Zeal study official school morning prayer activities  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.11.2025  திருக்குறள்:  குறள் 545:  இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட  பெயலும் விளையுளுந் தொக்கு.  விளக்க உரை:  நீதி முறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர ஏற்படுவனவாகும்.  பழமொழி :  Small lessons build great wisdom.  சிறிய பாடங்களை பெரிய அறிவை உருவாக்கும்.  இரண்டொழுக்க பண்புகள் :  1.கடமை தவறாமல் உதிக்கும் சூரியன் போல நானும் எனது கடமையை தவறாமல் செய்வேன்.  2.கனி தரும் மரங்கள் போல நானும் பலன் எதிர்பாராமல் மற்றவருக்கு உதவி செய்வேன்.  பொன்மொழி :  கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது. கஷ்டப்படாமல் கிடைத்தது என்றைக்கும் நிலைக்காது - கவிஞர் கண்ணதாசன்.  பொது அறிவு :  01.இந்தியாவில் அதிக நிலக்கரி வளம் உள்ள மாநிலம் எது?  ஜார்கண்ட் -Jharkhand  02. இந்தியாவில் முதன் முதலில் இரும்பு பாலம் என்று அமைக்கப்பட்டது?   லக்னோ-Lucknow  English words :  elegant-stylish  embrace-hug  தமிழ் இலக்கணம்:   * வல்லின 'ற' அடுத்து மெய்யெழுத்து வராது.  மூன்று மெய்யெழுத்துக்கள் தொடர...