டெட் பேப்பர் 1 மற்றும் 2 க்கான ஆறாம் வகுப்பு தமிழ்.. முதல் இரண்டு பருவங்களில் இருந்து தொகுத்த 100 வினா விடைகள். தேவைப்படின் பயன்படுத்தி கொள்ளவும். அடுத்தடுத்த பதிவுகளில் பத்தாம் வகுப்பு தமிழ் வரை தொகுத்து தருகிறேன்.
1. புதுமைகள் செய்த தேசமிது பாடல் எழுதியவர் - தாராபாரதி
2. தாராபாரதி ---- என்று அழைக்கப்படுகிறார் - கவிஞாயிறு
3. தேசம் உடுத்திய நூல் ஆடை என்று அழைக்கப்படுவது - திருக்குறள்
4. காளிதாசனின் தேனிசை பாடல்கள் எதிரொலிக்கும் இடம் - காவிரி கரை
5. கலைக்கூடமாக காட்சி தருவது - சிற்பக்கூடம்
6. தாராபாரதியின் பாடலில் இடம் பெற்றுள்ள கவிஞர்கள் - காளிதாசன் கம்பன்
7. காந்திஜி அருங்காட்சியகம் அமைந்துள்ள இடம் - மதுரை
8. காந்தியடிகள் சென்னைக்கு வந்தது - 1919
9. 1919 இல் நடைமுறையில் இருந்த சட்டம் - ரௌலட் சட்டம்
10. காந்தியடிகள் மதுரைக்கு சென்ற வருடம் - 1921
11. காந்தியடிகளுக்கு எளிமை தோற்றம் ஆரம்பித்த இடம் - மதுரை
12. காந்தியடிகளின் இந்த எளிமை தோற்றத்தை எவ்வாறு அழை - எளிமை திருக்கோலம்
13. தமிழ் கையேடு எழுதியவர் - ஜி யு போப்
14. காந்தியடிகளை கவர்ந்த நூல் - திருக்குறள்
15. இந்தப் பெரியவரின் அடிநிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது என்று கூறியவர் - காந்தியடிகள்
16. அந்தப் பெரியவர் என்று காந்தி குறிப்பிடுபவர் யார் - உ வே சாமிநாதர்
17. காந்தியடிகள் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய - மதுரை
18. முதன் முதலில் இலக்கிய மாநாடு நடந்த இடம் - சென்னை
19. வேலு நாச்சியார் கணவர் பெயர் - முத்து வடுகநாதர்
20. காளையார் கோவில் போரில் கணவர் இறக்க திண்டுக்கல் கோட்டையில் தங்கி படையை திரட்டியவர் - வேலு நாச்சியார்
21. அவருடன் போருக்கு உடன் இருந்தவர்கள் - தாண்டவராயர் பெரிய மருது சின்ன மருது
22. வேலு நாச்சியாருக்கு 5000 குதிரை படையை கொடுத்து உதவியவர் - ஹைதர் அலி
23. நம் அரசியல் பன்மொழி அறிவு நமக்கு பெரிய நன்மையை தந்திருக்கிறது என்று கூறியவர் - சின்ன மருது
24. பெண்கள் படை பிரிவிற்கு தலைமை - குயிலி
25. குயிலி தன் உயிரைத் தந்து நம் நாட்டை மீட்டுக் கொடுத்திருக்கிறார் அவரது துணிவுக்கும் தியாகத்துக்கும் வீரத்திற்கும் தலை வணங்குகிறேன் என்று கூறியவர் - வேலு நாச்சியார்
26. சொற்கள் எத்தனை வகைப்படும் - நான்கு வகைப்படும்
27. பெயர்ச்சொல் வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதி படுத்த வருவது - உரிச்சொல்
28. பெயர் சொல்லையும் வினைச் சொல்லையும் சார்ந்து - இடைச்சொல்
29. சுதேசி நாவாய் சங்கம் நிறுவியவர் - வ உ சி 1906 ஆம் ஆண்டு அக்டோபர் 16
30. ஓர் - உயிர் எழுத்துக்கு முன் வரும்
31. ஒரு - உயிர் மெய் எழுத்துக்கு முன் வரும்
32. அப்து - உயிர் எழுத்தில் தொடங்கும் சொல்
33. அது - உயிர் மெய் எழுத்தில் தொடங்கும் சொல்
34. எல்லாரும் இன்புற்று இருக்க என்னும் பராபரக்கண்ணி பாடலை எழுதியவர் - தாயுமானவர்
35. தண்டருள் பொருள் - குளிர்ந்த கருணை
36. திருச்சியை ஆண்ட விஜய ரகுநாதன் சொக்கலிங்கரிடம் தலைமை கணக்காயர் ஆக பணிபுரிந்தவர் - தாயுமானவர்
37. தாயுமானவர் பாடல்கள் - தமிழ் மொழியின் உபநிடதம்
38. கலீல் ஜிப்ரான் எந்த நாட்டைச் சேர்ந்தவர் - லெபனான்
39. மணிமேகலையின் காவல் தெய்வம் - தீவ திலகை
40. மணிமேகலை முன் காவல் தெய்வம் தோன்றிய இடம் - மணி பல்லவ தீவு
41. ஆதிரை பொருள் - உணவு வழங்குகிறாள்
42. கோமுகி கோ பசு முகி முகம் - பசுவின் முகம் கொண்ட பொய்கை
43. பாதம் என்ற சிறுகதையை எழுதியவர் - எஸ்ரா
44. பெயர்ச்சொல் எத்தனை வகை - ஆறு வகைப்படும்
45. இடுகுறிப் பெயர் - நம் முன்னோர் சில பொருள்களுக்கு காரணம் கருதாமல் பெயரிட்டு வழங்கியது
46. காரண பெயர் - காரணம் கருதி பெயரிட்டு வழங்கியது
47. ஏழைகளுக்கு உதவி செய்வதே ஈகை என்று கூறுவது - திருக்குறள்
48. ஆசிய ஜோதி எழுதியவர் - கவிமணி தேசிக விநாயகம்
49. கும்பி - வயிறு
50. பூதலம் - பூமி
51. தேசிய விநாயகர் எந்த நூற்றாண்டை சேர்ந்தவர் - இருபதாம் நூற்றாண்டு கவிஞர்
52. 36 ஆண்டுகள் பள்ளி ஆசிரியராக பணி - கவிமணி
53. எட்வின் அர்னால்ட் எழுதிய லைட் ஆப் ஆசியா என்ற நூலை தழுவி எழுதியது - ஆசிய ஜோதி
54. தமக்கு என முயலா நோன்றாள் பிறர்க்கென முயலுர் உண்மையானே - புறநானூறு
55. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் - வள்ளலார்
56. வள்ளலார் வடலூரில் நிறுவியது - சத்திய தர்மசாலை
57. வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் நீ வாழும் வரை என்றவர் - அன்னை தெரசா
58. அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் - அன்னை தெரசா
59. அன்னை தெரசாவுக்கு அடுத்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர் - கைலாஷ் சத்யார்த்தி
60. குழந்தைகளை பாதுகாப்போம் இயக்கத்தை தொடங்கியவர் - கைலாஷ் சத்யார்த்தி
61. 30 ஆண்டுகளில் எத்தனை குழந்தை தொழிலாளர்களை மீட்டுள்ளார் - 80,000
62. 103 காடுகளில் 80 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் சென்றுள்ளவர் - கைலாஷ் சத்யார்த்தி
63. குழந்தை தொழிலாளர்களாக மாற்றுவது மனித தன்மைக்கு எதிரான குற்றம் உலகத்தை குழந்தைகளின் கண் கொண்டு பாருங்கள் உலகம் அழகானது என்றவர் - கைலாஷ் சத்யார்த்தி
64. தன் பொருளை கவர்ந்தவர் இடமும் அன்பு காட்டியவர் - வள்ளலார்
65. கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம் - குழந்தைகளை பாதுகாப்போம்
66. முடிவில் ஒரு தொடக்கம் என்ற உண்மை கதையில் இதயத்தை கொடுக்க சம்மதித்த பெற்றோர் - அசோகன் புஷ்பாஞ்சலி
67. இதயத்தை கொடுத்த இளைஞனின் பெயர் - ஹிதேந்திரன்
68. இந்த நிகழ்வு நடைபெற்ற இடம் - பெங்களூரு குறுக்கழுகுன்றம்
69. அணி - அழகு
70. இயல்பு நவிற்சி அணி - உள்ளதை உள்ளபடியே கூறுவது
71. இதன் மற்றொரு பெயர் - தன்மை நகிற்சி அணி
72. தன்மை நவிற்சி வளர்ச்சி அணிக்கு எடுத்துக்காட்டு - தோட்டத்தில் மேயுது வெள்ளை பசு
73. உயர்வு நவிற்சி அணி - இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது
74. ஆசாரக்கோவை - பெருவாயின் முள்ளியார்
75. ஒப்புரவு - எல்லோரையும் சமமாக பேணுதல்
76. ஆசாரக்கோவை பொருள் - நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு
77. ஆசாரக்கோவை எத்தனை வெண்பாக்களைக் கொண்டது - நூறு
78. ஆசாரக்கோவை - பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
79. தாலாட்டு - தால் + ஆட்டு தால் என்றால் நாக்கு
80. நாக்கை அசைத்து பாடுவதால் - தாலாட்டு என்று பொருள்
81. இழைத்து - பதித்து
82. இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது - எதுகை
83. முதல் எழுத்து ஒன்றி வருவது - மோனை
84. பழையன கழிதலும் புதியன புகுதலும் - நன்னூல் நூற்பா 462
85. இந்திரனை வழிபடும் நோக்கில் அக்காலத்தில் போகி பண்டிகை எப்படி கொண்டாடப்பட்டது - இந்திர விழா
86. தை முதல் நாள் - திருவள்ளுவர் ஆண்டு தொடக்கம்
87. தை இரண்டாம் நாள் - திருவள்ளுவர் நாள்
88. மாடு - செல்வம்
89. திருவள்ளுவர் பிறந்த ஆண்டு - கிமு31 ஆம் நூற்றாண்டு
90. திருவள்ளுவர் ஆண்டை கணக்கிட நடப்பு ஆண்டுடன் எதனை கூட்டிக் கொள்ள வேண்டும் - 31
91. அறுவடை திருநாள் மற்ற மாநிலங்களில் கொண்டாடும் பெயர் - மகர சங்கராந்தி
92. பஞ்சாபில் - லோரி
93. குஜராத் ராஜஸ்தானில் - உத்திராயன்
94. முழு - போர் கருவி
95. மொழியின் இறுதியில் - மெய்யெழுத்துக்கள்
96. நொ - துன்பம்
97. உதிரும் கல் தூளை கோலமாவாக மாற்றுதல் - மதிப்பு கூட்டுதல்
98. முடியரசன் இயற்பெயர் - துரைராசு
99. இவரை எவ்வாறு பாராட்டுகிறார்கள் - திராவிட நாட்டின் வானம்பாடி
100. மல் எடுத்த - வலிமை பெற்ற
Comments
Post a Comment