கனவு ஆசிரியர் 2023 - ஆசிரியர்கள் எவ்வாறு பதிவு செய்வது?
கனவு ஆசிரியர் போட்டியின் வழிமுறைகள்
காலஅளவு மற்றும் செயல்படுத்தும் முறை
தேர்வின் காலஅளவு -40 நிமிடங்கள்
இணையவழித் தேர்வு
தேர்வர்கள், தாங்கள் விரும்பும் எந்த இடத்திலிருந்தும் தேர்வை எழுதலாம்..
அடிப்படைத் தேவைகள்
பயன்படுத்தும் கருவி : வெப்கேம் கொண்ட மேசைச்கணினி / மடிக்கணினி அல்லது முன்பக்கக் கேமராவைக் கொண்ட திறன்பேசியைப் (Android phone) பயன்படுத்தலாம். ஐபோனைப் பயன்படுத்தக் கூடாது.
இணைய வேகம் : குறைந்தபட்சம் 2 Mbps தேவை. (இணைய வேகம் மெதுவாக இருந்தால், தேர்வுகளை நிறைவு செய்ய அதிக நேரம் ஆகும்).
இணைய உலாவிகள் (Browsers) :
மேசைக்கணினி / மடிக்கணினியில் தேர்வு எழுதினால், கூகிள் குரோம் / மைக்ரோ சாப்ட் எட்ஜ் / மொஸில்லாஎ பயர்பாக்ஸ் உலாவியின் (Browser) தற்போதைய பதிப்பு தேவைப்படுகிறது திறன்பேசியில் எடுத்தால், குரோம் உலாவி (Browser) தேவை. தேர்வு நேரம் முழுவதும் வெப்கேம் மற்றும் மைக்ரோஃபோன் இயக்கப்பட வேண்டும்.
குறிப்பிடத்தக்க நாள்கள்
. விண்ணப்பப்பதிவு தொடங்கும் நாள்- மார்ச் 8, 2023
. விண்ணப்பப் பதிவு முடிவடையும் நாள் - மார்ச் 18, 2023
தேர்வு நடைபெறும் நாள் - ஏப்ரல்1, 2023
தேர்வு சார்ந்த ஆவணங்கள் மற்றும் பிற முக்கிய அறிவுரைகள், தேர்வு நாளின் 48 மணிநேரத்திற்கு முன்பு பகிரப்படும்.
பாடத்திட்டம்:
• தலைமைப் பண்புகள்
• திறனாய்வுப் பார்வை
குழுவாக சேர்ந்து பணியாற்றும் திறன்
மொழி ஆளுமைக்கான
தகவல்தொடர்ப்புத் திறன்
விரிவான தகவல்களைக் கொண்ட பாடத்திட்டம், தேர்வு அமைப்பு, மாதிரி வினாக்கள் போன்றவற்றை மார்ச் 18, 2023 அன்று இந்த இணைப்பின்வழியாக
(www.emis.tnschools.gov.in) கனவு
ஆசிரியர் 2023 menu- வின் வாயிலாக நீங்கள் பெறமுடியும்.
Comments
Post a Comment