Zeal study official:
திருக்குறள் :
பால்:பொருட்பால்
இயல்: படையியல்
அதிகாரம்: படைச்செருக்கு
குறள் எண் : 773
குறள்:
பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு
பொருள்:
பகைவர்க்கு அஞ்சாத வீரம் பெரும் ஆண்மை என்று போற்றப்படும். அந்தப் பகைவர்க்கு ஒரு துன்பம் வரும்போது அதைத் தீர்க்க உதவிடுவது ஆண்மையின் உச்சம் எனப் புகழப்படும்.
பழமொழி :
Ask and it shall be given
அழுத குழந்தை பசியாரும்
இரண்டொழுக்க பண்புகள் :
1. மகிழ்ச்சி உங்கள் மனதில் தோன்ற புன்னகை உங்கள் முகத்தில் எப்போதும் குடியேற வேண்டும்.
2. படுத்தே இருந்தால் படுக்கையும் பகையாகும். எழுந்து முயற்சி செய் உலகே உனது வசமாகும்.
பொன்மொழி :
பெண்கள் விழிப்பு அடைந்தால் குடும்பம் முன்னேறும், கிராமங்கள் முன்னேறும், தேசமே முன்னேறும். ------- காமராசர்
பொது அறிவு :
1. இந்தியா அதிநவீன பிரமோஸ் ஏவுகணைகளை முதல் முறையாக எந்த நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய உள்ளது?
பிலிப்பைன்ஸ்.
2 . மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டவர் யார்?
வி. அனந்த நாகேஸ்வரன்.
English words & meanings :
Delicious - very tasty, மிகவும் ருசியான,
exhausted - very tired, மிக்க களைப்பாக
ஆரோக்ய வாழ்வு :
பீட்ரூட் மூளையை சுறுசுறுப்பாக்கும். ரத்தசோகையை குணமாக்கும். கெட்ட கொழுப்பை குறைக்கும். செரிமான பாதையை ஆரோக்கியம். இதய நோய்கள் வராமல் தடுக்கும். எலும்பு மெலிதல் நோயைத் தடுக்கும்.
பிப்ரவரி 3
எச். ஏ. கிருஷ்ணபிள்ளை அவர்களின் நினைவுநாள்
கிறித்துவக் கம்பர் என்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை (எச். ஏ. கிருஷ்ணபிள்ளை, ஏப்ரல் 23, 1827 - பெப்ரவரி 3, 1900) என்பவர் ஒரு கிருத்தவ தமிழறிஞர், புலவர், ஆசிரியிர் ஆவார். ஹென்றி ஆல்பிரடு என்ற பெயர்களின் சுருக்கமே எச்.ஏ.ஆகும். தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய இவரது படைப்புகள் போற்றித் திருவருகல், இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய மனோகரம் ஆகியவை. இவர் எழுதியனவாகச் சொல்லப்பெரும் இரட்சணிய குரல், இரட்சணிய பாலா போதனை என்பன இப்பொழுது கிடைத்தில. இரட்சணிய மனோகரத்தின் பெரும்பகுதி இரட்சணிய யாத்திரிகத்திலிருந்து எடுத்துத் தொகுக்கப் பெற்றது ஆகும். இவரைக் கிறித்துவக் கம்பர் எனப் புகழ்வர்.
நீதிக்கதை
மனசாட்சி
பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். தாகத்தால் உயிர் போய்விடுமோ என்று நினைத்தபோது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது. மிகவும் கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான்.
அங்கே ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப்பும், அதன் அருகில் ஒரு ஜாடியில் தண்ணீரும் இருந்தன. ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். ஜாடியில் உள்ள தண்ணீரை அந்தப் பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜாடியில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்.
அந்தப் பம்ப்போ மிகவும் பழையதாக இருந்தது. அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.
அவன் யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது. ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்த பம்ப் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால், இனி தன்னைப் போலத் தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போகத் தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது.
அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்தத் தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜாடியில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்தது. நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது.
நீதி :
நேர்மறை எண்ணம் உங்களை வாழ வைக்கும். எதிர்மறை எண்ணம் உங்களை அழிக்கும்.
இன்றைய செய்திகள்
03.02.23
வேலூர் 'கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தை துவங்கினார் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின்
நாடாளுமன்றத்தில் 2023-24-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார்.
மத்திய பட்ஜெட்டில்
கல்விக்காக 1.12 லட்சம் கோடி ஒதுக்கீடு
சிறுவர்கள் மற்றும் வளர் இளம்பருவத்தினருக்கு தேசிய மின்னணு (டிஜிட்டல்) நூலகம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் இறுதிஆட்டத்தில் இந்திய அணி தோல்வி தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி
Today Headlines
Tamilnadu CM Mr. M K Stalin launched chief minister in field survey program at vellore
Finance Minister Nirmala Sitharaman presented the Union Budget for the financial year 2023-24 in Parliament yesterday.
Rs 1.12 lakhs crore allotted to education
It has been informed that a National Electronic (Digital) Library will be set up for children and young adults in the Union Budget.
India losses to South Africa in the women's 20-over cricket final
Thanks to covai women ICT bodhimaram team
மத்திய பட்ஜெட் – 2023 இல் கல்விக்கான அறிவிப்புகள்
2023-24 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் கல்வித் துறைக்காக மொத்தம் 1.12 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் பள்ளிக் கல்வித் துறைக்கு 68,804.85 கோடியும், உயர் கல்வித் துறைக்கு 44,094.62 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்ஜெட்டில் கல்வி குறித்து இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் :
1. தேசிய டிஜிட்டல் நூலகம் :
குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் தங்களின் கல்வி அறிவை மேம்படுத்திக் கொள்ள பிராந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் கூடிய தேசிய டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி வளர்ச்சியில் இயங்கும் என்.ஜி.ஓ.க்களுடன் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளது. புவியியல், மொழிகள், நவீன சாதனங்களை அணுகும் செயல்முறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த புத்தங்கள் இந்த நூலகத்தில் இடம்பெறும். மேலும், மாநில அரசு அமைத்துள்ள கிராமப்புற பஞ்சாயத்து நூலகங்களிலும் இந்த டிஜிட்டல் நூலகத்தைப் பயன்படுத்துவதற்கான வசதிகள் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
2. ஏகலைவா பள்ளிகளுக்குப் புதிதாக 38,800 ஆசிரியர்கள் நியமனம் :
பழங்குடியினப் பகுதிகளில் அமைந்துள்ள 740 ஏகலைவா மாதிரி உறைவிட பள்ளிகளில் படிக்கும் சுமார் 3.5லட்சம் மாணவர்களுக்கு சேவை செய்ய அடுத்த மூன்று ஆண்டுகளில் 38,800 ஆசிரியர்கள் மற்றும் உதவியாளர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவக் கல்லூரிகளுடன் சேர்ந்து 157 நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்படும் :
நாடு முழுவதும் புதிதாக 157 நர்சிங் கல்லூரிகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 2014 இல் அமைக்கப்பட்ட 157 மருத்துவக் கல்லூரிகளின் இடங்களுக்கு அருகில் இந்த நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
4. கர்மயோகி திட்டம் :
மத்திய அரசின் மிஷன் கர்மயோகி திட்டத்தின் கீழ் மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் தங்களின் திறனை மேம்படுத்திக் கொள்ள ஒருங்கிணைந்த ஆன்லைன் பயிற்சி தளம் செயல்முறைபடுத்தப்படும். இதன்மூலம் நாடெங்குமிருக்கும் லட்சக் கணக்கான அரசு ஊழியர்கள் தங்களின் திறனையும், மக்களை அணுகும் முறைகளையும் மேம்படுத்திக் கொள்ளலாம்.
5. அடுத்த 3 ஆண்டுகளில் 47 லட்சம் இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கப்படும் :
தொழில்துறை தேவைகளையும் இளைஞர்களின் திறனையும் ஒருங்கிணைக்க 30 ‘ஸ்கில் இந்தியா மையங்கள்’ அமைக்கப்படும். செயற்கை நுண்ணறிவு (AI), கணினி ப்ரோகிராமிங் மொழிகள் (Programming languages) உள்ளிட்ட புதிய திறன் பயிற்சிகள் இளைஞர்களுக்கு வழங்கப்படும். இதன்மூலம் அடுத்த 3 ஆண்டுகளில் 47 லட்சம் இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.
இந்த ஆய்வகங்கள் ஸ்மார்ட் வகுப்பறைகள், துல்லியமான விவசாயம், சுகாதாரப் பாதுகாப்பு, அறிவார்ந்த போக்குவரத்து அமைப்புகள் போன்ற துறைகளை மேம்படுத்த புதிய செயலிகளையும், கண்டுபிடிப்புகளையும் உருவாக்க செயல்படும்.
9. செயற்கை நுண்னறிவு மையங்கள்:
“இந்தியாவால் உருவாக்கப்பட்ட ‘AI’க்கள் இந்தியாவிற்காக வேலை செய்ய வேண்டும்”. இதன் அடிப்படையில் நவீனமயமான எதிர்கால நோக்கத்துடன் மூன்று சிறந்த ‘செயற்கை நுண்னறிவு மையங்கள்’ இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிலையங்களில் அமைப்படும். ஆராய்ச்சிகளை மேற்கொள்வதிலும், அதிநவீன பயன்பாடுகளை உருவாக்கும் ஆராய்ச்சிகளில் முன்னணி நிறுவனங்கள் பங்குபெறும். விவசாயம், சுகாதாரம் போன்ற துறை சார்ந்தும் இவை செயல்படும். இந்தத் திட்டம் ஒரு நல்ல பயனுள்ள செயற்கை நுண்னறிவு சுற்றுச்சூழல் நிறந்த அமைப்பை மேம்படுத்துவதோடு, பல்வேறு துறைகளில் தரமான மனித வளங்களை வளர்க்கும்
10. நவீன மருத்துவ உபகரணங்கள் தொடர்பான பல்துறை சார்ந்த படிப்புகள் :
எதிர்கால மருத்துவத் தொழில்நுட்பங்கள், உயர்தர உற்பத்தி மற்றும் ஆராய்ச்சிகளுக்கான திறமையான மனிதவளம் கிடைப்பதை உறுதிசெய்ய, நவீன மருத்துவ உபகரணங்கள் தொடர்பான பல்துறை சார்ந்த படிப்புகள் அறிமுகப்படும்.
மேற்கண்டவாறு கல்வி குறித்த அறிவிப்புகள் 2023 ஆம் ஆண்டின் மத்திய பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.
This is so nice
ReplyDelete