Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 14.07.26

 Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 14.07.26





    


எம். எஸ். விஸ்வநாதன்

திருக்குறள்:

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:45 பெரியாரைத் துணைக்கோடல்

குறள் எண்:449

குறள்:

முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை.

பொருள்:

முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் லாபம் இல்லை, அதுபோலவே தன்னைத் தாங்கும் துறைப் பெரியவர் துணை இல்லாத அரசுக்கு அவர்களால் வரும் பயனும் இல்லை.

பழமொழி :
East or west, home is best.

எலி வளையானாலும் தனி வளை வேண்டும்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. சூழ்நிலைக்கேற்றவாறு சிந்தித்து அளவான வார்த்தைகளைப் பேசுவேன்.

2. தகாத வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்த மாட்டேன்.

பொன்மொழி :

நல்ல எண்ணங்களே நல்ல வாழ்க்கையின் அடித்தளம்.

Thought for the Day :

Time is precious. Use it wisely.

பொது அறிவு :

1. மனித உடலின் மிக நீளமான எலும்பு எது?

தொடை எலும்பு (பீமர் எலும்பு)

2. மனித உடலின் மிக சிறிய எலும்பு எது?

உட்செவி எலும்பு (அங்கவடி எலும்பு).

English words :

Determine - Firmly decide or find out, தீர்மானி.

Magnificent - Extremely beautiful or impressive, பிரமாதமான.

புவியியலும் சுற்றுசூழலும் :

மலைகள் (Mountains) – உயரமான நிலப்பகுதிகள்.
மலைத் தொடர்கள் (Mountain Ranges) – ஒன்றோடொன்று இணைந்த மலைகளின் வரிசை.
பீடபூமிகள் (Plateaus) – உயரமாகவும் சமமாகவும் காணப்படும் நிலப்பகுதிகள்.
சமவெளிகள் (Plains) – தட்டையான, பரந்த நிலப்பகுதிகள்.

NMMS :

MAT

P என்பவர் Q விற்கு சகோதரர். R என்பவர் S ற்கு சகோதரி.Q என்பவர் R ற்கு மகன் எனில், R என்பவர் Pக்கு என்ன உறவு?

(1)தந்தை

(2)தாய்

(3)மருமகன்

(4) மருமகள்

விடை: (2) தாய்

ஜூலை 14

எம். எஸ். விஸ்வநாதன் அவர்களின் நினைவுநாள்

மனயங்கத்து சுப்பிரமணியன் விசுவநாதன் அல்லது எம். எஸ். விஸ்வநாதன் (M. S. Viswanathan),  (24 சூன் 1928 – 14 சூலை 2015) தமிழ்த் திரைப்படவுலகில் புகழ்பெற்று விளங்கிய இசையமைப்பாளர் ஆவார். இவர் கேரளாவின் பாலக்காட்டுக்கு அருகில் எலப்புள்ளி என்ற கிராமத்தில் 1928ம் ஆண்டு  பிறந்தார். இவரின் தந்தை சுப்பிரமணியன் தாய் நாராயண குட்டியம்மாள் (நானிக்குட்டி)[1]. விசுவநாதன் 1953 ஆம் ஆண்டில் வெளிவந்த ம. கோ. இராமச்சந்திரனின் ஜெனோவா திரைப்படத்தில் வெளிவந்த நான்கு பாடல்களுக்கு முதன் முதலாக இசையமைத்தார். தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் சுமார் 1700 திரைப்படங்களுக்கு இசையமைத்தார். தெலுங்கு, இந்தி மொழிப் படங்களுக்கும் இசையமைத்திருந்தார்.
நீதிக்கதை

"கடன் அன்பை முறிக்கும்"

ஒரு சிறிய கிராமத்தில் அருள் மற்றும் யாசின் என்ற இரு நண்பர்கள் வாழ்ந்தனர். அவர்கள் சிறு வயதிலிருந்தே உயிர் நண்பர்கள். எந்த வேலையையும் சேர்ந்து செய்வார்கள்.

ஒருநாள் யாசின், "என் தங்கையின் படிப்புச் செலவுக்காக ₹20,000 வேண்டும். ஒரு மாதத்தில் திருப்பித் தருகிறேன்," என்று அருளிடம் கேட்டான்.

நண்பன் என்பதால் அருளும் யோசிக்காமல் பணத்தைக் கொடுத்தான்.

ஒரு மாதம் முடிந்தது. இரண்டு மாதங்களும் கடந்தன. ஆனால் யாசின் பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை. அருள் கேட்டபோதெல்லாம், "இன்னும் கொஞ்ச நாள் பொறு," என்று கூறிக்கொண்டே இருந்தான்.

சில நாட்களுக்குப் பிறகு, கிராமத் திருவிழாவில் இருவரும் சந்தித்தனர். அருள் மீண்டும் பணத்தைப் பற்றி கேட்டான். அதற்கு யாசின் கோபமாக, "பணம் கொடுத்ததாலே என்னை அவமானப்படுத்துகிறாயா?" என்று அனைவரின் முன்னிலும் பேசிவிட்டான்.

அதைப் பார்த்த அருளுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. பணத்தை விட, பல ஆண்டுகள் இருந்த நட்பு உடைந்ததே அவனுக்கு பெரிய வேதனையாக இருந்தது.

சில மாதங்களுக்குப் பிறகு, யாசின் தனது தவறை உணர்ந்து பணத்தையும் திருப்பிக் கொடுத்து மன்னிப்பு கேட்டான். ஆனால் உடைந்த நம்பிக்கையை மீண்டும் பழையபடி உருவாக்குவது மிகவும் கடினமாக இருந்தது.

நீதி:

"கடன் வாங்குவது எளிது; அதைச் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தாதபோது, பணத்தை விட அன்பும் நம்பிக்கையும் முதலில் முறியும்.”

இன்றைய செய்திகள்

14.07.2026

🗒️முதலமைச்சர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம் வரும் 16-ந் தேதி நடக்கிறது.இக்கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட உள்ளது.

🗒️ ஜூலை மாத இறுதிக்குள் தமிழகத்தில் 73,000
பேருக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

🗒️புதிய வாக்காளர்கள் தங்கள் பெற்றோரின் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்:  இந்தியத் தேர்தல் ஆணையம் விளக்கம்.

விளையாட்டுச் செய்திகள்

🏀559 குழந்தைகளுக்கு கால்பந்து வீரர் ஹாலண்டின் பெயரை சூட்டிய பெற்றோர்.பெரு நாட்டில் நெகிழ வைக்கும் கால்பந்து பாசம்.

🏀உலகக் கோப்பை கால்பந்து - தங்க ஷூக்கான போட்டியில் வீரர்களுக்கு இடையே கடும் போட்டி.

🏀ஆசிய தடகள சாம்பியன்ஷிப் - 16 பதக்கங்களை குவித்தது இந்தியா, சீனா 52 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.

Today's Headlines:

🗒️ A Cabinet meeting chaired by Chief Minister Vijay will be held on the 16th. Approval for the State Budget is expected to be given during the meeting.

🗒️ It has been reported that 73,000 Smart Ration Cards will be issued across Tamil Nadu by the end of July.

🗒️ New voters must submit their parents' details, clarifies the Election Commission of India.

Sports News

🏀 Parents in Peru have named 559 children after football star Haaland, reflecting the country's deep love for football.

🏀 FIFA World Cup – Intense competition is underway among players in the race for the Golden Boot award.

🏀 Asian Athletics Championships – India won 16 medals, while China topped the medal tally with 52 medals.

Covai women ICT_போதிமரம்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

TNTET paper 2 Maths and science tentative answer key

TNTET paper 2Maths and science answer key  STET paper 2 answer key _2026 வணக்கம் நமது குருவின் சார்பாக  STET paper 2 answer key _2026  வழங்கியுள்ளோம் இது ஆசிரியர் தகுதி தேர்வு   எழுதியவர்களுக்கு உதவியாக இருக்கும் எனவே இதனை பயன்படுத்தி பெயருக்கு நல்ல முறையில் தயாராக வாழ்த்துக்கள் நன்றி Topic_ STET paper 2 answer key _2026 File type -PDF STET paper key  

6ஆம் வகுப்பு கணிதம் எண்கள் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டம்Tamil Medium By Zeal Study

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

7ஆம் வகுப்பு கணிதம் எண்ணியல் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டம் Tamil Medium By Zeal Study

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

Zeal study Whatsapp groups links

CLiCK The below groups name to join the group Zeal study Class wise groups links  kindly join in any one groups in these groups class suitable messages will be shared  Join our Zeal study Official Telegram channel for all latest updates https://t.me/zealstudyofficial Follow our Whatsapp channel  https://whatsapp.com/channel/0029Va9B0NY5q08hCHKk8A19 for classes 1-5 materials Zeal study primary WhatsApp  groups links   Zeal study primary group 6 https://chat.whatsapp.com/JsUkig72NCbEfK0GtsoNg3 Zeal study primary group 1 https://chat.whatsapp.com/I5zmYprrqzh0hQHrRkqO6R Zeal study primary group 2 https://chat.whatsapp.com/Gs5xFU3kgzdIaQ8xExUrp4 Zeal study primary group 3 https://chat.whatsapp.com/KPoGHVgwlmkKCoUcX8J5yY Zeal study primary group 4 https://chat.whatsapp.com/KughukPr6yN4prnKWWNgB3 Zeal study primary group 5 https://chat.whatsapp.com/LYKowdSHZnT7vTM797PmLu For classes 6-8 Zeal study 6-8   WhatsApp  groups links For 6 ,7&8 handling...

7ஆம் வகுப்பு தமிழ் - பேச்சு மொழியும் எழுத்து மொழியும் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டம்

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

Followers