Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -21.08.2026

 Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -21.08.2026



உசைன் போல்ட்

திருக்குறள்:

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:48.வலியறிதல்

குறள் எண்:478

குறள்:
ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை.

பொருள்:

வருமானம் அளவில் சிறிது என்றாலும் செலவினம் பெரிதாகாதபோது கேடு இல்லை.

பழமொழி :
Might is right.

வல்லான் வகுத்ததே சட்டம்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. பெரியோருக்கு பணிவதும், பிறருக்கு உதவுவதும் இளைஞருக்கு அழகு என்பதை நான் அறிவேன்.

2.கல்வி ஒன்றே என்னை உயர்த்தும். எனவே நன்கு படிப்பேன் .

பொன்மொழி :

“உன் கையில் ஒரு திறமை இருந்தால், உன் எதிர்காலத்தில் ஒரு வாய்ப்பு இருக்கும்.”

Thought for the Day :

“Education gives you knowledge; skills turn that knowledge into achievement.”

பொது அறிவு :

1.மனித மூக்கினால் எத்தனை விதமான வாசனைகளை உணர முடியும்?

50,000

2.மனித உடலில் தன்னை தானே சரி செய்து கொள்ள முடியாத உறுப்பு எது?

பற்கள்

English words :

1. Adaptable – Able to adjust easily, சூழ்நிலைகேற்ப மாறக்கூடிய.

2.Optimistic – Having a positive outlook, நம்பிக்கையான.

புவியியலும் சுற்றுசூழலும் :

கிராமங்கள் தங்களை நிர்வகிக்கப் பஞ்சாயத்து ராஜ் முறை அவசியமெனக் காந்தியடிகள் கருதினார்.சுத்தமும் சுகாதாரமும்: கிராமங்களில் தூய்மை மற்றும் கூட்டுறவை மேம்படுத்துவது சமூகத்தின் அடிப்படைப் பலமாகும் என்பதை அறிவுறுத்தினார்.

NMMS :

SAT - SOCIAL

ஷாகு என்றால் ____________________ என்று பொருள்.

(1) போர் முறை

(2) நேர்மையானவர்

(3) வரி முறை

(4) அஷ்டபிரதான்

விடை: (2) நேர்மையானவர்

ஆகஸ்ட் 21

உசைன் போல்ட் அவர்களின் பிறந்தநாள்

* உசைன் போல்ட் என்கிற உசேன் செயிண்ட் லியோ போல்ட் (Usain St. Leo Bolt, பிறப்பு: ஆகத்து 21, 1986) ஜமைக்காவில் பிறந்த தடகள ஆட்டக்காரர்.

* 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 9.69 நொடி நேரத்தில் 100 மீட்டர் விரைவோட்டத்தை ஓடி உலகச் சாதனை பெற்றார். அத்துடன் 200 மீ ஓட்டம் (19.30 வினாடி) போட்டியிலும் ஒலிம்பிக் மற்றும் உலக சாதனைகளைப் புரிந்தவர்; தன் நாட்டு சக வீரர்களுடன் இணைந்து 4 x 100 மீ தொடரோட்டத்தில் 37.10 வினாடிகளில் ஓடி சாதனை புரிந்தார். இவை அனைத்தையும் போல்ட்டு 2008 பெய்ஜிங் கோடை ஒலிம்பிக்கில் நிகழ்த்தினார்.

* 2003இல் 200 மீட்டர் விரைவோட்டத்திலும் உலக இளையோர் சாதனை படைத்தார். ஒலிம்பிக்கின் மூன்று விரைவோட்டப் பந்தயங்களின் (100 மீ, 200 மீ மற்றும் 4 x 100 மீ) நடப்பு முதன்மை வீரன் (சாம்பியன்), ஒன்பது முறை உலக முதன்மை வீரன், ஒலிம்பிக் விரைவோட்டப் பந்தையங்களில் ஆறு தங்கப் பதக்கங்களை வென்ற முதல் வீரர், இம்மூன்று விரைவோட்டப் பந்தயங்களின் நடப்பு உலக சாதனைகளின் சொந்தக்காரர் எனப் பல சிறப்புகள் போல்ட்டைச் சாரும்.


நீதிக்கதை

திறமையை நல்ல வழியில் பயன்படுத்த வேண்டும்

ஒரு சிறிய கிராமத்தில் விக்னேஷ் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஓவியம் வரைவதில் மிகுந்த திறமை இருந்தது. அவன் வரையும் ஓவியங்கள் அனைவரையும் கவரும்.

ஒருநாள் பள்ளியில் ஓவியப் போட்டி அறிவிக்கப்பட்டது. விக்னேஷ் தன் திறமையைப் பயன்படுத்தி அழகான ஓவியம் வரைந்தான். ஆனால், நண்பன் ஒருவனை கேலி செய்யும் வகையில் ஒரு ஓவியத்தையும் வரைந்து, அதை மற்ற மாணவர்களிடம் காட்டி சிரிக்க வைத்தான்.

அதைப் பார்த்த ஆசிரியர் விக்னேஷிடம், “உனக்கு கிடைத்த திறமை மற்றவர்களை மகிழ்விக்கவும், நல்ல விஷயங்களைச் சொல்லவும் பயன்பட வேண்டும். ஒருவரை காயப்படுத்துவதற்காகப் பயன்படுத்தக் கூடாது,” என்றார்.

ஆசிரியரின் வார்த்தைகளை நினைத்துப் பார்த்த விக்னேஷ், தன் தவறை உணர்ந்தான். பின்னர் தனது ஓவியத் திறமையைப் பயன்படுத்தி பள்ளியின் சுவர்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஒற்றுமை, கல்வியின் முக்கியத்துவம் போன்ற நல்ல கருத்துகளை வரைந்தான்.

அவனுடைய ஓவியங்கள் பள்ளி முழுவதும் பாராட்டப்பட்டன. விக்னேஷும் தனது திறமைக்கு ஒரு நல்ல நோக்கம் கிடைத்ததை உணர்ந்து மகிழ்ந்தான்.

நீதி:

ஒவ்வொருவரிடமும் இருக்கும் திறமையை நல்ல செயல்களுக்காகப் பயன்படுத்தினால், அது நமக்கும் பிறருக்கும் பயனையும் மகிழ்ச்சியையும் தரும்.

இன்றைய செய்திகள்

21.08.2026

🗒️ எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணிகளால் சென்னை புறநகர் ரயில் சேவைகளில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்படுகின்றன - சென்னை மாநகராட்சி அறிவிப்பு.

🗒️தில்லியில் ராஜ்நாத் சிங் உடன் ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு நிகழ்வு நடந்தது.

🗒️வங்கதேசத்தின் புதிய அதிபராக
பி என் பி மூத்த தலைவர் மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு
செய்யப் பட்டுள்ளார்

விளையாட்டுச் செய்திகள்
🏀இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்:
2 இலங்கை வீரர்கள் போட்டியில் இருந்து விலகல்.

Today's Headlines

🗒️  Temporary changes are being made to Chennai suburban train services due to the redevelopment work at Egmore Railway Station – Chennai Corporation announced.

🗒️ Japan’s Defence Minister met Defence Minister Rajnath Singh in Delhi.

🗒️ BNP senior leader Mirza Fakhrul Alamgir has been elected as the new President of Bangladesh.

🏀 Sports News

🗒️ 2nd Test against India: Two Sri Lankan players have withdrawn from the match.

Covai women ICT_போதிமரம்

Comments

Post a Comment

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study (Lo based )-கற்றல் விளைவு அடிப்படையிலான பாடக்குறிப்பு 6th Tamil -கல்வியை போற்று

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 27.07.26

 Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 27.07.26

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -10.08.2026

 Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -10.08.2026

Followers