Skip to main content

நாளை தாக்கலாகிறது தமிழக பட்ஜெட் முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

 நாளை தாக்கலாகிறது தமிழக பட்ஜெட் முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு




த.வெ.க., அரசின் முதல் பட்ஜெட்டை, நிதி அமைச் சர் மரிய வில்சன், சட்டசபை யில் நாளை தாக்கல் செய்கி றார்.


தமிழகத்தில் இந்தாண்டு ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடந்தது. எனவே, தமிழக அரசின், 2026 - 27ம் நிதி யாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை, கடந்த பிப் ரவரியில் தி.மு.க., ஆட்சி யில் நிதித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.


தற்போது, முதல்வர் விஜய் தலைமையில் த.வெ.க., ஆட்சி அமைந்துள்ளது. இந்த அரசின் முதல் பட்ஜெட்டை,நிதித் துறை அமைச்சர் மரிய வில்சன், சட்டசபையில் நாளை (ஆக.5) தாக்கல் செய் கிறார்.


பட்ஜெட்டில், பெண்கள், இளைஞர்கள் சுயதொழில் தொடங்க புதிய திட்டங்கள், பின்தங்கிய மாவட்டங்களில் பொருளாதார வளர்ச்சி ஏற்ப டுத்த புதிய தொழில் பூங்கா, தொழிற்பேட்டை உள்ளிட்ட அறிவிப்புகள், விப்புகள், மாணவர் கள், முதியவர்களின் உதவி தொகை அதிகரிப்பு உள் ளிட்ட அம்சங்கள் இடம்பெற உள்ளன.


பெண்களுக்கு இலவச பயணம்


த.வெ.க.. தன் தேர்தல் அறிக்கையில், அனைத்து அரசு பஸ்களிலும் மகளிர் இலவச பயண திட்டம் செயல் படுத்தப்படும் என, தெரி வித்தது. இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து முதல்வர் விஜய், ஜூலை 16ம் தேதி, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


இது குறித்து, அரசு போக் குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:


அரசு போக்குவரத்து கழ கங்களில், பெண் பயணியர் எண்ணிக்கை, 62 முதல் 64 சதவீதமாக உள்ளது. கடந்த ஆட்சியில் இருந்தே, மக ளிர் இலவச பயண திட்டம் வரவேற்பபை பெற்றுள்ளது. தற்போது, நகர பஸ்களில் மட்டும் மகளிருக்கு இலவச பயணம் படுகிறது.


அதற்காக போக்குவரத்து கழகங்களுக்கு, 16 கோடி ரூபாய் மாதம்தோறும் வழங் கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை அனைத்து பஸ் களிலும் விரிவுப்படுத்தும் தொடர்பான போது, போக்குவரத்து கழகங் களுக்கு எவ்வளவு கூடுதல் நிதி தேவைப்படும்; வருவாய் பெருக்குவது எப்படி என்பது அறிக்கை, தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இந்த அறிக்கையை ஆய்வு செய்து, பட்ஜெட்டில் அரசு அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கிறோம்.


10 சதவீத உள் ஒதுக்கீடு 


பட்ஜெட்டில், பள்ளிக் கல்வித் துறை சார்பில், பல்வேறு முக்கிய திட்டங்கள் அறிவிக் கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அரசு பள் ளிகளில் படித்து, உயர் கல்வி யில் சேரும் மாணவர்களுக்கு, ஊக்கத் தொகையாக ஆண் டுக்கு 8000 ரூபாய்; அரசு பள் ளியில் படித்து, மருத்துவம் துவம் மற் றும் இன்ஜி., படிப்பில் சேரும் மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு, 10 சதவீதமாக உயர்வு; உயர் உயர் கல்வி சேரும் மாணவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரை பிணையில்லா கடன் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாக உள்ளன.

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Followers