Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 31.07.26

 Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 31.07.26





திருக்குறள்:

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:47 தெரிந்து செயல் வகை

குறள் எண்:462

குறள்:

தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்.

பொருள்:

தாம் தேர்ந்துகொண்ட நிருவாகச் சுற்றத்தோடு ஒரு செயலை ஆராய்ந்து திட்டமிட்டுச் செய்பவர்க்குச் செய்ய முடியாத செயல் என்று எதுவும் இல்லை.

பழமொழி :
It is easier to destroy than to create

அழிப்பது சுலபம், ஆக்குவது கடினம்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. கடமை தவறாமல் உதிக்கும் சூரியன் போல நானும் என் கடமையை தவறாமல் செய்வேன்.

2. கல்லடிபட்டாலும் கனி தரும் மரங்கள் போல நானும் பலன் எதிர்பாராமல் பணி செய்ய முயற்சிப்பேன்.

பொன்மொழி :

பிறருக்கு உதவுவது உயர்ந்த பண்பு என்றால் நேர்மை என்பது சிறந்த கொள்கை.

Thought for the Day :

Small steps taken daily lead to great success.

பொது அறிவு :

1. தமிழ்நாட்டின் மாநில மலர் எது?

செங்காந்தள் மலர்.

2. ஜிம்பாபே நாட்டின் தேசிய மலர் எது?

செங்காந்தள் மலர்.

English words :

Neat - Clean and organized, சுத்தமான.

Pure - Clean and untainted, தூய்மையான

புவியியலும் சுற்றுசூழலும் :

கிராம பஞ்சாயத்து என்பது மக்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கும் உறுப்பினர்களால் அமைக்கப்படுகிறது.

இதன் தலைவரை பஞ்சாயத்து தலைவர்  என்று அழைப்பார்கள்.

NMMS :

MAT

பொருந்தாததைத் தேர்ந்தெடு

(1) கடத்தும் திசு

(2) புறத்தோல் திசு

(3) அடிப்படைத்திசுக்கள்

(4) இணைப்புத்திசு

விடை: (4) இணைப்புத் திசு

நீதிக்கதை

பழைய உணவின் பாதிப்பு

ஒரு கிராமத்தில் சஹானா என்ற சிறுமி வாழ்ந்து வந்தாள். ஒருநாள் வீட்டில் சமைத்த உணவு மீதமிருந்தது. அதை அம்மா குளிர்சாதனப் பெட்டியில் வைத்தார்.

இரண்டு நாட்கள் கழித்தும் அந்த உணவை சஹானா சாப்பிட வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தாள்.

அம்மா, "பல நாட்கள் வைத்திருக்கும் உணவில் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் வளரலாம். அதைச் சாப்பிட்டால் உடல்நலம் பாதிக்கப்படும்," என்று கூறினார். ஆனால் சஹானா அதைக் கேட்காமல் அந்த உணவைச் சாப்பிட்டாள்.

சில மணி நேரங்களிலேயே அவளுக்கு வயிற்றுவலி, வாந்தி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது. மருத்துவரிடம் சென்றபோது, "நீண்ட நாட்கள் வைத்திருந்த உணவைச் சாப்பிட்டதால் உணவு நச்சுத்தன்மை (Food Poisoning) ஏற்பட்டுள்ளது. இனிமேல் எப்போதும் புதிதாக சமைத்த உணவையே சாப்பிட வேண்டும்,"என்று அறிவுறுத்தினார்.

அதன்பிறகு சஹானா, பல நாட்கள் வைத்திருந்த உணவைச் சாப்பிடாமல், எப்போதும் சுத்தமான மற்றும் புதிய உணவையே சாப்பிடத்  தொடங்கினாள்.

நீதி:

பல நாட்கள் வைத்திருந்த உணவைச் சாப்பிடக்கூடாது; புதிய, சுத்தமான உணவே நல்ல ஆரோக்கியத்தைத் தரும்.

இன்றைய செய்திகள்

31.07.2026

🗒️குழந்தை தொழிலாளர் விவகாரத்தை கண்காணிக்க சிறப்பு குழு அமைச்சர் பர்வேஸ் தகவல்.

🗒️எல் நினோ காலநிலை மாற்ற நிகழ்வு குறித்து ஆராய்வதற்கு 7 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

🗒️தமிழகத்திற்கு காவிரியில் நீர் விடுவிக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

*விளையாட்டுச் செய்திகள்*

🏀காமன்வெல்த் விளையாட்டு:

👍🏼நீளம் தாண்டுதலில் முரளி ஸ்ரீசங்கருக்கு வெள்ளிப் பதக்கம்.
👍🏼ஈட்டி எறிதல் இறுதிப் போட்டிக்கு நீரஜ் சோப்ரா தகுதி.
👍குத்துச் சண்டையில் அரை இறுதிக்கு முன்னேறிய 6 இந்திய வீரர்கள்.

Today's Headlines

🗒️Minister Parvez said that a special committee has been formed to monitor child labour issues.

🗒️The Tamil Nadu government has formed a 7-member committee to study the El Niño climate change phenomenon.

🗒️The Cauvery Water Management Authority has directed the Karnataka government to release Cauvery water to Tamil Nadu.

Sports News

🏀Commonwealth Games:

👍🏼Murali Sreeshankar won the silver medal in the long jump.

👍🏼Neeraj Chopra has qualified for the javelin throw final.

👍🏼Six Indian boxers have advanced to the semi-finals.

Covai women ICT_போதிமரம்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

TNTET paper 2 Maths and science tentative answer key

TNTET paper 2Maths and science answer key  STET paper 2 answer key _2026 வணக்கம் நமது குருவின் சார்பாக  STET paper 2 answer key _2026  வழங்கியுள்ளோம் இது ஆசிரியர் தகுதி தேர்வு   எழுதியவர்களுக்கு உதவியாக இருக்கும் எனவே இதனை பயன்படுத்தி பெயருக்கு நல்ல முறையில் தயாராக வாழ்த்துக்கள் நன்றி Topic_ STET paper 2 answer key _2026 File type -PDF STET paper key  

Zeal study Whatsapp groups links

CLiCK The below groups name to join the group Zeal study Class wise groups links  kindly join in any one groups in these groups class suitable messages will be shared  Join our Zeal study Official Telegram channel for all latest updates https://t.me/zealstudyofficial Follow our Whatsapp channel  https://whatsapp.com/channel/0029Va9B0NY5q08hCHKk8A19 for classes 1-5 materials Zeal study primary WhatsApp  groups links   Zeal study primary group 6 https://chat.whatsapp.com/JsUkig72NCbEfK0GtsoNg3 Zeal study primary group 1 https://chat.whatsapp.com/I5zmYprrqzh0hQHrRkqO6R Zeal study primary group 2 https://chat.whatsapp.com/Gs5xFU3kgzdIaQ8xExUrp4 Zeal study primary group 3 https://chat.whatsapp.com/KPoGHVgwlmkKCoUcX8J5yY Zeal study primary group 4 https://chat.whatsapp.com/KughukPr6yN4prnKWWNgB3 Zeal study primary group 5 https://chat.whatsapp.com/LYKowdSHZnT7vTM797PmLu For classes 6-8 Zeal study 6-8   WhatsApp  groups links For 6 ,7&8 handling...

6th English - Trees LO Based Lesson Plan By Zeal Study

Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b) question bank collections .

7th English - The Wind On Haunted Hill LO Based Lesson Plan By Zeal Study

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

Followers