Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -06.08.2026

 Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -06.08.2026




சர் அலெக்ஸாண்டர் ஃபிளெமிங்

திருக்குறள்:

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:47 தெரிந்து செயல் வகை

குறள் எண்:466

குறள்:

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.

பொருள்:

ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான், செய்யத்தக்க செயல்களை செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்.

பழமொழி :
Learn ever from an enemy.

மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. நான் எனது வாழ்நாளில் யாருக்கும் எவ்விதத்திலும் தீங்கிழைக்க மாட்டேன்.

2.என்னால் இயன்ற நன்மையை மற்றவர்களுக்குச் செய்வேன்.

பொன்மொழி :

மழை இல்லையேல் உயிரில்லை; நீர் இல்லையேல் உலகமில்லை.

Thought for the Day :

Rain nourishes the Earth just as kindness nourishes the heart.

பொது அறிவு :

1. ஒன்பது நிறங்களை கொண்ட பறவை எது?

இந்தியன் பிட்டா.

2. மிக நீண்ட தூரம் பறக்கும் பறவை எது?

ஆர்க்டிக் ஆலா.

English words :

Innovative – Brings new ideas, புதுமையானவர்.

Persistent – Never gives up, விடாமுயற்சியாளர்.

புவியியலும் சுற்றுசூழலும் :

கிராம பஞ்சாயத்து கிராமத்தின் அன்றாட நிர்வாகம் மற்றும் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்கிறது.
கிராம பஞ்சாயத்தின் பணிகள்

குடிநீர் வசதி ஏற்படுத்துதல்

தெரு விளக்குகளை பராமரித்தல்...

NMMS :

MAT

ஹைட்ரோஃபோபியா என்றால் ______________________

(1) நீரைக் கண்டு பயப்படுவது

(2) ஒலியைக் கேட்டு பயப்படுவது

(3) பசியின்மை

(4) தோல் தடிப்பு

விடை: (1) நீரைக் கண்டு பயப்படுவது

ஆகஸ்ட் 06

சர் அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் (Sir Alexander Fleming) (ஆகஸ்ட் 6, 1881 – மார்ச் 11, 1955) நுண்ணுயிர் கொல்லியான சிதைநொதியைக் கண்டுபிடித்தவர். மேலும், நுண்ணுயிர் கொல்லியான பெனிசிலினை பெனிசிலியம் நொடேடம் (Penicillium notatum) என்ற பூஞ்சையிலிருந்து பிரித்தெடுத்தார்.

உலகம் அறிந்துள்ள மருத்துவ முன்னேற்றங்களுள் பெனிசிலின் கண்டுபிடிப்பு தனிச்சிறப்பு வாய்ந்தது. பெனிசிலின் காலத்திற்கு முன் பிரசவத்தில் பெண்கள் இறப்பதும், பிறந்தபின் குழந்தைகள் இறப்பதும் சர்வ சாதாரணம். லேசான சிராய்ப்புகளும் கீறல்களும் கூட மரணத்திற்கு இட்டுச் சென்றன. ஒரு நுண்ணுயிரை வைத்து இன்னொன்றைக் கொல்லமுடிகிற பெனிஸிலின் போன்ற நச்சுமுறி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் பல நோய்களிலிருந்து மனிதர்களைக் காப்பாற்ற முடிந்தது. பெனிசிலினைக் கண்டு பிடித்து நவீன நச்சுமுறி மருந்துகள் யுகத்தைத் தொடங்கிவைத்த பெருமைக்குரிய விஞ்ஞானிதான் அலெக்ஸாண்டர் ஃப்பௌமிங். பெனிசிலின் உலகெங்கிலும் உள்ள 20 கோடி மக்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளது என்கிறது ஒரு மதிப்பீடு.

1928 -ஆம் ஆண்டில் நுண்ணுயிர்கள் வளர்க்கப்பட்ட ஒரு தட்டை நோக்கிய போது, லைசோசைம் அதுவரை செய்திராத ஒரு செயலைக் காளான் செய்திருந்ததைத் தற்செயலாகக் கண்டார். கொப்புளங்கள், கட்டிகள், மூக்கு, தொண்டை, தோல் இவற்றில் ஏற்படும் தொற்றுநோய்களை வரவழைக்கும் ஸ்டாபைலொகாக்கி எனப்படும் கிருமிகளைக் காளான் அழித்திருந்தது. அது மட்டுமல்ல, அந்தக் காளானின் சாரம் வெள்ளை அணுக்களை அழிக்கவில்லை என்றும், வேறு திசுக்களைப் பாதிக்கவில்லை என்றும் சோதித்துத் தெரிந்து கொண்டார். காளானில் பரவிய அப்பொருளுக்கு ‘பெனிசிலின்’ எனப் பெயரிட்டார் ஃப்ளெமிங். ஆனால் பெனிசிலினைப் பெரிய அளவில் அப்போது உற்பத்தி செய்ய இயலவில்லை. ஹோவர்டு ஃப்ளோரே, எர்னஸ்ட் செயின் ஆகியோர் அடங்கிய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகக் குழுவினர் 14 ஆண்டுகள் கழித்து அதைச் சாதித்தனர். பெனிசிலின் ஒவ்வாமை உடையவர்களுக்கு வேறு பாதுகாப்பான நச்சுக்கொல்லி மருந்துகளைக் கண்டுபிடிப்பதிலும் அக்குழுவினர் வெற்றியடைந்தனர்.
நீதிக்கதை

  "நேர்மையான அணிலும் பொற்கொட்டையும்"

ஒரு பெரிய காட்டில் ஒரு சிறிய அணில் வாழ்ந்து வந்தது. அது எப்போதும் உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்துகொண்டது.

ஒருநாள் உணவு தேடிச் சென்றபோது, ஒரு மரத்தின் அடியில் பொன்னிறத்தில் ஜொலிக்கும் ஒரு சிறிய பெட்டியைக் கண்டது. அதைத் திறந்து பார்த்தபோது, அதில் பல பொற்கொட்டைகள் இருந்தன.

அப்போது காகம் ஒன்று வந்து,

"இதை யாரும் பார்க்கவில்லை. நீயே வைத்துக்கொள்!" என்றது.

ஆனால் அணில்,

"இது என்னுடையது அல்ல. உரிமையாளரிடம் சேர்ப்பதே சரி." என்றது.

சிறிது நேரத்தில் வயதான ஒரு ஆமை பதற்றத்துடன் வந்தது.

"என் பொற்கொட்டைகள் இருந்த பெட்டியை யாராவது பார்த்தீர்களா?" என்று கேட்டது.

அணில் உடனே அந்தப் பெட்டியை ஆமைக்கு கொடுத்தது.

மிகுந்த மகிழ்ச்சி அடைந்த ஆமை,

"உன் நேர்மை எனக்கு என் பொருளைவிட அதிக மகிழ்ச்சியைத் தந்தது. உன்னைப் போன்றவர்கள் உலகிற்கு ஒரு ஆசீர்வாதம்" என்றது.

அந்த நாளிலிருந்து காட்டில் உள்ள எல்லா விலங்குகளும் அணிலை மதித்து, அதன் நேர்மையைப் பின்பற்றத் தொடங்கின.

நீதி: நேர்மையும் உண்மையும் மனிதனை உயர்த்தும். பிறருடைய பொருளுக்கு ஆசைப்படாமல் இருப்பது நல்லொழுக்கம்

இன்றைய செய்திகள்

06.08.2026

🗒️முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள்  காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களைப் பாராட்டி ஊக்கத்தொகை
வழங்கினார்.

🗒️ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கன் 9 ராக்கெட்டின் மேல் பகுதி  நிலவின் மேற்பரப்பில் மோதியதில்  நிலவின் மேற்பரப்பில் சுமார் 60 அடி அகலமும் 12 அடி ஆழமும் கொண்ட பள்ளம் உருவாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

🗒️சீனா தனது சொந்த விண்வெளி நிலையத்தின் ஆய்வகத்தில் நெல் விளைவித்து சாதனை படைத்துள்ளது.

🗒️சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கம்  'செக்ரட்டரி பறவை' இனத்தை 'அழிந்து வரும் இனம்' என அறிவித்துள்ள நிலையில் பிரிட்டன் விலங்கியல் பூங்காவில் 5 குஞ்சுகள் பொரித்து சாதனை செய்துள்ளது.

விளையாட்டுச் செய்திகள்

🏀சென்னை ஓபன் பெண்கள் டென்னிஸ் போட்டியை நடத்த  ரூ.10 கோடி நிதியினை தமிழ்நாடு அரசின் சார்பில் ஒதுக்கீடு செய்யப்படும், என்று முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

Today's Headlines

🗒️ Chief Minister Joseph Vijay congratulated the Tamil Nadu athletes who won medals in the Commonwealth Games and awarded them cash rewards as encouragement.

🗒️ The upper part of SpaceX’s Falcon 9 rocket is expected to have crashed on the Moon’s surface. It may have created a crater about 60 feet wide and 12 feet deep, according to reports.

🗒️ China has achieved a new milestone by successfully growing rice in the laboratory of its own space station.

🗒️ While the International Union for Conservation of Nature (IUCN) has classified the 'Secretary Bird' as an endangered species, a British zoo has achieved a milestone with the hatching of five chicks.

🏀 Sports News

🏀 Chief Minister Vijay announced that the Tamil Nadu Government will allocate ₹10 crore to conduct the Chennai Open Women’s Tennis Tournament.

Covai women ICT_போதிமரம்

Comments

Post a Comment

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

6th English - Trees LO Based Lesson Plan By Zeal Study

Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b) question bank collections .

7th English - The Listeners LO Based Lesson Plan By Zeal Study

Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b) question bank collections .

Zeal study Whatsapp groups links

CLiCK The below groups name to join the group Zeal study Class wise groups links  kindly join in any one groups in these groups class suitable messages will be shared  Join our Zeal study Official Telegram channel for all latest updates https://t.me/zealstudyofficial Follow our Whatsapp channel  https://whatsapp.com/channel/0029Va9B0NY5q08hCHKk8A19 for classes 1-5 materials Zeal study primary WhatsApp  groups links   Zeal study primary group 6 https://chat.whatsapp.com/JsUkig72NCbEfK0GtsoNg3 Zeal study primary group 1 https://chat.whatsapp.com/I5zmYprrqzh0hQHrRkqO6R Zeal study primary group 2 https://chat.whatsapp.com/Gs5xFU3kgzdIaQ8xExUrp4 Zeal study primary group 3 https://chat.whatsapp.com/KPoGHVgwlmkKCoUcX8J5yY Zeal study primary group 4 https://chat.whatsapp.com/KughukPr6yN4prnKWWNgB3 Zeal study primary group 5 https://chat.whatsapp.com/LYKowdSHZnT7vTM797PmLu For classes 6-8 Zeal study 6-8   WhatsApp  groups links For 6 ,7&8 handling...

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 27.07.26

 Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 27.07.26

Followers