TN 12ம் வகுப்பு Result Website
TN 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள்!
தமிழகத்தில் ஜூலை 19ம் தேதி காலை 11 மணிக்கு 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகயுள்ளது. இந்த நிலையில் மாணவர்கள் தங்கள் மதிப்பெண் சான்றிதழை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.
12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு முடிவடைந்த நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் பொதுத்தேர்வானது மே 5ம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் கொரோனா தாக்கம் அதிகரித்ததால் மாணவர்களின் நலன் கருதி தேதி குறிப்பிடாமல் பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. மாணவர்கள் வீட்டிலிருந்தே தேர்வுக்கு தயாராக அரசு அறிவுறுத்தியது. திருப்புதல் தேர்வுகள், அலகுத் தேர்வுகள் ஆன்லைன் மூலம் தொடர்ந்து நடைபெற்றது.
மேலும் தமிழகத்தில் தொற்று பரவல் கடந்த மே மாதத்தில் உச்சம் தொட்டது. இந்த நிலையில் தேர்வை நடத்துவது பாதுகாப்பானதாக இருக்காது என்ற அச்சம் எழுந்தது. 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து கல்வியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் போன்றோரிடம் பள்ளிக்கல்வித்துறை தொலைபேசி வாயிலாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் கருத்துக்களை கேட்டறிந்தது. மேலும் மத்திய கல்வி வாரியமான (CBSE) முதலில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்தது. அதனை தொடர்ந்து தமிழக அரசும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்கள் வழங்கப்படும் என தெரிவித்தது.
அதன்படி மதிப்பீட்டு முறையிலான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வருகின்ற 19ந் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதிப்பெண் சான்றிதழை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
முதலில்
என இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
அதில் 2021 12 RESULT என்பதை கிளிக் செய்யவும். அதில் உங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை உள்ளிட்ட வேண்டும்.
Comments
Post a Comment