Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 17.07.26

 Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 17.07.26






   

திருக்குறள்:

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:46 சிற்றினம் சேராமை

குறள் எண்:452

குறள்:

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு.

பொருள்:

தான் சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீர் தன் இயல்பை இழந்து, நிலத்தின் இயல்பாகவே மாறிவிடும்; மனிதரின் அறிவும் அவர் சேர்ந்த இனத்தின் இயல்பாகவே ஆகிவிடும்.

பழமொழி :
Fact is stronger than fiction.

கற்பனையை விட உண்மை விசித்திரமானது.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. சூழ்நிலைக்கேற்றவாறு சிந்தித்து அளவான வார்த்தைகளைப் பேசுவேன்.

2. தகாத வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்த மாட்டேன்.

பொன்மொழி :

“மாற்றம் ஒன்றே மாறாதது.”

Thought for the Day :

Time is precious; once it is lost, it never comes back. Use it wisely.

பொது அறிவு :

1. சிறைகள் இல்லாத நாடு எது?

நெதர்லாந்து.

2. இந்தியாவில் சூரிய ஒளி முதலில் தோன்றும் மாநிலம் எது?

அருணாச்சல் பிரதேசம்

English words :

**Vague** - Not clear or specific, தெளிவற்ற.                      

  **Reluctant** - Unwilling and hesitant, தயக்கமுள்ள.

புவியியலும் சுற்றுசூழலும் :

"மாநிலங்கள் மாவட்டங்களாகப் பிரிக்கப்படுகின்றன.

உதாரணம்: தமிழ்நாட்டில் 38 மாவட்டங்கள்.

5.

மாவட்டங்கள் தாலுகாக்கள் அல்லது வட்டங்களாகப் பிரிக்கப்படுகின்றன."

NMMS :

MAT

"CONCEPTUALIZATION" என்ற வார்த்தையில் உள்ள எழுத்துகளைக் கொண்டு உருவாக்க முடியாத வார்த்தை எது??

(1) ACTUAL.

(2) TOTAL.

(3) PLANTATION.

(4) EXPLANATION.

விடை: (4) EXPLANATION

ஜூலை 17

சர்வதேச நீதிக்கான உலக தினம் (World Day for International Justice)

1998 ஆம் ஆண்டு ரோம் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஜூலை 17 ஆம் தேதி சர்வதேச நீதிக்கான உலக தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) நிறுவப்பட்டது. உலகின் ஒவ்வொரு பகுதியையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கிட்டத்தட்ட 80 நாடுகள் 1998 முதல் இந்த ஒப்பந்தத்தை அங்கீகரித்துள்ளன. 1998 முதல் சுமார் 139 நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

உலக எமோஜி தினம் (World Emoji Day)

அவற்றின் பரவலான பயன்பாடு மற்றும் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, எமோஜிகளைக் கொண்டாட ஒரு பிரத்யேக நாளைக் கொண்டிருப்பது பொருத்தமானது. ஜூலை 17 ஆம் தேதி உலக எமோஜி தினமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது - நமது உரையாடல்களை உயிர்ப்பிக்கும் படச்சித்திரங்களை நினைவுகூரும் ஒரு மகிழ்ச்சியான சந்தர்ப்பம்.
நீதிக்கதை

"சுத்தமே செல்வம்"

ஒரு கிராமத்தில் சித்தார்த் மற்றும் பவின் என்ற இரு சகோதரர்கள் வாழ்ந்து வந்தனர். சித்தார்த் தினமும் வீட்டைச் சுத்தம் செய்து, பொருட்களை ஒழுங்காக அடுக்கி வைப்பான். ஆனால் பவின் பயன்படுத்திய பொருட்களை அப்படியே போட்டுவிடுவான். வீட்டில் ஒட்டடை , தூசி படிந்திருந்தாலும் அதைப் பற்றி கவலைப்படமாட்டான்.

ஒருநாள் அவர்களது தாத்தா வீட்டிற்கு வந்தார். அவர் ஒரு முக்கியமான நிலப்பத்திரத்தை எடுத்துக் காட்டச் சொன்னார். சித்தார்த் உடனே அலமாரியைத் திறந்து, சுத்தமாக அடுக்கி வைத்திருந்த கோப்பிலிருந்து பத்திரத்தை எடுத்துக் கொடுத்தான்.

அதே நேரத்தில், பவின் தனது பள்ளிச் சான்றிதழைத் தேடினான். ஆனால் தூசிபடிந்த அறையிலும், சிதறிக் கிடந்த பொருட்களிலும் தேடியும் கிடைக்கவில்லை .

இறுதியில், பழைய செய்தித்தாள்களுக்கு நடுவே அது மடிந்து கிடந்தது.

அப்போது தாத்தா, “வீட்டைச் சுத்தமாக வைத்திருப்பது அழகுக்காக மட்டும் அல்ல; தேவையான நேரத்தில் பொருட்களை எளிதாகக் கண்டுபிடிக்கவும், ஆரோக்கியமாக வாழவும் உதவுகிறது," என்று அறிவுரை கூறினார்.

அந்த நாளிலிருந்து பவினும் தினமும் வீட்டைச் சுத்தம் செய்து, பொருட்களை ஒழுங்காக வைத்துப் பழகினான்.

நீதி:

"வீட்டைச் சுத்தமாகவும் பொருட்களை ஒழுங்காகவும் வைத்திருப்பது நல்லபழக்கம்; அது ஆரோக்கியத்தையும், ஒழுக்கத்தையும், மனநிம்மதியையும் தரும்.”

இன்றைய செய்திகள்

17.07.2026

🗒️சென்னை பூங்கா ரெயில் நிலையத்தை இன்று  பிரதமர் மோடி திறந்து வைக்கிறார் .

🗒️தமிழ்நாட்டில் ஆக. 1- 30-ந்தேதி வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் இன்று முதல் வரும் 30-ஆம் தேதி வரையில்
இணையதளத்தில் பொதுமக்கள் தாங்களாகவே தங்கள் விவரங்களை பதிவு  செய்யலாம்.

🗒️தமிழகத்தில்  15 மாவட்டங்களிலும்  மற்றும்  சமவெளி பகுதிகளிலும்  வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

*விளையாட்டுச் செய்திகள்*

🏀ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்.

🏀உலகக்கோப்பை கால்பந்து: மெஸ்ஸி வரலாற்று சாதனை:
இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா அதிரடியாக விளையாடி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது.

Today's Headlines

🗒️Prime Minister Narendra Modi will inaugurate the Chennai Park Railway Station today.

🗒️Tamil Nadu will conduct the Population Census from August 1 to August 30. From today until July 30, people can register their details themselves on the official website.

🗒️The Weather Department has said that heatwave conditions may occur in 15 districts of Tamil Nadu and in the plains.

Sports News

🏀Japan Open Badminton: P. V. Sindhu has advanced to the quarter-finals.

🏀FIFA World Cup: Lionel Messi created a historic record. Defending champions Argentina played brilliantly against England in the semi-final and qualified for the final.

Covai women ICT_போதிமரம்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

TNTET paper 2 Maths and science tentative answer key

TNTET paper 2Maths and science answer key  STET paper 2 answer key _2026 வணக்கம் நமது குருவின் சார்பாக  STET paper 2 answer key _2026  வழங்கியுள்ளோம் இது ஆசிரியர் தகுதி தேர்வு   எழுதியவர்களுக்கு உதவியாக இருக்கும் எனவே இதனை பயன்படுத்தி பெயருக்கு நல்ல முறையில் தயாராக வாழ்த்துக்கள் நன்றி Topic_ STET paper 2 answer key _2026 File type -PDF STET paper key  

7ஆம் வகுப்பு கணிதம் எண்ணியல் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டம் Tamil Medium By Zeal Study

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

6ஆம் வகுப்பு கணிதம் எண்கள் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டம்Tamil Medium By Zeal Study

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

Zeal study Whatsapp groups links

CLiCK The below groups name to join the group Zeal study Class wise groups links  kindly join in any one groups in these groups class suitable messages will be shared  Join our Zeal study Official Telegram channel for all latest updates https://t.me/zealstudyofficial Follow our Whatsapp channel  https://whatsapp.com/channel/0029Va9B0NY5q08hCHKk8A19 for classes 1-5 materials Zeal study primary WhatsApp  groups links   Zeal study primary group 6 https://chat.whatsapp.com/JsUkig72NCbEfK0GtsoNg3 Zeal study primary group 1 https://chat.whatsapp.com/I5zmYprrqzh0hQHrRkqO6R Zeal study primary group 2 https://chat.whatsapp.com/Gs5xFU3kgzdIaQ8xExUrp4 Zeal study primary group 3 https://chat.whatsapp.com/KPoGHVgwlmkKCoUcX8J5yY Zeal study primary group 4 https://chat.whatsapp.com/KughukPr6yN4prnKWWNgB3 Zeal study primary group 5 https://chat.whatsapp.com/LYKowdSHZnT7vTM797PmLu For classes 6-8 Zeal study 6-8   WhatsApp  groups links For 6 ,7&8 handling...

7ஆம் வகுப்பு தமிழ் - பேச்சு மொழியும் எழுத்து மொழியும் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டம்

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

Followers