Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 13.07.26

 Zeal study official school morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 13.07.26






    


திருக்குறள்: 


 பால் : பொருட்பால்


இயல் : அரசியல்


அதிகாரம்:45 பெரியாரைத் துணைக்கோடல்


குறள் எண்:448


குறள்:


இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பா ரிலானுங் கெடும். 



பொருள்:


கடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்கும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.


பழமொழி :

Faith is the force of life.


நம்பிக்கையே வாழ்க்கையின் உந்து சக்தி.


இரண்டொழுக்க பண்புகள் :.


1. சூழ்நிலைக்கேற்றவாறு சிந்தித்து அளவான வார்த்தைகளைப் பேசுவேன். 


2. தகாத வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்த மாட்டேன்.


பொன்மொழி : 


வாய்ப்புக்காக காத்திருக்காதே; வாய்ப்பை உருவாக்கு.


Thought for the Day :


Kindness costs nothing but means everything.


பொது அறிவு : 


1.தேசிய கீதம் இல்லாத நாடு எது? 


சைப்ரஸ். 


2. நதிகள்  இல்லாத நாடு எது? 


வாடிகன்


English words :


Neglect – Ignore, புறக்கணி.     


 Conceal - Hide something from sight, மறை.


புவியியலும் சுற்றுசூழலும் :


பூமியின் நிலப்பரப்பு பின்வரும் முக்கிய இயற்கை நில அமைப்புகளாகப் பிரிக்கப்படுகிறது:

கண்டங்கள் (Continents) – பூமியின் மிகப்பெரிய நிலப்பரப்புகள்.

நாடுகள் (Countries) – கண்டங்களுக்குள் அமைந்துள்ள அரசியல் எல்லைகளைக் கொண்ட பகுதிகள்.


NMMS :


SAT - கணிதம்


ஒரு பொருளை ₹850 க்கு விற்றதால் கிடைத்த இலாபமும் , அதே பொருளை ₹570 க்கு விற்றதால் ஏற்பட்ட நட்டமுமம் சமம் எனில் அந்த பொருளின் அடக்க விலை _________________                                                         (1) ₹280.                     


 (2)₹ 710.                          


  (3) ₹720.                      


 (4) @₹1420.                          


  விடை: (2) ₹710


நீதிக்கதை


"ஒரு சிறிய விதையின் வெற்றி"


ஒரு கிராமத்தில் ஹேமா என்ற சிறுமி வாழ்ந்து வந்தாள். அவள் தினமும் பள்ளிக்குச் செல்லும் வழியில் ஒரு வயதான தாத்தா மரக்கன்றுகளை நட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தாள்.


ஒருநாள் ஹேமா கேட்டாள்:


"தாத்தா, நீங்கள் நட்ட இந்த மரங்கள் பெரியதாக வளர பல ஆண்டுகள் ஆகுமே. அப்போது நீங்கள் இருப்பீர்களா?"


தாத்தா சிரித்துக் கொண்டு,


"நான் இல்லாவிட்டாலும், இந்த மரத்தின் நிழலில் ஓய்வெடுப்பவர்கள் இருப்பார்கள். நான் பெற்ற நன்மையைப் போல, மற்றவர்களும் நன்மை பெற வேண்டும் என்பதற்காகத்தான் இதை நடுகிறேன்," என்றார்.


அந்த வார்த்தைகள் யாழினியின் மனதில் பதிந்தன. அன்றே அவளும் வீட்டில் ஒரு மாமரக் கன்றை நட்டாள். தினமும் தண்ணீர் ஊற்றி அன்புடன் பராமரித்தாள்.


சில ஆண்டுகள் கழித்து, அந்த மரம் பெரியதாக வளர்ந்து, அதன் நிழலில் மக்கள் ஓய்வெடுத்தனர். அதன் பழங்களை குழந்தைகள் மகிழ்ச்சியுடன் சாப்பிட்டனர்.


அப்போது யாழினி, "ஒரு சிறிய நல்ல செயல் பலருக்கு பெரிய மகிழ்ச்சியைத் தரும்" என்பதை உணர்ந்தாள்.


நீதி:


"நாம் செய்யும் சிறிய நற்செயலும், நாளை பலரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்." 🌱


இன்றைய செய்திகள்


13.07.2026


 🗒️ உலகளவில் கடுமையான வெப்பத்தை எதிர்கொள்ளும் முதல் 50 நகரங்களின் பட்டியலில் மதுரை 7வது இடமும் சென்னை 49வது இடமும் பிடித்துள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் 14 இந்திய நகரங்கள் இடம் பிடித்துள்ளன.


🗒️ மாற்றுத்திறனாளிகளுக்கான 4 % இடஒதுக்கீட்டு நடைமுறையை முழுமையாக செயல்படுத்தி வேலைவாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.


 🗒️ AI மற்றும் Data 

Centre-களின் அதீத வளர்ச்சியால், அதிர்ச்சிகரமான அளவில் அதிகரிக்கும் Microsoft, Amazon, Google நிறுவனங்களின் கார்பன் உமிழ்வு! 


🗒️ 56-வது சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா மொத்தம் 5 தங்கம் வென்று சர்வதேச அளவில் பெரும் சாதனை படைத்துள்ளது.


விளையாட்டுச் செய்திகள்


🏀 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ்    இறுதிப்போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் செக் குடியரசின்  லிண்டா நோஸ்கோவா  முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.


Today's Headlines


☘️Madurai has been ranked 7th and Chennai 49th in the list of the world's top 50 cities facing the most extreme heat. A study conducted by researchers at the University of Oxford found that 14 Indian cities feature in the list.


☘️The Chief Minister of Tamil Nadu has directed that the 4% reservation for persons with disabilities be fully implemented to ensure employment opportunities for them.


☘️Due to the rapid growth of Artificial Intelligence (AI) and data centres, the carbon emissions of Microsoft, Amazon, and Google are increasing at an alarming rate.


☘️India has achieved a remarkable feat at the 56th International Physics Olympiad, winning 5 gold medals.


🏀Sports News


In the Wimbledon Championships, one of the four Grand Slam tournaments, Linda Nosková of the Czech Republic won the Women's Singles title for the first time.


Covai women ICT_போதிமரம்

Comments

Post a Comment

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

TNTET paper 2 Maths and science tentative answer key

TNTET paper 2Maths and science answer key  STET paper 2 answer key _2026 வணக்கம் நமது குருவின் சார்பாக  STET paper 2 answer key _2026  வழங்கியுள்ளோம் இது ஆசிரியர் தகுதி தேர்வு   எழுதியவர்களுக்கு உதவியாக இருக்கும் எனவே இதனை பயன்படுத்தி பெயருக்கு நல்ல முறையில் தயாராக வாழ்த்துக்கள் நன்றி Topic_ STET paper 2 answer key _2026 File type -PDF STET paper key  

6ஆம் வகுப்பு கணிதம் எண்கள் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டம்Tamil Medium By Zeal Study

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

7ஆம் வகுப்பு கணிதம் எண்ணியல் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டம் Tamil Medium By Zeal Study

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

Zeal study Whatsapp groups links

CLiCK The below groups name to join the group Zeal study Class wise groups links  kindly join in any one groups in these groups class suitable messages will be shared  Join our Zeal study Official Telegram channel for all latest updates https://t.me/zealstudyofficial Follow our Whatsapp channel  https://whatsapp.com/channel/0029Va9B0NY5q08hCHKk8A19 for classes 1-5 materials Zeal study primary WhatsApp  groups links   Zeal study primary group 6 https://chat.whatsapp.com/JsUkig72NCbEfK0GtsoNg3 Zeal study primary group 1 https://chat.whatsapp.com/I5zmYprrqzh0hQHrRkqO6R Zeal study primary group 2 https://chat.whatsapp.com/Gs5xFU3kgzdIaQ8xExUrp4 Zeal study primary group 3 https://chat.whatsapp.com/KPoGHVgwlmkKCoUcX8J5yY Zeal study primary group 4 https://chat.whatsapp.com/KughukPr6yN4prnKWWNgB3 Zeal study primary group 5 https://chat.whatsapp.com/LYKowdSHZnT7vTM797PmLu For classes 6-8 Zeal study 6-8   WhatsApp  groups links For 6 ,7&8 handling...

7ஆம் வகுப்பு தமிழ் - பேச்சு மொழியும் எழுத்து மொழியும் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டம்

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

Followers