Skip to main content

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 22.07.26

 Zeal study official school morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 22.07.26


 

திருக்குறள்:

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:46 சிற்றினம் சேராமை

குறள் எண்:455

குறள்:

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும். 

பொருள்:

மனத்தின் தூய்மை செய்யும் செயலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்தே ஏற்படும்.

பழமொழி :
God is love

அன்பே கடவுள்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. பொது அறிவு மற்றும் நற்பண்புகளால் என்னை நான் உயர்த்திக் கொள்வேன்.

2. என் பெற்றோரையும் ஆசிரியர்களையும் துன்புறுத்தும் எந்த ஒரு செயலையும் நான் ஒருபோதும் செய்ய மாட்டேன்.

பொன்மொழி :

“அறிவே மனிதனின் மிகப்பெரிய செல்வம்.”

Thought for the Day :

📚 “Time and tide wait for none, so make every moment meaningful.

பொது அறிவு :

1. அமெரிக்கா நாகசாகி மீது வீசிய அணுகுண்டின் பெயர் என்ன?

FAT MAN.

2. அமெரிக்கா ஹிரோஷிமா மீது வீசிய அணுகுண்டின் பெயர் என்ன?

LITTLE BOY.

English words :

Generous - Kind and willing to give, தாராளமான.

Humble - Not proud or arrogant, பணிவான.

புவியியலும் சுற்றுசூழலும் :

கடற்கரைகள் (Coasts) – நிலமும் கடலும் சந்திக்கும் பகுதிகள்.
டெல்டாக்கள் (Deltas) – ஆறுகள் கடலில் கலக்கும் இடத்தில் உருவாகும் முக்கோண நிலப்பகுதிகள்.
பனிப்பாறைகள் (Glaciers) – நீண்ட காலமாக உறைந்திருக்கும் பனிக்கட்டிகள்.

NMMS :

MAT

கொடுக்கப்பட்டுள்ள படங்களில் வேறுபட்டதைத் தேர்ந்தெடு


விடை: (3)

ஜூலை 22

பை-தோராய-நாள்
பை என்பது ஒரு வட்டத்தின் சுற்றளவுக்கும் அதன் விட்டத்திற்கும் உள்ள விகிதமாகும். பை (π) என்பது 3.14 என்ற தசம மதிப்பைக் கொண்டுள்ளது. 1706 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் கணிதவியலாளர் வில்லியம் ஜோன்ஸ் இந்த விகிதத்தைக் குறிக்க π குறியீட்டை உருவாக்கினார், பின்னர் இது சுவிஸ் கணிதவியலாளர் லியோன்ஹார்ட் யூலரால் பிரபலப்படுத்தப்பட்டது.

பை தோராய நாள் ஜூலை 22 அன்று கொண்டாடப்படுகிறது மற்றும் பை நாள் மார்ச் 14 அன்று கொண்டாடப்படுகிறது.
நீதிக்கதை

"முன்னெச்சரிக்கையே பாதுகாப்பு"

ஒருநாள் பள்ளி மாணவர்கள் அனைவரும் ஆசிரியர்களுடன் ஒரு காட்டுச் சுற்றுலா செல்ல பேருந்தில் புறப்பட்டனர். அந்தக் காட்டில் மான்கள், மயில்கள், குரங்குகள், யானைகள் போன்ற விலங்குகளைப் பார்க்க அனைவரும் ஆவலுடன் இருந்தனர்.

புறப்படுவதற்கு முன் ஆசிரியர், "பேருந்து பயணத்தின் போது யாரும் கைகளையோ, தலையையோ ஜன்னலுக்கு வெளியே நீட்டக்கூடாது. விலங்குகளைப் பார்த்தாலும் அமைதியாக அமர்ந்திருக்க வேண்டும். பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றினால்தான் பயணம் இனிமையாக இருக்கும்," என்று அறிவுறுத்தினார்.

பயணத்தின் போது ஒரு மான் கூட்டம் பேருந்தின் அருகே ஓடியது. அதை நன்றாகப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் கார்த்திக் ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டினான். அதே நேரத்தில் அருள், குரங்குகளைக் காட்ட வேண்டும் என்று நண்பர்களிடம் சொல்லிக்கொண்டே ஜன்னலுக்கு வெளியே கையை நீட்டினான்.

அதைக் கவனித்த ஆசிரியர் உடனே பேருந்தை நிறுத்தி, "கார்த்திக், அருள்! உங்கள் ஆர்வம் நல்லதுதான். ஆனால் ஒரு சிறிய கவனக்குறைவும் பெரிய விபத்துக்கு காரணமாகிவிடும். மரக்கிளைகள், எதிரே வரும் வாகனங்கள் அல்லது விலங்குகளால் ஆபத்து ஏற்படலாம். அதனால்தான் இந்த விதிகள்," என்று விளக்கினார்.

இருவரும் தங்கள் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டனர். அதன் பிறகு அனைத்து மாணவர்களும் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி, காட்டின் அழகையும் விலங்குகளையும் பாதுகாப்பாக ரசித்து மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.

நீதி:

"ஆர்வம் அவசியம்; ஆனால் பாதுகாப்பு அதைவிட அவசியம். முன்னெச்சரிக்கையே பாதுகாப்பான பயணத்தின் முதல் படி."

இன்றைய செய்திகள்

22.07.2026

🗒️நீட் தேர்வு குறைந்த பட்ச தகுதி மதிப்பெண் உயர்வு என்ற அறிவிப்பினைத் தொடர்ந்து இந்திய மருத்துவ ஆணையம் இந்த முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று மருத்துவ மாணவர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

🗒️வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட, 615 பழங்காலத்  தொல் பொருட்களை மத்திய அரசு மீட்டுள்ளது.

🗒️பிரிட்டனின் புதிய பிரதமரான ஆன்டி பர்ன்ஹாமின் அமைச்சரவையில், அந்நாட்டின் முதல் AI துறை அமைச்சராக இந்திய வம்சாவளி எம்.பி கனிஷ்க நாராயண் நியமிக்கப்பட்டு உள்ளார்.

விளையாட்டுச் செய்திகள்

🏀சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் தோல்வி.

🏀மற்றொரு ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தானின் அப்துசத்தோரோவ் 38-வது காய் நகர்த்தலில் இந்தியாவின் நிஹால் சரினை தோற்கடித்தார்.

Today's Headlines

🗒️ After the announcement that the minimum qualifying marks for the NEET exam will be increased, the Medical Students' Association has urged the National Medical Commission to reconsider the decision.

🗒️ The Central Government has recovered 615 ancient artefacts that had been smuggled from India to other countries.

🗒️ Indian-origin MP Kanishka Narayan has been appointed as the UK's first Minister for Artificial Intelligence (AI) in the cabinet of the new British Prime Minister, Andy Burnham.

Sports News

🏀 Chess Grandmaster D. Gukesh lost his match in the Chennai Grandmasters Chess competition.

🏀 In another match, Nodirbek Abdusattorov from Uzbekistan defeated India's Nihal Sarin on the 38th move of their chess game.

Covai women ICT_போதிமரம்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

TNTET paper 2 Maths and science tentative answer key

TNTET paper 2Maths and science answer key  STET paper 2 answer key _2026 வணக்கம் நமது குருவின் சார்பாக  STET paper 2 answer key _2026  வழங்கியுள்ளோம் இது ஆசிரியர் தகுதி தேர்வு   எழுதியவர்களுக்கு உதவியாக இருக்கும் எனவே இதனை பயன்படுத்தி பெயருக்கு நல்ல முறையில் தயாராக வாழ்த்துக்கள் நன்றி Topic_ STET paper 2 answer key _2026 File type -PDF STET paper key  

Zeal study Whatsapp groups links

CLiCK The below groups name to join the group Zeal study Class wise groups links  kindly join in any one groups in these groups class suitable messages will be shared  Join our Zeal study Official Telegram channel for all latest updates https://t.me/zealstudyofficial Follow our Whatsapp channel  https://whatsapp.com/channel/0029Va9B0NY5q08hCHKk8A19 for classes 1-5 materials Zeal study primary WhatsApp  groups links   Zeal study primary group 6 https://chat.whatsapp.com/JsUkig72NCbEfK0GtsoNg3 Zeal study primary group 1 https://chat.whatsapp.com/I5zmYprrqzh0hQHrRkqO6R Zeal study primary group 2 https://chat.whatsapp.com/Gs5xFU3kgzdIaQ8xExUrp4 Zeal study primary group 3 https://chat.whatsapp.com/KPoGHVgwlmkKCoUcX8J5yY Zeal study primary group 4 https://chat.whatsapp.com/KughukPr6yN4prnKWWNgB3 Zeal study primary group 5 https://chat.whatsapp.com/LYKowdSHZnT7vTM797PmLu For classes 6-8 Zeal study 6-8   WhatsApp  groups links For 6 ,7&8 handling...

6ஆம் வகுப்பு அறிவியல் விசையும் இயக்கமும் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டம் Tamil Medium By Zeal Study

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

6ஆம் வகுப்பு சமூக அறிவியல் பண்முகத் தன்மையை அறிவோம் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டம் Tamil Medium By Zeal Study

 Zeal study is an educational where you can find study materials, lesson plan, Individual class wise- unit wise- lesson wise Solutions, book back answer keys, Unit wise Fa (a) activities collections, FA(b)  question bank collections .

Followers