Skip to main content

Zeal study official school morning prayer activities* *பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.04.2023*

Zeal study official school morning prayer activities*

*பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.04.2023*



  திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: அழுக்காறாமை

குறள் எண் : 168
அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.

பொருள்:
பொறாமை எனும் தீமை ஒருவனுடைய செல்வத்தையும் சிதைத்துத் தீய வழியிலும் அவனை விட்டுவிடும்

பழமொழி :
Do in rome as the romans do.

ஊருடன் ஒத்து வாழ்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. பிறர் காரியங்களில் தேவை இல்லாமல் தலையிட மாட்டேன்.

2. பிறர் மனம் நோக பேச மாட்டேன்.

பொன்மொழி :

பகைவனை அடக்குபவனைவிட ஆசைகளை அடக்குபவனே மாவீரன்.

பொது அறிவு :

1. சீக்கிய மதத்தின் தாயகம் எது?

பஞ்சாப்.

2. டென்மார்க்கின் தேசிய சின்னம் எது?

கடற்கரை.

English words & meanings :

marigold - plant of the daisy family. noun. சாமந்தி வகை தோட்டச் செடி. செண்டு மல்லி. பெயர்ச்சொல்.
ஆரோக்ய வாழ்வு :

பால் பொருள்களான பால். யோகர்ட், சீஸ் உள்ளிட்டவற்றில் வைட்டமின் பி12 மிக அதிகமாக இருக்கின்றது.

இந்த பால் பொருள்களில் வெறும் வைட்டமின் பி12 மட்டுமின்றி கால்சியம், வைட்டமின் ஏ, வைட்டமின் டி, பொட்டாசியம், ஜிங்க், கோலின் ஆகிய ஊட்டச்சத்துக்களும் சேர்ந்து நமக்குக் கிடைக்கும்.



கணினி யுகம்

Ctrl + (Left arrow) - Move one term to the left at a time. Ctrl + (Right arrow) - Move one term to the right at a time
நீதிக்கதை

கதை :

ஒரு தோட்டத்தில் நிறைய குரங்குகள் இருந்தன. பல வருடங்கள் அங்கேயே இருந்ததால் தோட்டக்காரனுக்கும் நண்பர்களாயிருந்தன. தோட்டக்காரன் செய்யும் காரியங்களைப் பார்த்துப் பார்த்து குரங்குகளும் அவற்றைச் செய்து விளையாடும்.

ஒருமுறை தோட்டக்காரன் பக்கத்து ஊருக்குப் போக வேண்டியிருந்தது. குரங்குகளை அழைத்து விஷயத்தைச் சொன்னான்.

குரங்குகளுக்கு சந்தோஷம். ஆனால், அவற்றுக்கு ஒரு பிரச்சனை. எந்தச் செடிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றுவது என்று தெரியவில்லை.

அது ஒண்ணும் பெரிய பிரச்சனையில்லை. வேர் பெருசா இருந்தா நிறைய தண்ணீர் ஊத்துங்க. சின்ன வேரா இருந்துச்சுனா கொஞ்சமா, ஊத்துங்க என்று யோசனை சொன்னான்.

வெளியூர் போய் திரும்பி வந்து தோட்டத்தப் பார்த்த தோட்டக்காரனுக்கு அதிர்ச்சி. அத்தனை செடிகளும் பிடுங்கப்பட்டு காய்ந்து கிடந்தன. என்னாச்சு? என்றான் தோட்டக்காரன்.

வேர் பெருசா இருக்கா, சின்னதா இருக்கானு பார்பதற்காக செடியெல்லாம் பிடுங்கினோம் என்றன குரங்குகள்.

புத்தியில்லாதவர்களிடம் பொறுப்பை கொடுப்பது, புத்தியில்லாத செயல்.

நீதி :

அறிவில்லாதவனிடம் ஒரு செயலை ஒப்படைக்கக் கூடாது.

இன்றைய செய்திகள்

03.04. 2023

* 2022-23-ம் நிதியாண்டில் தெற்கு ரயில்வேக்கு பயணிகள் சேவை மூலம் ரூ.6345 கோடி வருவாய்.

* நிலம் அளிக்கும் விவசாயிகளுக்கு சுங்கவரியில் பங்கு - மத்திய அரசின் புதிய திட்டம்.

* ரூ.4,400 கோடியில் சென்னையில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்க ஒப்பந்தம்.

* எளிதில் கரோனா தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளவர்களுக்கு கூடுதல் பூஸ்டர் டோஸ் செலுத்த வேண்டும்: உலக சுகாதார அமைப்பு அறிவுரை.

* இன்னும் 7 ஆண்டுகளில் நானோ ரோபோ உதவியுடன் மனிதர்கள் சாகா வரம் பெறுவர் என கூகுள் நிறுவன முன்னாள் விஞ்ஞானி ரே குர்ஸ்வேல் கூறியுள்ளார்.

* இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பைக்கான லோகோவை ஐசிசி வெளியிட்டுள்ளது.

* ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: பி.வி.சிந்து இறுதிப்போட்டிக்கு தகுதி.

* மியாமி ஓபன் டென்னிஸ்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் கிவிடோவா சாம்பியன்.

Today's Headlines

* 6345 crore revenue for Southern Railway through passenger services in the financial year 2022-23.

* Share in customs duty for land-granting farmers - Central Govt's new scheme.

* 4,400 crore agreement to set up sea water desalination plant in Chennai.

* Extra booster dose should be given to people at risk of corona infection: World Health Organization advice.

*  Ray Kurzweil, a former scientist at Google, said that in 7 years, humans will be blessed with the help of nano robots.

* ICC has released the logo for the 50 Over World Cup to be held in India.

* Spain Masters Badminton: PV Sindhu qualifies for final.

* Miami Open Tennis: Kvitova wins women's singles.
Prepared by

Covai women ICT_போதிமரம்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study lesson plan 10th Maths lesson plan Algebra EM Quadratic Graphs LO Based Lesson Plan With LO Number And Activities And Also

Zeal study prepare and share lesson plan for the sake of the Tamilnadu teachers to make their work easy.

Zeal Study Lesson Plan Term 2 Class : 6 Subject : Maths Topic: எண்கள் LO Based Lesson Plan With Lo Number And Activities And Also Kalvi Tv Link

Zeal study prepare and share lesson plan for the sake of the Tamilnadu teachers to make their work easy.

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 12.10.2026

 Zeal study official school morning prayer activities  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 12.10.2026

Zeal study morning prayer activities பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 05.10.2026, திங்கட்கிழமை

Zeal study morning prayer activities பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 05.10.2026,

Zeal Study Lesson Plan Term 2 Class : 6 Subject : Science Topic: வெப்பம் LO Based Lesson Plan With Lo Number And Activities And Also Kalvi Tv Link

Zeal study prepare and share lesson plan for the sake of the Tamilnadu teachers to make their work easy.

Followers