Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 08.07.26

 Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 08.07.26




திருக்குறள்:

பால் :  பொருட்பால்         

இயல் : அரசியல்  

அதிகாரம்:45    பெரியாரைத் துணைக்கோடல்

குறள் எண்:445

குறள்:

சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைக் சூழ்ந்து கொளல். 

பொருள்:

தகுதியான வழிகளை ஆராய்ந்து சொல்பவரையே கண்ணாகக் கொண்டு உலகம் நடத்தலால், மன்னவன், அவரை ஆராய்ந்து தன் சுற்றமாக்கிக் கொள்ளல் வேண்டும்.

பழமொழி :
Art is long and life is short

கல்வி கரையில் கற்பவர் நாள் சில.

இரண்டொழுக்க பண்புகள் :.

1.போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்பதால், எனக்கு இருப்பது போதும் என்று இருப்பேன்.

2. என் ஆசிரியரையும் பெற்றோரையும் கஷ்டப்படுத்தும் எந்த காரியத்தையும் செய்ய மாட்டேன்.

பொன்மொழி :

பொறுமை கசப்பானது; அதன் பலன் இனிமையானது.

Thought for the Day :

Dream big, work hard, stay humble.

பொது அறிவு :

1. நோபல் பரிசு எப்போதும் எந்த நாளில் வழங்கப்படுகிறது?

டிசம்பர் 10. 

2. சர்வதே மனித உரிமைகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

டிசம்பர் 10.

English words :

Generate – Produce, உருவாக்கு.

Illustrate – Explain, விளக்கிக் காட்டு.

புவியியலும் சுற்றுசூழலும் :

உலகின் மிகப் பெரிய நாடு – ரஷ்யா. இது 11 நேர மண்டலங்களைக் கொண்டுள்ளது.

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு – இந்தியா

NMMS :

MAT

வேறுப்பட்டதை கண்டுபிடி.


விடை: (2)

ஜூலை 08

செளரவ் கங்குலி அவர்களின் பிறந்தநாள்

சௌரவ் சந்திதாஸ் கங்குலி (Sourav Chandidas Ganguly; ஒலிப்புⓘ; பிறப்பு: சூலை 8, 1972) தாதா என அன்பாக அழைக்கப்படுகிறார். அதற்கு வங்காள மொழியில் மூத்த சகோதரர் என்பது அர்த்தமாகும். இவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரரும் அணித்தலைவரும் ஆவார். தற்போது இவர் வங்காளத் துடுப்பாட்ட அவையின் தலைவராக உள்ளார்.[1] சர்வதேச துடுப்பாட்ட அரங்கில் மிகச் சிறந்த அணித் தலைவராகவும் மட்டையாளராகவும் விளங்கினார்.வலது புறங்களில் பந்துகளை அடிப்பதில் சிறந்தவர் எனவே இவர் காட் ஆஃப் தெ ஆஃப் சைட் (வலது புறத்தின் கடவுள்) என அழைக்கப்படுகிறார்.
நீதிக்கதை

"நல்ல வார்த்தையின் சக்தி"

ஒரு பரபரப்பான கடை வீதியில் ரவி என்ற இளைஞன் பழக்கடை வைத்திருந்தான். அவன் எப்போதும், "இன்று வியாபாரம் எப்படி நடக்குமோ?,சரியாக இருக்காது", "யாரும் வாங்க வருகிற மாதிரி தெரியலையே. இன்றைய பழம் எல்லாம் விற்காமல் அழுகி விடுமோ?" என்று எதிர்மறையாகப் பேசிக்கொண்டே இருப்பான்.

அதே வீதியில் மீனா என்ற பெண் பூக்கடை வைத்திருந்தாள். அவள் எப்போதும், "இன்று நல்ல நாள்!", "எல்லாம் நன்றாக நடக்கும்!", "வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியுடன் வருவார்கள்!" என்று நேர்மறையான வார்த்தைகளையே பேசுவாள்.

ஒருநாள் இருவரின் கடைக்கும் ஒரே நேரத்தில் வாடிக்கையாளர்கள் வந்தனர். ரவி முகம் சுளித்து, சற்று சலிப்புடன் , "என்ன வேண்டும்?" என்று கேட்டான். வாடிக்கையாளர்களும் விரைவாக வாங்கிவிட்டு சென்றனர்.

மீனா மட்டும் புன்னகையுடன், "வணக்கம்! உங்களுக்கு என்ன பூ வேண்டும்? இன்று உங்கள் நாள் இனிமையாக அமையட்டும்!" என்று அன்பாகப் பேசினாள். வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்து, மீண்டும் மீண்டும் அவள் கடைக்கே வரத் தொடங்கினர்.

சில நாட்களுக்குப் பிறகு ரவி, "என் கடைக்கு ஏன் வாடிக்கையாளர்கள் குறைகிறார்கள்?" என்று கேட்டான்.

மீனா புன்னகையுடன், "நாம் பேசும் நல்ல வார்த்தைகளும், நேர்மறை எண்ணங்களும் மக்களின் மனதில் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் உருவாக்கும். அதுவே வெற்றிக்கான முதல் படி," என்றாள்.

அன்று முதல் ரவியும் நேர்மறையாகப் பேசத் தொடங்கினான். சிறிது காலத்தில் அவன் கடையிலும் வாடிக்கையாளர்கள் அதிகரித்தனர்.

நீதி:

நேர்மறை கருத்துகளும் நல்ல வார்த்தைகளும் நம்பிக்கையை வளர்த்து, வெற்றிக்கான பாதையைத் திறக்கும்.

இன்றைய செய்திகள்

08.07.2026

🗒️ஹிட்டாச்சி ஒப்பந்தம்:
ரூ.1,000 கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஹிட்டாச்சி (Hitachi) நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

🗒️கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தின் மீனாட்சி பகுதியில்  ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் ஒருவர் உயிரிழந்ததுடன், கோழிக்கோடு–வயநாடு இரட்டை சுரங்கப்பாதை திட்ட பணியாளர்களை தேடும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

🗒️பிரதமர் மோடிக்கு இந்தோனேசியாவின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

*விளையாட்டுச் செய்திகள்*

🏀2-வது ஒருநாள் போட்டி: இந்திய அணியை வீழ்த்தி இலங்கை வெற்றி.

🏀விராட் கோலியுடன் கிரிக்கெட் விளையாட ஆசை என விம்பிள்டன் சாம்பியன் நோவக் ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.

Today's Headlines

🗒️ Hitachi Agreement:
The Tamil Nadu Government has signed a Memorandum of Understanding (MoU) with Hitachi to invest ₹1,000 crore, creating 1,000 employment opportunities.

🗒️ One person died in a sudden landslide in the Meenatchi area of ​​Kerala's Wayanad district, and intensive search and rescue operations are underway for workers involved in the Kozhikode-Wayanad twin tunnel project.

🗒️ Prime Minister Narendra Modi has been conferred Indonesia's highest civilian award.

Sports News

🏀 2nd ODI:
Sri Lanka defeated India in the second One Day International match.

🏀 Djokovic's Wish:
Novak Djokovic, the Wimbledon champion, said he would like to play cricket with Virat Kohli.

Covai women ICT_போதிமரம்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

6ஆம் வகுப்பு கணிதம் எண்கள் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டம் Tamil Medium By Zeal Study

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

6ஆம் வகுப்பு தமிழ் - வளர் தமிழ் கற்றல் விளைவு , மன வரைபடங்கள் புதியதாக வடிவமைக்கப்பட்டுள்ள அடிப்படையிலான பாடத்திட்டம்

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

6ஆம் வகுப்பு சமூக அறிவியல் பேரண்டம் மற்றும் சூரிய குடும்பம் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டம் Tamil Medium By Zeal Study

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

TNTET paper 2 Maths and science tentative answer key

TNTET paper 2Maths and science answer key  STET paper 2 answer key _2026 வணக்கம் நமது குருவின் சார்பாக  STET paper 2 answer key _2026  வழங்கியுள்ளோம் இது ஆசிரியர் தகுதி தேர்வு   எழுதியவர்களுக்கு உதவியாக இருக்கும் எனவே இதனை பயன்படுத்தி பெயருக்கு நல்ல முறையில் தயாராக வாழ்த்துக்கள் நன்றி Topic_ STET paper 2 answer key _2026 File type -PDF STET paper key  

Zeal study Whatsapp groups links

CLiCK The below groups name to join the group Zeal study Class wise groups links  kindly join in any one groups in these groups class suitable messages will be shared  Join our Zeal study Official Telegram channel for all latest updates https://t.me/zealstudyofficial Follow our Whatsapp channel  https://whatsapp.com/channel/0029Va9B0NY5q08hCHKk8A19 for classes 1-5 materials Zeal study primary WhatsApp  groups links   Zeal study primary group 6 https://chat.whatsapp.com/JsUkig72NCbEfK0GtsoNg3 Zeal study primary group 1 https://chat.whatsapp.com/I5zmYprrqzh0hQHrRkqO6R Zeal study primary group 2 https://chat.whatsapp.com/Gs5xFU3kgzdIaQ8xExUrp4 Zeal study primary group 3 https://chat.whatsapp.com/KPoGHVgwlmkKCoUcX8J5yY Zeal study primary group 4 https://chat.whatsapp.com/KughukPr6yN4prnKWWNgB3 Zeal study primary group 5 https://chat.whatsapp.com/LYKowdSHZnT7vTM797PmLu For classes 6-8 Zeal study 6-8   WhatsApp  groups links For 6 ,7&8 handling...

6ஆம் வகுப்பு அறிவியல் தாவரங்கள் வாழும் உலகம் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டம் Tamil Medium By Zeal Study

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

Followers