Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 20.07.26

 Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 20.07.26

அனைத்துலக சதுரங்க நாள்






திருக்குறள்:

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:46 சிற்றினம் சேராமை

குறள் எண்:453

குறள்:

மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படுஞ் சொல்.

பொருள்:

மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும்,
இப்படிப்பட்டவன் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல், சேர்ந்த இனத்தால் ஏற்படும்

பழமொழி :
Familiarity breeds contempt.

பழக பழக பாலும் புளிக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. பொது அறிவு மற்றும் நற்பண்புகளால் என்னை நான் உயர்த்திக் கொள்வேன்.

2. என் பெற்றோரையும் ஆசிரியர்களையும் துன்புறுத்தும் எந்த ஒரு செயலையும் நான் ஒருபோதும் செய்ய மாட்டேன்.

பொன்மொழி :

“எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.”

Thought for the Day :

🌱 “A person who values time can achieve great success in life.”

பொது அறிவு :

1. தமிழ்நாட்டின் அதிக பரப்பளவு கொண்ட மாவட்டம் எது?

திண்டுக்கல்.

2. தமிழ்நாட்டின் குறைந்த பரப்பளவு கொண்ட மாவட்டம் எது?

சென்னை.

English words :

Cautious - Careful to avoid danger or mistakes, எச்சரிக்கையான.

Diligent - Hardworking and careful, விடாமுயற்சியுள்ள

புவியியலும் சுற்றுசூழலும் :

பாலைவனங்கள் (Deserts) – மிகக் குறைந்த மழைப்பொழிவு பெறும் வறண்ட நிலப்பகுதிகள்.
காடுகள் (Forests) – அடர்ந்த மரங்கள் நிறைந்த பகுதிகள்.
புல்வெளிகள் (Grasslands) – புற்கள் அதிகமாக வளரும் பரந்த நிலப்பகுதிகள்.

NMMS :

SAT -

கொடுக்கப்பட்டுள்ள படங்களில் வேறுபட்டதைத் தேர்ந்தெடு




விடை:(3)

ஜூலை 20

அனைத்துலக சதுரங்க நாள்

அனைத்துலக சதுரங்க நாள் (International chess day) பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் வழிகாட்டலில் ஒவ்வோர் ஆண்டும் சூலை 20 ஆம் நாள் கொண்டாடப்படுகின்றது.

1924 ஆம் ஆண்டு சூலை மாதம் 20 ஆம் தேதியன்று உலகச் சதுரங்கக் கூட்டமைப்பு பாரிசு நகரில் நிறுவப்பட்டது. இந்த நாளை அனைத்துலக சதுரங்க தினமாக கொண்டாடும் யோசனையை யுனெசுகோ முன்மொழிந்தது. இதன்படி சூலை 20 ஆம் நாள் அனைத்துலக சதுரங்க நாளாக 1966 ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.[3] 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தேதியன்று ஐக்கிய நாடுகள் சபையும் இந்நாளை அங்கீகரித்தது.

கிரிகோர் யோவான் மெண்டல்  அவர்களின் பிறந்த நாள்


கிரிகோர் யோவான் மெண்டல் (Gregor Johann Mendel, சூலை 20, 1822 – சனவரி 6, 1884), மரபியல் குறித்த அடிப்படை ஆய்வுப் பணிகளுக்காக அறியப்படும் ஆத்திரிய நாட்டைச் சேர்ந்த ஒரு அகத்தீனிய அவைத் துறவி. இவரை மரபியலின் தந்தை என்று அழைக்கிறார்கள்.

மார்க்கோனி அவர்களின் நினைவுநாள்





மார்க்கோனிஎனப்படும் குலீல்மோ மார்க்கோனி (Guglielmo Marconi; ஏப்ரல் 25, 1874 – ஜூலை 20, 1937) வால்வுகளுள்ள வானொலியைக் கண்டு பிடித்தவர். 'நீண்ட தூரம் ஒலிபரப்பப் படும் வானொலியின் தந்தை" எனப்படுபவர். ' கம்பியற்ற தகவல்தொடர்பு முறை' மற்றும் 'மார்க்கோனி விதி' ஆகியவற்றை உருவாக்கியவர். இக்கண்டுபிடிப்பிற்காக 1909-இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் உடன் இணைந்து பெற்றார். இவர் ஒரு தொழில் முனைவர், தொழிலதிபர், மற்றும் 1897 ல் 'மார்க்கோனி வானொலி நிறுவனத்தின் நிறுவனர்', 'வானொலி'மற்றும் அதனோடு தொடர்புடைய கருவிகளை உருவாக்கியவர்.
நீதிக்கதை

"கையில் இருந்த போன், கண்ணில் மறைந்த உலகம்"

ஒரு சிறிய ஊரில் ஷாலினி என்ற மாணவி வாழ்ந்தாள். அவளுக்கு படிப்பிலும், ஓவியம் வரைவதிலும் நல்ல திறமை இருந்தது.

ஒருநாள் அவளுடைய பெற்றோர் புதிய செல்போன் வாங்கிக் கொடுத்தார்கள்.

ஆரம்பத்தில் பாடங்களுக்காக மட்டும் பயன்படுத்திய சாலினி, நாளடைவில் வீடியோக்கள், விளையாட்டுகள், சமூக வலைத்தளங்கள் என்று மணி கணக்கில் போனிலேயே மூழ்கிவிட்டாள். வீட்டில் அம்மா அழைத்தாலும் கேட்கவில்லை. நண்பர்களுடன் விளையாடுவதையும் நிறுத்திவிட்டாள்.

ஒருநாள் பள்ளியில் ஓவியப் போட்டி நடந்தது. முன்பு எப்போதும் முதல் பரிசு வாங்கிய சாலினி, இந்த முறை சரியாக வரைய முடியவில்லை. காரணம், பயிற்சி செய்யாமல் நேரம் முழுவதும் போனில் செலவழித்ததுதான்.

அன்று மாலை அவளுடைய தாத்தா தோட்டத்திற்கு அழைத்துச் சென்று ஒரு வாடிய செடியைக் காட்டி, "இந்தச் செடிக்கு தண்ணீர் ஊற்றாமல் விட்டதால் வாடிவிட்டது. அதுபோல திறமையையும் நேரத்தையும் கவனிக்காமல், போனில் மட்டும் மூழ்கினால் வாழ்க்கையும் வாடிவிடும்," என்றார்.

தன் தவறை உணர்ந்த ஷாலினி, போனை தேவையான நேரத்தில் மட்டும் பயன்படுத்த ஆரம்பித்தாள். மீண்டும் படிப்பிலும், ஓவியத்திலும் கவனம் செலுத்தி, அடுத்த போட்டியில் முதல் பரிசை வென்றாள்.

நீதி:

"போன் நம் வாழ்க்கைக்கு உதவும் கருவி; அது நம் வாழ்க்கையையே ஆளக்கூடாது. நேரத்தை மதிப்பவரே வெற்றியை அடைவார்.”

இன்றைய செய்திகள்

20.07.2026

🗒️உஸ்பெகிஸ்தானில் நடந்த, 58வது சர்வதேச வேதியியல் ஒலிம்பியாட் போட்டியில், நம் நாட்டின் சார்பில் பங்கேற்ற நான்கு மாணவர்களும், தலா ஒரு தங்கப் பதக்கத்தை வென்று அசத்தி உள்ளனர்.

🗒️அதிகாரப்பூர்வ சின்னம் ,முத்திரை வடிவமைப்பு
போட்டியில் ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 15,2026 வரை கலந்து கொள்ளலாம் என இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது.

🗒️உலகளவில் புற்றுநோய்க்கு தினமும் 27 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு W H O ஆராய்ச்சி மூலம்  இத்தகவலை வெளியிட்டுள்ளது.

விளையாட்டுச் செய்திகள்

🏀உலகக் கால்பந்து கோப்பை இறுதிப்போட்டி: மணல் சிற்பம் உருவாக்கி வாழ்த்து கூறிய சுதர்சன் பட்நாயக்.
FIFA இறுதிப்போட்டி - 96 ஆண்டுகளுக்கு பின் இன்று நிகழும் அரிய வரலாற்று மோதல் ஆகும்.

🏀ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டியில்  பி.வி.சிந்து  சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் . மேலும் இப்பட்டம் பெறும்  இந்தியாவின் முதல் வீராங்கனை இவர் ஆவார் .

Today's Headlines

🗒️At the 58th International Chemistry Olympiad held in Uzbekistan, all four Indian students won gold medals.

🗒️The India Post has announced that people can take part in the official logo and seal design competition from July 15 to August 15, 2026.

🗒️The World Health Organization (WHO) has said that 27,000 people die from cancer every day around the world, based on its research.

Sports News

🏀A famous sand artist, Sudarsan Pattnaik, created a sand sculpture to wish the teams ahead of the FIFA World Cup Final. The final match is a historic game taking place after 96 years.

🏀P. V. Sindhu has won the Japan Open Badminton Championship. She is also the first Indian woman to win this title.

Covai women ICT_போதிமரம்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

TNTET paper 2 Maths and science tentative answer key

TNTET paper 2Maths and science answer key  STET paper 2 answer key _2026 வணக்கம் நமது குருவின் சார்பாக  STET paper 2 answer key _2026  வழங்கியுள்ளோம் இது ஆசிரியர் தகுதி தேர்வு   எழுதியவர்களுக்கு உதவியாக இருக்கும் எனவே இதனை பயன்படுத்தி பெயருக்கு நல்ல முறையில் தயாராக வாழ்த்துக்கள் நன்றி Topic_ STET paper 2 answer key _2026 File type -PDF STET paper key  

Zeal study Whatsapp groups links

CLiCK The below groups name to join the group Zeal study Class wise groups links  kindly join in any one groups in these groups class suitable messages will be shared  Join our Zeal study Official Telegram channel for all latest updates https://t.me/zealstudyofficial Follow our Whatsapp channel  https://whatsapp.com/channel/0029Va9B0NY5q08hCHKk8A19 for classes 1-5 materials Zeal study primary WhatsApp  groups links   Zeal study primary group 6 https://chat.whatsapp.com/JsUkig72NCbEfK0GtsoNg3 Zeal study primary group 1 https://chat.whatsapp.com/I5zmYprrqzh0hQHrRkqO6R Zeal study primary group 2 https://chat.whatsapp.com/Gs5xFU3kgzdIaQ8xExUrp4 Zeal study primary group 3 https://chat.whatsapp.com/KPoGHVgwlmkKCoUcX8J5yY Zeal study primary group 4 https://chat.whatsapp.com/KughukPr6yN4prnKWWNgB3 Zeal study primary group 5 https://chat.whatsapp.com/LYKowdSHZnT7vTM797PmLu For classes 6-8 Zeal study 6-8   WhatsApp  groups links For 6 ,7&8 handling...

6ஆம் வகுப்பு அறிவியல் விசையும் இயக்கமும் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டம் Tamil Medium By Zeal Study

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

6ஆம் வகுப்பு சமூக அறிவியல் பண்முகத் தன்மையை அறிவோம் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டம் Tamil Medium By Zeal Study

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

Followers