Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 07.07.26

 Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 07.07.26



மகேந்திர சிங் தோனி




திருக்குறள்: 


பால் : பொருட்பால்


இயல் : அரசியல்


அதிகாரம்:45 பெரியாரைத் துணைக்கோடல்


குறள் எண்:444


குறள்:


தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்

வன்மையு ளெல்லாந் தலை


பொருள்:


அறிவு ஆற்றல் ஆகியவற்றில் தம்மைக் காட்டிலும் சிறந்த பெரியவராய் இருப்பவரோடு உறவுகொண்டு அவர்வழி நடப்பது மிகப்பெரும் வலிமையாக அமையும்.


பழமொழி :

Appearance is deceitful.


உருவத்தை கண்டு ஏமாறாதே.


இரண்டொழுக்க பண்புகள் :.


1.போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்பதால், எனக்கு இருப்பது போதும் என்று இருப்பேன்.


 2. என் ஆசிரியரையும் பெற்றோரையும் கஷ்டப்படுத்தும் எந்த காரியத்தையும் செய்ய மாட்டேன்.


பொன்மொழி : 


நம்பிக்கையுடன் தொடங்கும் ஒவ்வொரு செயலும் வெற்றியை நோக்கிச் செல்லும்.


Thought for the Day :


Discipline is the bridge between goals and achievement.


பொது அறிவு : 


1. தமிழ்நாடு மாநிலம் உருவாகும் போது எத்தனை மாவட்டங்கள் இருந்தன? 


13 மாவட்டங்கள்


2. மூளையை தூண்டி நினைவுத்தின் அதிகரிக்க வைக்கும் உணவு எது? 


வால்நட்.


English words :


Require – Need, தேவைப்படு.


Conclude – Finish, முடி


புவியியலும் சுற்றுசூழலும் :


உலகின் மிகப் பெரிய கண்டமாக – ஆசியா திகழ்கிறது.

உலகின் சிறிய கண்டம் மற்றும் நாடாக விளங்குவது – ஆஸ்திரேலியா ஆகும்


NMMS :


MAT 


பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடி


 (1) PLAY. 


(2) WRITE. 


(3) THINK. 


(4) WALK.


 விடை: (3) THINK


ஜூலை 07


மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni), சுருக்கமாக எம் எஸ் தோனி என்று (பிறப்பு: சூலை 7, 1981) அறியப்படும் இவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் சர்வதேசத் துடுப்பாட்ட வீரரும் முன்னாள் தலைவரும் ஆவார். இவர் 2007 முதல் 2016 ஆம் ஆண்டு வரை வரையிட்ட நிறைவுப் போட்டிகளுக்கும், 2008 முதல் 2014ஆம் ஆண்டு வரை தேர்வுப் போட்டிகளிலும் இந்திய அணியின் தலைவராக இருந்தார். இவரின் தலைமையில் 2007 ஐசிசி உலக இருபது20 2007-08 பொதுநலவய போட்டித் தொடர், 2010 மற்றும் 2016 ஆசியக் கோப்பை, 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை மற்றும் 2013 ஐசிசி வாகையாளர் வெற்றிக்கிண்ணம் ஆகிய கோப்பைகளை இந்திய அணி வென்றுள்ளது. நடுவரிசை மட்டையாளரும் இலக்குக் கவனிப்பாளருமான இவர் ஒநாப போட்டிகளில் 10,000க்கும் மேற்பட்ட ஓட்டங்களை எடுத்துள்ளார். இவர் ஒரு நாள் பன்னாட்டுப் போட்டிகளில் சிறப்பாக ஆட்டத்தினை முடித்துவைக்கும் திறன் கொண்டவர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.மேலும் அவர் சிறந்த அணித்தலைவராகவும் கருதப்படுகிறார்.

நீதிக்கதை


 நீதிக்கதை: 


"ஆரோக்கியமே உண்மையான செல்வம்"



ஒரு ஊரில் கார்த்திக், பிரியா மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் சஞ்ஜய், வந்தனா ஆகியோர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.



சஞ்ஜய்க்கு தினமும் பள்ளி முடிந்து வரும்போது பர்கர், சிப்ஸ், குளிர்பானம் போன்ற ஜங்க் ஃபுட் சாப்பிடும் பழக்கம் இருந்தது. அம்மா வீட்டில் சத்தான உணவு செய்து வைத்தாலும், "எனக்கு இதுதான் பிடிக்கும்!" என்று கூறி ஜங்க் ஃபுட்டையே விரும்பி சாப்பிடுவான்.



சில நாட்களில் சஞ்ஜய்க்கு அடிக்கடி வயிற்றுவலி, சோர்வு, பல் வலி ஆகியவை ஏற்பட ஆரம்பித்தன. விளையாடவும் முடியவில்லை. மருத்துவரிடம் சென்றபோது, "அதிகமாக ஜங்க் ஃபுட் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைக்கவில்லை. இனிமேல் வீட்டில் சமைக்கும் ஆரோக்கியமான உணவைச் சாப்பிட வேண்டும்," என்று அறிவுரை கூறினார்.



அந்த நாளிலிருந்து சஞ்ஜயும்  குடும்பத்தினரும் சேர்ந்து தினமும் சத்தான உணவுகளை சாப்பிடத் தொடங்கினர். பழங்கள், காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றை உணவில் சேர்த்தனர்.



 சில வாரங்களிலேயே சஞ்ஜயின் உடல்நலம் நன்றாகி, மீண்டும் உற்சாகமாக பள்ளிக்கும் விளையாட்டிற்கும் செல்ல ஆரம்பித்தான்.



அப்போது சஞ்ஜய் தனது தங்கையிடம், "சுவைக்காக மட்டும் ஜங்க் ஃபுட் சாப்பிடக் கூடாது. ஆரோக்கியமான உணவுதான் நம்மை வலிமையாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கும்," என்று கூறினான்.



நீதி: ஜங்க் ஃபுட்டை அதிகமாகச் சாப்பிடாமல், சத்தான உணவை உண்பதே நல்ல ஆரோக்கியத்திற்கான வழி.



இன்றைய செய்திகள்


07.07.2026


🗒️உணவு பாதுகாப்புச் சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி பிரதமருக்கு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் கடிதம்.


🗒️இந்தியாவின் முதல் மனித விண்வெளி பயண திட்டத்தில் முன்னேற்றம் - ‘ககன்யான்’ சோதனை வெற்றி,முன்னதாக

இஸ்ரோ 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சோதனைகள்..

🗒️கோடைக்கால வெப்ப அலை மற்றும் காலநிலை மாற்றத்தின் எதிரொலியாக, தெற்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட கடுமையான காட்டுத்தீயினால்  30 ஆயிரம் ஏக்கர் மரங்கள் கருகின.


 விளையாட்டுச் செய்திகள்


🏀விம்பிள்டனில் ஜானிக் சின்னர் அசத்தல்... தொடர்ந்து 5-வது முறையாக காலிறுதிக்கு முன்னேறி சாதனை.


Today's Headlines


🗒️ Chief Minister Joseph Vijay has written to the Prime Minister urging a reconsideration of the proposed amendments to the Food Safety Act.


🗒️ India's first human spaceflight mission has achieved another milestone as the Gaganyaan test was successful. Earlier, ISRO had conducted more than 8,000 tests for the mission.


🗒️ As a result of summer heatwaves and climate change, 30,000 acres of trees were scorched by severe wildfires in Southern European countries.


Sports News


🏀 At Wimbledon, Jannik Sinner continued his impressive run by reaching the quarterfinals for the fifth consecutive time, setting a remarkable record.


Covai women ICT_போதிமரம்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

6ஆம் வகுப்பு கணிதம் எண்கள் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டம் Tamil Medium By Zeal Study

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

6ஆம் வகுப்பு தமிழ் - வளர் தமிழ் கற்றல் விளைவு , மன வரைபடங்கள் புதியதாக வடிவமைக்கப்பட்டுள்ள அடிப்படையிலான பாடத்திட்டம்

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

6ஆம் வகுப்பு சமூக அறிவியல் பேரண்டம் மற்றும் சூரிய குடும்பம் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டம் Tamil Medium By Zeal Study

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

TNTET paper 2 Maths and science tentative answer key

TNTET paper 2Maths and science answer key  STET paper 2 answer key _2026 வணக்கம் நமது குருவின் சார்பாக  STET paper 2 answer key _2026  வழங்கியுள்ளோம் இது ஆசிரியர் தகுதி தேர்வு   எழுதியவர்களுக்கு உதவியாக இருக்கும் எனவே இதனை பயன்படுத்தி பெயருக்கு நல்ல முறையில் தயாராக வாழ்த்துக்கள் நன்றி Topic_ STET paper 2 answer key _2026 File type -PDF STET paper key  

Zeal study Whatsapp groups links

CLiCK The below groups name to join the group Zeal study Class wise groups links  kindly join in any one groups in these groups class suitable messages will be shared  Join our Zeal study Official Telegram channel for all latest updates https://t.me/zealstudyofficial Follow our Whatsapp channel  https://whatsapp.com/channel/0029Va9B0NY5q08hCHKk8A19 for classes 1-5 materials Zeal study primary WhatsApp  groups links   Zeal study primary group 6 https://chat.whatsapp.com/JsUkig72NCbEfK0GtsoNg3 Zeal study primary group 1 https://chat.whatsapp.com/I5zmYprrqzh0hQHrRkqO6R Zeal study primary group 2 https://chat.whatsapp.com/Gs5xFU3kgzdIaQ8xExUrp4 Zeal study primary group 3 https://chat.whatsapp.com/KPoGHVgwlmkKCoUcX8J5yY Zeal study primary group 4 https://chat.whatsapp.com/KughukPr6yN4prnKWWNgB3 Zeal study primary group 5 https://chat.whatsapp.com/LYKowdSHZnT7vTM797PmLu For classes 6-8 Zeal study 6-8   WhatsApp  groups links For 6 ,7&8 handling...

6ஆம் வகுப்பு அறிவியல் தாவரங்கள் வாழும் உலகம் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டம் Tamil Medium By Zeal Study

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

Followers