Zeal study official school morning prayer activities
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -07.08.2026
கலைஞர் மு. கருணாநிதி
திருக்குறள்:
பால் : பொருட்பால்
இயல் : அரசியல்
அதிகாரம்:47 தெரிந்து செயல் வகை
குறள் எண்:467
குறள்:
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
பொருள்:
செய்யத் தகுந்த செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும், துணிந்த பின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.
பழமொழி :
Penny wise, pound foolish.
சிறியதை காக்கப் பெரியதை இழக்காதே.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. நான் எனது வாழ்நாளில் யாருக்கும் எவ்விதத்திலும் தீங்கிழைக்க மாட்டேன்.
2.என்னால் இயன்ற நன்மையை மற்றவர்களுக்குச் செய்வேன்.
பொன்மொழி :
மழை பொழியும் போது பூமி சிரிக்கிறது.
Thought for the Day :
Save every drop of rain, and you save the future.
பொது அறிவு :
1. பறவைகள் பற்றி படிக்கும் படிப்பு எது?
ஆர்னித்தாலஜி.
2.இந்தியாவின் பறவை மனிதர் என்றழைக்கப்படுபவர் யார்?
டாக்டர். சலீம் அலி.
English words :
Insightful – Understands deeply, ஆழ்ந்த புரிதல் உடையவர்.
versatile - Multi -Skilled.பல்திறமைசாலி.
புவியியலும் சுற்றுசூழலும் :
சாலைகள் அமைத்தல் மற்றும் பராமரித்தல்
தூய்மை மற்றும் சுகாதாரத்தை பேணுதல்
மரக்கன்றுகள் நடுதல் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாத்தல்
பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளை பராமரித்தல்
அரசு நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்தல் ஆகும்
NMMS :
SAT
ஒரு முதிர்ந்த பெண் பட்டுப்பூச்சி சுமார் ________________________ முட்டைகள் இடும் .
(1) 600.
(2) 500.
(3) 5000.
(4) 6000.
விடை: (2) 500
ஆகஸ்ட் 07
இரவீந்தரநாத் தாகூர் அவர்களின் நினைவுநாள்
இரவீந்தரநாத் தாகூர்
இரவீந்தரநாத் தாகூர் (Rabindranath Tagore) வங்காள மொழி: রবীন্দ্রনাথ ঠাকুর, மே 7, 1861- ஆகஸ்ட் 7, 1941) புகழ் பெற்ற வங்காள பல்துறையறிஞர் ஆவார். 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் இவர் வங்காள இலக்கியம் மற்றும் இசை வடிவத்தில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். மேலும் இந்தியக் கலைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். இவர் கீதாஞ்சலி எனும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் ஆவார். இந்த கவிதைத் தொகுப்பிற்காக இவர் 1913-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசினைப் பெற்றார். இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரேயாவார். மேலும் ஐரோப்பியர் அல்லாத ஒருவர் இந்த விருதைப் பெறுவதும் இதுவே முதல் முறையாகும்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் நினைவுநாள்
முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi, சூன் 3, 1924 - ஆகத்து 7, 2018) இந்திய அரசியல்வாதிகளுள் ஒருவர். தமிழக முதல்வராக ஐந்துமுறை பதவி வகித்தவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் 1969 முதல் 2018 வரை பதவி வகித்துள்ளார். 1969,1971,1989,1996,2006 என ஐந்து முறை தமிழக முதலமைச்சராகப் பணியாற்றினார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர்.
கை ரிக்ஷா ஒழிப்புத்திட்டம், பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத்திட்டம், எல்லா மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனைகள், கலை அறிவியல் கல்லூரிகள் பல பல்கலைக்கழகங்கள் எனப் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தியவர்.
இடஒதுக்கீடு கொள்கையை நடைமுறைப்படுத்தி, 50 விழுக்காட்டில் 30 விழுக்காடு பிற்படுத்தப் பட்டோருக்கும், 20 விழுக்காடு மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும், 18 விழுக்காடு தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும், 3 விழுக்காடு அருந்ததியருக்கும், 3.5 விழுக்காடு இஸ்லாமியருக்கும், 1 விழுக்காடு மலைவாழ் மக்களுக்கும் அளித்து அனைத்து சமூகத்திலும் அடித்தட்டு மக்கள் கல்வி, வேலை வாய்ப்புகளை உறுதி செய்ததனால் மானுட மேம்பாட்டுக் குறியீட்டில் இந்திய மாநிலங்களிலேயே தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது.
நீர்ப்பாசனம், மின்சாரம், வேளாண்மை, தொழிலாளர் நலன், நிலச் சீர்த்திருத்தம் ஆகிய துறைகளில் மேம்பாட்டுத் திட்டங்களை வளர்த்ததால் தமிழ்நாடு உணவு தானிய உற்பத்தியில் பல சாதனைகளைப் படைத்து வருகிறது. சாலை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியதாலும், தொழில் துறை முதலீடுகளை ஈர்ப்பதற்கு கலைஞரின் ஆட்சிக்காலங்களில் செயல் திட்டங்களை அறிமுகப்படுத்தியதாலும் தமிழகம் தொழில் துறையிலும் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் ஒரு சீரான வளர்ச்சியை பெற்றிருக்கிறது.
நீதிக்கதை
ராணுவ வீரரின் பார்வையில், தாய்நாட்டுப் பற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கதை :
"என் உயிரை விட உயர்ந்தது என் தாய்நாடு"
நான் அரவிந்த். இந்திய ராணுவத்தில் பணியாற்றும் ஒரு வீரன். பல மாதங்களாக என் குடும்பத்தைப் பார்க்காமல், நாட்டின் எல்லையில் காவல் காத்துக் கொண்டிருந்தேன். கடும் பனியிலும், மழையிலும், வெயிலிலும் எங்கள் கடமையை ஒருநாளும் தவறவிடவில்லை .
ஒருநாள் இரவு, எல்லைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான அசைவு தெரிந்தது.
உடனே நானும் என் நண்பர்களும் எச்சரிக்கையுடன் செயல்பட்டோம். எங்கள் விழிப்புணர்வால் நாட்டிற்குள் ஊடுருவ முயன்றவர்களை தடுத்து நிறுத்த முடிந்தது.
அன்று என் தாயின் பிறந்தநாள். அவரிடம் பேச வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் நாட்டின் பாதுகாப்பே என் முதல் கடமை என்பதால், என் ஆசையை ஒதுக்கிவைத்தேன்.
சில நாட்களுக்குப் பிறகு விடுமுறையில் வீட்டிற்குச் சென்றேன். என் தாய் என்னைப் பார்த்து, "மகனே , எங்களை விட இந்த நாட்டை நீ அதிகமாக நேசிக்கிறாய் அல்லவா?" என்று கேட்டார்.
நான் புன்னகையுடன், "அம்மா, நீங்கள் எனக்கு உயிர் கொடுத்தீர்கள். ஆனால் இந்தத் தாய்நாடுதான் அந்த உயிருக்கு அர்த்தம் கொடுத்தது. நாடு பாதுகாப்பாக இருந்தால்தான் நம் குடும்பமும் பாதுகாப்பாக இருக்கும்," என்றேன். என் தாய் பெருமையுடன் என் தோளில் கை வைத்து, "உன்னைப் போன்ற வீரர்கள் இருப்பதால்தான் நாங்கள் அமைதியாக வாழ்கிறோம்," என்றார்.
நீதி:
தாய்நாட்டைப் நேசிப்பதும், அதன் பாதுகாப்பிற்காகத் தன் கடமையை நேர்மையாகச் செய்வதும் ஒவ்வொரு குடிமகனின் உயர்ந்த பொறுப்பாகும்.
இன்றைய செய்திகள்
07.08.2026
🗒️கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை கோரி பிரதமருக்கு முதல்வர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
🗒️'AC' பெட்டிகளில், பயணிக்கும் .R.A.C, பயணிகளுக்கும் போர்வை, கம்பளி வழங்க ரெயில்வே வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
🗒️11 மீனவர்களுடன் விபத்தில் சிக்கிய இந்திய மீனவ படகு மீட்பு நடவடிக்கையில் இலங்கை கடற்படையும் இணைந்து செயல்பட்டுள்ளது.
*விளையாட்டுச் செய்திகள்*
🏀கிராண்ட் செஸ் தொடர்:
நெதர்லாந்து வீரர் ஜோர்டான் வான் பாரஸ்டிடம் உடன் மோதியதில் பிரக்ஞானந்தா முன்னிலையில் உள்ளார்.
Today's Headlines
🗒️ Chief Minister Joseph Vijay has written a letter to the Prime Minister, requesting action to implement the Godavari–Cauvery–Gundar river linking project.
🗒️ The Railway Board has instructed that blankets and bed sheets should also be provided to RAC passengers travelling in AC coaches.
🗒️ The Sri Lankan Navy also joined the rescue operation after an Indian fishing boat carrying 11 fishermen met with an accident.
🏀 Sports News
🗒️ Grand Chess Tournament: Praggnanandhaa is in the lead after his match against Dutch player Jorden van Foreest.
Covai women ICT_போதிமரம்

Comments
Post a Comment