Zeal study official school morning prayer activities
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.08.2026
திருக்குறள்:
பால் : பொருட்பால்
இயல் : அரசியல்
அதிகாரம்:49.காலம் அறிதல்
குறள் எண்:482
குறள்:
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு.
பொருள்:
காலத்தோடு பொருந்த முயற்சிகளைச் செய்து வருதல், செல்வத்தைத் தம்மை விட்டுப் போகாமல் பிணித்து வைக்கும் கயிறு ஆகும்.
பழமொழி :
Never cast the oar till you are out.
கரையை அடையும் முன் துடுப்பை எறியாதே.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. என் ஆசிரியரையும் பெற்றோரையும் கஷ்டப்படுத்தும் எந்தக் காரியத்தையும் நான் செய்ய மாட்டேன்.
2. பேச்சு ஒழுக்கம்: சூழ்நிலைக்கேற்றவாறு சிந்தித்து அளவான வார்த்தைகளைப் பேசுவேன். தகாத வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்த மாட்டேன். பணிவதும், பிறருக்கு உதவுவதும் இளைஞருக்கு அழகு என்பதை நான் அறிவேன்.
பொன்மொழி :
“ஒரு இளைஞனின் திறமை வளர்ந்தால், ஒரு குடும்பத்தின் எதிர்காலம் வளரும்.”
Thought for the Day :
“Every skill you learn today adds strength to your future.”
பொது அறிவு :
1.இரத்த ஓட்டத்தை கண்டறிந்தவர் யார்?
வில்லியம் ஹார்வி.
2.இரத்த வகைகளை கண்டறிந்தவர் யார்?
லேண்டஸ்டைனர்.
English words :
1. Disciplined – Showing controlled behavior and self-control, ஒழுக்கமான.
2. Compassionate – Feeling sympathy and concern for others, இரக்கமுள்ள
புவியியலும் சுற்றுசூழலும் :
கிராமங்களில் வாழும் மக்களின் விவசாயம், கால்நடை வளர்ப்பு, கைத்தொழில், சிறுதொழில், வணிகம் மற்றும் சேவைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார அமைப்பே கிராமப் பொருளாதாரம். இதை முன்னேற்றினால் இந்தியா தானாக முன்னேறி விடும் என்று காந்தியடிகள் நம்பினார்
NMMS :
SAT - Maths
NMMS வினா
3, 8, 15, 24, 35, ?
அடுத்த எண் எது?
A) 46
B) 48
C) 50
D) 52
💡 குறிப்பு: எண்களுக்கு இடையிலான வித்தியாசங்களைப் பாருங்கள்.
3 → 8 = +5
8 → 15 = +7
15 → 24 = +9
24 → 35 = +11
35 → ? = +13
அதனால், 35 + 13 = 48
ஆகஸ்ட் 28
இராபர்ட்டு கால்டுவெல்
(திராவிட மொழியியலின் தந்தை)- அவர்களின் நினைவு நாள்
இராபர்டு கால்டுவெல் (Robert Caldwell) (7 மே 1814–28 ஆகத்து 1891) ஒரு கிருத்துவச் சமயப்பரப்பாளர் ஆவார். தன் 24-ஆம் அகவையில் இந்தியா வந்தடைந்த அவர், விவிலியத்தை வட்டார மொழியில் கற்பிப்பதற்காகத் தமிழைக் கற்றார். இதுவே, பின்னர், அவரைத் தென்னிந்திய மொழிகளுக்கான ஒப்பிலக்கண நூலொன்றை எழுத வைத்தது. அவருடைய நூலில், பழைய ஏற்பாட்டிலுள்ள எபிரேயத்திலும், பழங்கிரேக்கத்திலும், தொலெமி குறிப்பிட்டுள்ள இடங்களிலும் திராவிடச் சொற்கள் உள்ளதாகப் பரிந்துரைத்தார்.திராவிட மொழிகளின் தனித்துவத்தை நிலைநிறுத்தியதில் பெரும்பங்கு இவருடையதாகும்.இவர் ஆங்கில மொழியில் ஆக்கிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (1856) என்னும் நூல் உலகெங்கும் இவருக்கு மிகுந்த புகழ் ஈட்டித்தந்தது. தமிழ்மொழி உலகின் முதல் மொழி என்றும் .மலையாளம் ,தெலுகு ,கன்னடம் எல்லாம் தமிழ் மற்றும் பிற மொழி கலப்பில் வந்தது என்றும் கண்டுபிடித்தார் .அதனால் இம்மொழிகளை எல்லாம் ஓரினத்தைச் சேர்ந்தவை என்பதை இந் நூல் மூலம் உலகம் ஒப்ப விளக்கிச் சொன்னார். தமிழ் மொழிக் குடும்பம் ஒன்று இருப்பது பற்றிக் கண்டு பிடித்தது இவரல்லர் எனினும், அதற்கான சான்றுகளை ஒருங்கிணைத்து உறுதிப்படுத்தியவர் இவரே.
நீதிக்கதை
சிறிய உதவி – பெரிய மாற்றம்
ஒரு சிறிய கிராமத்தில் அருண் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவன் மிகவும் சுறுசுறுப்பானவன். ஆனால், மற்றவர்களுக்கு உதவுவதில் அவனுக்கு அதிக ஆர்வம் இல்லை.
ஒருநாள் பள்ளிக்குச் செல்லும் வழியில், வயதான ஒருவர் சாலையோரத்தில் கனமான ஒரு மூட்டையைத் தூக்க முடியாமல் சிரமப்படுவதை அருண் பார்த்தான். அவர் பலமுறை முயன்றும் மூட்டையைத் தூக்க முடியவில்லை.
அருண் அவரைப் பார்த்துவிட்டு, “எனக்கு பள்ளிக்குச் செல்ல நேரமாகிவிட்டது” என்று நினைத்து அங்கிருந்து சென்றுவிட்டான்.
சிறிது தூரம் சென்றபோது, அவனுடைய மனதில் ஏதோ ஒரு குற்ற உணர்வு ஏற்பட்டது. “நான் இரண்டு நிமிடம் உதவி செய்திருந்தால் என்ன குறைந்துவிடும்?” என்று எண்ணினான்.
உடனே திரும்பிச் சென்று, அந்த வயதானவரின் மூட்டையைத் தூக்கி அவருடைய வீட்டுவரை எடுத்துச் சென்றான்.
அந்த முதியவர் மகிழ்ச்சியுடன், “மகனே, நீ செய்த உதவி சிறியதாகத் தோன்றலாம். ஆனால் இன்று எனக்கு அது மிகப் பெரிய உதவி” என்றார்.
அன்று பள்ளியில் ஆசிரியர் ஒரு கேள்வி கேட்டார்:
“நாம் மற்றவர்களுக்கு உதவும்போது நமக்கு என்ன கிடைக்கும்?”
பல மாணவர்கள் பல பதில்களைக் கூறினர்.
அருண் எழுந்து, “அவர்களுக்கு உதவிய மகிழ்ச்சியும், நம் மனதிற்கு கிடைக்கும் நிம்மதியும் கிடைக்கும்” என்றான்.
ஆசிரியர் புன்னகையுடன், “மிகச் சரி. நாம் செய்யும் சிறிய நன்மை கூட ஒருவருடைய நாளையே மாற்றக்கூடும்” என்றார்.
அன்றிலிருந்து அருண், தன்னால் முடிந்த ஒவ்வொரு சிறிய உதவியையும் செய்யத் தொடங்கினான். அவனுடைய அந்த மாற்றத்தைப் பார்த்து, அவன் நண்பர்களும் மற்றவர்களுக்கு உதவத் தொடங்கினர்.
சில நாட்களில், அந்தச் சிறிய கிராமமே ஒருவருக்கொருவர் உதவும் அழகான சமூகமாக மாறியது.
நீதி:
நாம் செய்யும் சிறிய உதவியும் மற்றொருவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
“ஒருவருடைய பாரத்தை ஒருவர் சுமந்துகொள்ளும் போது உலகம் அழகானதாக மாறும்”.
இன்றைய செய்திகள்
28.08.2026
🗒️பி.எம்.எப்.எம்.இ திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தியதற்கான விருது அமைச்சர் மதன்ராஜா பெற்றுக் கொண்டார்
பி.எம்.எப்.எம்.இ திட்டத்தின் கீழ் தமிழ்நாடு இதுவரை மொத்தம் 19,800 நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
🗒️ "சீனா - நேபாள எல்லையில் 2ம் கட்ட வெள்ள அபாயம்!சீன அரசு அவசர எச்சரிக்கை.
🗒️இந்தியாவில் இருந்து பாஸ்மதி அரிசி ஏற்றுமதியை அதிகரிப்பது குறித்து ஜப்பானுடன் பேச்சுவார்த்தை என பியூஷ் கோயல் தகவல் தெரிவித்துள்ளார்.
*விளையாட்டுச் செய்திகள்*
🏀கிரிக்கெட்: கொழும்பு டெஸ்ட் போட்டியில் 'டிரா' கடைசி நாளில் தோல்வி கண்ட இந்திய அணி.
Today's Headlines
🗒️ Minister Madan Raja received an award for successfully implementing the PMFME scheme. Under this scheme, Tamil Nadu has approved a total of 19,800 businesses so far.
🗒️ Second-stage flood risk at the China-Nepal border! Chinese government issues urgent warning.
🗒️ Piyush Goyal said that India is in talks with Japan to increase the export of Basmati rice from India.
Sports News
🏀 Cricket: India lost to Sri Lanka on the last day of the Colombo Test match, which ended in a draw.
Covai women ICT_போதிமரம்

Comments
Post a Comment