கல்வியின் சிறப்பு கட்டுரை குறிப்புச் சட்டகம் முன்னுரை கல்வியின் சிறப்பு கல்வியின் முக்கியத்துவம் கல்வியின் பயன்கள் கல்வியால் உயர்ந்தவர்கள் முடிவுரை முன்னுரை இன்றைய உலகில் இன்றியமையாத ஒன்றாகத் திகழ்வது யாதெனில் கல்வியே ஆகும். கல்வியின் சிறப்பினைத் திருவள்ளுவர் “கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லாதவர்” என வலியுறுத்துகின்றார். இன்றைய காலகட்டத்தில் எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் கல்வி கற்பதில் இருந்து விலகிச்செல்வது அரிதாகவே காணப்படுகின்றது. மனிதனாகப் பிறப்பது அரிது அரிதான அப்புறப்பினைப் பெற்றுவிட்டால் கல்விச் செல்வத்தைப் பெற்றுக் கொள்வது சிறப்பு. கல்வியின் மூலம் ஒருவரது வாழ்வில் சிறப்பை பெற முடியும். கல்வியின் சிறப்பினை இக்கட்டுரையில் காண்போம். கல்வியின் சிறப்பு கற்றவருக்கச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பர். செல்வங்களில் சிறந்த செல்வம் கல்விச் செல்வம் ஆகும். இத்தகைய உயர்ந்த செல்வத்தை அடைந்து கொள்ள எந்த செல்வங்களையும் இழக்கலாம். ஆனால் கல்விச் செல்வத்தினை எக்காரணத்திற்காகவும் இழக்கக் கூடாது. கல்விச் செல்வம் நெருப்பினால் வேகாது, வெள்ளத்தால் அழியாது, கள்வர...