் இருந்தால் கட்டுக்குள் இருக்கும். முறையான பயிற்சி அவசியம்.

நீதிக்கதை

ஒரு ஆட்டுக்குட்டி ஓடிவரும் ஆற்றின் சரிவுப் பகுதியில் நீர் அருந்திக் கொண்டிருந்தது. மேல் பகுதியில் நீர் குடிக்க வந்தது ஒரு ஓநாய். அந்த ஓநாயை ஆட்டுக்குட்டி பார்க்கவில்லை. அதனை இரையாக்கிக் கொள்ளத் தீர்மானித்தது ஓநாய். ஏன், இப்படித் தண்ணீரைக் கலக்குகிறாய்? என்று கேட்டது ஓநாய். அப்போது தான் ஓநாயைப் பார்த்தது ஆட்டுக்குட்டி. பார்த்த உடன் தண்ணீர் குடிப்பதை நிறுத்தியது. நான் எப்படி நீரைக் கலக்க முடியும்? நாங்கள் குடித்த மீதி தானே கீழ்ப்புறம் வரும் என்று மெல்லிய குரலில் கேட்டது. பதில் பேசுமளவுக்குத் திமிராகி விட்டதா? நீ கலக்காவிட்டால் யார் கலக்கியிருப்பார்கள்? உங்களை  எல்லாம் சும்மா விடக்கூடாது!" என்றபடி ஓட முயன்ற ஆட்டுக்குட்டி மேல் பாய்ந்து அதை இரையாக்கிக் கொண்டது. துஷ்டர்களிடம் நியாயம் எடுபடாது. மௌனமாக ஒதுங்கிச் செல்வதே நன்மை தரும். காரியத்தை சாதித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக எப்படியும் பேசுவர். அவர்களிடம் எல்லாம் வாய் பேசாமல் செல்வதே நலம்.

இன்றைய செய்திகள்

22.06. 2023

*டிஜிபி சைலேந்திரபாபு ஜூன் 30-ஆம் தேதியுடன் ஓய்வு பெறும் நிலையில் புதிய டிஜிபி தேர்வு டெல்லியில் நாளை ஆலோசனை.

*கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தண்ணீரில் அமர்ந்தபடி யோகாசனம் செய்த ராணுவ வீரர்கள்.

*மோசடி அழைப்புகளை தவிர்க்க வாட்ஸ் அப்பில் புதிய வசதி அறிமுகம்.

*கடைசி பந்து வரை பரபரப்பான ஆட்டம் திண்டுக்கல் டிராகன்ஸ் திரில் வெற்றி.

*கோன்டாவெய்ட் அடுத்த மாதம் லண்டனில் நடக்கும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் போட்டியுடன் டென்னிஸ் இல் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Today's Headlines

* As DGP Shailendrababu retires on June 30, the selection of a new DGP will be held in Delhi tomorrow.

 *Soldiers did yoga, by sitting on water in Thiruvananthapuram, Kerala.

 *Introduction of the new feature in WhatsApp to avoid fraudulent calls.

 *Thriller win for Dindigul Dragons up to the last ball.

 * Kontaveit has announced her retirement from tennis with next month's Wimbledon Grand Slam in London.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Comments

Post a Comment

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

TNTET 2026: தமிழ் முழுமையான மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) online full test - 1

TNTET 2025 - தமிழ் முழு மாதிரித் தேர்வு - Zeal Study TNTET 2025: தமிழ் மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) இயல் 3: அறிவியல் ஆத்திச்சூடி | எந்திர மனிதன் | ஒளி பிறந்தது | இலக்கணம் 1. புதிய ஆத்திச்சூடி எழுதியவர் யார்? ஔவையார் பாரதியார் கவிமணி நெல்லை சு. முத்து விடை விடை: B. பாரதியார் 2. 'தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர்? விக்ரம் சாராபாய் மயில்சாமி அண்ணாதுரை நெல்லை சு. முத்து சிவன் விடை விடை: C. நெல்லை சு. முத்து 3. 'ஔடதம்' என்பதன் பொருள் யாது? உணவு நீர் காற்று மருந்து விடை விடை: D. மருந்து 4. 'இயன்றவரை' என்ற சொல்லின் பொருள்? ...

Zeal study TNTET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - மாதிரி தேர்வு -1

TNTET 2026 உளவியல் மாதிரித் தேர்வு Zeal study TET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - 1 மீண்டும் தேர்வு எழுதவும்

Zeal study TET / TRB Psychology உளவியல் (அறிவுப்புல வளர்ச்சி) online test

TET 2025 - உளவியல் அலகு 3 ஆன்லைன் தேர்வு - Zeal Study உளவியல் அலகு 3: அறிவுப்புல வளர்ச்சி TET / TRB / TNPSC - முக்கிய வினாக்கள் (15 Questions) 1. கவனித்தலின் முதல் அடிப்படை நிலை எது? புலன் காட்சியறிதல் சிந்தித்தல் கற்பனை செய்தல் விடையைக் காட்டு விடை: புலன் காட்சியறிதல். 2. கவனித்தலை தீர்மானிக்கும் அகக்காரணி எது? நாட்டங்கள் புதுமை அளவு விடையைக் காட்டு விடை: நாட்டங்கள். 3. கவன வீச்சை அளவிடப் பயன்படும் கருவி எது? டச்சிடாஸ்கோப் எர்கோகிராப் ஆடியோமீட்டர் விடையைக் காட்டு விடை: டச்சிடாஸ்கோப் (Tachistoscope). ...

TNTET 2026: தமிழ் - பகுதி 1 முக்கியக் குறிப்புகள் (Study Materials) - இன்பத்தமிழ், தமிழ்க்கும்மி மற்றும் வளர்தமிழ்

  TNTET 2026: தமிழ் - பகுதி 1 முக்கியக் குறிப்புகள் (Study Materials) இந்தக் குறிப்புகள் இன்பத்தமிழ் , தமிழ்க்கும்மி மற்றும் வளர்தமிழ் ஆகிய பாடங்களை எளிதாக மீள்பார்வை (Revision) செய்ய உதவும்.

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.02.2026

 Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.02.2026

Followers