கல்வியின் சிறப்பைப் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
மனித அடிப்படை உரிமைகளில் ஒன்று. அறிவியற் கல்வி, சமூக அறிவியற் கல்வி, அழகியல் கல்வி ஆகிய மூன்றும் வாழ்க்கைக்கு அவசியமானவை. ஒருவனுக்கு பெருமையையும் புகழையும் தரக்கூடிய செல்வம் கல்விச் செல்வமே அன்றி வேறில்லை.
கல்வி தொழிலுக்கு வழி காட்டுகிறது. கல்வி என்பது வாழ்க்கை வாழ்வதற்க்காக உதவும் கருவியாகும். அறிவியலும் சமூகமும் வாழ்நாள் முழுவதும் தொடரும் கருவியாகும். வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பதை இனங்கண்டு அதற்கேற்ப கற்க வேண்டும். வாழ்க்கையை நெறிப் படுத்தவும் மேம் படுத்தவும் கல்வியை பயன் படுத்த வேண்டும்.
கல்வி கற்றவரிடம் ஒழுக்கம் பண்பு நேர்மை நீதி இவைகள் அனைத்தும் ஒருங்கே அமைந்து காணப்படும். எனவே கல்வியானது ஒரு மனிதனின் முக்கிய தேவையாக இருக்கிறது. எந்தவொரு சமூகமும் கல்வி இல்லாமல் இருப்பது இக்காலத்தைப் பொருத்த வரை மிகவும் தாழ்வாகவும் இழிவாகவும் கருதப் படும்.
எனவே இவ்வாறு பார்க்கும் போது கல்வியின் முக்கியத்துவத்தை அறிய முடிகின்றது. ஒருவன் கல்வி கற்றால் எவ்வாறு சமூகத்தில் மதிக்கப் படுகின்றான் என்பதை விளங்க முடியும் இவ்வாறு கல்வியை கற்று சமூகத்தில் சிறந்ததோர் பிரஜையாக வாழ கல்வி உதவுகின்றது.
Short and sweet
ReplyDelete