Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.09.2026

Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.09.2026







திருக்குறள்:

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:50.இடன் அறிதல்

குறள் எண்:499

குறள்:

சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.

பொருள்:

மனிதர்கள் வலிமையான கோட்டையும், மிகுந்த பலமும் இல்லாதவர்தாம் என்றாலும் அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று தாக்குவது கடினம்.

பழமொழி :
Prevention is better than cure.

வருமுன் காப்பதே சிறந்ததே.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. காகம் ஒற்றுமையையும், தேனீயும் எறும்புகளும் சுறுசுறுப்பையும் போதிக்கின்றன.

2. இயற்கையை காப்பதோடு மட்டும் அல்லாது அவற்றில் இருந்து பாடமும் கற்றுக் கொள்வேன்.


பொன்மொழி :

மொழி வேறானாலும், அன்பும் புரிதலும் ஒன்றே.”

Thought for the Day :

Tourism Day: “Explore the world, respect its cultures.”

பொது அறிவு :

1. நாம் கல்வி வளர்ச்சி தினத்தை எந்த ஆண்டு முதல் கொண்டாடி வருகிறோம்?

2006 ஆண்டு முதல் கொண்டாடுகிறோம்.

2. தமிழக அரசு சார்பில் திருக்குறள் வாரம் எப்போது கொண்டாடப்படுகிறது?

டிசம்பர் கடைசி வாரம்.

English words :

1. Coherent– Logical – ஒத்திசைவான

2.Tedious– Boring – சலிப்பூட்டும்

புவியியலும் சுற்றுசூழலும் :

கல்லணை சோழர்களின் நீர்மேலாண்மை மற்றும் பொறியியல் திறமைக்கு சிறந்த எடுத்துக்காட்டு.
இன்றும் கல்லணை பயன்பாட்டில் இருப்பது அதன் வரலாற்றுச் சிறப்பையும் பொறியியல் நுட்பத்தையும் வெளிப்படுத்துகிறது.

NMMS :

MAT

ஒரு கடிகாரத்தில் 3 மணி அடிக்க 3 வினாடிகள் ஆகின்றன. அதே கடிகாரத்தில் 6 மணி அடிக்க எத்தனை வினாடிகள் ஆகும்?

A) 5 வினாடிகள்

B) 6 வினாடிகள்

C) 7.5 வினாடிகள்

D) 9 வினாடிகள்

💡 கவனமாக யோசியுங்கள்: மணி அடிக்கும் எண்ணிக்கையை விட, அவற்றுக்கு இடையிலான இடைவெளிகளைக் கணக்கிட வேண்டும்.

கடிகாரம் 3 முறை அடிக்கும்போது, இடைவெளிகள் 2 மட்டுமே:

3 வினாடிகள் ÷ 2 = 1.5 வினாடி ஒரு இடைவெளி.

6 முறை அடிக்கும்போது இடைவெளிகள் 5.

5 × 1.5 = 7.5 வினாடிகள் ✅

சரியான பதில்: C) 7.5

செப்டம்பர் 22

மைக்கேல் பாரடே அவர்களின் பிறந்த நாள்

மைக்கேல் பாரடே (Michael Faraday, செப்டெம்பர் 22, 1791 – ஆகஸ்டு 25, 1867)), பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு வேதியியலாளரும், இயற்பியலாளரும் ஆவார். இவர் மின்காந்தவியல், மின்வேதியியல் ஆகிய துறைகளுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். இக்காலச் சோதனைச்சாலைகளில் சூடாக்குவதற்கான ஒரு கருவியாக உலகளாவிய முறையில் பயன்படுகின்ற பன்சன் சுடரடுப்பின் ஆரம்ப வடிவத்தைக் கண்டுபிடித்தவரும் இவரே.

மைக்கேல் பாரடே, உலக வரலாற்றில் மிகச் சிறந்த அறிவியலாளர்களுள் ஒருவராகக் கருதப்படுகின்றார். சில அறிவியல் வரலாற்று ஆய்வாளர்கள், அறிவியன் வரலாற்றின் மிகச் சிறந்த சோதனையாளராக இவரைக் குறிப்பிடுகின்றனர். இவருடைய முயற்சிகளின் காரணமாகவே மின்சாரம் பொதுவான பயன்பாட்டுக்கு உகந்த ஒன்றாக உருவானது எனலாம்.
நீதிக்கதை

பொறுமையின் கனி 🦋

ஒரு காட்டில் வாழ்ந்து வந்த கம்பளிப்பூச்சி ஒன்று ஒரு நாள்  வானில் பறக்கும் வண்ணத்துப் பூச்சிகளைப் பார்த்தது

கம்பளிப்பூச்சி:

“ஐயோ! நான் எப்போது அழகான வண்ணத்துப்பூச்சியாக மாறுவேன்?

வண்ணத்துப்பூச்சி:

“வணக்கம் கம்பளிப்பூச்சியே! எப்படி இருக்கிறாய்?”

கம்பளிப்பூச்சி:

“ உனக்கு அழகான சிறகுகள் இருக்கின்றன. நீ வானத்தில் பறக்கிறாய். நானும் உடனே உன்னைப் போல மாற வேண்டும்!”

வண்ணத்துப்பூச்சி:

“நண்பியே, ஒவ்வொன்றுக்கும் ஒரு காலம் உண்டு. பொறுமையாக இரு.”

கம்பளிப்பூச்சி:

“எனக்கு எந்தக் காலமும் வேண்டாம்! இப்போதே மாற வேண்டும்!”

இப்படி சொல்லிய கம்பளிப்பூச்சி இலைகளை தனக்கு இறக்கைகளாக கட்டி பறக்க முயன்றது. அந்தோ பரிதாபம் சகதியில் போய் விழுந்தது. அதை ஒரு முயல் பார்த்தது

முயல்:

“ஹா! ஹா! கம்பளிப்பூச்சியே, நீ பறக்கப் போகிறாயா? முதலில் ஒழுங்காக நடக்கக் கற்றுக்கொள்!”

கம்பளிப்பூச்சி:

“என்னை கேலி செய்யாதே! நான் நிச்சயமாக  வண்ணத்துப்பூச்சி போல் பறப்பேன் !”

முயல்:

“அதற்கு நீண்ட காலம் ஆகும். உனக்குப் பொறுமை கிடையாதே!”

கம்பளிப்பூச்சி:

“எனக்கு பொறுமையாக இருக்க பிடிக்கவில்லை. !”

இப்படி சொல்லி விட்டு கம்பளிப் பூச்சி கவலையோடு அமர்ந்து இருந்தது. அங்கு ஒரு வெட்டுக்கிளி வந்தது

வெட்டுக்கிளி:

“கம்பளிப்பூச்சியே, ஏன் இவ்வளவு கவலைப்படுகிறாய்?”

கம்பளிப்பூச்சி:

“நான் உடனே வண்ணத்துப்பூச்சியாக மாற வேண்டும். ஆனால் முடியவில்லை!”

வெட்டுக்கிளி:

“நண்பியே, கடவுள் படைத்த ஒவ்வொரு உயிருக்கும் ஒரு வளர்ச்சிப் பாதை உண்டு. பொறுமையாகக் காத்திரு.”

கம்பளிப்பூச்சி:

“எனக்குக் காத்திருக்கப் பிடிக்கவில்லை.

வெட்டுக்கிளி:

“சில காரியங்களில் பொறுமையுடன் இருந்தால் மட்டுமே பலன் உண்டு.”

கம்பளிப்பூச்சி:

“ஓ அப்படியா இனிமேல் பொறுமையுடன் இருக்க முயற்சி செய்கிறேன்.”

கம்பளிப்பூச்சி பொறுமையுடன் தனது இயல்பான வளர்ச்சிப் பாதையில் சென்றது. சில நாட்களுக்குப் பிறகு அது ஒரு கூட்டை உருவாக்கிக் கொண்டது. பின்னர், கூட்டிலிருந்து ஓர் அழகான வண்ணத்துப்பூச்சி வெளியே வந்தது.

வண்ணத்துப்பூச்சி:

“ஆஹா! என்னால் பறக்க முடிகிறது! கடவுளுக்கு நன்றி!”

முயல்:

“அடடா! நீ உண்மையிலேயே அழகான வண்ணத்துப்பூச்சியாக மாறிவிட்டாய்!”

வெட்டுக்கிளி:

“பார்த்தாயா? பொறுமையின் பலன் எவ்வளவு அழகானது!”

வண்ணத்துப்பூச்சி:

“ஆம்! நான் ஓர் உண்மையை கற்றுக்கொண்டேன். எல்லாம் உடனே நடக்க வேண்டும் என்று அவசரப்படக் கூடாது. கடவுள் தமது நேரத்தில் எல்லாவற்றையும் நேர்த்தியாக  செய்கிறார்.”

வெட்டுக்கிளி:

“அருமை! பொறுமையுடன் நன்மை செய்வோம். ஏற்ற காலத்தில் பலன் பெறுவோம்!”

இன்றைய செய்திகள்

22.09.2026

🗒️காலை உணவு திட்டம் விரிவாக்கம்: திருவான்மியூர் அரசு பள்ளியில் இன்று முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைக்கிறார்.

🗒️பெரிய அளவிலான சர்க்கரை நுகர்வோருக்கான இருப்பு வரம்பை, 15 நாட்களிலிருந்து 30 நாட்களாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

🗒️காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது இதனால்  21 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம்  எச்சரிக்கை விடுத்துள்ளது.

🗒️ரஷிய நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் புதினின் ஆளும் ஐக்கிய ரஷிய கட்சி வெற்றி பெற்றுள்ளது.

விளையாட்டுச் செய்திகள்

🏀ஆசிய விளையாட்டு: டேபிள் டென்னிஸ் போட்டியில் பாகிஸ்தானை அதிரடியாக வீழ்த்திய இந்தியா.

🏀 இந்தோனேசியா மற்றும்  ஜப்பானுக்கு எதிராக அசத்தல் வெற்றி.ஆக்கி, கபடியில் மிரட்டிய இந்தியா.

🏀ஆசிய விளையாட்டு: 10 மீட்டர் ஏர்-ரைபிள் போட்டியில்  வெள்ளி, வெண்கலம் ஏன்  இந்தியாவுக்கு இரட்டை பதக்கம்  வென்று அசத்தல்.

Today's Headlines

🗒️ Expansion of the Breakfast Scheme: Chief Minister Joseph Vijay will launch the expanded breakfast scheme today at a government school in Thiruvanmiyur.

🗒️ The Central Government has increased the stock limit for bulk sugar consumers from 15 days to 30 days.

🗒️ The low-pressure area has become stronger. The Weather Centre has warned that 21 districts may receive heavy rainfall.

🗒️ In the Russian parliamentary election, President Putin’s ruling United Russia Party has won.

🏀 Sports News

🏀 Asian Games: India defeated Pakistan in table tennis in an impressive victory.

🏀 India won convincingly against Indonesia and Japan. India performed strongly in hockey and kabaddi.

🏀 Asian Games: India won two medals—silver and bronze—in the 10-metre air rifle event.

Covai women ICT_போதிமரம்

Comments

Post a Comment

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

10th Slow learners materials for all Subjects given by Educational department - பள்ளிக்கல்வித்துறையால் வழங்கப்பட்ட மெல்லக்கற்போர் கையேடுகள்

2025-202 6 Chengalpattu dt  Tamil English Maths TM Maths EM Science TM Science EM Social science TM Social science EM Thoothukudi Districts     10th Tamil minimum level materials given by Thenkasi Educational Department -2025-26 10th English minimum level materials given by Thoothukudi Educational Department -2025-26 Zeal study 10th Science English medium minimum level materials given by Thoothukudi Educational Department -2025-26   Zeal study 10th Science Tamil medium minimum level materials given by Thoothukudi Educational Department -2025-26 Zeal study 10th Social Science English medium  minimum level materials given by Thoothukudi Educational Department -2025-26    Zeal study 10th Social Science Tamil  medium  minimum level materials given by Thoothukudi Educational Department -2025-26     Zeal study 10th Maths   Tamil  medium  minimum level materials given by Thoothukudi Educational Departmen...

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.08.2026

 Zeal study official school morning prayer activities  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.08.2026

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.09.2026

 Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.09.2026

Followers