Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.09.2026

Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.09.2026



சுனிதா வில்லியம்ஸ்

திருக்குறள்:

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:50.இடன் அறிதல்

குறள் எண்:497

குறள்:

அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின்

பொருள்:

செய்யும் செயலை இடைவிடாமல் எண்ணி, இடம் அறிந்து செய்தால், பகைக்குப் பயப்படாத மனஉறுதி போதும்; வேறு துணை தேவை இல்லை.

பழமொழி :
Pluck not where you never planted.

பிறர் உடைமைக்கு ஆசைப்படாதே.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்பதால் எனக்கு இருப்பது போதும் என்று இருப்பேன்.

2. ஞானமும் ஒழுக்கமுமே என் வாழ்வை மேம்படுத்தும். எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்


பொன்மொழி :

அமைதி நிலவும் இடத்தில் மனிதநேயம் மலரும்.

Thought for the Day :

Rhino Day: “Save wildlife, sustain life.”

பொது அறிவு :

1. சமத்துவ நாள் எப்போது கொண்டாடப்படுகிறது?

ஏப்ரல் 14.

2. சமத்துவ நாள் எதற்காக கொண்டாடப்படுகிறது?

டாக்டர் பி ஆர் அம்பேத்காரின் பிறந்த நாளை ஒட்டி சமத்துவ நாள் கொண்டாடப்படுகிறது.

English words :

1. Diligent – Hardworking – உழைப்பாளியான

2. Skeptical – Doubtful – சந்தேகப்படுகிற

NMMS :

MAT

CONCEPTUALIZATION' என்ற வார்த்தையில் உள்ள எழுத்துகளைக் கொண்டு உருவாக்க முடியாத வார்த்தை எது??

(1) ACTUAL.

(2) TOTAL.

(3) PLANTATION.

(4) EXPLANATION.

விடை: (4) EXPLANATION.

செப்டம்பர் 19

சுனிதா வில்லியம்ஸ் அவர்களின் பிறந்தநாள்

சுனிதா வில்லியம்ஸ் (பிறப்பு: செப்டம்பர் 19, 1965) ஒரு அமெரிக்க விண்வெளி வீராங்கனையும் கப்பல்படை அதிகாரியும் ஆவார். இவர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 14ம் விண்வெளிப் பயணத்திற்கு உறுப்பினராக்கப்பட்டார், பின் அவர் 15ம் விண்வெளி பயணத்தில் இணைந்தார். விண்வெளியில் பயணம் செய்த பெண்களில் அதிக நேரம் விண்வெளியில் பயணம் செய்த சாதனையை (195 நாட்கள்) அவர் கொண்டிருக்கிறார்.
நீதிக்கதை

கடைசி மணி

ஒரு கிராமத்தில் அருண் என்ற மாணவன் வாழ்ந்து வந்தான். அவன் புத்திசாலி; ஆனால் ஒரு சிறிய பழக்கம் அவனிடம் இருந்தது—எந்த வேலையையும் சரியான நேரத்தில் செய்வதில்லை.

காலையில் பள்ளிக்குச் செல்ல வேண்டிய நேரத்தில், “இன்னும் ஐந்து நிமிடம்” என்று படுக்கையில் இருப்பான். வீட்டுப்பாடம் செய்ய வேண்டிய நேரத்தில் விளையாடுவான். மறுநாள் செய்ய வேண்டியதை, “பிறகு பார்த்துக்கொள்ளலாம்” என்று தள்ளிப் போடுவான்.

ஒருநாள் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெறுவதாக ஆசிரியர் அறிவித்தார். ஒவ்வொரு மாணவரும் ஒரு சிறிய அறிவியல் மாதிரியைத் தயாரித்து வர வேண்டும் என்றும், மறுநாள் காலை 9 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறினார்.

அருண் வீட்டிற்கு வந்ததும் மாதிரி செய்யாமல் விளையாடச் சென்றான். மாலை நேரத்திலும் அதைச் செய்யவில்லை. இரவு வந்தபோதும், “இன்னும் நேரம் இருக்கிறது” என்று நினைத்துக் கொண்டிருந்தான்.

அன்று இரவு அவனுக்கு தூக்கம் வந்துவிட்டது.

காலையில் எழுந்தபோது மணி 8:30!

அருண் பதறிப் போனான். அவசரமாகத் தயாராகி பள்ளிக்கு ஓடினான். ஆனால் அவன் அறிவியல் மாதிரி முழுமையாகத் தயாராகவில்லை.

பள்ளியை அடைந்தபோது, கண்காட்சி தொடங்குவதற்கான கடைசி மணி ஒலித்தது.

அதே நேரத்தில், அவனுடைய நண்பன் விஜய் தனது மாதிரியை அழகாகத் தயாரித்து ஆசிரியரிடம் சமர்ப்பித்தான்.

அருண் வருத்தத்துடன் தனது ஆசிரியரிடம் சென்றான்.

ஆசிரியர் அவனைத் திட்டவில்லை. மாறாக, ஒரு கடிகாரத்தைக் காட்டி,

“இந்தக் கடிகாரம் யாருக்காகவும் காத்திருக்காது. நேரமும் அப்படித்தான். நீ அதைத் தாமதப்படுத்தலாம் என்று நினைத்தாய்; ஆனால் நேரம் உனக்காகத் தாமதிக்கவில்லை.” என்றார்.

அந்த வார்த்தைகள் அருணின் மனதில் ஆழமாகப் பதிந்தன.

அன்றிலிருந்து அவன் தனது வேலைகளை ஒரு சிறிய அட்டவணையில் எழுதத் தொடங்கினான். பள்ளிக்கு நேரத்திற்கு சென்றான். வீட்டுப்பாடத்தை நேரத்தில் முடித்தான். விளையாடுவதற்கும் படிப்பதற்கும் சரியான நேரத்தை ஒதுக்கினான்.

சில மாதங்களுக்குப் பிறகு, பள்ளியின் “நேரத்தைச் சிறப்பாகப் பயன்படுத்தும் மாணவர்” என்ற பாராட்டைப் பெற்றான்.

நீதி - காலம் பொன் போன்றது

இன்றைய செய்திகள்

19.09.2026

🗒️விழித்திரை காப்போம்’... பார்வையை பாதுகாக்க தமிழக அரசின் புதிய திட்டம். மண்டல கண் மருத்துவமனை ஒட்டுமொத்த திட்டத்திற்கும் தலைமையகமாக செயல்படும் .

🗒️அக்டோபர், 1-ந் தேதி முதல் அமலாகிறது, பிறப்பு-இறப்பு பதிவு திருத்த சட்டம் 2 ஆண்டுகள் தாமதமாக பிறப்பு, இறப்பை பதிவு செய்ய மாவட்ட ஆட்சியரிடம் ஒப்புதல் பெறவேண்டும்.

🗒️2030ம் ஆண்டுக்குள் உலகிலேயே மிகப்பெரிய டெவலப்பர்களைக் கொண்ட மையமாக இந்தியா உருவெடுக்கும், என்று மைக்ரோசாப்ட் தலைவரும், CEO வுமான சத்யா நாதெல்லா தெரிவித்துள்ளார்.

🏀விளையாட்டுச் செய்திகள்

🏀 ஆசிய விளையாட்டு பெண்கள் கிரிக்கெட்: ஜப்பானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா.

Today's Headlines

🗒️ “Let Us Protect Our Eyes” – New Tamil Nadu Government Scheme to Protect Eyesight. The Tamil Nadu Government has launched a new scheme to protect people's eyesight. The Regional Eye Hospital will serve as the scheme's headquarters.

🗒️ Birth and Death Registration Amendment Act Comes into Effect from October 1

The amended Birth and Death Registration Act will come into effect from October 1. If a birth or death is registered more than 2 years late, the District Collector must approve it.

🗒️ India Will Become the World's Biggest Hub for Developers by 2030
Microsoft Chairman and CEO Satya Nadella said that India will become the world's biggest hub with the largest number of developers by 2030.

🏀 Sports News

🏀 Asian Games Women's Cricket: India Defeats Japan and Reaches the Semi-Finals

India defeated Japan in women's cricket at the Asian Games and entered the semi-finals.
Covai women ICT_போதிமரம்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

10th Slow learners materials for all Subjects given by Educational department - பள்ளிக்கல்வித்துறையால் வழங்கப்பட்ட மெல்லக்கற்போர் கையேடுகள்

2025-202 6 Chengalpattu dt  Tamil English Maths TM Maths EM Science TM Science EM Social science TM Social science EM Thoothukudi Districts     10th Tamil minimum level materials given by Thenkasi Educational Department -2025-26 10th English minimum level materials given by Thoothukudi Educational Department -2025-26 Zeal study 10th Science English medium minimum level materials given by Thoothukudi Educational Department -2025-26   Zeal study 10th Science Tamil medium minimum level materials given by Thoothukudi Educational Department -2025-26 Zeal study 10th Social Science English medium  minimum level materials given by Thoothukudi Educational Department -2025-26    Zeal study 10th Social Science Tamil  medium  minimum level materials given by Thoothukudi Educational Department -2025-26     Zeal study 10th Maths   Tamil  medium  minimum level materials given by Thoothukudi Educational Departmen...

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.08.2026

 Zeal study official school morning prayer activities  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.08.2026

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.09.2026

 Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.09.2026

Followers