Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -13.08.2026


Zeal  study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -13.08.2026


திருக்குறள்:


பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:48.வலியறிதல்

குறள் எண்:471

குறள்:

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.

பொருள்:

செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் ,இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.



பழமொழி :

Look before you leap.

ஆழம் தெரியாமல் காலை விடாதே.


இரண்டொழுக்க பண்புகள் :.

1. இருளால் இருளை நீக்க முடியாது. ஒளி மட்டுமே அதை செய்யும். வெறுப்பால் வெறுப்பை நீக்க முடியாது. அன்பால் மட்டுமே அதை செய்ய முடியும் .

2. பெரியோர் தனது அனுபவத்தையே அறிவுரையாக தருவார்கள். எனவே பெரியோரது அனுபவத்தை கேட்டு நடப்பேன்.


பொன்மொழி :

மழை வானத்தின் பரிசு; அதைச் சேமிப்பது நம் பொறுப்பு.

Thought for the Day :

The sound of rain is the music of nature.

பொது அறிவு :

1 . ஈ.வெ.ராமசாமி அவர்களை "பெரியார் " என்றழைத்தவர்கள் யார்?

அன்னை மீனாம்பாள் சிவராஜ் மற்றும் நீலாம்பிகை அம்மையார்.

2. ஈ.வெ.ராமசாமி அவர்களுக்கு" பெரியார்" என்ற பட்டம் எதற்காக வழங்கப்பட்டது ?

பெண்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டதால் 1938, நவம்பர் 13- ல் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் வழங்கப்பட்டது.













English words :

Creative – Thinks in new ways, படைப்பாற்றலுள்ளவர்.

Courageous – Faces difficulties bravely, துணிச்சலானவர்.

புவியியலும் சுற்றுசூழலும் :

கிராம நிர்வாகம்
மக்களின் தேவைகளை விரைவாக அறிந்து தீர்வு காண உதவுகிறது.
ஜனநாயகத்தில் மக்களின் நேரடி பங்கேற்பை ஊக்குவிக்கிறது.
கிராம வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு அடித்தளமாக விளங்குகிறது

NMMS :

MAT

ஒரு குறிப்பிட்ட குறியீட்டு மொழியில் 'Kit Mit Fit' என்பதை 'Some good films' எனவும், .'Zit Rit Kit' என்பதை ' Some real stories' எனவும், 'Sil Fit Rit' என்பதை 'Many good stories' எஎவும் கொண்டால் 'real' என்பதை எந்தக் குறியயீட்டால் குறிக்கலாம்?

(1) Zit.

(2) Sil.

(3) Rit.

(4)Kit.

விடை: (1) Zit

ஆகஸ்ட் 13
பிடல் காஸ்ட்ரோ அவர்களின் பிறந்தநாள்


பிடல் காஸ்ட்ரோ (Fidel Alejandro Castro Ruz, (எசுப்பானியம்: [fiˈðel ˈkastro], ஆகஸ்ட் 13, 1926 - நவம்பர் 25, 2016) கியூபாவை சேர்ந்த பொதுவுடைமைப் புரட்சியாளரும் பொதுவுடைமை அரசியல்வாதியும் ஆவார். கியூபாவில் 1959 இல் புரட்சியை வழிநடத்தி புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவின் அரசை வீழ்த்தி தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்ற காஸ்ட்ரோ ,1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார்.கூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965 இல் பதவியேற்ற இவர் கூபாவை ஒற்றைக் கட்சி சமூகவுடைமைக் குடியரசாக்கினார். 49 ஆண்டுகள் கியூபாவை ஆண்ட காஸ்ட்ரோ பிப்ரவரி 24 2008 அன்று பதவியிலிருந்து விலகினார். உலகத்தில் நீண்ட காலத்துக்கு தலைமைப் பொறுப்பில் இருந்த தலைவர் காஸ்ட்ரோ மட்டுமே. பன்னாட்டளவில், காஸ்ட்ரோ 1979-ல் இருந்து 1983 வரை மற்றும் 2006 முதல் 2008 வரை, அணி சேரா இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருந்துள்ளார்.


பன்னாட்டு இடதுகை பழக்கமுடையோர் நாள்


பன்னாட்டு இடதுகை பழக்கமுடையோர் நாள் (International Lefthanders Day) என்பது இடது கை பழக்கம் உள்ளவர்களின் தனித்துவம் மற்றும் வேறுபாடுகளைக் கொண்டாடுவதற்காக ஆண்டுதோறும் ஆகஸ்ட் 13 அன்று அனுசரிக்கப்படும் பன்னாட்டு தினமாகும். 1976 முதல் "பன்னாட்டு இடக்கை பழக்கத்தவரின் நிறுவனத்தின்" நிறுவனர் ஆர். கேம்ப்பெல் என்பவரால் கொண்டாடப்பட்டது.

நீதிக்கதை

தனிமை வேண்டாம் – ஒற்றுமையே பலம்

ஒரு சிறிய கிராமத்தில் அருண், கார்த்திக்,ஹரிஷ் என்ற மூன்று நண்பர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களுடன் பள்ளியில் படிக்கும் மாணவன் ரவி மிகவும் அமைதியானவன். அவன் அதிகமாக யாரிடமும் பேசமாட்டான்.

ஒருநாள் பள்ளியில் ஆசிரியர் மாணவர்களை குழுக்களாகப் பிரித்து ஒரு அறிவியல் மாதிரி செய்யச்சொன்னார். ரவியை எந்தக் குழுவிலும் சேர்க்காமல் சில மாணவர்கள், “அவன் அமைதியாக இருக்கிறான்; நம்முடன் சேர்ந்து வேலை செய்ய மாட்டான்” என்று கூறினர்.

அதைப் பார்த்த அருணுக்கு வருத்தமாக இருந்தது. அவன் ரவியிடம் சென்று, “நீ எங்களுடன் சேர்ந்து இந்த மாதிரியை ச் செய்யலாம். உனக்கும் நல்ல யோசனைகள் இருக்கலாம்!” என்றான்.

ரவி முதலில் தயங்கினான். பின்னர் அவர்களுடன் சேர்ந்து வேலை செய்யத்தொடங்கினான். ஆச்சரியமாக, மாதிரியை எப்படி அழகாக அமைக்கலாம் என்பதற்கான சிறந்த யோசனையை ரவிதான் கூறினான். அனை வரும் சேர்ந்து உழைத்து, அந்தக் குழு பள்ளியில் முதல் பரிசைப் பெற்றது. ஆசிரியர் அவர்களை ப் பாராட்டி, “ஒருவரை அவர் அமைதியாக இருப்பதற்காகவோ, வித்தியாசமாக இருப்பதற்காகவோ தனியாக ஒதுக்கக்கூடாது. ஒவ்வொருவரிடமும் ஏதாவது ஒரு சிறப்பு திறமை இருக்கும். அதை அறிய வாய்ப்பு கொடுத்தால்தான் அது வெளிப்படும்” என்றார்.

அன்று முதல் மாணவர்கள் யாரையும் தனியாக ஒதுக்காமல், அனைவரையும் தங்களுடன் சேர்த்துக்கொள்ளத் தொடங்கினர்.

நீதி:

யாரையும் தனிமைப்படுத்தவோ, ஒதுக்கவோ கூடாது. ஒவ்வொருவருக்கும் தனித்திறமை உண்டு; அன்பும் ஒற்றுமையும் அந்தத் திறமையை வெளிக்கொண்டு வரும்.


இன்றைய செய்திகள்
13.08.2026




🗒️ சுதந்திர தின கொண்டாட்டம் மற்றும் வார இறுதி நாட்கள் என்பதால் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க www.tnstc.in மூலம் முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.


🗒️இந்தியாவில் 22,000-க்கும் அதிகமான காட்டு யானைகள் உள்ளன மேலும் ஆசிய காட்டு யானைகளின் தாயகம் இந்தியா என்று பிரதமர் மோடி பெருமிதம்.


🗒️அமெரிக்காவின் நியூயார்க், நியூ ஜெர்சி ஆகிய மாநிலங்கள், ஆகஸ்ட் 15ஆம் நாளை “இந்திய சுதந்திர நாள்” என்று பிரகடனம் செய்துள்ளன. இந்தியா-அமெரிக்கா இடையிலான நீண்டகால நட்புறவை அங்கீகரிக்கும் வகையில் இந்த அறிவிப்புகள் வெளியிடப் பட்டுள்ளன.


*விளையாட்டுச் செய்திகள்*


🏀மாமல்லபுரத்தில் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி நேற்றுத் தொடங்கப்பட்டது.


Today's Headlines




🗒️ Due to Independence Day celebrations and the weekend, the Tamil Nadu State Transport Corporation has advised passengers to book their bus tickets in advance through www.tnstc.in to avoid crowds.


🗒️ India has more than 22,000 wild elephants. Prime Minister Modi proudly said that India is home to Asian wild elephants.


🗒️ The U.S. states of New York and New Jersey have proclaimed August 15 as "Indian Independence Day" to recognize the long-standing friendship between India and the USA.


🏀 Sports News


🏀 An international surfing competition began yesterday in Mamallapuram.



Covai women ICT_போதிமரம்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study (Lo based )-கற்றல் விளைவு அடிப்படையிலான பாடக்குறிப்பு 6th Tamil -கல்வியை போற்று

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 27.07.26

 Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 27.07.26

TET 2026 தாள் 2 *தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாடநூல் ஆதாரங்கள் - வகுப்பு மற்றும் பக்க எண்களுடன்

 TET 2026 தாள் 2 *தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாடநூல் ஆதாரங்கள் - வகுப்பு மற்றும் பக்க எண்களுடன்👇

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 15.07.26

 Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 15.07.26

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.07.2026

 Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.07.2026

Followers